கோட்பாடு சார்ந்த அறம் பேசிய காலமெல்லாம் காற்றோடு போய்விட்டது. எஸ்.வி.ராஜதுரை நமக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகத் தந்துகொண்டிருக்கிறார் .
இலங்கைப் பிரச்சினையில் ஐஎன்எஸ்டி எனும் ஜெர்மானிய தன்னர்வ நிறுவனத்தின் நிலைபாடு, ஜெர்மானிய பிராதஸ்தாந்து நிறுவனமான எவாஞ்ஜலிகா அகாதமியாவினுடன் அதனது நிதி சார்ந்த உறவு, அந்த அமைப்பின் இலங்கை அரசு ஆதரவு நிலைபாடு பற்றி எனது முன்னைய கட்டுரையொன்றில் கேள்வி எழுப்பியிருந்தேன். ஏகாதிபத்திய நிதி மூலதனம் பற்றியும் தன்னார்வ நிறுவனங்களது எதிர்ப்புரட்சி அரசியல் பற்றியும் வாய்கிழியப் பேசும் ‘புரட்சிகர’ மார்க்சியரான எஸ்.வி.ராஜதுரையும், ‘புரட்சிகர’ எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனும், ஐஎன்எஸ்டி நிறுவனம் திருவனந்தபுரத்தில் நடத்திய கருத்தரங்கில் என்ன அடிப்படையில் கலந்து கொண்டீர்கள் எனக் கேட்டிருந்தேன்.
தமிழ்ச்செல்வனின் பதில் நகைச்சுவை தவிர வேறில்லை. ‘ஐஎன்எஸ்டி அமைப்பாளர்களில் ஒருவரான சுசீந்திரனையும் அவரது துணைவியான இன்பாவையும் அவருக்குப் பல ஆண்டுகள் தெரியும். தமிழ்ச்செல்வனின் வீட்டுக்கு எல்லாம் அவர்கள் வந்திருக்கிறார்கள். அதனால் சுசீந்திரன் கூப்பிட்டார். நான் போனேன்’ என்கிறார் தமிழ்ச்செல்வன்.
பிராஸ்தஸ்தாந்து நிறுவனம், தன்னார்வ நிறுவனத்திற்கான நிதி போன்றவை குறித்த கேள்விகளுக்கான தமிழ்ச்செல்வனது பதில் இது. கருத்தரங்கிற்கு வந்தவர்கள் எல்லாம் இலங்கை அரசை எதிர்ப்பவர்கள் என்கிறார் தமிழ்ச்செல்வன். பச்சைப் பொய். தமிழ்ச்செல்வன் இலங்கை அரசை பாசிச அரசு என்கிறார். ஐஎன்எஸ்டி அமைப்பாளர்களான ரஞ்சித்தோ அல்லது சுசீந்திரனோ அப்படியா சொல்கிறார்கள்?
தமிழ்ச்செல்வனுக்காக மறுபடியும் ஒரு தகவல் சொல்கிறேன். 2009 அக்டோபரில் ஜெர்மனியில் இலங்கை தொடர்பாக நடந்த கருத்தரங்கிற்கு ஜெர்மானிய அரசின் பெடரல் ஏஜன்ஸி நிதி வழங்கியிருக்கிறது. அக்கருத்தரங்கில் ஜெர்மனியில் இருக்கும் இலங்கைத் தூதுவரும், ஜெர்மனி அரசின் தூதுவரும் பங்குபற்றியிருக்கிறார்கள்.
தமிழ்ச்செல்வன் கதை எழுதுகிறவர் என்பது மறுபடி ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரம் கருத்தரங்கு ஏழு நாட்கள் நடைபெற்றது என டக்கிளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கட்சியைச் சேர்ந்த எம் பௌசரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘எதுவரை’ என்ற சஞ்சிகையில் தாஸ் என்பவர் எழுதியுள்ளார். ஆனால் ஒரு நாள் நிகழ்ச்சியோடு இந்திய உளவுத்துறை அதனைக் கலைத்துவிட்டது என்கிறார் தமிழ்ச்செல்வன். இந்த ‘எதுவரை’ சஞ்சிகையின் ஆசிரியரான எம் பௌசர் திருவனந்தபுரம் கூட்டத்திற்கு லண்டனலிருந்து சென்று கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படியானால் எது உண்மை, எது பொய்?
இதுவாவது பரவாயில்லை. எஸ்.வி.ராஜதுரையின் சாட்சியங்கள் அருவறுப்பானவையாக இருக்கிறது. எஸ்.வி.ராஜதுரை திருவனந்தபுரம் கருத்தரங்கம் என ஒரு இடத்திலும் குறிப்பிடாமல், போகிற போக்கில் பத்துப் பக்கக் கட்டுரையொன்றில் (உயிர் எழுத்து : அக்டோபர் 2009) இரண்டு பத்திகளில் தனது அரசியல் ‘திருவிளையாடலை’ நிகழ்த்தியிருக்கிறார்.
ஐஎன்எஸ்டி, தன்னார்வ அமைப்புக்கள், ஏகாதிபத்திய நிதி, இலங்கை அரசு ஆதரவு பற்றி கேள்வி எழுப்புபவர்கள், புலி எதிர்ப்பு-புலி ஆதரவு என கறுப்பு வெள்ளை அரசியல் நடத்துகிறார்களாம். கருத்துக்களை ‘ஜனநாயகபூர்வமாக’ எதிர்கொள்கிற ‘ஆன்மபலம்’ இல்லாமல் அவதூறு செய்கிறார்களாம். எஸ்.வி.ஆர். சொல்கிறார்.
ஐஎன்எஸ்டி அமைப்பாளர்களில் ஒருவரான ரஞ்ஜித் முன்னாள் ஜேவிபி இயக்கத்தில் ஆயுதம் ஏந்திப் போராடி, அதனது இனவாதத்தினால் வெளியேறியவராம். ஜனநாயகத்திற்கான இலங்கை ஊடகவியலாளர்கள் வெளியிட்ட, இலங்கை ராணுவத்தினர் விடுதலைப் புலிகளைக் கொலைசெய்யும் ஒளிநாடாவை வெளியிட்டார் என இலங்கை அரசினால் குற்றம் சாட்டப்படுகிறவராம் – சிறி டெலோ இணையத்தள ஆதாரம் தருகிறார் எஸ்வி.ஆர் – இதுவெல்லாம் எஸ்.வி.ராஜதுரையின் நகைச்சுவைக்குச் சான்றுகள்.
ரஞ்ஜித்தை ஒரு புரட்சிக்காரராகவும், இலங்கை அரசுக்குத் ‘தண்ணி காட்டுகிறவராகவும்’ சித்தரிக்க முயல்கிற எஸ்.வி.ராஜதுரையை நினைக்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவத்தினர் கொல்வதாக வந்த ஒளிநாடாவை ரஞ்ஜித் வெளியிட்டதாக இலங்கை அரசு குற்றம் சாட்டுவதாகச் சுட்டிக் காண்பிப்பதன் மூலம் எஸ்.வி.ராஜதுரை என்ன சொல்ல வருகிறார்?
