எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை பலயீனப்படுத்தும் முயற்சிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஈடுபட்டதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ளவும், ஐக்கிய தேசியக் கட்சியைப் பலவீனப்படுத்தவும் ஜனாதிபதி கூடுதல் முயற்சி எடுத்ததாக கரு ஜயசூரிய தெரிவித்துள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜர்ஙகத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் திகதி இந்த தகவல்களை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
கரு ஜயசூரிய ஆளும் கட்சியில் இணைந்து கொள்வதற்கு பத்து தினங்களுக்கு முன்னதாக அமெரிக்கத் தூதுவரிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.