ஹோவர்ட் ஜின் (Howard Zinn) முதலில், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைப் படித்திருக்கிறார். குறிப்பாக அவரைத் திகைக்க வைத்த வாசகம் இதுதான். ‘அரசாங்கம் என்பது நடுநிலையுடன் செயல்படும் ஒரு நிறுவனம் அல்ல. அது முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்காகவே செயல்படுகிறது. பதினேழு வயதில் இதை நான் படித்தபோது, அதிர்ச்சியடைந்துவிட்டேன்…’அவர் தொடர்கிறார். ‘டைம்ஸ் சதுக்கத்தில் ஒருமுறை போராட்டம் ஒன்று நடைபெற்றது. நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டிருந்தார்கள். போருக்கு எதிராகவும், ஃபாசிஸத்துக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டபடி ஊர்வலம் சென்றுகொண்டிருந்தார்கள். சைரன் சத்தம் கேட்டது. சிவிலியன் உடையில் இருந்த காவலர்கள் என்னைத் தாக்கினார்கள். சுதாரித்து எழுந்தபோது ஒரு விஷயம் தெளிவானது. காவல்துறையும் அரசாங்கமும், செல்வம் உள்ளவர்களுக்காகவே செயல்படுகிறது. உங்களுக்கு எந்த அளவுக்கு பேச்சு சுதந்தரமும் கூட்டம் கூடும் சுதந்தரமும் இருக்கிறது என்பது நீங்கள் எந்த வர்க்கத்தைச் சார்ந்தவர் என்பதைப் பொறுத்தே அமைகிறது.’
அதற்குப் பிறகு மார்க்ஸின் மூலதனம், எங்கேல்ஸின் டூரிங்குக்கு மறுப்பு என்று பல நூல்களைத் தேடிப் பிடித்து ஜின் படித்திருக்கிறார். சோவியத் யூனியனின் வீழ்ச்சியைப் பார்த்துவிட்டு பலரும் கம்யூனிஸம் தோற்றுவிட்டது என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, ஹோவர்ட் ஜின் மார்க்சியத்தின் மீது நம்பிக்கையை இழக்கவில்லை. அதற்கு அவர் சொன்ன காரணம், சர்ச்சைக்குரியது. ரஷ்யாவில் மார்க்சிஸம் செயல்படுத்தப்படவிலலை. மார்க்சியத்துக்கும் ஸ்டாலினுக்கும் தொடர்பி்ல்லை. சோவியத்தின் தோல்வி மார்க்சியத்தின் தோல்வியல்ல.மார்க்ஸை ஏற்கிறேன், ஆனால் லெனினையும் ஸ்டாலினையும் மாவோவையும் நிராகரிக்கிறேன் என்று சொல்லும் அறிவுஜீவி முகாமில் ஒருவர், ஹோவர்ட் ஜின். மார்க்ஸ், எங்கெல்ஸுக்குப் பிறகு, அரசாங்கத்தை மறுதலிக்கும் அராஜகவாதம் (Anarchism) பற்றிய ஆய்வில் அவர் ஈடுபட்டார். எம்மா கோல்ட்மேன், மைக்கேல் பகுனின் ஆகியோரின் எழுத்துகளால் கவரப்பட்டார்.அப்போது அவருக்கு எந்த எண்ணம் உதித்தது. மார்க்ஸ் மீண்டும் தோன்றினால் என்ன செய்வார்? கம்யூனிஸம் இறந்துவிட்டது என்று சொல்பவர்களை அவர் எப்படி எதிர்கொள்வார்? ஸ்டாலினை ஏற்பாரா, நிராகரிப்பாரா? இன்றைய பொருளாதார நெருக்கடியை அவர் எப்படி அணுகுவார்? பகுனின் போன்றோரின் வாதத்தை எப்படி முறியடிப்பார்?
ஹோவர்ட் ஜின்னின் கற்பனை, Marx in Soho என்னும் நாடகமாக உருப்பெற்றது. (முன்னதாக, எம்மா கோல்ட்மேன் பற்றிய நாடகத்தை அவர் எழுதியிருந்தார்). மிக எளிமையான, சுருக்கமான, ஒற்றைப் பாத்திர நாடகம் அது. மார்க்ஸை முதல் முதலாக வாசிப்பவர்களுக்கும் வாசிக்க விரும்புபவர்களுக்கும் இது அடிப்படை ஆவலைத் தூண்டக்கூடியது. மார்க்ஸின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஓர் அறிமுகத்தை இது தருகிறது. அவரது அடிப்படை சிந்தனைகள் சிலவற்றையும் தொட்டுச்செல்கிறது. இதன் நூல் வடிவம், மிகச் சிறியது. அறுபது பக்கங்களுக்கும் குறைவு.இந்த நாடகத்தில், மார்க்ஸ் உயிர்த்தெழுந்து வருகிறார். லண்டனில் முன்னர் வசித்த சோஹா என்னும் பகுதிக்குத் திரும்பிச் செல்வதுதான் அவர் திட்டம். ஆனால், தவறுதலாக நியூ யார்க்கில் உள்ள சோஹோவுக்கு வந்துவிடுகிறார். பிறகு, மக்கள் முன் கூடி பேச ஆரம்பிக்கிறார்.நான் உங்கள் செய்தித்தாள்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன். என் சிந்தனைகள் இறந்துவிட்டன என்று அவை மீண்டும் மீண்டும் சொல்லி வருகின்றன. நூறு ஆண்டுகளாக இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுததவில்லையா? நான் இறந்துவிட்டேன் என்பது உண்மையெனில், எதற்காக அதை திரும்பத்திரும்ப சொல்லவேண்டும்?’நான் உங்கள் வீதிகளில் நடந்து சென்றேன். குப்பைக்கூளங்களையும், தெருக்களின் ஓரத்தில் உறங்கும் ஆண்களையும் பெண்களையும் பார்த்தேன். குளிரில் அவர்கள் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். நான் மெல்லிசையைக் கேட்கவில்லை. ஐயா காபி குடிக்க கொஞ்சம் சில்லரை கிடைக்குமா என்னும் குரலைத்தான் கேட்டேன்… (கோபத்துடன்) இதையா நீங்கள் முன்னேற்றம் என்கிறீ்ர்கள்? மோட்டார் கார்களும், தொலைபேசிகளும், பறக்கும் இயந்திரங்களும் கூடவே தெருக்களில் உறங்கும் மனிதர்களும் உங்களுடன் இருக்கிறார்களே. இதுவா வளர்ச்சி?’