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை எதிர்த்துப் போர் புரிகிற நெஞ்சுரம் படைத்தவர் என, ரஞ்ஜித்தையும் அவர் சார்ந்த ஐஎன்எஸ்டியையும் சொல்கின்றாரா? என்ன கொடுமை!
மற்றவர்களுக்காகப் ‘பொய்’ பேசுகிற அவலநிலை எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு வந்திருப்பதற்காக உண்மையாகவே நான் வருத்தப்படுகிறேன்.
அந்த ஒளிநாடாவுக்கும் ஐஎன்எஸ்டிக்கும் சம்பந்தம் இல்லை என அது பற்றி ஒரு விசாரணை நாடகம் ஆடிய பின்னர் இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அந்த ஒளிநாடாவுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என ரஞ்ஜித் இலங்கை அரசுக்குக் தன்னிலை விளக்கமளித்து மன்னிப்புகோரும் பாணியில் கடிதம் எழுதியிருக்கிறார். இலங்கை ஜனநாயக ஊடகவியலாளர்களுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என ரஞ்ஜித் தனது அரசுக்கான கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். அத்தோடு 2009 அக்டோபரில் ஜேர்மனியில் தங்களுடைய ஐஎன்எஸ்டி நடாத்திய கருத்தரங்குக்கு இலங்கை அரச தூதுவர் கலந்துகொண்டு சிறப்பித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறி டெலோ இணையதளத்தைப் பார்த்துப் “புரட்சிகரமான” தகவல் தந்த எஸ்.வி. ராஜதுரை அவர்கள் சமகாலத்தில் வெளியான இந்தத் தகவல்களையும் குளோபல் தமிழ் இணையத்தள வழியிலோ அல்லது லங்காவெப்நியூஸ் இணையத் தள வழியிலோ அறிந்திருக்கவேண்டும்.
நாம் கேட்ட கேள்விகள் எதற்கும் ஐஎன்எஸ்டி இதுவரை மூச்சுவிடவில்லை. தமிழ்ச்செல்வனும் இதுவரை உருப்படியாக எதுவும் சொல்லவில்லை. எஸ்.வி.ராஜதுரைக்கு மட்டும் என்ன நேர்ந்தது? ‘அவர்களுக்காக’ப் பேசவேண்டிய அவசியம் ‘இவருக்கு’ ஏன் வந்தது? எஸ்.வி.ராஜதுரை சுசீந்திரனுக்காகவும் ரஞ்ஜித்துக்காகவும் “பேசுகிறவராக” வெளிவந்திருப்பதால் நேரடியாகவே நாம் இப்போது எஸ்.வி.ராஜதுரையிடம் கேட்க வேண்டியிருக்கிறது.
ஐஎன்எஸ்டிக்கும் உங்களுக்கும் என்ன உறவு?
ஐஎன்எஸ்டி எவாஞ்ஜலிக்கா அக்காதமியாவுடன் என்ன உறவுகளை வைத்திருக்கிறது?
ஐஎன்எஸ்டி ஜெர்மனி பெடரல் ஏஜன்சியுடன் என்னவிதமான நிதி சார்ந்த உறவு கொண்டிருக்கிறது?
இலங்கை அரசு பாசிச அரசு என ஐஎன்எஸ்டி கருதுமானால் எவ்வாறு அவர்கள் நடத்திய கருத்தரங்கில் இலங்கை அரசின் தூதவர் கலந்து கொள்வார்?
‘ஆன்மபலம்’ பற்றிப் பேசுகிற எஸ்.வி.ராஜதுரை அவர்களே நேர்மையாக நெஞ்சின் மீது கைவைத்து இதற்குப் பதில் சொல்லுங்கள்.
எஸ்.வி. ராஜதுரை அவர்களின் தகவலில் அல்லது ஆதாரத்தில் என்னவிதமான ‘ஆன்மபலம்’ இருக்கிறது என அவர் கருதுகின்றார்? எது அவதூறு? எது பொய்? எது நேர்மை? எது ஆன்ம பலம்?
எஸ்.வி. ராஜதுரை தரப்பில் இவைகளில் எதுவொன்றும் இல்லாததால்தான் ஆளுக்கு ஆள் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் சொல்லுகிற இவற்றில் எது அவதூறு என எமக்கு நிரூபித்துக் காண்பியுங்கள். மொன்னைத்தனமாக எழுதிக் கொண்டிருக்காமல் மனத் திண்மையிருந்தால் நேரடியாக எழுதுங்கள்.
இதனோடு தொடர்புடைய இடுகைகள்:
https://inioru.com/?p=6163
https://inioru.com/?p=6337
எஸ்.வி.ராஜதுரை / அ.மாக்ஸ் எழுதுகிற சில நல்ல கட்டுரையோடு உங்களை நிறுத்திக் கொள்ளுங்கள் அதற்கு அங்கால் எஸ்.வி.ராஜதுரை/ அ.மாக்ஸ் போன்றவர்களின் அரசியலை சுயநல போக்குகளை ஆராய கிளம்பினீர்களானால் அதன் நாற்றத்தை உங்களால் தாங்க முடியாமல் போய்விடும். அதிகாரத்திற்கு எதிராக பேசுவதாக சொல்லிச் சொல்லிச் பம்மாத்து காட்டி அ.மாக்ஸ் கும்பல் இறுதியில் எங்குபோய் சரணடைந்துள்ளது என்பது இப்போது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. அதே வழியை எஸ்.வி.ராஜதுரையும் தொடங்கிவிட்டார். எல்லாம் சொந்த சுயநல வாழ்க்கை சார்ந்த பயணங்கள். இதில் நீங்களோ நாங்களோ கவலைப்படுவதால் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை. அவர்கள் தெரிந்தே இதனை செய்கிறார்கள். நீங்கள் பேசும் தனிமனித அறம் / அரசியல் அறம் இப்போது யாரிடம் உள்ளது?. சந்தர்ப்பவாத சுயநல அரசியலே எங்கும் கொடிகட்டி பறக்கிறது. றஞசித் லோக்பியருக்கு எஸ்.வி.ராஜதுரை நற்சான்றிதழ் வழங்குவதற் ஊடாக அவருக்கு கிடைக்கும் பலாபலன்களை தடுப்பதில் ஏன் நீங்கள் தடையாக இருக்கவேண்டும். விட்டுத்தள்ளுங்கள். எஸ்.வி.ராஜதுரை பிழைத்துப்போகட்டும். அதற்கிடையில் ஒன்றை கூறுகிறேன் றஞ்சித் லோக்பியரை எனக்கு சுமார் 25வருடங்களுக்கு மேலாகத் தெரியும். இலங்கை அரசியலில் எந்த அரசு ஆட்சி பீடம் ஏறுகிறதோ அதனோடு கூட்டுச் சேர்ந்து தனக்கு வேண்டிய பலாபலன்களை பெற்றுக் கொள்வதில் அவர் மகா சூரன். யூ.என் பி ஆட்சிக்காலத்தில் புலிகளோடு ரனில் விக்கிரசிங்க சமாதான ஒப்பந்தம் செய்திருந்த காலத்தில் றஞ்சித்திக்கு சரியான விளைச்சல். நன்றாக அறுவடை செய்துகொண்டார். அப்போது புலிகளுக்கும் றஞ்சித் மிக மிக வேண்டியவராக இருந்தார். இரண்டு பக்கமும் வியாபாரம் பண்ணும் தந்திரத்தை நீங்கள் றஞ்சித்/ சுசீந்திரன் போன்றவர்களிடம் கற்கவேண்டும்.இப்படி கட்டுரை எழுதுவதால் இவர்கள் திருந்துவார்கள் என்றோ மக்கள் மத்தியில் அம்பலப்படுவதன் ஊடாக அவமானம் கொண்டு திருந்துவார்களோன்றொ நீங்கள் நினைத்தால் அது உங்கள் முட்டாள்தனம். நன்றி
வாணன்
நல்லதொரு கட்டுரை. இன்று பலரும் தமிழுக்கு தொண்டு செய்வதாக கூறி தங்கள் பைகளை நிரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். தொடருங்கள் உங்கள் சேவையை.ஐஎன்எஸ்டி அமைப்பாளர்கள் அனைவரது பெயரையும் அம்பலப்படுத்த வேண்டும். புலி காசு சேர்த்தது போல் இவர்களும் பையை நிரப்ப போட்டியிடுகின்றார்கள்.
