சந்திரகுமார்-டக்ளஸ் மோதல் : EPDP இல் வெடிப்பு? என்ற செய்திக்கு ஒரு எதிர்வினை.
-கட்டுரையில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் எஸ்.ஜீ.ராகவனின் தனிப்பட்ட கருத்துக்கள், இனியொரு அதற்குப் பொறுப்பல்ல. கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அரசியல் வாழ்வோடு தொடர்புடையவையாயினும் ஆதாரங்களற்றவை. உண்மையாயின் பாரதூரமானவை-
தோ(…)ழர் டக்கஃளுஸ் தேவானந்தா ஈழப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய ஆளுமை மிக்கவர். மக்கள் விடுதலைப் படையின் தளகர்த்தாவாகச் செயல் பட்டவர். நீண்டதும் தீர்க்கதரிசனும் உள்ள பாதையில் பயணிப்பவர்.
ஈழப் போராட்டத்தை காலத்தின் தேவை கருதி கைவிட்டபின் மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அவரது சித்தாந்தை நோக்கிய பயணிப்பில் இடறி வி(ழாமலும்)ழுந்தாலும் தனது பயணத்தை தொடர்பவர். ஆயுபோவன் சொல்லியே ஆயுளை போக்கலாம் அடிவிவிழாமலும் எம்மை பாதுகாக்கலாம் என தோன்றும் பெரிய சிந்தனைகள் எல்லாம் அவர் லெபனானில் பெற்ற பெரிய பெரிய பயிற்சிகளில் கிடைத்த அரசியல் ராணுவ ராஜதந்திர அறிவு ஆகும்.
அவருடைய மன உறுதியும் ராஜதந்திரமும் இன்னும் பல கண்டு பிடிக்கமுடியாத அறிவியல் குணாதிசயங்களும் சேர்ந்து தமிழர்களை அறிவார்ந்த சமூகமாக மாற்ற அவர்களின் மண்டையை பிளந்தேனும் அறிவூட்ட அவர் செய்த முயற்சிகள் எத்தனை.
அவரின் சாதனைகள் கீழே:
-1980 களின் முதல் கூற்றில் இலங்கை அரச மட்டங்களுடனும் புலனாய்வு மையங்களுடன் தொடர்புகளை பேணுதல்.
-புலிகள் அமைப்பில் ஊடுருவி அவர்களை அழிக்க இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளை நிராகரித்தல்.
புலிகள் ஒரு குழுவாத இயக்கம் என்றும் அவர்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைய மாட்டார்கள் என்றும் அவர்கள் ஈழப் போராட்டத்தை வென்று எடுக்க மாட்டார்கள் என இலங்கை அரசுக்கு நம்பிக்கை ஊட்டியமை.
-EPRLF ஒரு மக்கள் இயக்கம் எனவும் அவ்வியக்கமே பெருமளவு மக்களை அணிதிரட்டக் கூடியவர்கள் என இலங்கை அரசை நம்ப வைத்தது.
-அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசின் ஆசிர் வாதத்துடன் சிறையுடைப்பு நாடகப் பாணியில் தப்பிய தோழர் EPRLF இன் ராணுவ பொறுப்பை பெற்றுக் கொண்டது.
மிகக் கிரமமாக போராளிகளின் இந்திய இலங்கை பின்தள தள நிலைமைகளை இலங்கை அரசுக்கு அறிவித்தது.
-ஏனைய இயக்கங்களை வேவு பார்த்தமை.
-இந்திய இலங்கை பகுதிகளினூடு வேதரானியத்தில் இருந்தும் மாதகலில் இருந்தும் பயணிக்கும் போராளிகளின் வள்ளங்களை வரிசைகிரமமாக இலங்கை கட ற்படைக்கு போட்டுக் கொடுத்தமை.
-காரைநகர் கடற் படைத்தள தாக்குதலை முன் கூட்டியே இலங்கை கடற் படைக்கு அறிவித்து விட்டு யாழ் நகரின் வீதிகளில் வீதி உலாவந்தமை. (காரைநகரில் சண்டை நடக்கும் போது அவருக்கு கோட்டை ராணுவ முகாமுக்கு அருகில் உள்ள யாழ் நகரில் நிறைய வேலை இருந்திருக்கும்).
-உதவி கேட்டு அலறிய போராளிகளிடம் உதவி வரும் ஆனால் வராது என்ற பாணியில்……. பதிலிறுத்து சின்னவனின் வீரமரணம் உட்பட முகாம் தாக்குதலின் தோல்வி உறுதி செய்யப் பட்டது வரை சும்மா உட்கார்ந்து இருந்து இறுதி வரை போராடாது இருந்து சாதனை தளபதியாக இருந்தமை.
-டெலோ, LTTE மோதலை ஏற்ட்படுத்தும் வேலைத் திட்டத்தில் ஒரு படியாக LTTE முகாம்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தமை. துப்பாக்கி பிரயோகம் செய்தவர்களை புலிகள் தேடி வந்த போது டெலோ அமைப்பே இவ்வழியாக ஓடியதாக குறிப்பிடுவது.
-இது சம்பந்தமாக கேள்வி எழுப்பிய EPRLF உறுப்பினர்களை பாசிச அமைப்புகள் அழிக்கப் பட்டு EPRLF போன்ற மக்கள் அமைப்புகள் மேல் எழ வேண்டுமெனில் இதுவே வழி என சக தோழர்களுக்கு போதனை செய்தது.