பேருக்கும் குறைவானவர்கள், 2000 பில்லியன் டாலரை முதலீடு செய்திருக்கிறார்கள். இவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் உழைப்பவர்களா, அதிகம் நல்ல பண்புகள் கொண்டவர்களா, சமூகத்துக்குத் தேவையானவர்களா? 150 ஆண்டுகளுக்கு முன்பு நான் என்ன சொன்னேன்? முதலாளித்துவம் பெரும் செல்வத்தை உற்பத்தி செய்யும். ஆனால், அந்தச் செல்வம் ஒருசிலரிடம் மட்டுமே குவிந்திருக்கும். சொன்னேனா இல்லையா?’ஒரு நாள் Principles of Political Economy புத்தகம் தொலைந்துவி்ட்டது. என்னுடைய ரிக்கார்டோ எங்கே என்று ஜென்னியிடம் கேட்டேன். அவர் அதை அடகு வைத்துவிட்டார். எனக்குக் கோபம் வந்துவிட்டது. என் ரிக்கார்டோவையா நீ அடகு வைத்துவிட்டாய்? கத்தினேன். அவர் அமைதியாகப் பதிலளித்தார். ஆம், என் மோதிரத்தைப் போலவே உங்கள் ரிக்கார்டோவையும் அடகு வைத்துவிட்டேன்… ஒருநாள் வீட்டை விட்டு வெளியேறி நடந்துகொண்டிருந்தபோது குளிர் என்னைக் கடுமையாகத் தாக்கியது. அப்போதுதான் உணர்ந்தேன். என் காலணிகள் முந்தைய தினம் அட்கு வைக்கப்பட்டுவிட்டன.’எலியனோர் ஓர் அபூர்வமான, விநோதமான குழந்தை. ஓரிரவு, பிரிட்டிஷ் அரசாங்கம் இரு ஐரிஷ் இளைஞர்களைத் தூக்கில் போட்டுவிட்டது. சோஹோவில்தான் இது நடந்தது… அவர்கள் இங்கிலாந்தில் இருந்து சுதந்தரம் கேட்டதால் இந்தத் தண்டனை… எலியனோர் அழுதுக்கொண்டே இருந்தாள். நான் அவளிடம் சொன்னேன். அழாதே, குழந்தை. உனக்குப் பதினைந்து வயதுதான் ஆகிறது. அதற்குள், இந்த உலகின் கொடூரங்களில் உன்னைப் பறிக்கொடுத்துவிடாதே. அவன் என்ன சொன்னாள் தெரியுமா? அப்பா, எனக்கு 13 வயதோ 14 வயதோ அல்ல. 15 வயது!’இங்கே அமெரிக்காவில், சிறைச்சாலைகள் நிரம்பிவழிகின்றன. அவற்றில் யார் இருக்கிறார்கள்? ஏழைகள். சிலர் வன்முறை செயல்கள் புரிந்திருக்கிறார்கள். பெரும்பாலும், திருடர்கள், வழிப்பறிகள், கொள்ளையர்கள், போதை மருந்து விற்பவர்கள். அவர்கள் அனைவரும் சுதந்தர சந்தையை ஆதரிப்பவர்கள்! முதலாளிகள் என்ன செய்கிறார்களோ அதையேதான் இவர்களும் செய்கிறார்கள். ஆனால், சிறிய அளவில்… நானும் எங்கெல்ஸும் இதுபற்றி என்ன எழுதினாம் தெரியுமா? தனி நபர்களைத் தண்டிப்பதைவிட, அவர்களை இயக்கும் சமூகத் தளத்தையே நாம் தகர்க்கவேண்டும்.’முதலாளித்துவம் குறித்தும் சோஷலிஸம் குறித்தும்கூட நாம் பேசவேண்டியதில்லை. பூமியில் இருக்கும் செல்வத்தை எப்படி மனிதர்கள் பயன்படுத்தவேண்டும் என்பது பற்றி பேசுவோம். ஏழைகளுக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை வழங்குங்கள். உணவு, மருந்து, சுத்தமான காற்று, நல்ல நீர், மரங்கள், புற்கள், நல்ல வீடுகள், சில மணி நேர வேலை, நிறைய ஓய்வு. யார் இவற்றுக்குத் தகுதியானவர்கள் என்று கேட்காதீர்கள். ஒவ்வொருவரும் தகுதியானவரே.’ஏசு திரும்பி வருவார் என்று உங்களில் சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். எனக்கு அவரை நன்றாகத் தெரியும். அவர் வரமாட்டார். எனவே, நான் வந்தேன்.’
‘
‘
‘500
‘
‘
‘
‘
‘
“தனி நபர்களைத் தண்டிப்பதைவிடஇ அவர்களை இயக்கும் சமூகத் தளத்தையே நாம் தகர்க்கவேண்டும்.’முதலாளித்துவம் குறித்தும் சோஷலிஸம் குறித்தும்கூட நாம் பேசவேண்டியதில்லை. பூமியில் இருக்கும் செல்வத்தை எப்படி மனிதர்கள் பயன்படுத்தவேண்டும் என்பது பற்றி பேசுவோம். ஏழைகளுக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை வழங்குங்கள். உணவுஇ மருந்துஇ சுத்தமான காற்றுஇ நல்ல நீர்இ மரங்கள்இ புற்கள்இ நல்ல வீடுகள்இ சில மணி நேர வேலைஇ நிறைய ஓய்வு. யார் இவற்றுக்குத் தகுதியானவர்கள் என்று கேட்காதீர்கள். ஒவ்வொருவரும் தகுதியானவரே.”
மண்ணின் வழங்களை கொள்ளையடிக்கும் முதலாளித்துவ லாபவெறி கோடிக்கணக்கான மக்களை வீதியில் பிச்சைக்காரர்களாக வீசியெறிகிறது. மார்க்ஸ் எப்போதோ வந்து விட்டார். இயேசுவை துரத்தி விட்டு நாம் தான் அவர் கனவு கண்ட அரைச்யலை முனெடுக்க வேண்டும்.
//மார்க்ஸ் எப்போதோ வந்துவிடார்// சரி அவர் வந்து 200 வருடம் ஆகப் போகிறதே? என்ன நடந்தது? இன்னும் என்ன நடந்து கொண்டிருக்கிறது. அவர் வாழ்ந்த காலத்தை விட இப்போது தானே பிரச்சனைகள் அதிகம்!
யாரும் மாக்ஸியத்தை பாதுகாக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் இந்த பூமியையும்
இதில் வாழும் மனித உயிர்இனத்தையும் குறிப்பாக ஓர்யறிவு கூடுதலாக வாய்கப் பெற்ற
மனிதன் பாதுகாக்க வேண்டுமென்றால் மாக்ஸியத்தையும் பாதுகாக்க வேண்டிய அத்தியவாசிய தேவை எமக்கிருக்கிறது.
குறிப்பாக இனத்தில் பற்றுள்ளவர்கள் நாட்டில் பற்றுள்வர்கள் உயிர் இனங்களில் பற்றுள்ள
வர்கள் யாவரும் இந்த கட்டுரைக்கு தமது கருத்துக்களை பின்னோட்டமாக சமர்பிக்கவும்
ஏற்கனவே இரண்டு வந்துள்ளன. இன்னும் இன்னும் தேவையாகவுள்ளன. நக்கீரன் நீங்களும் தான்.