நன்றிகள் அசோக்.
”
ஆயுதம் இல்லாத இயக்கங்கள் தான் சனநாயகம் பற்றிப் பேசுகின்றன” என்பது நம் காலத்தில் உலாவிய புது மொழி. இப்போது சந்தர்ப்பம் இல்லதவர்கள் தான் புரட்சி பேசித்திரிகிறார்கள் என நினைக்கத் தோன்றுகிறது.
சண்முகதாசன் அவர்கள் அரசின் பக்கம் சார்ந்து நின்ற புரட்சி வாதிகள் குறித்து “உதைத்த காலை நக்குகிற” மனிதர்களாக குறிப்பிட்டிருந்தமை நினைவுக்கு வருகிறது.
இவ்வளவு சீகிக்ரமாக… ஒரு சிறு அசைவில் …. இவர்கள் இப்படியாகிப் போனார்களே என்கிற போதுதான் கவலையாக இருக்கிறது.
விஜய்
அறிவுஜீவிகளின் இன்னொரு குழு புலி பாசிசத்தை எதிர்ப்பவர்கள். மரண
தண்டனையை எதிர்ப்பவர்கள். இன ஒடுக்கு முறையை எதிப்பவர்கள் என அடையாளம் காட்டிக்கொண்டவர்கள். இலங்கையில் கடைசித் தமிழ் குழந்தையும் மடிந்தால் கூட பரவாயில்லை புலிகளை அழிக்கும் வரை சிங்கள அரசு இலங்கையில் குண்டு வீச்சை நிறுத்தக்கூடாது என எதிர்பார்த்தவர்கள். ஈழத் தமிழர்களுக்கு சிங்கள அரச பாசிஸ்டுகளைவிட விடுதலை புலிகள் ஆபத்தானவர்களென நிறுவ பல முறைமுக நேர்முக காட்சிகளை அரங்கேற்றியவர்கள். இதில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் வருடம் ஒருமுறை தமிழகம் வந்து கோயில் கொடைக்கு நிதி அளிப்பது மாதிரி இலக்கிய கூட்டங்களை நடத்தி பாரிவட்டம் கட்டிக்கொள்வதும் மீந்த பணத்தில் பத்திரிக்கை நண்பர்களுக்கு செலவு செய்து தமிழ் பத்திரிகைகளில் நேர்காணல்களை போடவைத்து ஜனநாயகத்தையும் முதலாளித்துவத்தையும் பன்னாட்டு சந்தை விரிவாக்கத்தையும் புலி பாசிசத்தையும் கேள்வி கேட்டுவிட்டு செல்வார்கள். ராஜபட்சே கொண்டு வந்த மயான அமைதிக்காக காத்திருந்தவர்கள். போர் ஒரு கொண்டாட்ட காட்சியாக ஊடகங்களுக்கு தீனியான அவலத்தின் சாட்சியாக இன்று 3 லட்சம் தமிழர்கள் வன்னியில் திறந்த வெளி சிறைக்குள் ஒரு வேளை உணவுக்குக் கையேந்தி கிடக்கிறார்கள்//மாலதி மைத்ரி .
அரச பயங்கரவாதம் ‐ அறிவு பயங்கரவாதம் ‐ அமைதியின் பயங்கரவாதம் ‐ மாலதி மைத்ரி
பின்வரும் விமர்சனம் வெறும் வசை போலவே தெரிகிறது.
“இதில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் வருடம் ஒருமுறை தமிழகம் வந்து கோயில் கொடைக்கு நிதி அளிப்பது மாதிரி இலக்கிய கூட்டங்களை நடத்தி பாரிவட்டம் கட்டிக்கொள்வதும் மீந்த பணத்தில் பத்திரிக்கை நண்பர்களுக்கு செலவு செய்து தமிழ் பத்திரிகைகளில் நேர்காணல்களை போடவைத்து ஜனநாயகத்தையும் முதலாளித்துவத்தையும் பன்னாட்டு சந்தை விரிவாக்கத்தையும் புலி பாசிசத்தையும் கேள்வி கேட்டுவிட்டு செல்வார்கள்.”
இந்த விமர்சனத்துக்கும் கட்டுரைக்கும் என்ன தொடர்பு?
கூறப்பட்ட பிற கருத்துக்களுடன் என்ன தொடர்பு?
மொட்டையான அதிரடிகளை விடக் குறிப்பான விமர்சனங்கள் பயனுள்ளவை.
அ தை விடவும் விவாதங்கள் கருத்துத் தளத்தில் (தனி மனிதர் பற்றியனவாகவன்றி) விமர்சனத்திற்குரிய சொற்களும் செயல்களும் பற்றியனவாக இருப்பது ஆரோக்கியமானது.