-ஸ்ரீசபாரத்தினம் பதுங்கி இருந்து கொண்டு உதவி கேட்டு தேவானந்தாவை தொடர்பு கொண்ட போது அவர் பதுங்கி இருக்கும் இடத்தை கேட்டுக் கொண்டு அவர் இருக்கும் இடத்தை புலிகளின் காதுகளுக்கு எட்டும் வைகையில் செய்தது.
-யாருமே சிந்திக்க முடியாத வீரதீரச் செயலை தேவானந்தா சூளை மேட்டில் நிகழ்த்தியபோது சக தோழர்களை என்ன சொல்லி சமாளிச்சிருப்பார்?. இந்திய விஸ்தரிப்பு வாததத்திற்கு விழுந்த அடி எனச் சொல்லி இருப்பார்.
(போராளிகளுக்கு தமிழ் நாட்டு மக்களின் ஆதரவு கிடைக்கக் கூடாது என்ற இலங்கை அரசின் தூண்டுதலே காரணம் என்பது பின்னாளில் எல்லோராலும் உணரப் பட்டது)
-இந்த விடயங்கள் எல்லாம் அற்புதன் போன்றோர்களால் அறியப் பட்டு தேவானந்தாவின் இலங்கை அரச விசுவாசம் கேள்விக்கு உள்ளாக்கப் பட்டபோது அற்புதன் வேள்விக்கு உள்ளாக்கப்பட்டு இலங்கையின் இறைமைக்கு ஆபத்து வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தோழ் கொடுத்த உத்தம தோழர் அவர்.
இன்று பாருங்கள் அவர் நினைத்தவை எல்லாம் நடக்கின்றது தானே தோழர் உலக பெரிய தீர்க்கதரிசி அல்லவா? புலிகளினதும் ஏனைய குழுக்களின் வலிகளில் இருந்து எம்மக்களை காப்பாற்றிய உத்தமர் அல்லவா எமது தோழர்.
இன்று பாருங்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்வதால் எவ்வளவு அபிவிருத்திகளை நாம் காண்கிறோம்.நாம் அடைந்த அபிவிருத்திகள் அளப் “பாரியதாக” இருக்கும் போது ஊர்காவல் துறை சம்பவம் ஒரு கேடா? (பிரதமர் கேட்கிறார்)
83 இனக் கலவரம் பற்றி பேசி சந்திரகுமார் தோழர் தேவானந்தாவின் உறவை முறிக்க முனையக் கூடாது. பிரச்சனைகளை கிளறி மீண்டும் போராட்டம் வெடித்தால் தேவானந்தா மீண்டும் வெலிகடை சிறை போய் மீள்பிறவி எடுத்து மீண்டும் பழையது போல் செய்து இலங்கையின் இறைமையை காக்க முடியுமா?
தம்பி சந்திரகுமார் அற்புதனுடன் ஓடியவர் இன்னுமா? திருந்தவில்லை?
“ஐக்கிய இலங்கையில் எங்கள் ஆட்சி ஆயுபவன் சொல்லும் ஒற்றையாட்சி”
இதுவே எங்கள் கொள்கை. இதனை விடவும் இறங்குமா எங்கள் வேட்டி?
S.G.Raghavan, you are writing this from Canada…
Raghavan, what happened for K.S.Raja…?
கே.எஸ்.ராஜா நல்ல கலைஞன் அவரின் மரணம் வேதனைக்குரியது.ஆனால் ஒருபோத்தல் சாராயத்துக்கு இலங்கை வானொலியில் வாந்தி எடுத்தது அந்த கலைஞனின் சிறப்பை கெடுத்துவிட்டது. அது சரி இந்த கட்டுரைக்கும் கே.எஸ்க்கும் என்ன சம்பந்தம்?.அவரை வாந்தி எடுக்கக் தூண்டியவர்களில் அலெக்ஸ் ரவியின் தோழர்களுக்கும் தொடர்பு உண்டாமே உண்மையா?
ஆம் கனடாவில்தான்! அப்ப என்ன முள்ளி வாய்க்காலில் நிண்டு சொல்லச்/ எழுதச் சொல்லுறியளோ? இஞ்சதானப்பா இப்படி எழுத முடியுது. அங்கயும் எழுதினன் இலங்கையில் எத்தனை புலனாய்வு பிரிவு இருக்கோ அதுக்கு எல்லாம் பார்க் ரோடு இல் இருந்து போட்டுக் கொடுத்தாங்கள் யனநாயக வாதிகள்.
“கட்டுரையில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் எஸ்.ஜீ.ராகவனின் தனிப்பட்ட கருத்துக்கள், இனியொரு அதற்குப் பொறுப்பல்ல. கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அரசியல் வாழ்வோடு தொடர்புடையவையாயினும் ஆதாரங்களற்றவை. உண்மையாயின் பாரதூரமானவை”
அற்புதனின் மரணத்தின் பின்னர் அசோக் (சந்திரகுமார்) தப்பிச் செல்லும் போது தேவானந்தா குறித்து நிறைய தகவல் வெளியிடப் படலாம் என பலரும் எதிர் பார்த்தனர். அசோக்குடன் பல EPDP முக்கிய உறுப்பினர்கள் வெளி ஏறி இருந்தனர். அவர்கள் இன்றுவரை தாம் வெளி ஏறிய காரணத்தை வெளியிடவில்லை. அவர்கள் விரும்பினால் பல உண்மைகளை இத்தளத்தில் வெளியிடமுடியும். 1986களில் தேவானந்தாவோடு நெருங்கிய தொடர்புகளை பேணியோர் வாய் திறக்கலாம்.