இயேசு யூத இனத்தின் புரட்சிக்காரன் அவரை கடவுளாக்கி காசு பார்க்க வைத்தவர் அவரது கூட்டாளீ பீற்றர் இதனால் அவரது குடும்மமோ உறவுகளோ பயன்பெற பீற்றர் விடவில்லை இதுதான் முதலாளீத்துவத்தின் தொடக்கம் பின்னர் வந்த முகம்மது ந்பி கலக்காரானாகி தன்னைப் பின்பற்றூவோரைக் கொண்டு பிடிக்காதவர்கள கொன்றூ அழித்தார் இங் கே தொடங்கியதே சர்வதிகாரம் பின்னர் வந்த மார்க்ஸ் நிலப்பிரவுத்தத்திடம் விடுதலை பெறூம் நோக்கில் பாட்டாளீகள தயார் பண்ணப் புறப்பட்டார் ஆனால் பாட்டாளீகளூம் முதலாளீகள் ஆகவே ஆசைப்பட்டனர் இதனால் கம்யூனிசம்,சோசலிசம் ஆட்டங் கணடது இன்றூ ஜன்னல் கண்ணாடி வழியே தெரியும் காட்சியாகியது.ஆனால் சைவம் அன்பும் சிவமும் என அழைத்து மனித உயிர்கள ஒன்றாக்கிற்றூ.இந்த வாழும் வழி தெரியாது நாம் குழ்ம்புவதால் சைவம் ந்ம்க்கு புரிய்விலை.
யேசு வரவில்லை அதனால் மாக்ஸ்வந்தார் அருமைஅருமைாக்ஸ்சிந்தனையை கொன்றுவிட்ட அறிவான்களே மாக்ஸபோல நாம்ஒவ்வொருவரும் இருக்கவழிசெய்யுங்கள நீங்கள் ஒவ்வொருவரும் முதலாளித்துவ சிந்தனையில் இருந்துகொன்று ஆயுதகலாச்சாரத்தை வளத்துகொன்று மாக்ஸ்சைபற்றி எழுதினாhல் மாக்ஸசை நிங்கள் அல்லவா? கொன்றது என்றது அர்த்தமாகிறது
முதலாளித்துவத்தை எதிர்ப்பதற்கு பதில் கண்முடித்தனமாக முதலாளிகளை எதிர்த்ததின் விளைவுதான் கம்யுனிசத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்ற உண்மையை இன்னும் அறியாமல் உலகத்தின் முட்டுக்க்ட்டையாக இன்றும் மார்க்சின் அடிவருடிகள் உள்ளனவா?
அப்பட்டமான முட்டாள்தனம். பல்கி பெருகி உலகை நிரப்புங்கள் என்றும் உலகின் அனைத்து இயற்கையும் மானுட பயன்பாட்டுக்கு என்றும் உருவாக்கிய கிறிஸ்தவ இறையியல்தான் இன்று இயற்கை அழிவின் மூல காரணம். சோவியத் யூனியனும் சீனாவும் இதே மனநிலையுடன் தான் அந்தந்த நாட்டு இயற்கைகளை வன்முறை ஒழிப்பு செய்தன. மார்க்ஸியத்தில் இயற்கை குறித்த சரியான அறிதலுக்கான வெளி -குறிப்பாக மார்க்ஸீயம் அதிகாரத்தில் இருக்கும் போது-கிடையவே கிடையாது. ஏசு ஒரு விரிவாதிக்க கல்டிஸ்ட் மார்க்ஸ் போலவே. இருவருமே மானுடத்தின் அழிவுக்கு வழி வகுத்தவர்கள்
பார்ப்பன இந்து வெறி கும்பலான ஆர்.எஸ்.எஸ் குழுவின் அரைவேக்காட்டு தத்துவஞானி அரவிந்தன் நீலக்ண்டன் அவர்களே. நீங்கள் கும்பிடுகிற பார்ப்பனக் கடவுகள்களை விட இயேசு எவளவோ பெட்டர் . மானுடத்தின் மீது கறைபடித்த கிறிஸ்தவத்தையே வீழத்த வந்த பேராசான் மார்க்ஸ் என்ன உமது கொலைகார கோட்சேவா?
அரவிந்தன் அவாளே ! இந்த உலகத்தை அழி;ப்பதில் முன் நிற்கும் முதலாளித்தும் உங்கள் கண்ணுக்கு தொரியாது. இந்த உலகத்தின் உண்மையான உறுதியான மாற்ற்த்திற்கு வழிகுத்த மார்க்ஸ் உங்களுக்கு அழி சக்தியாக தொரிகிறார் என்றால் உங்கள் உள்நோக்கம் என்ன? மு தலாளித்துவத்தின் அடிமை நாய்யாக இருப்பதில் உங்களுக்கு பெருமை இருக்கலாம் என்று கருதுகிறேன்.
என்னா அரவிந்தன் சார்!.பிச்சு உதறிப்புட்டீங்க!!.
தொடர்ந்தும் இப்படியே. சளைச்சு நின்னுடாதீங்க.மானிடமே வேஸ்ட்யாயிடும்.
அரவிந்தன் நீலகண்டன்,
நீங்கள் எந்த உலகத்தில் வாழ்கிறீர்கள்?
கார்ல் மார்க்சை நிராகரித்த மேற்கு உலகமே இப்போது அவரை சரி என்று சொல்ல நீங்கள் மோடியை சரி என்று சொல்ல வருகிறீர்களா? நாகரீக உலகம் தலைகுனிகிறது.
மருதன்,
மேற்கில் எல்லாம் மார்க்சையும் இன்டர்நெட்டையும் தவிர்த்து வாழ முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் உங்களைப் போன்றவர்கள் ஜனரஞ்சகத் தளத்தில் மார்க்சை அறிமுகப்படுத்துவது மகத்தான பணி. வாழ்த்துக்கள்.
மூன்று தகாப்த காலமாக உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த தமிழ்மக்களுக்கு
எப்பவும் கால்மாக்ஸ்சுக்கு மேல் ஒரு வெறுப்புண்டு.இதை நான் அனுபத்திலும் கண்டவன்.
தமிழனைப் பற்றியோ கேடுகெட்ட சிங்களவனைப் பற்றியோ இந்த மனுஷன் ஒரு வார்த்தை சொல்லவில்லையே என்பதுதான்.தலையை பிய்த்துக் கொண்டு ஓடவந்த கலந்துரையாடல்களும் உண்டு நம்பினால் நம்புங்கள்.
2009 மே மாதம் 18-19 ம்திகதிக்கு பிறகு இவர்களுடை ஆசைகள் எல்லாம் நிராசையாக மாறி ஓர்ரளவுக்கு தன்னும் சாந்தநிலைக்கு வந்து விட்டார்கள் என நினைக்கிறேன்.இனி
இவர்கள் எதையும் பொறுமையாக கேட்பதற்கும் படிப்பதற்கும் மனப்பக்குவம் அடைந்திரு
ப்பார்கள்.