இனியொரு ஆசிரியர் குழுவிற்கு மற்றவர்கள் மீது குறை குற்றம் சுமத்த முன் உங்களை நீங்கள் சுயவிமர்சனம் செய்துகொள்ளுங்கள். ஐஎன்எஸ்டி என்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனத்தைப்பற்றி வாய்கிழிய எழுதுகிறீர்கள்.ஆனால் இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினரான உங்கள் நண்பர் கலையரசனைப்பற்றி வாய் திறக்கவே மாட்டீர்கள் அவரின் “புரட்சி” கட்டுரைகளை பிரசுரிப்பீர்கள். இது என்ன நியாயம். உங்களைப்போல் புரட்சி போராட்டம் என்று எழுதுகிற வினவு இணையத்தளம் இந்த ஏகாதிபத்திய தாசருக்கு இவரின் இணையத்தளத்திற்கு இணைப்பு கொடுத்துள்ளது. வினவு இனியொரு இணையத்தளங்கள் பேசுவதெல்லாம் ஊருக்கு உபதேசம்தான? எம் பெளசர் இதில் கலந்துகொள்கின்ற ஒருவரே தவிர ஐஎன்எஸ்டியில் அங்கத்தவர் அல்ல. அவரைப்பற்றி எழுதும் அசோக் யோகன் ஐஎன்எஸ்டியில் முக்கிய உறுப்பினர்களான நோர்வே- சரவணன் கொலன்ட் – கலையரசன் சுட்காட் -சிவராஐன் இவர்களைப்பற்றியெல்லாம் வாய்திறக்கமாட்டார். இதுதான் இவர்களின் மாற்று அரசியல்.முதலில் உங்களை திருத்திக்கொள்ளுங்கள் பிறகு ஊருக்கு உபதேசம் செய்யுங்கள். இனியொரு கலையரசனின் பத்துக் கடுரைகள் வரை பிரசுரித்திருக்கிறது. இதற்கு ஒருபடி மேலே போய் வினவு கலையரசனுக்கு ஒரு சிறப்புப் பகுதியையே ஒதுக்கி அவரைப் பெருமைப்படுத்தியிருக்கிறது. இனிமேல் சுசீந்திரன் பற்றிப் பேசுவதை யும் அமார்க்ஸ் ராஜதுரை போன்றோரை விமர்சிப்பதையும் நிறுத்துங்கள்.
ராஜேஸ்வரன், இனியொரு மீதான உங்கள் விமர்சனத்தை கவனம் கொள்கின்றோம். நீங்கள் குறிப்பிடும் கொலன்டைச் சேர்ந்த கலையரசன் அவர்கள், ஐஎன்எஸ்டி என்ற நிதி நிறுவனத்தோடு மிக நெருக்கம் கொண்ட அதன் அங்கத்தவர் என்பது எமக்கு தெரிந்த பின்னர் அவரின் கட்டுரைகளை பதிவிடுவதை நாம் தவிர்த்துள்ளோம். இறுதியாக அவரின் கட்டுரை 31 ஜனவரி 2009 திகதிக்கு பிற்பாடு பதிவிடப்படவில்லை என்பதை தயவு செய்து கவனம் கொள்ளவும். .
இனியொரு குழுவிற்கு
இதற்கு நீங்கள் ஒன்றும் சுயவிமர்சனம் ஏற்கத் தேவையில்லை தோழர், ஏனென்றால் தோழர் கலை ஒரு தவறும் செய்யவில்லை.
இந்த ராஜேஸ்வரனுடைய பின்னூட்டம் குறித்து நான் வினவு தோழர்களுக்கு உடனடியாக கேள்வியை முன் வைத்தேன், அதற்கு தோழர்கள் பதிலளித்துள்ளார்கள் அதன்படி தோழர் கலையின் பெயரில் எந்த தவறும் இல்லை என்பது உறுதியாகிறது.
போலிக்கம்யூனிஸ்டுகளை காப்பாற்றுவதற்காகத் தான் எம்மையும் அவர்களைப் போன்ற ஏகாதிபத்திய எச்சில் காசை பொறுக்கித்தின்பவர்களாக சித்தரிக்க முயல்கிறார்கள். இந்த ராஜேஸ்வரன் என்பவர் யார்? அவருக்கும் சி.பி.எம் முக்கும் என்ன தொடர்பு என்பதை அவரே விளக்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.
வினவில் நான் கேட்டிருந்த கேள்வி அதற்கு வினவின் பதில் இரண்டும் கீழே உள்ளது அத்துடன் சுட்டியும்.
—————————————————————————————————————————————-
சிதார்த்தன் says:
November 17, 2009 at 12:55 pm
வினவு தோழர்களுக்கு வணக்கம்.
இனியொரு தளத்தில் பற்றி வெளிவந்துள்ள ஒரு கட்டுரைக்கு ராஜேஸ்வரன் என்பவர் எழுதியுள்ள இந்த பின்னூட்டத்தில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் உண்மையா ?
இது உண்மை எனில் வினவு கலையரசனை எப்படி ஆதரிக்கிறது ?
இது குறித்து விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்.
அந்த பின்னூட்டமும் சுட்டியையும் கீழே கொடுத்துள்ளேன்.
////////////////////////////////////////////////////////////////////////
இனியொரு ஆசிரியர் குழுவிற்கு மற்றவர்கள் மீது குறை குற்றம் சுமத்த முன் உங்களை நீங்கள் சுயவிமர்சனம் செய்துகொள்ளுங்கள். ஐஎன்எஸ்டி என்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனத்தைப்பற்றி வாய்கிழிய எழுதுகிறீர்கள்.ஆனால் இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினரான உங்கள் நண்பர் கலையரசனைப்பற்றி வாய் திறக்கவே மாட்டீர்கள் அவரின் “புரட்சி” கட்டுரைகளை பிரசுரிப்பீர்கள். இது என்ன நியாயம். உங்களைப்போல் புரட்சி போராட்டம் என்று எழுதுகிற வினவு இணையத்தளம் இந்த ஏகாதிபத்திய தாசருக்கு இவரின் இணையத்தளத்திற்கு இணைப்பு கொடுத்துள்ளது. வினவு இனியொரு இணையத்தளங்கள் பேசுவதெல்லாம் ஊருக்கு உபதேசம்தான? எம் பெளசர் இதில் கலந்துகொள்கின்ற ஒருவரே தவிர ஐஎன்எஸ்டியில் அங்கத்தவர் அல்ல. அவரைப்பற்றி எழுதும் அசோக் யோகன் ஐஎன்எஸ்டியில் முக்கிய உறுப்பினர்களான நோர்வே- சரவணன் கொலன்ட் – கலையரசன் சுட்காட் -சிவராஐன் இவர்களைப்பற்றியெல்லாம் வாய்திறக்கமாட்டார். இதுதான் இவர்களின் மாற்று அரசியல்.முதலில் உங்களை திருத்திக்கொள்ளுங்கள் பிறகு ஊருக்கு உபதேசம் செய்யுங்கள். இனியொரு கலையரசனின் பத்துக் கடுரைகள் வரை பிரசுரித்திருக்கிறது. இதற்கு ஒருபடி மேலே போய் வினவு கலையரசனுக்கு ஒரு சிறப்புப் பகுதியையே ஒதுக்கி அவரைப் பெருமைப்படுத்தியிருக்கிறது. இனிமேல் சுசீந்திரன் பற்றிப் பேசுவதை யும் அமார்க்ஸ் ராஜதுரை போன்றோரை விமர்சிப்பதையும் நிறுத்துங்கள்.
