கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் நேற்று இரவு விடுதி அருகே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நகர மையத்தில் உள்ள மூடப்பட்ட இரவு விடுதி அருகே காலை சுமார் 4 மணிக்கு முன்னதாக ஏற்பட்ட இந்த குண்டுவெடிப்பில் ஒருவரும் காயமடையவில்லை.
ஆனால் இரவு விடுதியில் ஒருபகுதி கடுமையாக சேதம் அடைந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் வெறுப்படைந்துள்ள மக்கள் போராட்டங்களை ஒடுக்கிய அரசுக்கு எதிரான இயக்கங்கள் வலுவடையும் நிலையில் அரசின் திட்டமிட்ட செயற்பாடுகளில் இதிவும் ஒன்றாக அமைந்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
கடந்த வியாழனன்று தீவிரவாதக் குழு ஒன்று ஏதென்ஸ் நகர நிர்வாக நீதிமன்றத்திற்கு வெளியே குண்டு ஒன்றை வெடிக்கச்செய்தனர். இதனால் கோர்ட் வளாகத்தின் ஒருபுறம் சேதமடைந்தது. ஆனால் ஒருவரும் காயமடையவில்லை.