தேவானந்தாவும் அவர்களது உறவுகளும் கொளும்பு சிங்கள அரச தொடர்புகளை கொண்டிருந்தவர்கள். அதன் தொடர்ச்சியை அவர் பேணி இருக்க முடியும். (இந்தவிடயம் EPRLF இயக்கத்தின் அனுதாபியான இளைப்பாறிய மானிப்பாயைச் சேர்ந்த மருத்துவ மாது ஒருவர் கூறியது. இவரது வீட்டில் தான் EPRLF இயக்கத்தின் ஆரம்ப காலத்து போராளிகள் நாபா உட்பட தங்கி இருந்தனர். இவருடைய மகள் EPRLF இன் மூத்த உறுப்பினரையே திருமணம் செய்தவர்)
தேவானந்தாவின் உள் விடயங்களை குமார் பொன்னம்பலத்திடம் அற்புதன் சொல்லி இருந்தார். தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்ததையும் அவர் சொல்லி இருந்தார். இருவரும் இன்று உயிருடன் இல்லை. அற்புதன் தனது கட்டுரையில் தேவானந்தா குறித்து அல்லது அவரது அரசியல் குறித்து நிச்சயம் பதிவு ஒன்றை செய்ய முயன்றிருப்பார். தினமுரசில் அற்புதனின் கட்டுரைகளை பதிவேற்றும் பொறுப்பை அப்போது செய்தவர்கள் வாய் திறக்கலாம்.
ஈழப் போராட்டத்தில் நடந்த பலவிடயங்களுக்கு ஆதாரங்கள் தேட முடியாது. கிட்டுவுடன் இருந்த மொழி பெயற்பாளர் ரஹீம் ஒரு இலங்கை அரசின் உளவாளி என எத்தனை பேருக்கு தெரியும்? பின்னாளில் அது பலருக்கு தெரிய வரவில்லையா? இயக்கங்களில் பல உள்ளிருத்திகள் புலனாய்வு அமைப்புகளால் பேணப்படுதல் ஒன்றும் புதிய விடயமில்லை.
“றக்கவன், ந்கட் கப்பெனெட் fஒர் K.ஸ்.றஜ…?”,
றொம்ப முக்கியம் பாருங்கோ 🙁
Ragavan is completly wrong on Karainagar Navy attack.Dough asked helped from LTTE,Kittu and Jonny rescued all EPRLF cadres and brought them to Jaffna Uni,They spend that night in Ramanathan Hall,went to their place on following early morning.
உண்மை LTTE இடம் EPRLF உதவி கோரிய நேரம் தேவானந்தா யாழ் நகரிலேயே இருந்தார். முக்கிய தாக்குதல் காரைநகரில் நடக்கும் பொது அவருக்கு யாழ் நகரில் என்ன வேலை?
I am not sure where Dough was in that time,but he contacted Kittu and explained the mistakes and asked for help.Assume he was in jaffna that time ,it could be a stategical position for a commander during that operation.How could you assume he tipped Navy about it.Actual mistake in Karainarar operation was wrong timing, EPRLF calculated TIDE time wrongly.
You speculate a lot,nothing factual
பாலசிங்கம் பிரிட்டன் புலனாய்வு துறை என்பது பல பேருக்கு சந்தேகம் உள்ளது. அன்டன் பாலசிங்கம் இதுவரை பிரிட்டனுக்கும் யூ.எஸ் இற்கும் எதிராகநடந்ததில்லை. ஆரம்பத்தில் பிரிட்டிஷ் கவுன்சிலில் தமிழர்களைப் போட்டுக்கொடுக்கும் வேலை செய்தவர்.
“ஆரம்பத்தில் பிரிட்டிஷ் கவுன்சிலில் தமிழர்களைப் போட்டுக்கொடுக்கும் வேலை செய்தவர்”, மொட்டையாக சொல்லாம கொஞ்சம் விரிவாக சொல்லலாமே. நீர் சொல்லுறத பார்த்தா இங்க புலுடா விடுறீர் என்று எண்ணத்தோணுது.
அன்டன் மேற்குலகை ஈழப் போராட்டத்திற்கு பயன்படுத்த முனைந்து இருக்கலாம். (வெற்றி கிடைத்ததா என்பது வேறு விடயம்) ஆனால் இலங்கை அரசு ஈழப் போராளிகளை? பயன்படுத்தியதே இங்கு பேசுபொருள்.
சிறீயைக் காட்டிக்கொடுத்ததில் டக்கிக்கு தொடர்பு இருக்கலாம். ஆனால் சிறீயை காப்பாத்துவதற்கு லொறியை ஏற்பாடு செய்ததில் ஈரோஸும் ஈபிஆர் எல் எப் உம் இணைந்த்தே செய்தன. ஈரோஸ் காட்டிக்கொடுததால் தான் புலிகள் பாலகுமாரைப் போடவில்லை என்ற கதையும் உண்டு.
Like that LTTE on Mandaiyan gang leader EPRLF Suresh & PLOTE leader Tharmalingam Siththarthan
இந்த இணையதள வாசகர்களில் யாராவது மட்டு சிறையுடைப்பில் தப்பி வந்தவர்கள் அல்லது அவர்களை தெரிந்தவர்கள் இருப்பின் அவர்களினூடு அல்லது அவர்களை நோக்கியும் வாசகர்களை நோக்கியும் சில விடயங்களை முன்வைக்கின்றேன்.
83 ஜூலை வெலிகடை படுகொலையில் யார் யார் கொல்லப் படவேண்டியவர்கள் என திட்டமிடப் பட்டே கொல்லப் பட்டார்கள் அதனை இலங்கைப் புலனாய்வு பிரிவு நெறிப் படுத்தி இருக்கும். இப் படுகொலை எழுந்தமானமான உணர்வுகளின் அடிப்படையில் நடை பெற்றதாக கொள்ள முடியாது.