////////////////////////////////////////////////////////////////////////
https://inioru.com/?p=7440
வினவு says:
November 17, 2009 at 1:38 pm
தோழர் சித்தார்த்தன்,
இது தொடர்பாக தோழர் கலையரசனிடம் விளக்கம் கோரியிருந்தோம். அவரது கூற்றுப்படி அவர் ஐ.என்.எஸ்.டி கருத்தரங்கில் பல அரசியல் சார்பு கொண்டவர்கள் பங்கேற்றதைப்போல பங்கேற்று அவர்களது ஐரோப்பிய நிதி உதவியை விமரிசனம் செய்தே பேசியிருக்கிறார். மற்றபடி அந்த என்.ஜி.ஓவில் அவர் முக்கிய உறுப்பினரெல்லாம் இல்லை. தற்போது அந்த என்.ஜி.ஓ குழு பெருமளவு முடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். எனவே தோழர் கலையரசன் என்.ஜீ.ஓ அமைப்பொன்றுக்கு ஆதரவாக இருக்கிறார் என்ற அவதூறை நாங்கள் ஏற்கவில்லை. தோழர் கலையரசனை ஏகாதிப்த்திய எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் தோழர் என்றே கருதுகிறோம். அவர் வினவு தளத்துக்கு கட்டுரை எழுதக்கூடாது என்பது மேற்கண்ட பின்னூட்டம் இட்டவரின் நோக்கமாக இருக்கலாம். அந்த பொய் வலையில் நாங்கள் சிக்கவில்லை. இந்தப் பிரச்சினையில் வினவின் நிலை இதுதான்.
சிதார்த்தன் says:
November 17, 2009 at 2:23 pm
விளக்கத்திற்கு நன்றி தோழரே.
போலிகளை காப்பாற்ற நம்மையும், கலையரசனையும் கறை படிந்தவர்களாக சித்தரிக்க முயலுகிறார்கள்.
என்னுடையதையும் உங்களுடைய இந்த பின்னூட்டத்தையும் இனியொருவில் அப்படியே இடுகிறேன்.
இந்த நரித்தனத்திற்கு தோழர் கலையரசனே இனியொருவில் வந்து பதிலளித்து விட்டால் அவர்களின் முகத்தில் கரியை பூசியது போல் ஆகிவிடும், ஏனென்றால் இனியொரு அவரைப் பற்றி தவறுதலாக புரிந்து கொண்டு கீழ் கண்டவாறு பதிலளித்துள்ளது. தோழர் கலைக்கு இதை தெரிவித்து அவரையே பதிலளிக்கச் சொல்ல இயலுமா தோழர் ?
—————————————————————————————————————————————–
விமர்சனத்துக்குரியன கேள்விக்குரிய செயல்களேஅன்றித் தனிமனிதர்களல்ல.
இனியொருவின் தவறுகள் அது யாரையும் விமர்சிப்பதற்குத் தடையுத்தரவாக முடியுமா?
சிலர் தமிழீழ ஆதரவுத் தோற்றமோ வேறு தோற்றமோ காட்டியதால் அவர்களது பிற குற்றங்கள் காணப்படாமலே போயுள்ளன.
இனியொரு தனிமனிதத் தாக்குதலாயன்றித் தவறான செயல்களை விமர்சிப்பதைத் தொடர்வது நல்லது.
வணக்கம் அசோக், உங்கள் கட்டுரையை வாசித்தேன், உங்களுடைய ஆத்திரம் நியாயமானது எனக்கு புரிகிறது.கொஞ்சம் நிதானமாக உங்கள் சக்தியை செலவிடுங்கள், இராஜதுரை போன்றவர்கள் இப்படிப்பட்டவர்கள் தானே இது முன்னமே தெரிந்த விடயமல்லவா.
தயவு செய்து உந்த என்ஜஓ க்கள் பற்றி தெளிவாக யாரும் எழுதமாட்டீர்களா?
என்ஜிஓக்கள் எவை எவை ஈழத்தொடு தொடா;புடையவை? இவைகளில் நல்லவை என்று எதுவுமே கிடையாதா? சுற்றிவளைத்துப்பார்hதால் வெளிநாடுகளில் அகதிகாக இருக்கிற நாமும் என்ஜஓக்களுடன் ஏதோவகையில் தொடா;புபட்டவா;கள்தானே!
என்ஜிஓக்களின் தனிப்பட்ட செயல்பாடுகளினுடாக மட்டுமே சம்பந்தப்பட்ட நபா;களை நீங்கள் விமா;சிப்பது நியாயமானது.
இனியொரு ஆசிரியர் குழுவுக்கு கலையரசன் தொடர்பாக தோழர் சித்ததர்த்தன் வினவு இணையத்தளத்திற்கு தெரிவித்த கருத்துக்களுக்கு நான் பதிலளித்து வினவு இணையத்தளத்திற்கு எழுதியுள்ளேன். அதனை இத்தோடு இணைத்துள்ளேன். தயவு செய்து இதனை இனியொருவில் பிரசுரிக்கவும்.
தோழர்கள் வினவு சித்தார்த்தன் நான் எவ்வித ஆதாரமும் இல்லாமல் கலையரசன் மீது குற்றம் சுமத்தவில்லை. ஆதரத்துடனேயே இக் குற்றச்சாட்டை இனியொரு இணையத்தளத்தில் முன் வைத்தேன். புகலிடத்தில் புரட்சிபேசும்பலருடைய மறுபக்கம் மிக மிக ஆபத்தானது என்பதை நீங்கள் அறியவேண்டும். இவர்களின் எழுத்துக்ளையும் பேச்சுக்களையும் வெறுமனவே வைத்து இவர்களை முற்போக்கானவர்களாக புரட்சிகர சக்திகளாக கருதி தயவு செய்து ஏமாறாமல் இருக்கவேண்டும். கலையரசனைப்பற்றியும் ஐஎன்எஸ்டி பற்றியும் அதில் அங்கம்வகிக்கும் ஏணையவர்கள் பற்றியும் முழுமையாக எனக்கு தெரியும் என்பதாலேயே இக் குற்றச்சாட்டை முன் வைத்தேன். இத்தோடு ஐஎன்எஸ்டி என்ற தன்னார்வ நிதி நிறுவனத்தின் உத்தியோக பூர்வ இணையத்தள முகவரியை இத்தோடு இணைத்துள்ளேன் Favourite Sites என்ற பகுதியில் கிழ் ஐஎன்எஸ்டி உறுப்பினர் பிலொக் என்ற பகுதியில் கலையரசனின் இணைய முகவரி இணைக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும். தோழர்களே புகலிட புரட்சியாளர்களிடம் கவனமாக இருங்கள்
http://srilankandiasporablog.wordpress.com/2009/10/19/badboll-insd/
Favourite Sites
Beyondframe
Boondi.lk
Campaign for Free & Fair Election
Free Media Movement, Sri Lanka
Groundviews.org
INSD Norway
INSD-Membersblog: KALAIYARASAN
Release Tissainayagam
Rightsnow
Vikalpa.org
தனிமனிதர் மீதான விமர்சனத்துக்குரிய களமாக இனியொருவின் சில பகுதிகள் தொடர்வதைத் தவிர்த்து விடயச்சார்பாக விவாதங்கள் நடக்க எல்லாரது ஒத்துழைப்பும் தேவை.
நம்மால் நிதானமாக விவாதிக்க இயலுமாக இருக்க வேண்டும்.
