இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரதேச சபைத் தேர்தலில் இடம்பெற்றுள்ள முதல் மனிதப் படுகொலையாக இன்று விடிகாலையில் அனுராதபுரத்தில் நிகழ்ந்துள்ள படுகொலை அறிவிக்கப்பட்டுள்ளது.
போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட அபேட்சகர் ஒருவர் உள்ளிட்ட குழுவினர் மீது அதே கட்சியைச் சேர்ந்த வேறொரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினாலேயே இப் படுகொலை நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுர மாவட்டத்தில் உள்ள பாலியன்கடவல பிரதேசத்தில் வைத்து இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அப் பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தலைவர் சுனில் என்பவரின் ஆதரவாளர் ஒருவரே இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மரணமடைந்துள்ளார்.