தப்பிய ஏனைய கைதிகளுக்குள் இலங்கை அரசின் உள்ளிருத்திகள் பலர் இருந்திருக்கலாம்.மட்டு சிறையுடைப்பு இலங்கை அரசு வேண்டுமென்றே பாராமுகமாக இருந்திருக்கிறது. சிறையுடைப்புக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே கல்லடி , மஞ்சந்தொடுவா, ஆரையம்பதியில் உள்ள சாதாரண மக்களுக்கு தெரிந்து இருக்கிறது. ஏன் காத்தான் குடியில் உள்ளவர்கள் கூட அறிந்து இருக்கிறார்கள். இந்நிலையில் இலங்கை அரசுக்கு எப்படி தெரியாமல் போனது?.
ஆக சிறையுடைப்புச் செய்தி இலங்கை அரசுக்கு எட்டக் கூடிய சூழலே இருந்தது. (சிறிய இயக்கமான பேரவையில் இருந்து பெரிய அமைப்புகள் வரை சிறையுடைப்பை பெரிய வேலைதிட்டமாகவே முன்னெடுத்தனர்.) சிறையுடைப்பு இயக்க இரகசியம் வெளில சொல்லாதேங்கோ என்று மட்டக்களப்பு மக்கள் ஒவ்வொருவருக்கும் கூட்டம் போட்டு சொல்லவில்லை மற்றும் படி எல்லோருக்கும் சிறையுடைப்பு நிகழப் போவது தெரியும்.
முதல் சிறையுடைப்பு இலங்கை அரசுக்கு தெரியாமல்தான் நிகழ்ந்தது என வைத்துக் கொள்வோம். இரண்டாவது சிறையுடைப்பையும் இலங்கை அரசு தடுக்காமல் போனது ஏன்?
அந்தக் காலத்தில் பல தமிழ் மண்டைகள் இதற்கு பல காரணங்களை கூறின.
• மோட்டுச் சிங்களவன் துவக்கை வைச்சிட்டு தூங்கி இருப்பான் (தமிழ் காவலர்கள் தான் அங்கு அதிகமாக இருந்தனர் என்பது வேறு கதை)
• தந்திரமாக எங்கட பெடியள் வெண்டுட்டாங்கள்.
• இலங்கை அரசு அவர்களை சிங்கள இடங்களில் வைத்திருக்க விரும்பவில்லை ஏனெனில் சிங்களவர்களால் மீண்டும் ஆபத்து வரும் என்பதால். ஏனெனில் மீண்டும் சிறையில் படுகொலை நடந்தால் இலங்கை அரசுக்கு மீண்டும் உலக அளவில் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடுமாம். இலங்கை அரசுக்கு மீண்டும் கெட்ட பெயர்???
ஆக இலங்கை அரசின் பல உள்ளுருத்திகள் அங்கு இருந்திருக்கிறார்கள் என்பதில் வலுவான சந்தேகம் ஏற்படுகிறது.
அவர்கள் இலங்கை அரசால் கொடுக்கப் பட்ட வேலைத்திட்டங்களுக்காய் ஏனைய போராளிகளுடன் குந்திக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.
மட்டுச் சிறையுடைப்பில் தப்பிச் சென்று இயக்கங்களில் இணைந்து கொண்ட பலர் தாம் சென்ற இயக்கங்களில் கலகம் விளைவித்து இருக்கிறார்கள். நிர்மலா, மற்றும் நித்தி ஆனந்தனும் புலிகளுக்குள் சலசலப்பை உண்டாக்கியவர்கள் தான். இப்படி பலரை உதாரணம் காட்ட முடியும்.
இந்த அடிப்படைகள் பின்னாளில் அற்புதன் தான் அறிந்தோரிடம் வெளியிட்ட கருத்துக்கள். இப்போது தேவானந்தாவின் நடவடிக்கைகள் எவற்றை உணர்த்தி நிற்கின்றன???????????
Raghavan, now I have doubt in Vamadevan, who attacked the Police Station & robbed the Bank in South… & who killed ‘Naga Padai’ (Eagle group) Rajmohan in Chennai.
Did the people know on such and such a day such and such a prison break will Did the people know on such and such a day and time such and such a prison break will happen? Most likely SL govt took it as humbug. Unfortunately AGA Padmanathan(?) spent years in prison since his official vehicle was used for the escape?? Nirmala was ungrateful and turned against the folks who took her out since her sis was done by them. The whole premise of your assumptions are wrong.
சிறி சபாரத்தினத்தை புலிகளுக்கு யாரும் காட்டிக் கொடுக்க வேண்டியிருக்கவில்லை, அவ்வாறு புலிகளும் இருக்கவில்லை.
அவ்வாறு ஈரோஸ்ம் நடந்ததாக வரலாறும் இல்லை. அவ்வாறு காட்டிக் கொடுக்க வேண்டிய தேவை ஈரோசுக்கும் வேண்டியிருக்கவில்லை. அங்கே என்ன நடந்தது என்பது உண்மையில் டெலோ உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றாகத் தெரியும் அதனால்தான் இன்றுவரையும் ஈரோஸ் உறுப்பினர்களுடன் எப்பவுமே டெலோ உறுப்பினர்கள் நல்லதொரு நட்புறவிற்கும் அப்பால் சகோதர விசுவாசமாக நடந்துகொள்வது மட்டுமின்றி எங்காவது எவரொரு ஈரோஸ் உறுப்பினருக்கு என்னவொரு தீங்கு நேர்ந்திடினும் உடனடியாக அங்கே டெலோவின் பிரசன்னத்துடனான பாதுகாப்பு ஏற்பாடு நடந்திருப்பதனை நீங்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று அறியலாம் காணலாம். இது டெலோவின் மத்தியகுழு அல்லது பிரதேச நிறைவேற்றுக் குழு தீர்மானித்து எடுத்த முடிவுகள் இல்லை மாறாக அவ் அந்த பிரதேச உதிரி உறுப்பினர்கள் தாமாகவே முவந்து ஈரோஸ் உறுப்பினர்களைப் பாதுகாத்தார்கள் என்பதே உண்மை.
