இலங்கையின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரும் சிறந்த தமிழ் இலக்கியவாதியுமான எஸ்.பொ என்று அழைக்கப்படும் ச. பொன்னுத்துரை அவர்கள் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் காலமானார்.
இறக்கும்போது அவருக்கு வயது 82.
யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.பொ அவர்கள், தனது வாழ்நாளின் பெரும்பாகத்தை மட்டக்களப்பில் கழித்ததுடன் இறக்கும்போது ஆஸ்ரேலியாவில் வாழ்ந்திருந்தார்.
ஒரு இடதுசாரி இலக்கியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட எஸ். பொ அவர்கள், கதைகள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என நூற்றுக்கணக்கான படைப்புக்களின் சொந்தக்காரராவார். மொழிபெயர்ப்பு நூல்களும் இவரது படைப்புக்களில் அடக்கம்.
இவருடைய மகன் மித்திரா.பொன்னுத்துரை (அருச்சுனா) தமிழீழப் விடுதலைப் புலகளின் இயக்கத்தில் உறுப்பினராகப் செயல்பட்ட காலத்தில் சிறிலங்கா கடற்படையின் தாக்குதலில் 27.04.1986 அன்று மரணமடைந்தார்.இவர் ஒரு புகைப்படப் பிடிப்பாளர். 985 ம் ஆண்டு காலப்பகுதியில் திரு .பழ. நெடுமாறனின் அவர்களின் வடக்கு கிழக்கு பயணம் முழுவதையும் படமாக்கிய போராளி .இந்த மாவீரரின் பெயரில்தான் விடுதலைப்புலிகள் தங்களுடைய புகைப்படக் கலையகத்திற்கு அருச்சுனா என்று வைத்தனர்.