மோசேஸ் மலையிலிருந்து இறங்கி வந்து ஆண்டவன் அருளியதாக பத்துக் கட்டளை
அல்லோலப்பட்ட யூதமக்களின் முன் உரைத்தார் அல்லவா? அதேபோல மாக்ஸ்சும்
மனிதகுல வரலாறை ஆய்வு செய்து உலகப் பாட்டாளிமக்களுக்குபத்துகட்டளைகோதித்துள்ளார்.
அது பின்வருமாறு….
இந்தநடவடிக்கைகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறுவகையானவையாகவே இருக்கும்.ஆயினும் மிகவும் வளர்ந்து முன்னேறிய நாடுகளுக்கு பொதுவாகப் பெருமளவுக்கு பொருந்தக்கூடிய நடவடிக்கைகள் பின்வருமாறு.
1. நிலத்தில் சொத்துடைமையை ஒழித்தலும் நிலவாடகை அனைத்தையும் பொது காரியங்களுக்காகப் பயன் படுத்துதலும்.
2. கடுமையான வளர்வீதவட்டி அல்லது படித்தரவருமானவரி.
3. பரம்பரை வாரிசாகச் சொத்துடைமை பெறும் உரிமை அனைத்தையும் ஒழித்தல்.
4. நாட்டைவிட்டு வெளியேறுவோர் கலகக்காரர்கள் ஆகியோர் எல்லோரது சொத்துக்களையும் பறிமுதல் செய்தல்.
5. அரசு மூலதனத்துடன் தனியுரிமையான ஏகபோகம் கொண்ட தேசியவங்கியின் மூலமாக கடன் செலவாணியை அரசின் கையில் ஒருசேர மையப்படுத்தல்.
6. செய்தி தொடர்பு போக்குவரத்து சாதனங்களை அரசின் கையில் ஒருசேர மையப்படுத்தல்.
7. பொதுதிட்டங்களின் பிரகாரம் ஆலைகளையும் உற்பத்திகருவிகளையும் விரிவாக்குதலும்…தரிசுநிலத்தை சாகுபடிக்கு கொண்டுவருதலும் பொதுவாக மண்வளத்தை உயர்த்துதலும்.
8. உழைப்பை சரிசமமாக எல்லோருக்கும் உரிய கடமையாக்குதல்.முக்கியமாய் விவசாயத் துறைக்காகத் தொழில் பட்டாளங்களை நிறுவுதல்.
9. விவசாயத்தை தொழில்துறையுடன் இணைத்தல்.தேசமக்களை மேலும் சீரான முறையில் நாடெங்கும் பரவி அமையச் செய்வதின் மூலம் நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையிலான பாகுபாட்டை படிப்படியாக அகற்றல்.
10. எல்லாக் குழந்தைகளுக்கும் பொதுப் பள்ளிக்கூடங்களில் இலவசக் கல்வி அளித்தல்
ஆலைகளில் குழந்தைகளின் தற்போதைய வடிவை ஒழித்தல் கல்வியை பொருள் உற்பத்தியுடன் இணைத்தல்…இன்னபிற…
பதினொன்றாவது இது என்னுடைய சொந்த சரக்கு. இதைவாசிக்கும் போது 162 ஆண்டுகளுக்கு முன் கற்பனையை நிறுத்தி படிப்பில் கவனம் செலுத்தும் போது மட்டுமே இன்றையநிலைக்கு சரியாக வந்தடைய முடியும்.ள
சந்திரன் ராஜா-பக்சவின் கவனம் இப்போது சோஷலிசத்தின் பக்கம் திரும்பியுள்ளது பற்றிச் சந்தோஷம்.
பத்து + ஒன்றையும் மகிந்த ராஜபக்ச செய்து தருவாரா என்று அவர் நமக்குச் சொல்ல வேன்டும்.
ஆமாமா போல்போட் மாவோ ஸ்டாலின் எல்லாம் மனுச குலத்தை அப்படியே தலை நிமிர வைச்சாங்கல்லியா.
பாடத்திலை கவனம் செலுத்தாதற்கு நாம என்ன பண்ணுறது?இவங்களுக்கு பின்னாலையே உலகம் உருண்டிடனுமா?. சொல்லுங்க! அரவிந்தன் சார்.
ஹிட்லர் முதலாக இந்துதுவ பாசிஸ்ட்டுங்கள்னா மனுச குலத்தை தலைநிமிர வைச்சுக்கிட்டு இருக்காங்க.
எங்கேயோ யாரோ ஒளறினதே வெச்சிக்கிட்டுப் பேசாமெ உருப்படியா உலக வரலாற்றெப் படிச்சுப் பாரு சாரு!
Don’t publish these type of articles and spoil the image of christians
Nothing in this article does or was designed to spoil the image of Christ or true Christians.
That does not mean that people who want to divert attention from real issues by promising another world can be trusted.
They may call themselves Christians, but they act against the very spirit of Christ.
If anyone is spoiling the image of Christians, it is those so-called Christians who abuse the faith and side with the exploiters and plunderers of the poor — like Christian fundamentalists in the pay of multi-nationals.
If you have any specific objection do please spell it out.
I am sure that most good Christians will understand the last sentence in the right spirit. (That was not an utterance by Marx, incidentally).
The last christian died on the cross.
அரவிந்தன் நீலகண்டன்
கங்கை கரையிலும் காவேரிகரையிலும் கத்திய காக்கைகாளால் தான் உலகம் விழித்தது.
வோல்கா கரை காக்காவெல்லாம் சிவப்பாங்களா தோழர்?
ஹிட்லர் ஒரு முழுக்கு வாங்கின கிறிஸ்தவ கத்தோலிக்கர். அவரோட கட்சி பேரு தேசிய சோஷலிஸ கட்சி அவரோட பிரச்சார உக்திகள் சோவியத்திடமிருந்து பெறப்பட்டவை.
ஒத்தன் ரெண்டு பேரு க்ளாஸ்ல தூங்கினா (ஏங்கண்ணா class hatred காரணமா ஏன் க்ளாஸ்ல தூங்குகிறாங்க) சரி ஆனா எல்லா கம்யூனிஸ்ட் தலைவனும் (ஸ்டாலின் மாவோ போல்பாட்) கொன்னு குவிச்சிருக்காங்களே பஞ்சங்களை உருவாக்கியிருக்காங்களே அதெப்படி?
ஆனா ஏசு மார்க்ஸ் இரண்டு பேருமே வெறுப்பு சாகுபடி பண்ணினவங்கதான். ஹிட்லரோட முன்னோடிகள்.
அரவிந்தன் உங்களின் முன்னோடிகளான கோல்வால்கரும், மோடிகளும், அத்வானிகளும்தான் மனித குலத்தின் எதிரிகள். எத்தனை லட்சம் மக்களை மதவறியைத் தூண்டு விட்டு கொன்றொழித்தவர்கள்.
