19.10.2008.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி எஸ் பி பிளஸ்,சலுகை கிடைக்காது போனால் இலங்கைக்கு பாரிய பொருளாதார பின்னடைவு ஏற்படும் என அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தெளிவுப்படுத்தியுள்ளார். |
கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துரைத்த வர்த்தக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜி எல் பீரிஸ், ஜி எஸ் பி பிளஸ் வாய்ப்பு கிடைக்காவிட்டால், நாட்டில் சுமார் ஒரு இலட்சம் பேர் தொழில்களை இழப்பர் என எச்சரித்துள்ளார்.
இது ஆடையுற்பத்தியை மாத்திரமல்லாமல், இறப்பர் உற்பத்தி, லெதர் உற்பத்தி மீன் உற்பத்தித்துறை உட்பட்ட ஏனைய ஏற்றுமதித் துறைகளையும் பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்தின் சசெக்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் ஜிஎஸ்பி பிளஸ் திரும்பப் பெறப்பட்டால், அது இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தில் 2 வீத நட்டத்தை ஏற்படுத்தும் என கோடிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்றுமதித் துறையில் இலங்கையே 2007 ஆம் ஆண்டு முதன்மை நாடாக இருந்ததாக குறிப்பிட்ட அவர், இதன்மூலம் இலங்கைக்கு 25 பில்லியன் டொலர்கள் வரையான வருமானம் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார் |