ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையேயான மோதல்கள் தொடர்கின்றன. ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான உள்முரண்பாடுகளின் வெளிப்பாடே இது. ஐரோப்பியப் நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பு ஒன்று வெளிநாட்டு குடியேற்ற வாசிகளுக்கு சாதகமானதாக அமைந்துள்ளது. ஐரோப்பிய குடியுரிமை கொண்ட ஒருவரின் உறவினர் ஐரோப்பியக் குடியுரிமை அற்றவராக இருந்தாலும் பிரித்தானியாவிற்கு செல்வதற்கு அவருக்கு விசாவோ அன்றி குடும்ப அனுமதியோ தேவையில்லை என ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மக்காதி என்பவரின் மனைவி பிரித்தானியாவிற்குச் செல்வதற்கு ஆறுமாத குடும்ப அனுமதிபபத்திரத்தை பிரித்தானிய குடிவரவுத் திணைக்களம் கோரியது, அதனை எதிர்த்து ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் மக்காதி வழக்குத் தாக்கல் செய்த போதே இத்தீர்ப்பின் முழுமையையும் ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கியுள்ளது.
ஐயர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய இரண்டு நாடுகளதும் குடியுரிமையைக் கொண்டிருக்கும் மக்காதி (McCarthy )என்பவரின் மனைவு கொலம்பிய நாட்டுப் பிரசையாவர். இவர்கள் இருவரும் ஸ்பானியாவில் வாழ்ந்து வருகின்றனர். திருமணமான போதும் மக்காதியின் மனைவி ஹெலேனா (Helena)தனது குடியுரிமையை மாற்றவில்லை. ஹெலேனா பிரித்தானியாவிற்குச் செல்வதற்கான உரிமையை அந்த நாடு மறுத்துவந்தது. அந்த முடிவு சட்டரீதியாகத் தவறானது என்றே ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வகையில் ஐரோப்பாவில் வசிக்கும் உரிமைபெற்ற எவரும் விசா இன்றி பிரித்தானியாவிற்குள் செல்லலாம்.
ஐரோப்பிய நாடொன்றில் குடியுரிமையுடைய ஒருவர் பிரித்தானியாவில் வசிக்கும் போது இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்குச் சென்று தற்காலிகமாகத் தங்கியுள்ள ஒருவரை ஐந்து வருடங்களுக்குத் தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ளலாம். அகதி அனுமதி நிராகரிக்கப்பட்ட ஒருவரையோ, கற்கைக்கான அனுமதியில் வந்த ஒருவரையோ ஐரோப்பிய குடியுரிமை பெற்றவர் ஐந்து வருடங்களுக்கு வேலை செய்யும் அனுமதியுடன் தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ளலாம்.
தாக்கல் என்ற சொல் ஒரு இந்திச் இதன் அர்த்தம் சமர்ப்பித்தல், ஆகவே தயவுசெய்து தாக்கல் என்ற இந்திச் சொல்லைத் தவிர்த்து சமர்ப்பித்தல் என்ற தமிழ்ச் சொல்லைப் பிரயோகித்தால் தமிழ் தொடர்ந்து தப்பிக்கொள்ளும் என்பது எனது அபிப்பிராயம்.