கலையரசன் விடயம் அதிர்ச்சியாகவும் சகிக்க முடியாததாகவும் இருக்கிறது. ஏகாதிபத்திய எதிர்ப்பு கட்டுரைகளை எழுதிக் கொண்டு மறுபுறம் ஏகாதிபத்திய தன்னார்வ அமைப்பில் அங்கத்தவராகவும் இருக்கும் கயமைத்தனத்தை வேறு என்னவென்று அழைப்பது?. பேர்லீன் சுசீந்திரன் ஐஎன்எஸ்டி யில் அங்கம்வகித்தால் அவர் பிற்போக்குவாதி என்கிறது சரி. அவரை அம்பலப்படுத்துவதும் சரியானது. அதே அரசியல் அயோக்கித்தனத்தை செய்யும் கலையரசன் முற்போக்குவாதி!. இந்தச் சூத்திரம் எமக்கு புரியவேயில்லை. இதை யாராவது விளங்கப்படுத்துவீர்களா? தங்களுக்கு வேண்டியவர்கள் என்ன அயோக்கியத்தனம் செய்தாலும் அவர்களை காப்பாற்றுவதும் தமக்கு வேண்டாதவர்கள் சிறு தவறு செய்தாலும் அவர்களை குற்றவாளிகளாக்கி “மண்டையில்போடும்” அதே பாசிச புலி பாணி அரசியலே புகலிடத்திலும் இந்த முற்போக்கு பேசும் சந்தர்ப்பவாதிகளின் அரசியலாக தொடர்கிறது.”தமக்கு வேண்டியவர்கள் என்ன அயோக்கியத்தனமும் செய்துவிட்டுப்போகட்டும்” இதென்ன அரசியல்? அவரைக்காப்பாற்ற ஆயிரம் நியாயங்கள் சொல்ல இணையத்தளங்கள் வேறு. புகலிட அரசியல் மிக கேவலமாக மாறிக்கொண்டிருக்கிறது. மக்களைப்பற்றி பேசுவதாக புலுடாவிடும் இந்த அதிகார ஆசை கொண்ட போலி முகங்களின் முகமூடிகள் கிழிக்கப்படவேண்டும்.
அன்புடன் கலையரசன் ,
உங்களுடைய “இனியொரு சதி செய்வோம்” கட்டுரை படித்தேன். இதற்கான என் பதில் நீண்டதாக இருக்கும். பின்னர் நிச்சயம் எழுதுவேன். தற்போது என் சில கருத்துக்கள். ஐஎன்எஸ்டி கருத்தரங்கில் நீங்கள் கலந்துகொணடது தொடாபான பிரச்சனையல்ல, இப்போது பேசப்படுவது. நீங்கள் ஐஎன்எஸ்டி என்ற தன்னார்வ நிதி நிறுவனத்தில் உறுப்பினர் என்ற சர்ச்சை தொடர்பாகவே. நீங்கள் ஐஎன்எஸ்டி யில் உறுப்பினர் என்பது ஐஎன்எஸ்டி யின் உத்தியோக பூர்வ இணையத்தளம் மூலம் நிரூபிக்கப்பட்டடுள்ளது. உங்களது கட்டுரையில் ஆதாரப்பிரச்சனையான இதனை நீங்கள் தவிர்த்துள்ளீர்கள். ஐஎன்எஸ்டி யின் நீங்கள் உறுப்பினர் இல்லயையெனில் அவர்களின் இணையத்தளத்தில் எப்படி நீங்கள் உறுப்பினர் என்று போடமுடியும்.? இது தொடர்பாக நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?. ஐஎன்எஸ்டி இணையத்தளம் என்பது சாதாரண இணையவலைத்தளம் அல்ல. உங்கள் பெயரை சும்மா இணைப்பதற்கு.
கலையரசன் தயவு செய்து உண்மைகளைப் பேச பழகிக்கொள்ளுங்கள். நாங்கள் இந்த ஐரோப்பிய சூழலில் நுர்றுவீதம் சரியான நபர்களாக இருக்க முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் நாம்பேசுகின்ற எழுதுகின்ற விடயங்களுக்கு நேர்மையாக உண்மையாக நடைமுறைவாழ்வில் வாழ முயலவேண்டும். எனக்கும் தன்னார்வ நிறுவனங்களோடு தொடர்பு இருப்பதாக எழுதியுள்ளீர்கள் நன்றி. அதனை ஆதாரத்தோடு முன்வைத்து என்னை அம்பலப்படுத்தலாம்தானே? தயவு செய்து அதனை முதலில் செய்யுங்கள்.
அதைவிட இன்னும் என்னைப்பற்றி சுவாரசியமான செய்திகளையும் சொல்லியுள்ளீர்கள். ஸ்டாலினை பற்றியும் கார்ல் மார்க்ஸின் துணைவியும் தோழியுமான ஜென்னியைப் பற்றியும் அவதுர்றாக நான் கட்டுரை எழுதியுள்ளதாக சொல்லியுள்ளீர்கள். அக்கட்டுரைகளையும் வெளிக்கொணர்ந்து என்னை அம்பலப்படுத்துங்கள். ஆவலோடு நண்பர் கலையரசனை எதிர்பார்க்கிறேன். பெரியார் தொடர்பாக நான் எழுதியுள்ள கட்டுரைகளை தயவு செய்து மீண்டும் ஒருதரம் படித்துப்பாருங்கள்.
-அசோக்-
தனிமனிதவாத விவாதங்கள் தவிர்க்த் தக்கன.
இணையத்தளம் மறு சிந்தனையின்றி கைக்கு வந்த எதையும் எமழுத இடமளிக்கிறது. இது நல்லதல்ல.
இருவருக்கிடையிலான தனிப்பட்ட விவாதம் பொது மேடையில் நிகழ வேண்டுமா? இணையத் தளங்கள் ‘புரடசிகர மேன்மைப் போட்டிக்கான’ களங்களாக இருக்க வேண்டாமே!
முதலில் முரண்பாடுகளை சுமுகமாகத் தனிப்பட்ட தாக்குதலுக்கு இடமின்றித் தீர்க்க வழி தேடலாம்.
குற்றச்சாட்டுக்கட்குப் பதில் வேறு குற்றச்சாட்டுக்களாகத் தொடர்வது அவது|று மழைக்கே வழி செய்யும்.
நாம் எதற்காக நேரஞ் செலவிட்டு எழுதுகிறோம் என்று சிந்திப்போமாக.
உங்களது நேர்மை உங்களுக்கே வெளிச்சம்.
பாவம் நீங்கள்!
