பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு ரேஷன் அமைப்பின் மூலம் உணவுப் பொருட்களை உலகின் பல நாடுகளும் வழங்கி வருகிறது. இந்தியாவில் தமிழ்நாடு ரேஷன் சிஸ்டன் முன்மாதிரி திட்டமாகவும், முன்னோடி திட்டமாகவும் உள்ளது. ஆனால், இந்த ரேஷன் சிஸ்டத்தை அடியோடு மூட திட்டமிடுவதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.அதன் முதல் கட்டமாக ரேஷன் கடைகளை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து மத்திய அரசும் கட்டுப்படுத்த துவங்கியுள்ளது.
கொரோனா பரவலையடுத்து வட மாநில தொழிலாளர்கள் சலையோரங்களில் நடந்தே பல்லாயிரம் கிலோ மீட்டர் பயணித்து சொந்த ஊர்களுக்குச் சென்றார்கள். மேலும் உணவின்றியும் பட்டினியாலும் பல நூறு தொழிலாளர்கள் மடியவும் செய்தனர். இதனையடுத்து ரேஷன் கடைகள் மூலம் 80 கோடி பேருக்கு உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டம் உருவானது. இத்திட்டத்தின் படி மானிய விலை உணவு தானியத்துக்கு மேல், ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் முறையாக உணவுப்பொருட்களை விநியோகம் செய்யாமல் இப்போது அதை மூட முடிவு செய்துள்ளது. இப்போது இந்திய பொருளாதாரம் மீண்டும் வருவதால் வெளிச்சந்தையில் தாரளமாக உணவுப்பொருட்கள் கிடைப்பதும் தானியங்களின் புழக்கம் நன்றாக இருப்பதாலும் அரிசி, கோதுமை, உட்பட தானியங்கள் விநியோகம் செய்வதை இலவச உணவு தானிய விநியோகம் செய்யும் பணி நீடிக்கப்படாது என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.