சக்தி,
உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது (கண்ணெரிச்சலை விட)
உளறித்திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது (அ.நீ. வார்த்தைகள் போல)
எனவே ஏன் உங்கள் பொழுதை வீணாக்குகிறீர்கள்?
உங்க அப்பன் ஹிட்லர் மேல உணக்கு இன்னா க்ண்ணு கோவம் அம்பிகளுக்கு தெரிந்திட போவுது. உங்க ராம கோபால மாமாவுக்கு பத்திட்டு வந்துடும்.
அமெரிக்காவுக்கு என்ன நடந்தது? குபேரர்கள் இன்றும் அங்கு இருக்கிறார்கள் என்பதில்
எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் புதிதாக வரும் புள்ளிவிபரங்கள் பல ஆச்சரியமான
செய்திகளை சொல்லுகிறது.
ஏழுபேரில் ஒருவர் வறுமையில் வாடுவதாக சொல்லுகிறது.ஒபாமா ஜானாதிபதியாக வந்த
பிறகும் 1.1 வீதம் வேலையில்லாதவர் கூடியுள்ளார்களே ஒழிய குறைவில்லை. 14.3 வீதம்
மாதம் ஏழுலட்சம் பேர் வேலை இழக்கிறார்கள்
இவர்களில் பெரும்பான்மையானோர் மத்தியதரவர்க்கத்தை சேர்ந்தவர்கள்.இதனால் அவர்கள் தங்கள் வீடுகளைவிட்டு கூடாரங்கள் அமைத்து வாழ்கிறார்கள.அமெரிக்காவின்
உள்நாட்டு கடன் பதின்மூன்று திறிலியனாக கணக்கெடுக்கப் பட்டிருக்கிறது. பதின்மூன்று
க்கு பிறகு எத்தனை சைபர்கள் வரும் என்பது பொறுமையாக இருந்து எழுதிப் பார்த்தால்
தான் என்னால் எத்தனைஎன்பதை புரிந்து கொள்ளமுடியும்.ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது.
இரண்டாம் உலகமாயுத்தத்தை தொடர்ந்து பலபத்து யுத்தங்களுக்கு அமெரிக்கா காரண
மாக இருந்திருக்கிறது.
வெற்றி என்பது இன்னொருவரின் தோல்வி என்பதும்
கேரிக்கப்பட்ட பணம் இன்னொருவன் இழந்த செல்வம் என்பதும் இதைவிட தெளிவாகப்
புரிகிறது.
அமெரிக் ஐக்கியநாட்டில் சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்கையை வர்ணிக்கும் நுhல் ஒன்றில் கீழ்காணும் உரையாடல் இருக்கிறது.ஒரு சுரங்கத் தொழிலாளியின் மகன் தனது
தாயாரை கேட்கிறான்.
“அம்மா அடுப்பு ஏன் மூட்டவில்லை”
“நிலக்கரி நம்மிடம் இல்லை.உன் அப்பாவுக்கு வேலையில்லை.நிலக்கரி வாங்கப் பணம்
இல்லை”.
“அவருக்கு ஏன் வேலை இல்லையாம் அம்மா”
“நிலக்கரி மிக அதிகமாக இருக்கிறதாம் அதனால் தான்”.
முதாலிளித்துவ சமுதாயத்தில் உற்பத்தியின் அதிகரிப்புக்கு ஏற்ப மக்களின் வாங்கும்
சக்தியும் அதிகரிப்பதில்லை.முதாலித்துவ பொருளாதரத்தின்-உற்பத்தி வினியோக முறையும் அதற்கேற்ப அமையவில்லை.மேலும் மேலும் அதிக லாபம் ஒன்றுதான் அதன் குறிக்கோள்.கடுமையான சுரண்டல் ஒன்றுதான் அதற்கான ஒரேவழி.
கூலிகொடுக்கப்படாத உபரிஉழைப்பு நேரத்தை அதிகப் படுத்துவது.உற்பத்தி செய்யும்
பொருளை அதிகவிலைக்கு விற்பது.உழைப்பாளர்கள் வாங்குவோர்ராகவும் உள்ளனர்.
சமுதாயத்தில் பெரும்பாலோரான இந்தமக்கள் விலையேற்றத்தின் மூலமும் சூறையாடப்படுகின்றனர்.
இத்தகைய பல்வேறு முறையில் சுரண்டும் வர்க்கத்தினரரிடம் செல்வம் குவிக்கப் படுகிறது.இத்தகைய காலங்கள் அவர்களுடைய பொற்காலங்களாக அமைகிறது.
ஆனால் வெகுவிரையில் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தி விடுகிறது.
அது மக்களின் வாங்கும் சக்தி வீழ்ச்சி என்பது தான்.நமது முதலாளிகள் ஓர் இருண்ட
கண்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.
அவர்கள் உற்பத்தி செய்த பொருள்களை வாங்குபவர்கள் யாரும் இல்லை.எல்லாமே
தேங்கிக் கிடக்கிறது.ஆகவே ஆலைகள் மூடப்படுகிறது.வேலையில்லா பட்டாளம்
வேகமாக வளர்கிறது.வறுமையும் பட்டினிசாவும் சர்வசாதாரணமாகி விடுகிறது.
முதாலித்துவ அமைப்பில் இத்தகைய நெருக்கடிகள் பலமுறை ஏற்பட்டுள்ளன.
இப்பொழுது உலகமுதாலித்துவமும் ஒருநெருக்கடி-தேக்கநிலையை சந்திக்கிறது.
தேக்கநிலையென்பது உற்பத்தியில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது என்பது.
வியாபாரத்தில் மந்தம் மற்றும் பலதுறைகளில் உற்பத்திக்குறைதல்-இந்நிலையைத்தான் தேக்கநிலை-மந்தநிலை என்கிறார்கள்.
முதாலித்துவநெருக்கடி எந்தஅளவுக்கு சீரழிவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு 1923-33
ஆவது ஆண்டுகளில் உலகரீதியாக ஏற்பட்ட நெருக்கடி சிறந்த உதாரணமாகும்.
-மூலதனத்தின் மூலாதாரம் என்ன?