கலை அரசன் என்ற நபரை ஒரு அரச சார்பான தன்னார்வநிறுவனம் வெளிப்படையாக தனது உறுப்பினர் எனக் கூறுகிறது. அவர் அது குறித்து எந்த மறுப்பும் வெளியிடவில்லை. அதே தனிநபர் இலங்கை அரச சார்பாக நடைபெற்ற இலக்கியச் சந்திப்ப்க்களில் எல்லாம் முக்கிய புள்ளி. இது தொடர்பான படங்கள் அவர்களது இணையத்திலேயே உள்|ளது. புகலிடத்தில் கூட இலங்கை அரசு தமக்கு எதிரான சக்திகளை மிரட்டும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. கலை அரசனின் தனிப்பட்ட பிரச்சனைகள் பற்றி இங்கு யாரும் பேசியதாகத் தெரியவில்லை. அவரது அரசியல் சார்புநிலை குறித்த ஆரோக்கியமான விவாதம் ஒன்று எழுப்பப்பட்டது. இதில் சுருக்கமாக அவர் தான் அந்த நிறுவனத்தின் உற்ப்பினர் அல்ல
எனப் பதிலளித்திருக்கலாம்
. வன்னியில் மக்கள் மூட்டைப்பூச்சிகள் கொல்லப்பட்ட போது அமரிக்காவைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்த இவர் கொலைகள் நிறைவேறிய பினனர் யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி நடக்கிறது என்று சொல்கிறார். கேள்வி இதுதான் ஆதாரபூர்வமான அரசியல் விமர்சனத்தை அரசியல் ரீதியாக அணுகும் முறைமைக்கு நாம் எம்மையெல்லாம் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஐயா உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன். சரியானது. உங்கள் கருத்து ஆரொகியமானது. அதுமட்டுமல்ல உங்களை தொடர்புகொள்ள வழி உண்டா?
//கலை அரசன் என்ற நபரை ஒரு அரச சார்பான தன்னார்வநிறுவனம் வெளிப்படையாக தனது உறுப்பினர் எனக் கூறுகிறது. அவர் அது குறித்து எந்த மறுப்பும் வெளியிடவில்லை. அதே தனிநபர் இலங்கை அரச சார்பாக நடைபெற்ற இலக்கியச் சந்திப்ப்க்களில் எல்லாம் முக்கிய புள்ளி. இது தொடர்பான படங்கள் அவர்களது இணையத்திலேயே உள்|ளது. புகலிடத்தில் கூட இலங்கை அரசு தமக்கு எதிரான சக்திகளை மிரட்டும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. கலை அரசனின் தனிப்பட்ட பிரச்சனைகள் பற்றி இங்கு யாரும் பேசியதாகத் தெரியவில்லை. அவரது அரசியல் சார்புநிலை குறித்த ஆரோக்கியமான விவாதம் ஒன்று எழுப்பப்பட்டது.ஆதாரபூர்வமான அரசியல் விமர்சனத்தை அரசியல் ரீதியாக அணுகும் முறைமைக்கு நாம் எம்மையெல்லாம் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்// சமரன்
சமரன் குறிப்பிட்ட மேற்கண்ட விடயம் நியாயமான கருத்து. கலையரசன் நேரடியாக தனது பதிலை வைக்கவேண்டும். ஆதாரத்துடன் இங்கு இராசேசுவரன் என்பவர் ஆதாரபூர்வமாக கலையரசன் மீது வைத்துள்ள குற்றச்சாட்டிற்கு பதிலளிப்பதற்கு பதிலாக கலையரசன் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விவாதத்தை வேறு திசைக்கு மாற்ற முயல்கிறார். சமரன் குறிப்பட்டதுபோல் ஆதாரபூர்வமான அரசியல் விமர்சனத்தை அரசியல் ரீதியாக அனுகும் முறைமைக்கு நாம் எம்மையெல்லாம் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.
When somebody is associated with an NGO that has close links with SL government questions will be raised about their credibility. Now many are clueless about the future of Sri Lamkan Tamils in the post-LTTE era.Perhaps some have resigned to fate, some have hopes that something will be done while some may have views which if expressed may be controversial. So when views are expressed in workshops and conferences they get more attention now/.Those claiming to be progressives and left-oriented should come clear on their relationship and the level of relationship with NGOs funded/supported by governments and international donors including church sponsored agencies. If they hide themselves behind some walls and give evasive replies their credibility will suffer. I have no hope on these intellectuals like SVR, A.Marx. They can at best make some noises here and there.These intellectuals have neither the vision nor the outlook of a Chomsky or Edward Said. They are too engrossed in petty politics to be of some real use. So Ashok and others should spend their enegies in more relevant things than by writing about them again and again. Whether it is human rights or civil liberties the contribution of A.Marx and SVR is limited. A.Marx has ‘founded’ so many forums but what is the outcome. In Tmail nadu there are 20 forums/groups/centres claiming to work on these issues and no. of persons involved in them may be just 25. The irony is you will find more lawyers and students associated with caste based organizations than with these civil liberties/human rights groups. I write this so that illusions about them are dispelled. They are just paper tigers in reality. But even as paper tigers they are flawed.
தன் மீது கலையரசன் கூறிய குற்றச்சாட்டுக்கள் குறித்து பதில் அளித்த அசோக் அவர்கள் அதனை நிரூபிக்கும்படி சவால் விட்டிருந்தார்.இது குறித்து இதுவரை கலையரசனிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.நேர்மையான எழுத்தாளராக இருந்தால் கலையரசன் இது குறித்து உடன் பதில் தந்திருக்கவேண்டும்.அவருடைய மெளனம் ஒப்புதல் வாக்குமூலமோ என எண்ணத்தூண்டுகிறது.ஆனால் இன்று ராயாகரன் “இனியொரு”மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.நான் இதைப்படித்ததும் உண்மையிலே அதிர்ந்துவிட்டேன்.அசோக்கின் சவாலுக்கு கலையரசனின் பதிலை பெற்று பிரசுரிக்க வேண்டிய ரயாகரன் அதற்கு மாறாக தானே பல குற்றச்சாட்டுக்களை சுமத்துவது ஏன் என்று தெரியவில்லையாயினும் அவர் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.இது குறித்து அசோக்கும் நாவலனும் நிச்சயம் நல்ல பதில் அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்.
தயவு செய்து இந்தப் பயனற்ற பகிரங்க மோதலைத் தவிருங்கள்.
எழுப்பப்பட்டது ஒரு கேள்வி. எதிர்வினைகள் எங்கேயோ போய் நிற்கின்றன.
இதனால் யாருக்கு நன்மை?
இது வீணான ஈகோச் சண்டையாக மாறுகிறது.
இதில் கலையரசனைப் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இது ஒன்றும் தனிப்பட்ட தனிநபர் பிரச்சனை அல்ல. இராஜபக்சே என்பதோ, ஜகத் கஸ்பர் என்பதோ, எஸ்.வி.ராஜதுரை என்பதோ, கலையரசன் என்பதோ இது எல்லாம் தனிநபர்களின் விசயம் அல்ல. அப்படி பார்த்தால் நாம் இன்னும் அரசியல் அரிச்சுவடி கூட அறியாதவர்கள்தாம். இவர்கள் எல்லோரும் யாரை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் என்பதுதான்.
எஸ்.வி.ஆர் பற்றி முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது. அவர் என்றும் தேசியத்தை ஆதரித்தது இல்லை. அவரைப் பொருத்தவரை தேசியம் என்பதே கற்பனையானது, கற்பிக்கப்பட்டது என்பது (இந்து, இந்தி, இந்தியா – எஸ்.வி.ஆர்) அவர் கருத்து. இப்படி இருக்கும் போது ஈழப் போராட்டத்திற்கு அவர் எப்படி ஆதரவாக இருப்பார் என்று புரியவில்லை. அவர் இலங்கையின் பக்கமே நிற்பார். இதில் வருந்துவதற்கோ ஒன்றுமில்லை. தூக்கியெரியப்படவேண்டியவர்.