உதாரணமாக திருக்கோணமலையில் அமைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணசபை தலைமைச் செயலகத்தில் 1989 ம் ஆண்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு வரதராசப்பெருமாள் ஈரோஸ் திருக்கோணமலை பிரதேச பொறுப்பாளர்களை அழைப்பு விடுத்தபோது பேச்சுவார்த்தைக்காக ஆயுததாரிகள் பாதுகாப்புடன் சென்ற ஈரோஸ் உறுப்பினர்களின் வாகனத்தை அங்கே காவல் இருந்த இந்திய படையினருக்கு இவர்கள் விடுதலைப் புலிகள் தம்மைத் தாக்க வருகிறார்கள் என்று அறிவித்து அவர்களைக்கொண்டு தாக்கவும் செய்த போது அவ்விடம் வீரச்சாவடைந்த பிரபா1, சங்கர் போன்றவர்களின் வித்துடல்களையும், அங்கே மோதலில் சிக்கித் தவித்த மாவட்ட பொறுப்பாளர் திலக், சின்ன மாஸ்டர், விழுப்புண் அடைந்த பிரபா 2 போன்றவர்களை ஆயுதங்கள் சகிதம் மிதிவண்டிகளில் முன்னேறி அவர்களின் ஆயுதங்களை வாங்கிக் கொண்டு அவர்களைக் காப்பாற்றி தங்களின் மிதிவண்டிகளைக் கொடுத்து பாதுகாப்பாக வழியனுப்பி வைத்தது மட்டுமின்றி ஆயுதங்களைப் பாதுகாப்பாக ஈரோஸ் முகாம் கொண்டுவந்து சேர்த்திருந்தார்கள்.
டெலோ சிறிசபாரத்தினம் மீட்பு நடவடிக்கை.
ஈரோசின் பிரதம தாக்குதல் தளபதியால் தீட்டப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டது. அவர் பாதுகாப்பாக அளவெட்டியில் கொண்டு சேர்க்கப் பட்டார்.
இந்த நடவடிக்கையில் ஒரு களப்போராளியாக பங்குகொண்டவரின் அனுபவம்.
பின்னர் சிறிசபாரத்தினம், கல்வியங்காட்டில்,,,,,,,,,,,
உண்மையில் நடந்தது என்ன,,, தொடரும்,,,,,
தாங்கள் ஐரோப்பாவில் இருந்து எழுதும் ஒருவராக இருக்கலாம் என நினைக்கிறேன். அவ்வாறு இருப்பின். தாங்கள் ஈரோஸ் இல் பெற்ற பயிற்ச்சி, EPDP இல் கிடைத்த வனவாசம் இல்லை கொழும்பு வீடும் …..iththiyaathiyum……, EPRLF வரதர் அணியில் இல் கிடைத்த பாராளுமன்ற சீற்று, இப்படி இத்தி ஆதிகள் எல்லாம் உங்களுக்கு இருப்பதால்! நீங்கள் பலதை தெரிந்து இருப்பீர்கள் சொல்லுங்கள்.
அது சரி ஈரோஸ் இன் பிரதம தாக்குதல் தளபதி? அதுவும் யாழில்! யாழ்பாணத்தில் ஈரோஸ் இல் டுபாகூருகள் தான் அதிகம் இருந்ததாக கேள்வி
உறுதியான ஆதாரங்கள் இன்றி ஊகங்கள் கேள்விபபட்டவைகள் ஊடாக இப்படி எழுதுவதும் வெளியிடுவதும் உங்களை நீங்களே தரம் தாழ்திக் கொள்வதாகும். (நான் டக்ளசின் அனுதாபியல்ல)
அலெக்ஸ் ரவி என்னை யாரும் கந்தப்புச் சாத்திரியார் என்று சொன்னவையோ?
யாரை யார் கொண்டவங்கள் திண்டவங்கள் எண்டு நான் இங்கு கதைக்க வரவில்லை. தமிழ் போராட்டத்தையும் அதன் அரசியலையும் ஸ்ரீலங்கா எப்படி கொண்டது திண்டது என்பதே எனது பார்வை அதுவே ஆரோக்கியமான கருத்தாடலாக இருக்கும் என நினைக்கிறேன்.
வாமதேவன் தெற்கில் கொள்ளையில் ஈடுபட்டதாக நான் அறியவில்லை. மட்டக்களப்பில் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம். அவர் மட்டு சிறையில் இருந்து தப்பியதை வைத்து அவரும் இலங்கை அரசின் உளவாளியா என்பதில் அலெக்ஸ் ரவிக்கு சந்தேகம் வந்திருக்கலாம். தாக்குதல் திட்டம் தோல்வி அடைய அவர்களது கவனக் குறைவே காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். தாக்குதல் திட்ட அவசரத்தில் ஆம்புலன்ஸ் சாரதியை இறக்கிவிட்டு போய்விட்டார்கள். தன்னை காப்பாற்ற சாரதி ஓடோடிப் போய் தொலைபேசி ஊடாக போலீஸ் நிலையத்துக்கு அறிவித்துவிட்டார். இதுவே தோல்விக்கு காரணம்.