-பி.ஆர்.பரமேஸ்வரன்-
அய்யன்மீர்
சோவியத்தில் மட்டும் எப்படி சொத்து குவிக்கபப்ட்டது? அல்லது சீனாவில்? திபெத்தில் நடக்கும் பச்சையான கருவறுப்பும் இனவொழிப்பும் சுரண்டலும் எந்த விதத்தில் முதலாளிய சுரண்டலிலிருந்து வேறுபட்டவை? சீனாவின் இன்றைய பளபளப்பு எத்தனை லட்சம் மக்களின் பிணங்களின் மீது உருவாக்கப்பட்டது? முதலியமும் சரி மார்க்ஸியமும் சரி மனிதத்தன்மை சற்றுமற்ற பாதைகளே. முதலியம் தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் படைத்திருக்கிறது. தன்னை மாற்றிக்கொள்கிறது. ஆனால் உங்கள் எழுத்துக்களை எல்லாம் படிக்கும் போது மார்க்ஸியம் ஒரு மத அடிப்படைவாதத்துக்கு எள்ளளவும் குறையாததாக இருக்கிறது. அல்லது அது எவ்வித பயன்பாடும் இல்லாத மேல்வர்க்க அறிவுஜீவிகளின் ஃபாஷன் ஸ்டேட்மெண்ட் மட்டுமே
அரவிந்தன் போப்பிற்கே சமானியன் கையைக் கொடுக்க முடிகிறது,ஓபாமாவை முத்தமிட முடிகிறது பிராமணீயைத் தொட முடிகிறதா தீட்டு என்றேல்லவா சொல்கிறான்?இதில் தர்மம் இருக்கிறதா? மார்க்கிஸம் என்பது ஒரு சிந்தனை சைவசித்தாந்தம் போல், அது சரியாக பின்பற்றப்பட்டால் நல்லது இல்லை எனில் பலரையும் முதலாளீ ஆக்கும் நம்மில் சிலர் ஏழரையாக இருப்பது போல,கரெக்ட்.
அரவிந்தன் நீலகண்டன்! உங்கள்-நீங்கள் அறிந்த பொதுவுடமைத் தத்துவ விதிகள் எம்மை
மெய்சிர்க்க வைக்கிறது. பொதுவுடைமைக்கான விஞ்யாண தத்துவாத்த விதிகள் உலகப்
பாட்டாளிகளுக்கு இந்த மாக்ஸின் அறைகூவலைக் கேட்டு 163 வருடங்கள் ஆகிறது.
இதன் பிறகே பாட்டாளிவர்க்கம் அகலக் கண்திறந்து இந்த உலகம் எமக்குரியது என நினைத்தார்கள்.
இந்த பாட்டாளிவர்க்கம் தொழிலாளர்களின் தலைமையில் நடத்தப்படகிற அணிவகுப்பைக்
கண்டு முதாலித்துவமும் மதநிறுவனங்களும் தமது இறுதிக்காலம் வந்துவிட்டது என அஞ்சி நடுங்கினார்கள். சொத்துக்களை வளர்க்கமுடியாமலும் தமது வயற்றை மேலும்
பெருக்க முடியாமலும் கனவுகண்டு திடுக்கிட்டு விழித்தெழுந்தார்கள்.
பாரீஸ்கம்யூன் அக்டோபர்புரட்சி அதைத் தொட்டெழிந்த மாபெரும் சீனம் இதெல்லாம்
பாட்டாளிவர்கத்தின் பாலர்வகுப்பு பாடங்கள்களே! ஒருவகையில் மானிடவரலாற்றின்
ஆரம்பப் வகுப்புகளே!!.
இனித்தான் கல்லூரிகள் பல்களைக்கழகங்களை காணப்போகிறீர்கள்.
முதாலித்துவம் தன்னை எப்பவும் திருத்து அமைத்துக்கொள்ளும் தகமை படைத்தது.
என்கிறீர்கள். என்னோ! உங்கள் அறிவு. சுரண்டலில் ஈடுபடாமலும் யுத்தத்தை ஏற்படுத்தாமலும் தன்னை புணர்யமைத்துக் கொள்ள முடியுமா? என்று தாங்கள் என்றாவது விடைதேட முயற்சித்தது உண்டா?
மாக்ஸியம் சோவித்யூனியன் சீனா போன்ற நாடுகளுக்கு எழுதப்பட்டதா? அல்லது சர்வ
தேச பாட்டாளிமக்களுக்காக எழுதப்பட்டதா என்றாவது கேள்வி எழுப்பியதுண்டா?
இப்படி நிறை புதிர்களை விடுவிக்க இத்தளம் காத்திருக்கிறது.நீங்களும் காத்திருங்கள்.
யாதும் ஊரே யாவரும் கேளீர்!
தீதும் நன்றும் பிறர் தர வரா!!
போரை புறம்தள்ளி பொருளை பொதுவாக்கு!!!
ஆகவே…………………………………………………………………..
உலகத் தொழிலாளர்களே ஒன்று படுவீர்!!!!
போரை புறந்தள்ளீ பொருள பொதுவாக்குவது நடக்க கூடிய காரியமா?ஓரு நாட்டுத் தொழிலாளர்களே ஒன்றூபட முடியவில்லை இதில் உலகத் தொழிலாளர் ஒன்றூபடுவது சாத்தியமா?இங்கிலாந்தில் லேபர் பார்ட்டி ஆட்சியில் இருந்தபோது கவுன்சில் வீடுகள் கூட திருத்தப்படவில்லை புதிதாக கவுன்சில் வீடுகள் கூட கட்டுப்படவில்லை மாறாக அப்பார்ட்மென் களே முளத்தன அவை லேபர்களால் வாங்க கூடியவையல்ல…
எது ? சாத்தியம் எது சாத்தியம் இல்லையென்பதை உலகத்தில் தோன்றுகிற முதாலித்துவ
உறவுகளின் மாற்றங்களே தீர்மானிக்கும். எமக்கு சாத்தியமானவற்றில் தான் ஈடுவோம்
என்பது கூடா எத்தனையோ சாத்தியமில்லாமல் போனது அல்லவா?.
ஆகவே எது நல்லவை நீதியானவையாகத் தெரிகிறதோ அவற்றை சாத்தியமாக்க பாடுவடுவது தானே! மனித இயல்பு.
ஆகக்கூடிய பெருந்தொகையான மக்கள் உழைப்பாளிகளே. இவர்கள் ஒருபோதும் யுத்தத்தை விரும்புவதில்லை. ஆகவே இதற்காக நாம் ஏன் முயற்சிக்கக் கூடாது?
யுத்தம் வரமுடியாது என்று யாரும் உறுதியாகச் சொல்லமுடியுமா? இல்லவே.
யாருக்காக ஆயுத-அணுக்குவியலை குவித்து வைத்திருக்கிறார்கள்?
உங்கள் சொந்தநாட்டு தொழியாளவர்க்கத்தின் தலையில் போடுவதற்கு தான் என்பதை
எடுத்து சொல்வது எமது கடமை அல்லவா?
எனக்கு வாய்ப்பு கிடைத்த நேரமெல்லாம் 1929-ம் காலப்பகுதிக்கள் நுழைந்திருக்கிறோம்
என்பதை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறேன். உலகப்பொருளாதர-முதாலித்துவ
உறவுகள் ஒருபரந்துபட்ட யுத்தத்தைத் தான் இந்த உலகத்திற்கு வழங்கும் என்பதில் நான் அசையாத நம்பிக்கை வைத்திருக்கிறேன். இதை நம்பி-நம்பிக்கைவைத்து பின் தொடருங்கள் என்பதும் அவசியமும் இல்லை தமிழ்மாறன். இதை சொல்வது எனது கடமை
யாகக் கருதுகிறேன்.மாக்ஸ் சொன்னதையே தான் திருப்பிச் சொல்லுகிறேன்.
