வாஷிங்டன்: அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார் என்று சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பல நாடுகளை சேர்ந்த பல்வேறு இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
உலகிற்கு ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் கற்பிக்கிறோம் என்று ஆயிரமாயிரம் அப்பாவிகளைக் கொன்று குவிக்கும் அமெரிக்க ஏகபோக அரசின் உள்ளேயே 20 வீதமான பெண்களால் பாலியில் வன்புணர்விலிருந்து தப்பிக்க இயலாத நிலையே காணப்படுகிறது.
பல்தேசிய வியாபார நிறுவனங்களின் ஊடகங்கள் பாலியலை வியாபாரப்பண்டமாக மாற்றி ஊடகங்களில் மேற்கொள்ளும் கலாச்சார வன்முறை, அழியும் பொருளாதாரம், வறுமை ஆகியன அனைத்தும் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை அதிகரித்துள்ளது. 22 மில்லியன் அமெரிக்கப் பெண்களும் 1.6 மில்லியன் அமெரிக்க ஆண்களும் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தமது நாட்டு மக்களையும் உலகமு முழுவதையும் கண்காணிக்கும் அமெரிக்க அரசிற்கு ஐந்தில் ஒரு பகுதிப் பெண்களைக் குறிவைக்கும் சமூகவிரோதிகளைக் தண்டிக்க இயலமலிருப்பது முடியாது என்பது வேடிக்கையானது. கண்காணிக்கப்படுவது மக்களின் பாதுகாப்பிற்காக அல்ல என்பதற்கு வேறு சாட்சிகள் தேவையில்லை.
அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் தங்களது வாழ்நாளில் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்படுகின்றார். இதில் பாதிக்கப்பட்டவர்களில் பாதிபேர் கிட்டத்தட்ட 18 வயதிற்கு குறைவான இளம் பெண்களாகவே உள்ளனர். அனைத்து இனத்தை சேர்ந்த பெண்களும் இந்த தாக்குதலுக்கு ஆளாகிறபோது குறிப்பிட்ட சில பெண்கள் மட்டும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 33.5 சதவிகிதம்பேர் கலப்பு இனத்தை சேர்ந்த பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர். 27 சதவிகித அமெரிக்க இந்திய பெண்களும், ஹிஸ்பேனிக் இன பெண்கள் 15 சதவிகிதம், கருப்பு இனத்தவர்கள் 22 சதவிகிதம், வெள்ளை இனப்பெண்கள் 19 சதவிகிதத்தினரும் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இந்த பலாத்கார சம்பவங்கள் அனைத்தும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடக்கிறது. 98 சதவிகித பலாத்கார சம்பவங்கள் ஆண்களாலேயே நடக்கிறது. இதுமட்டுமல்லாமல் ஆண்களும், சிறுவர்களும் இந்தபாதிப்புக்கு ஆளாகின்றனர். இதில் 71 ஆண்களுக்கு ஒருவர் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனராம்.