நாகபடையை ஈரோசின் முன்னாள் தலைவராக இருந்த (குறுகிய காலம்) அல்வாயைச் சேர்ந்த விசுவேஸ்வரன் (விசு) தலைமையேற்று நடத்தி இருந்தார். பலர் நினைப்பது போன்று நாகபடை மட்டு அம்பாறை இளையர்கள் மாத்திரம் தொடர்பு பட்டிருக்கவில்லை. விசு இப்போது இரண்டாம் இல்லறத்தில் திளைத்து கொண்டிருக்கிறார். ராச்மோகன் யார் என்று எனக்கு தெரியாது.
I think Visveswaran was LTTE but went to PLO via EROS. He was arrested for Bastimapillai murder and went to Canda after release. In 1983 came back to Chennai and worked for PLOTE. The PLOTE suspect him as LTTE spy and arrested. He escaped with camp in-charge and gone back to Canada. During the search PLOTE killed village head (indian man)who was habouring them and arrested the camp incharge. I don’t think Visu involved with Naga padai
ராஜ் மோகன் யாழ் உரும்பிராய் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு செங்கலடியை வசிப்பிடமாக கொண்டவர். இவர் 1976 ஆண்டு மட்டக்களப்பு நாவற்குடா வைத்து பஸ் வண்டியை எரிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர். 1979 ஆண்டு மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய (தற்போது கிழக்கு பல்கைலைக்கழகம்) சம்பள பணத்தைக் கொள்ளையிட முயன்றபோது அங்கே ஆசிரியராக பணிபுரிந்த குருநாகலையை சேர்ந்த சிங்கள இனத்தவரான ஒருவரால் இக்கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்தது. ஒருவர் கைது செய்யப்பட்டார். இதன் பின் அந்த சிங்கள ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்டர். இவற்றுக்கு பொறுப்பானவர் இந்த ராஜ் மோகன் இவருடைய இயக்கத்தின் பெயர் கழுகப் படை .
Hi Guys
One thing for sure all of our leaders somehow connected some Establishment. This is the way politics and the power politics works. Also they all were young and did not know the dangers of spider web and the plot against Tamils. All the movements made lot of mistakes and some how wanted get recognized by indians and indian estabilishment. But they closely work with Srilankans as well. Again Srilankan establishment used many Tamils and it was fact. Even in KP case he was under the scruitny of possible australian uncles, when the time comes they would have asked him to leave everything which he has to do. We do not have a state or genuinely friendly country so we have to suffer. Also we are a small community with less global values. We have to suffer. For the survival everyone does everything and we are only Dice(“pakadi Kaikal”) and everyone will use. We have to some come regroup and re write what we want and say our strategy clearly. Then we have to build a respectful institution to take it to the next level. I have a hope in our younger generation in the west. we have to wait and see. I thank Inioru’s genuine position on Tamils issue. Most of the Tamil news media either pro or Anti LTTE, Inioru is critic with constructive advice.
Mr. Kandiah, I whole heartedly agree with you. Every youth involved in Eezham struggle in early days, sacrificed their own life and sincerely involved themselves in the struggle. I do not have any hope even to this day, on re unification of various thamil organizations to achieve our goal of peace, dignity, equal rights and freedom to every citizen of Eezham. Recently I talked to few western political candidates to ask their help In organizing a political event. By talking t them I found out their priority is promoting self-interest rather common objective of achieving freedom to Eezham thamils. If we look at it at on economical perspective, we can clearly understand their position. As I said many times, failure of Eezham struggle is directly linked to the survival struggle of many (Thamil) Eezham supporters among diaspora thamils, who have misguided apolitical LTTE leadership in many ways, leading to the ultimate elimination of LTTE.
“Also they all were young and did not know the dangers of spider web and the plot against Tamils”
“we have to build a respectful institution to take it to the next level. I have a hope in our younger generation in the west”
நன்றிகள் கந்தையா இவ்வாறான கருத்துக்களையே நான் உட்பட பலரும் எதிர்பார்ப்பார்கள். தாங்கள் இன்னும் பலகோணங்களில் சிந்தித்து காத்திரமான கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் நன்கு கட்டமைக்கப் பட்ட செயலூக்கமும் மதி நுட்பமும் கொண்ட சிறந்த பொறிமுறை உள்ள அமைப்பாக்கத்தை உருவாக்க முடியும். குறிப்பாக புலம் பெயர் இளையோருக்கு பெரும் உந்து சக்தியாக இருக்கும்.
விசு, நாகராஜா(பேரவை), பிரபாகரன், உமாமகேஸ்வரன்………. இன்னும் பலர் ஆயுத போராட்டத்தின் முன்னோடிகள் ஐயர் போன்றவர்கள் ஆலை இல்லா ஊருக்கு இலுப்பம் பூ சக்கரை என்ற நிலையில் உள்ளவர்கள். விசு, உமாமகேஸ்வரன் , தங்கத்துரை போன்றவர்கள் மட்டக்களப்பில் 1970 நடுப் பகுதிகளில் இவர்கள் கூட்டா இயங்கினார்கள் இவர்கள் வேறு வேறு திணை களங்களில் வேலை செய்தாலும் போராட்டம் சம்பந்தமான இணைப்பு இருந்தது. ஆனால் புதிய தமிழ் புலிகளில் தங்கத்துரைக்கு தொடர்பில்லை. புதியதமிழ் புலிகளின் முக்கியஸ்தர்கள் பிரபா,உமா, விசு இவர்களை மாத்திரம் சொல்லமுடியும் நாகராயனும் குறிப்பிட்டுச் சொல்லப் படக் கூடியவர் ஆம் அவரும் முக்கியமானவர். ஏனையவர்கள்……… ?