அறிவியலுக்கு முன் எந்தராஜபாதையும் இல்லை.அறிவியலின் செங்குத்தான
பாதையில் களைப்புக்கு அஞ்சாமல் ஏறுகிறவர்கள் மட்டுமே அதன் ஒளிமயமான
சிகரத்தை சென்றடையமுடியும்.
அறீவியலின் செங்குத்தான பாதையில் களப்புற்றூம் ஏற முயற்சிப்போம்.
ஒருவர் (TM) சம்பந்தர் ஐயாவினது ஆதரவுடனும் மற்றவர் (CR) மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவுடனும் ஏறுவதை எல்லாரும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்போம்.
மார்க்ஸ் காலம் வரையிலும் மூலதனம் எப்படி பெருகுகிறது? உழைக்காத சுரண்டும் வர்க்கத்தினரின் வாழ்க்கை வசதிகளும் சொத்துடைமைகளும் தொடர்ந்து அதிகரிக்க காரணம் என்ன? அதேநேரத்தில் அனைத்து பொருட் செல்வங்களையும் உழைத்துக் குவிக்கும் உழைப்பாளி மக்கள்- தலைமுறை தலைமுறையாக வறுமையில் வாழ்வதேன்
என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.
பொருளாதரத்தில் மார்க்ஸ் கண்டு பிடித்த
உபரிமதிப்பு-உபரிமதிப்புசித்தாந்தம் அந்த கேள்விகளுக்கு விடையளித்தது.அதன் காரணங்களை விளக்கியது.வேறு யாரும் அதற்கான விடையையும் காரணங்களையும் மார்க்சுக்கு முன்னால் வழங்கவுமில்லை.விளக்கவும் இல்லை.முதாலித்தவத்தை பாதுகாப்பதுதற்கான பலவழிமுறைகளையும் பொருளாதார கோட்பாடுகளையும் தான்
பல பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து முன் வைக்கின்றனர்.மார்க்சின் உபரிமதிப்பு
சித்தாந்தகண்டுபிடிப்பு முதாலித்தவ அஸ்திவாரத்தையே வேட்டுவைத்து தகர்த்து விடுகிறது.உபரிமதிப்பை சூறையாடும் முறையை ஒழிப்பதில் தான் மனித சமுதாயத்தின் நலன்கள் அடங்கியுள்ளது என்பதையும் அவர் எடுத்துக் காட்டினார்.
மாமேதை மார்க்ஸ் மனிதசமுதாயத்திற்கு முக்கியமான மூன்று கண்டுபிடிப்புகளை வழங்கியுள்ளார்.
1. பொருளாதாரத்தில் உபரி உழைப்பு-உபரிமதிப்பு சித்தாந்தம்.
2. தத்துவத்தில்-இயக்கவியல் பொருள்முதல்வாதம்.
3.வரலாற்று வளர்ச்சியின் விதிகளை விளக்கும் வரலாற்றுரீதியான பொருள்முதல் வாதம். (இன்னும்)
தனது வாழ்க்கையை உலக உழைப்பாளி மக்களின் நலனுக்காக-சமுதாயப் புரட்சிக்காக
அர்ப்பணித்த உலக பாட்டாளி மக்களின் ஒப்பற்ற தலைவன் மார்க்ஸ். பொருளாதாரத்திலும் தத்துவத்திலும் வரலாற்று இயலிலும் கண்டறிந்த எடுத்தக் கூறிய தத்துவகோட்பாடுகள்-உண்மைகள் காலத்தால் அழியாதவை.
வர்க்ப்போராட்டம் மார்க்சின் கண்டு பிடிப்பல்ல.அது அவர்காலத்திற்கு முன்பாகவே ஆரம்பமாகிவிட்டது.பல அறிஞர்கள் அதை கண்டறிந்து எடுத்துக் கூறியுள்ளார்கள்.
ஆனால் அதன் காரணத்தை தான் மார்க்ஸ்சுக்கு முன்பு யாரும் கண்டறியவில்லை.
மார்க்ஸ் அதன் காரணத்தை எடுத்துக் கூறினார்.வரலாற்று ரீதியாக விளக்கம் அளித்தார்.
வர்க்கமுரண்பாடும் வர்கப்போராட்டமும் ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறையுடன் சம்பந்தப்பட்டது என்பதை எடுத்துக் காட்டினார்.முதாலித்தவ சமுதாயத்தில் வர்க்கப்
போராட்டத்தின் உற்பத்திமுறை முதலாளி-தொழிலாளி என்ற உறவை அடிப்படையாக
கொண்டுள்ளதால் தான் இந்த உறவு பகைமைத் தன்மை வாய்ந்தது காரணம் அது
சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது.
சுரண்டலின் அடிப்படை தொழிலாளியின் உழைப்புசக்திக்கு குறைவான விலை-கூலி
கொடுப்பது:கூலி எதுவும் கொடுக்காமலேயே உழைப்பு நேரத்தின் ஒரு பகுதியை உபரி
யாகபெறுவது:இந்த உபரிநேர உழைப்பைக்கொண்டு உபரி உற்பத்தி செய்வது. இதுதான்
உபரிமதிப்பு.இந்த முறையில் இருவர்க்க நலன்களும் அடிப்படையில் மாறுபடுகிறது.
தொழிலாளர்கள் இயற்கையாகவே தங்களின் வாழ்க்கை-வசதிகளை அதிகரிக்க தங்களின் உழைப்பு சக்திக்கு அதிகவிலை-கூலிபெறவும் உபரிநேரத்தைக் குறைக்கவும்
போராடுவது தவிர்கமுடியாததாகிறது.ஆதே போல் முதலாளிகள் தங்கள் மூலதனத்தை
அதிகரிக்க அதிக உபரி உழைப்பையும் அதிக உபரிமதிப்பை பெறுவதில்-மேலும் அதிகமாக சுரண்டுவதில் அக்கறை கொண்டுள்ளனர்.இந்த முரண்பட்ட நிலை இரு வர்கங்களின் வர்க்கநலன்களில் இருந்து உருவாகுகின்றன.இது தான் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படைக் காரணம்.முதாலித்துவ அமைப்பு நீடிக்கும் வரை வர்க்கப்
போரும் தொடரும்.இறுதியில் பாட்டாளிவர்க்கம் சமுதாயப்புரட்சிமூலம் அரசு அதிகாரத்தை கைப்பற்றி முதாலித்துவ உடமைகளை ஒழித்து சோசலிசத்துவத்தை நோக்கி முன்னேறும் வரை வர்க்கப்போராட்டம் ஓயாது.