இணையதளம் லின்ங்க் கொடுத்தது இரண்டாவது விசயம் அதில் கலந்து கொண்டதுதான் முதல் விசயம். அதில் உறுப்பினர் அல்லாதவர்கள் கூட இருக்கட்டுமே.
இவையெல்லாம் தனிநபர்களின் தாக்குதல் அல்ல. இது ஒரு அரசியல் வழியை பின்பற்ற சொல்லி வழிகாட்டுகிறார்கள். இதில் இது தனிநபர் விசயம் என்று ஏமாந்தால் அது ஈழத்தில் நடந்த கடைசி அவலத்தை மீண்டும் உருவாக்க முனைகிறோம் என்று பொருள். இது தனிநபர் விவகாரமாக இருந்தால் அதை ஏன் மக்கள் படிக்கும் பிரச்சாரத்தில் வெளியிடுகிறார்கள். இது போல் நீங்கள் பின்பற்றுங்கள் என்றுதானே பொருள்.
இறுதியாக ஒன்றை சொல்லி முடிக்கிறேன்.
//இதனால் யாருக்கு நன்மை?
இது வீணான ஈகோச் சண்டையாக மாறுகிறது.//
இதனால் போராடுபவருக்கு நன்மை உண்டு. ஏனென்றால் எல்லோருக்கும் எல்லாம் தெரிவதில்லை. அப்படி தெரியும் சில நெருடலான விஷயங்களுக்கு பொதுதளத்துக்கு வரும் எந்த தனிநபரும் கட்டாயம் பதில்சொல்லவேண்டியவர்களே. அப்படி யாருக்கும் நான் தெளிவுபடுத்த வேண்டியதில்லை என்று சொல்பவர்கள் எல்லாருமே அவர்கள் மக்களுக்காக நிற்பவர்கள் அல்ல. தன் சுயநலத்திற்காகவே நிற்பவர்கள். அவர்களை இனங்காட்டி ஓரம்கட்டவேண்டும். இதில் சமரசம் இருந்தால் எவ்வளவு பெரிய போராட்டமாக வளர்தாலும் காடிக்கொடுக்கப்படுவது நிச்சயம் ஈழம்போல்.
தோழர்களே இராயாகரனின் பாணி எப்போதும் புலிகளின் பாணிதான். புலிகள் மீது யாராவது குற்றம்சுமத்தினால் புலிகள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காமல் அப் பிரச்சனையை திசை திருப்புவதற்காக தங்கள் பிரச்சாரத்தை வேறுபக்கத்தில் ஆரமபித்துவிடுவார்கள். அதன் பின் குற்றச்சாட்டும் புலியும் காப்பாறப்பட்டுவிடும். புகலிடப்புலிக் குணம் கொண்ட இராயாகரனின் பாணியும் இதுதான். இதற்காக தோழர்கள் சோர்வு அடையவேண்டியதில்லை. இராயாகரன் யாரைத்தான் கொச்சைப்படுத்தவில்லை. இராயகரனின் கொச்சைப்படுத்தலில் இருந்து தப்பிய ஒருவரை சொல்லுங்கள் பார்ப்போம். அரசியல் ரீதியில் அனுகும் பக்குவம் இராயாகரனிடம் எப்போதும் இருந்ததில்லை. மற்றவர்களை தனிப்பட்வகையில் கொச்சைப்படுத்தி கொச்சைப்படுத்தி தன் காலத்தை கழிக்கும் பாவத்திற்குரிய சீவன் அது. விட்டுத்தள்ளுங்கள். உங்கள் அரசியலை சரியான வழி நோக்கி செலுத்துங்கள். காலத்தை வீணடிக்காதீhகள் தனிமைப்பட்டு கூட்டுச் சேர்க்க ஆளின்றி தவிர்த்தக்கொண்டிருக்கும் ஒரு அரசியல் வியாபாரிக்கு தேவையற்ற முறையில் விளம்பரம் செய்கிறீhகள். தயவு செய்து இப் பிரச்சனையை நிறுத்துக்கொள்ளுங்கள்.
அசோக் 3 கேள்விகளுக்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். ‘நோ;மையாளராக இருந்தால்)
1. இலங்கை எம்பசிக்கு ஒரு இளைஞனை ஏமாற்றி டக்ளசை சந்திக்கை அழைத்துச்சென்றது உண்மையா?
2. சிவராம் பாரி@; வரும்போது வµPட்டில் தங்க வைத்திருந்தது உண்மையா? 3. ஈன்டிஎல்எவ் கட்சி ஆரம்ப உறுப்பினா; என்ற வகையில் கடசிக்கும் உங்களுக்குமான இனறையதொடா;பு என்ன?
அசோக் பதில் தர வேண்டிய மேலும் 35 890 567 கேள்விகளிலே 5:
1. காலங் காத்தாலே பல் துலக்காமே காபி சாப்பிட்டதுண்டா?
2. பத்திரிகையில் ராஜபக்சேயின் மூஞ்சியை மூணுமுறைக்கு மேலேபாத்ததுண்டா?
3. சிவராம் எங்கற பேரோடே இருக்கற யார்கூடவும் பேச்சுக் குடுத்ததுண்டா?
4. ரயாகரனோடே காப்பி சாப்பிட மாட்டேன்னதுண்டா?
5. இலங்கை எம்பசியே ஏமாத்தி டக்ளசே வெளியே கொண்டு போனதுண்டா?
போதும் சார் ரோதனை!
டயத்த வேஸ்ட்டு பண்ணாமே பிரயோஜனமா வேறே ஜோலியெப் பாருங்க!
சந்திரன்
நீங்கள் கேட்ட கேள்விக்கும் அதன் அரசியல் முக்கியத்துவத்துக்கும் உள்ள உறவு என்ன என்பது விளக்கினீர்கள் என்றால் அவர் பதில் சொல்லவேண்டியதில்லை. ஆனால் மற்றவர்கள் அவரை பற்றி தெரிந்துகொள்ளட்டுமே. சிவராம் பாரி அவர்களுடைய அரசியல் நிலையை சொல்லுங்கள். அது இல்லாமல் நபர்களைப் பற்றி கேள்விமட்டும் எந்த பயனும் இல்லை. அரசியல் முக்கியத்துவத்தை (சார்ப்பானதோ எதிரானதோ) தனிநபரின் முக்கியத்துவமும் அடங்கியிருக்கிறது. ஆகவே அரசியலாக விளக்குங்கள். எங்களைப் போன்றவர்கள் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.
I saw this on Radical Notes, a very useful India-based website, among guidelines to those sending their responses.
* Please keep the topic of messages relevant to the subject of the article.
* Personal verbal attacks will be deleted.
* Please don’t use comments to plug your web site. Such material will be removed.
Every rule applied there is very relevant to most Tamil Websites.
It will be a good policy for serious Tamil websites to adopt.