விசு புதியதமிழ் புலிகள் சிதைந்தபோது போக்கிடமில்லாமல் புலிகளிடமும் உமாவிடமும் மாறி மாறி அல்லாடிய காலத்தில் ஈரோஸ் அமைப்பு ரத்னாவினாலும் சங்கர் ராயினாலும் கைவிடப் பட்ட காலத்தில் வாடகைத் தலைவராக அமர்த்தப் பட்டார், மிகக் குறுகிய காலத்தில் அந்த அமைப்பை செயல் படுத்த முடியாமல் அதில் இருந்து வெளி ஏறினார், உண்மையில் வெளியேற்றப்பட்டார். பாலகுமாரும் வாடகைத் தலைவரே. (தலைவராக அமர்த்தப் பட்டவர்).
நாகபடை புதியதமிழ் புலிகள் மற்றும் மட்டக்களப்பில் விசுவுடன் தொடர்பில் இருந்த தீவிர சிந்தனையுள்ள சில உதிரிகளினையும் இணைத்து விசுவின் குளுவாக்கும் செயல் பாடும் தோல்வியில் முடிந்தது. விசுவின் தனிப்பட்ட பலவீனம் அவருடைய தலைமைத்துவ பண்பை சீர் குலைத்துவிட்டது. பிரபா, உமா இருவருடனும் முரண்பாடை விசு கொண்டிருந்தார். அரசியலில் ஈடு படக் கூடாது என்ற எச்சரிக்கை பிரபாகரனால் விசுவுக்கு விடுக்கப்பட்டது. ஏனைய தனது கூட்டாளிகள் போல் தானும் ஒரு அமைப்பை கட்டி எழுப்பலாம் என்ற அவரது செயல்பாடு தோல்வியில் முடிந்தது.
ஈரோஸ் நாகபடை போன்ற அமைப்புகளில் visu 1979-1983 காலங்களில் ஈடுபட்டிருக்கலாம். 1984 இல் visu கனடா சென்று அங்கிருந்தே பின்னர் சென்னை சென்று பிளாட் அமைப்புடன் சேர்ந்து இயங்க முயன்றார்.
தற்போது இங்கிருந்தும் அகன்று விட்டார். இலங்கை, இந்திய, கனேடிய புலனாய்வு மையங்கள் இவரை தொடர்பு கொண்டனதான். கனேடிய புலனாய்வு அமைப்புக்கு ஈழத்தமிழர்களை போட்டுக் குடுக்கும் வேலையை செய்ததாக குற்றச் சாட்டு உண்டு. ஆனால் அவர் 1984 களிற்கு பின் தனது அரசியல் ஆர்வம் அனைத்தையும் இழந்து விட்டார் என்பதே பொதுவான உண்மை.
இதனை எழுதும் போது விசுவுக்கு ஏன் இவ்வளவு முக்கியம் என யோசித்தேன். இருக்கட்டும். இத்துடன் இந்த தேவையற்ற கருத்துப் பகிர்வை விட்டுவிடுவோம்.
வேற்றுமையில் ஒற்றுமை காணல், உள்ளுருத்திகளை இனங்காணலும் அவர்களை உள்ச்சிதைப்புக்கு அனுமதிக்காத வகையில் அவர்களை கையாளுதல், சகோதர முரண் பாடுகளை இழிவுப் புள்ளியிலேயே தடுத்தல் அல்லது தீர்த்தல் அல்லது முரண்பாடுகளை கையாள ஒற்றுமைப் படுத்த அழுத்த குழுக்கள் அல்லது ஆலோசனை குழுக்கள் உருவாக்குதல் அதனை நன்கு நிறுவன மயப் படுத்தி வைத்தல்.
இன்னும் பலப் பல வேண்டும் எங்களுக்கான கட்டமைப்புக்கு அதன் உருவாக்கத்திற்கும்……………………….
பரம தேவாவை நினைத்து வாமதேவன் குறித்து சொல்லிவிட்டேனோ ?……………………….
//நாகபடையை ஈரோசின் முன்னாள் தலைவராக இருந்த (குறுகிய காலம்) அல்வாயைச் சேர்ந்த விசுவேஸ்வரன் (விசு) தலைமையேற்று நடத்தி இருந்தார்.//
//ஈரோஸ் நாகபடை போன்ற அமைப்புகளில் visu 1979-1983 காலங்களில் ஈடுபட்டிருக்கலாம்.//
S.G Ragavan, Which one is right? I think you write without any confirm information.
RTS, I don’t know what he is writing here…
குறிப்பிட்டு துல்லியமாக எந்த காலப் பகுதியில் என என்னால் சொல்லமுடியாது. இரண்டு அமைப்புகளிலும் வெவ்வேறு காலப் பகுதிகளில் மிகக் குறுகிய காலம் இருந்தார். ஈரோஸ் அமைப்பால் வெளியிடப் பட்ட அவர்களது சொந்த வெளியீட்டிலும் குறிப்பிடப் பட்டுள்ளது(இப்புத்தகம் 1984 இலும் பின்னர் இந்திய ராணுவம் நிலை கொண்டிருந்த காலப் பகுதியிலும் மீள் பிரசுரமாக வந்திருக்க வேண்டும்). அவரது செயல்பாடுகள் பற்றி தனிப்பட்ட வகையில் தெரியும் என்பதாலும் சொல்லி இருந்தேன்.
