Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஐரோப்பா முழுவதும் புலம்பெயர் ஈழத் தமிழர்களின் போராட்டங்கள்!

இனியொரு... by இனியொரு...
04/08/2009
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

பேரினவாத அரசு தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்த அனைத்துலக சமூகமும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி புலம்பெயர் நாடுகளில் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் எழுச்சிபூர்வமாக நடைபெற்று வருகின்றன.

தீர்வு கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை எனப் பெருந்திரளான தமிழ் மக்கள் இக்கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரான்சில்…

வன்னியில் மோதலை நிறுத்தக் கோரி பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பாரிஸ் நகரில் உள்ள அன்வலிட் என்ற வெளிவிவகாரத்துறை அமைச்சின் முன்றலில் தொடங்கிய போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் அங்கு ஒன்று திரண்டு தமது உரிமை முழக்கங்களைத் தொடர்ந்து வானதிர முழக்கமிட்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தாய் நில உறவுகள் இந்திய, இலங்கை இராணுவத்தால் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வைத் தேடித் தரும் வரை இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, நேற்று செவ்வாய்க்கிழமை காலையில் குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து கவனயீர்ப்பு நிகழ்வை நடத்த வேண்டாம் எனக் காவல்துறையினர் எச்சரித்த போதும் மக்கள் அந்த இடங்களில் இருந்து கலைந்து செல்ல மறுத்ததால், பிரான்ஸ் காவல்துறையினர் வன்முறை சம்பவங்களை மேற்கொண்டனர்.

தொடரும் தடைகளை மீறி, தாய் நிலத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாரிய மனித அவலத்தைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனின் கையிலும் இருக்கிறது என்பதை முன்னிறுத்தி பெருந்திரளான தமிழ் மக்கள் உரிமையுடன் இப்பேரணியில் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து ஏனைய பிரான்ஸ் வாழ் தமிழ் உறவுகளும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என உரிமையுடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில்…

தமிழ் மக்கள்மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துமாறு கோரியும் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் ஜேர்மனியின் டுசில்டோவ் நகரில் உள்ள மாநில நாடாளுமன்றத்துக்கு அருகில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டுசில்டோவ் மாநிலத்தில் உள்ள நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் காவல்துறையினரின் அனுமதியின்றி நேற்று முற்பகல் 11:00 மணியளவில் மக்கள் ஒன்றுகூடினர். மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் கூடியிருந்த தமிழ்மக்கள் அங்கிருந்து நகர்ந்து மாநில நாடாளுமன்றம் முன்பாக ஒன்றுகூடி இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் இன்றும் தொடரும் எனவும் அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சுவீடனில்…

தொடரும் தாக்குதல்களால் நாளாந்தம் சிக்கித் தவிக்கும் தாயக உறவுகளை மீட்டெடுக்க சுவீடன் வெளிவிவகாரத்துறை அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இப்போராட்டத்தில் சுவீடன் வாழ் தமிழ் இளையோர்களும் சிறுவர்களும் எழுச்சியுடன் கலந்து கொண்டனர். மேலும், சுவீடன் நாட்டின் சோஷலிச சிவப்புக் கட்சியினரும் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தின் வாயிலாக வெளிவிவகாரத்துறை அமைச்சின் பிரதிநிதிக்கு மனு வழங்கப்பட்டதாகவும் மனுவைப் பெற்றுக்கொண்ட பிரதிநிதி அதனை தென்னாசியாவுக்குப் பொறுப்பான அதிகாரியிடம் சேர்ப்பிப்பதாக உறுதியளித்ததாகவும் கூறப்படுகின்றது.

இதன் தொடர்ச்சியாக மீண்டும் இப்போராட்டம் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறவிருக்கின்றது. பேரழிவில் இருந்து தமிழ் மக்களைக் காக்க தொடர்ச்சியாக அணித்திரளுமாறு சுவீடன் வாழ் தமிழ் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இத்தாலியில்…

இலங்கை அரசின் மோதல்களைக் கண்டித்தும் வன்னியில் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களை நிறுத்தக் கோரியும் உடனடியாக போரை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்கக் கோரியும் நேற்று இத்தாலி பலெர்மோ நகரில் அமைந்துள்ள சிசீலி மாநில முதல்வர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

காவல்துறையினரின் அனுமதியின்றி தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்ட இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் 500-க்கும் அதிகமான தமிழ் மக்கள் மிகவும் உணர்வுடனும் எழுச்சியுடனும் கலந்து கொண்டனர்.

மேலும், காவல்துறையினர் மக்களைக் கலைந்து செல்லுமாறு பலமுறை வலியுறுத்தியும் மக்கள் இறுதிவரை அந்த இடத்தில் நின்று தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இப்போராட்டம் தொடர்ச்சியாக நாளை பிற்பகல் 1.30 மணி தொடக்கம் சிசீலி மாநில அலுவலகம் முன்பாகவும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை இத்தாலியின் பிரதான தொலைக்காட்சி நிறுவனமான ராய் (Rai) முன்பாகவும் நடைபெறவிருக்கின்றது. தமிழ் மக்களைக் காக்கத் தொடர்ச்சியாக அணித் திரளுமாறு இத்தாலி வாழ் தமிழ் மக்களிடம் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கனடாவில்…

இலங்கையில் நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த அழுத்தம் கொடுக்கக்கோரி கனேடியத் தலைநகரில் தமிழர்களால் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கனேடியத் தமிழர் சமூகம் மற்றும் தமிழ் மாணவர்களின் ‘கனேடிய அரசாங்கம் செயலில் ஈடுபடும் வரையான தொடர் போராட்டம்’ அழைப்பையேற்று தமிழ் மக்கள் அனைவரும் தலைநகர் ஒட்டாவா நோக்கி அணிதிரண்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமையன்று கனேடிய பாராளுமனறத்தில் ஆரம்பித்த போராட்டம் சிறிது நேரத்தில் வீதியை நோக்கி நகர ஆரம்பித்தது. தலைநகரின் முக்கிய வீதிகளில் வீதி மறிப்பில் தமிழ் மக்கள் ஈடுபட்டிருந்தனர். இதனால் அலுவலகங்கள் முடிவடைந்த பின்னர் நகரே ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

தமிழ் மக்களால் ஏற்படுத்தப்பட்ட வீதித் தடையினால் பல கிலோ மீற்றர் நீளத்திற்கு நகரின் பொதுப்போக்குவரத்து வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் நகரமுடியாது நிறுத்தப்பட்டிருந்தன.

உடனடி யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் தருமாறு கோரி கனேடியத் தலைநகரில் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், இவை நடைமுறைப்படுத்தப்படும் வரை தொடர்ச்சியான போராட்டமாக இது மேற்கொள்ளப்படும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

ரொறன்ரோ நகரில் உள்ள மாகாணப் பாரளுமன்றத்திற்கு முன்னாலும் தொடர்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் உலக நாடுகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறந்த உதாரணம்:துமிந்த சில்வா

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In