இந்த செய்தி தமிழில் எழுதப்பட்ட விதம் மிகமிகத்தவறானது. ஜரோப்பாவில் வசிக்கும் குடியுரிமை பெற்ற ஜரோப்பிய பிரஜைகள் அனைவரும் பிரித்தானியாவிற்கு விசா இன்றி பயனிக்கலாம் இந்த தீர்ப்பின் மூலம் என்ற செய்தி முற்றிலும் தவறான் மொழிபெயர்ப்பு. ஜரோப்பிய வதிவிட உரிமை என்பதல்ல ஜரோப்பிய குடும்ப வதிவிட உரிமை(EU family resident permit) என்பதே சரியாகும். இதற்குள் ஜரோப்பாவில் அகதி அந்தஸ்து பெற்றவர்களோ அல்லது மாணவ விசாவில் இருப்பவர்களோ அல்லது மற்றும் ஏதாவது விசாவில் இருப்பவர்களோ வரமாட்டார்கள். ஒரு ஜரோப்பிய ஒன்றிய பிரஜை ஒருவரை திருமணன் செய்த ஜரோப்பிய ஒன்றிய நாடொன்றை சேராத ஒருவர் அல்லது அந்த ஜரோப்பிய ஒன்றிய பிரஜையின் பிள்ளை போன்ற குடும்ப உறுப்பினர் ஒருவர் அந்த ஜரோப்பிய ஒன்றிய பிரஜையுடன் இன்னொரு ஜரோப்பிய ஒன்றிய நாட்டில் அந்த ஜரோப்பிய ஒன்றிய பிரஜை மூலம் EU familymember visa பெற்று வாழ்ந்தால் அவரே இந்த தீர்ப்பின் மூலம் பிரித்தானியாவிற்கு விசா இன்றி செல்ல தகுதி உடையவர் ஆவர். தயவு செய்து மக்களை குழப்பும் வகையில் மொழிபெயர்ப்பு செய்து செய்திகளை பிரசுரிக்காதீர்கள். நன்றி.
/ஐரோப்பிய நாடொன்றில் குடியுரிமையுடைய ஒருவர் பிரித்தானியாவில் வசிக்கும் போது இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்குச் சென்று தற்காலிகமாகத் தங்கியுள்ள ஒருவரை ஐந்து வருடங்களுக்குத் தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ளலாம். அகதி அனுமதி நிராகரிக்கப்பட்ட ஒருவரையோ, கற்கைக்கான அனுமதியில் வந்த ஒருவரையோ ஐரோப்பிய குடியுரிமை பெற்றவர் ஐந்து வருடங்களுக்கு வேலை செய்யும் அனுமதியுடன் தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ளலாம். //
என்று தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது மொழி பெயர்ப்பல்ல. எற்கனவே பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பியப் பிரசை ஒருவருக்குள்ள உரிமை. அது மேலதிகத் தகவலே தவர மொழிபெயர்ப்பல்ல.இது குறித்துப் பல தமிழர்களுக்குத் தெரிவதில்லை. சட்ட ஆலோசகர்கள் கூட இதனை அறியாத நிலையிலேயே உள்ளனர்.
ஆக, ஐரோப்பிய பிரசா உரிமை பெற்ற ஒருவர் பிரித்தானியாவில் வாழ்ந்தால் அவர் அகதி உரிமை நிராகரிக்கப்பட்டவரையோ அல்லது மாணவரகக் கல்வி கற்ற வந்தவரையோ பொறுப்பெடுத்துக்கொள்ளலாம். ஐந்து வருட வதிவிட உரிமையும் வேலை செய்யும் உரிமையும் பெற்றுக்கொள்ளலாம். அது இரத்த உறவினர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
Perfect ramesh
Super judment
I am living in Netherlands for the last 6 Years. I do not have the permit to stay here. My daughter is living London. I think that she is still holding the French nationality but she is living in London for the last 5 years. Can she apply for a visa for my mother? Then how? Please can anybody give a good advice?
கனம் கோட்டார் அவர்களே அல்லது விசயம் தெரிந்தவர்களே எனக்கு நல்ல பதில் சொல்லுங்கள்
எனக்கு பிரான்ஸில் பத்துவருட விசா உள்ளது.எனது சகோதரம் ஜேர்மனிய பிரஜாவுரிமையுடையவர்(ஜேர்மனிய பாஸ்போட்) தற்போது
பிரித்தானியாவில் வசிக்கின்றார்;
கேள்வி நான் இனி விசா இல்லாமல் பிரித்தானியாவுக்கு செல்லமுடியுமா?
இந்த தீர்ப்பு எப்போது முதல் செல்லுபடியாகும்?