இன்று அதிகாலை இந்திய நேரப்படி 6.30 மணியளவில் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று சுமார் 160 பயணிகளுடன் மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று தீப்பிடித்து வெடித்துச் சிதறியதாகத் தெரிகிறது. இந்த விபத்தில் சுமார் 160 பேர் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மங்களூருவில் மிக மோசமான வானிலையோடு மழை தூரலிட்டுக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நடந்துள்ளதாகத் தெரிகிறது. மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் தாமதமாகியிருக்கும் நிலையில் மங்களூர் விமான நிலையம் தற்காலிகமாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து நாடு முழுக்க அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.