சந்தோசம் சந்திரன் ராஜா.இந்த காசை அடிச்சு குளீயல் அற கட்டி சீமைக்கார மருமகனுக்கு காட்ட வெளீக்கிட்ட கந்தசாமி அண்ண ஆஸ்பத்தியில கிடக்குறார்.ஆரோ டக்ளஸ்ஸாம் அவற்ற ஆக்கள் அவரின் மீது வர்க்கப் புரட்சி நடத்திப் போட்டினம்.நீங்கள்தான் வந்து அவருக்கு உந்த சோசலிசம் காட்ட வேணூம்.
தமிழ்மாறன் இது என்ன அலட்டல்? அரசியல் தஞ்சம் எடுக்கவும் மலிந்த
கூலியாக உணவு விடுதிகளிலும் கட்டிடம் துப்பரவு செய்வதிலும் லாவகமாக எமது வாழ்க்கை-பணி முடிந்து விட்டது என தமிழன் சிந்திக்க
லாமா?
தமிழனைத்தொட்டு மானிடம் இருப்பதென்பதல்ல.மானிடத்தை தொட்டே
தமிழன் என்கின்ற சிற்றறிவு படைத்த மனிதன் ஊர்ந்து வருகிறான். தமிழன் தன்னை மனிதனாக வெளிப்படுத்த வேண்டுமாக இருந்தால் தன்னை முதலில் தானும் மானிடம் தான் என்பதை அறிமுகப் படுத்திக்
காட்டவேண்டும்.
ஆக…மொத்தத்தில் முப்பதுவருட உள்நாட்டு யுத்ததின் இழப்பு கொடுத்த உயிர் இரத்தம் ஊண் போன்ற வற்றை தின்றுதான் புலம் பெயர்தமிழர்கள் தமிழர்களை விமர்சித்து வருகிறர்ர்கள்.இது முற்றிலும் தவறானது என்பதே எனது கருத்து.இதை தாண்டி மானிட
த்தை பற்றி தேடல் நடத்துவதே இன்றைய தேவை.இதை தாங்கள் மறுதலிக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
தமிழில் உள்ள புத்தகங்கள படிப்போரே குறவு அதிலும் தேடிப் பிடித்து படிக்கிற ஏம்மிடம்தானே அதிகமாய் வசூலிக்கிறார்கள்? வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டாமா? இழித்தபடி எவரிடமெல்லாமோ ஏமாறூவோர் கூலித் தொழிலாளீயாய் தமிழனைத்தானே ஏய்க்க நினைக்கிறார்கள் இதில் வியாபார நேர்மை கூட இல்லையே? மானிடத் தேடலை விட பணம் மீதான தேடலே தமிழரிடம் தேங்கிக் கிடக்கிறது.
chandran .raja,
தமிழ்மாறன் எப்போது அலட்டலை நிறுத்தினார்?
பயனுள்ள அனைத்தையும் கொச்சைப் படுத்துவதையும் இன மதத் துவேஷத்தைப் பிரசாரம் செய்வதையும் விட அவர் எதையுமறியார்.
இது விளங்காமல் அவருக்கு விளங்கக் கடினமான அலுவல்களை (சாதாரண நியாயங்களைக் கூடப்) பேசி ஏன் பொழுதை வீணடிக்கிறிர்கள்?
ஜனநாயகம் தனிநபர் சுகந்திரம் என்பதெல்லாம் சமூகஅமைப்புடன் இணைந்தது..குறிப்பாக
ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பொருளாதார அடித்தனத்துடன்-உற்பத்தி -வினியோக முறையுடன் இணைந்தது.
உதாரணமாக அடிமைசமுதாயத்தில் எஜமானர்களுக்கு முழுமையான தனிநபர் சுகந்திரம்
ஜனநாயகம் இருந்தது.ஜனநாயகம் இருந்தது.அடிமையைக் கொல்வதற்கும் விற்பதற்கும்
கூட அவர்கள் உரிமை பெற்றிருந்தார்கள்.அடிமைகளுக்கு உயிருக்கும் உடலுக்கும் கூடஉரிமையிருக்கவில்லை. அடிமை சமுதாயத்தில் ஜனநாயகம் தனிநபர் சுகந்திரமும்
மிக சிறுபான்மையோருக்கு மட்டும் இருந்தது.அதற்கு அடுத்து நிலப்பிரத்துவ சமுதாயத்தில் அடிமை உழைக்கும் விவசாயியாயினான்.இப்போது அவனைக் கொல்வதற்கு நிலப்பிரவுக்கு உரிமையில்லை.இது அடிமை சமுதாயத்திலிருந்து மிகப்பெரும் முன்னேற்றம்.இந்த அமைப்பில் அடிமை உயிருக்கு மட்டும் உரிமை பெற்றான்.மிக சிறுச் சிறுபான்மையினரோன நிலப்பிரவுக்களுக்கு அனைத்து ஜனநாயக
உரிமைகளும் தனிநபர் சுகந்திரமும் இருந்தது.
அதனைத் தொடர்ந்து முதாலித்துவ சமுதாயம் ஏற்பட்டபோது உழைப்பாளி தனது உழைப்பை விலைபேசி விற்கும் சுகந்திரத்திற்கு உள்ளானவன்னான்னான். முதாலித்துவம் வளர்ச்சியடைந்த போது சிலநாடுகளில் ஓட்டுரிமையும் பேச்சுரிமையும்
எழுத்துரிமையும் பெற்றான்.இது நிலப்பிரபுத்துவ காலத்தோடு ஒப்பட்டால் மகிகப் பெரிய முன்னேற்றம்.ஆனால்…வாழ்கைக்கு ஆதாரமான உற்பத்திகருவிகள் நிலம் மூலதனம் முதலியனவை மிகசிறுமையினரோகிய முதலாளிகளுக்கே சொந்தம். அரசு
அதிகாரஅமைப்பு ஆட்சிநிர்வாகம் அவர்கள் கையில்.மக்களின் கருத்தை உருவாக்கும்
பகாசுர பத்திரிக்கைகளும் இதர பிரச்சார சாதனங்களும் அவர்களின் ஆதிக்கத்தில். எதையும் விலை கொடுத்து வாங்கும் ஆற்றல் அவர்களுக்கு உள்ளது.தேர்தல் நடந்தாலும் முதாலித்துவ கட்சியே மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் ஆற்றல் அவர்களுக்
உண்டு.தேவை ஏற்பட்டால் தேர்தலை ரத்து செய்யவும் தயங்க மாட்டார்கள். மூலதனம்
தான் சர்வவல்லமை படைத்தது.மூலதனத்தின் உடைமையாளாகள் தான் சர்வசுகந்திரம்
உடையவர்கள்.சமூகத்தின் மிகசிறுபான்மையினராக சுரண்டும் வர்க்கத்தினர் தான் உண்மையில் முழுமையான ஜனநாயகத்தையும் தனிநபர் சுகந்திரத்தையும் அனுபவிப்பவர்கள்.
நன்றி: சோசலிஸமும்-முதாலித்துவமும்.
-பி.ஆர்.பரமேஸ்வரன்-