அலெக்ஸ் ரவி அவர்களே நான் இந்த கட்டுரையை எழுதியதன் நோக்கம் தமிழ் தரப்பு தெரிந்தோ தெரியாமலோ நிகழ்த்தியிருக்கக் கூடிய செயல் பாடுகளை விமர்சித்தாலும். அதனூடாக எமது சமூகம் எமது மக்களின் விடுதலை தொடர்பான அரசியல் செயல்பாடுகளில் ஒரு எச்சரிக்கை மற்றும் அவதானத்துடன் இருக்கவேண்டும் என்பதே. பதிலிடுபவர்களின் கருத்துக்களுடன் நானும் இழுபடவேண்டிய சூழல் எனக்கு ஏற்படுகிறது. இந்த இடத்தில் திரு Kandiah அவர்கள் இங்கு சரியான கோணத்தில் தனது கருத்தினை முன்வைத்தார் அவ்வாறான விடயங்களேயே ஏனைய வாசகர்கள் முன்வைக்கவேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.
மிக நீண்ட காலத்தின் முன் இதே இனிஒருவில் 1990 களில் புலிகள் பிரேமதாசா பேச்சுவார்த்தையில் புலிகளை அவர்கள் மடக்கி இருந்தார்கள் எனக் கூறி இருந்தேன் (அது எனது அனுமானம் தான்) குறிப்பாக ராஜீவ் படுகொலையில் கூட அக்காலப் பகுதியில் திட்டமிடப் பட்டதாக இருக்கலாம் என குறிப்பிட்டிருந்தேன். மாத்தயா புலிகளின் தலைமை பதவியை சதி முயற்சி ஒன்றின் மூலம் கைப்பற்றுவதும் பின்னர் ராஜீவ் கொலைப்பழியை பிரபாகரன் மீது போட்டுவிடுவதும் அக்கூட்டுச் சதியின் திட்டமாக இருக்கலாம் எனக் கூறி இருந்தேன். மிக அண்மித்த காலப் பகுதியில் பிரேமதாச அரசு புலிகளுக்கு ஆயுதம் கொடுத்த குற்றச் சாட்டின் போது அவரின் மகன் சஜித் பிரேமதாச கூறி இருந்தார். தாம் ஆயுதங்களை கொடுத்து மாத்தையாவை பலப்படுத்தினோம். அதன் மூலம் அவர்களை புலிகளிடம் இருந்து பிரித்து புலிகளை பலவீனப் படுத்தி விட்டோம் எனக் கூறி இருந்தார்.
ஆக விடுதலை கோரிப் போராடும் அடக்கப் படும் மக்களுக்கு எதிராக சிலந்தி வலைபின்னல் போன்று பின்னப் பட்ட கொடிய உலக ஒழுங்கில் இருந்து, அவ்வலைப் பின்னலுக்குள் விழுந்து விடாமல் அல்லது அவற்றை அறுத்து வெளியேறும் தந்திரோபாயங்களை உருவாக்கிக் கொண்டு சிறுபான்மை தமிழ் மக்கள் தமது உரிமையை பெற்று கொள்ளும் வழிமுறையை மேற்குலகில் வாழும் எமது இளைய சமுதாயம் தாயக உறவுகளையும் இணைத்து செயல் படுத்த நாம் ஊக்கிகளாக நாம் இருத்தல் வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறான உள்ளிருத்திகளால் முன்நகர முடியாமல் தத்தளிப்பதை நாம் நிகழ் காலத்தில் பார்க்க முடிகிறது. அல்லது இந்த சிலந்தி வலைப் பின்னலுக்குள் சிக்குண்டு அல்லாடுவதை பார்க்க முடிகிறது.
ஆக ஒடுக்கப் பட்டுக் கொண்டிருக்கும் மக்காளாகிய நாம் என்ன செய்தோம்? …. என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்ன செய்யப் போகிறோம்,…… என்ற கேள்விகளினூடு எமது சமூகத்தை வழிகாட்டும் உந்து சக்திகளாக இருப்போம் வாருங்கள்.
நாக படையின் ஆரம்பமே 1983. இனக்கலவரத்தின் பின் தாமரைக்கேணியில் வைத்து ஐ .தே.க. மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மாலா இராமச்சந்திரன் சுட்டுக் கொலை செய்தனர்.அத்தோடு அமைச்சர் இராசதுரையின் செயலாளர் டொட்டி. பிரான்சிஸ் கொலை முயற்சி, வந்தாறுமூலையை சேர்ந்த ஆசிரியர் நாகேந்திரம் கொலை முயற்சி இவை அந்த கால கட்டத்தில் நடந்தவை.பொலிசாரின் விசாரணையில் ஸ்ரீ பத்மன், அதிகார் வீதி, மட்டக்களப்பு சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.இவர் நாக படையின் முக்கியமானவர். பொலிசார் இவரிடமிருந்து நாக படையின் யார் யார் என்று அறிந்து கொண்டனர். மற்றவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர் பெயர் விபரம் தெரியவில்லை. அதில் ஓட்டமாவடியை சேர்ந்த ஜுனைத்தின் (இவர் ஒரு முஸ்லிம்) புலிகளுடன் இணைந்தார் பின்னர் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது வீரமரணமடைந்தார் .
ஸ்ரீ பத்மன் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின் விடுதலையாகி ENDLF. இயக்கத்தில் இணைந்து செயலாற்றும் போது புலிகளுடன் மோதலில் கொல்லப்பட்டதாக தகவல்