அரச தரப்பு எம்.பி.யான எல்லாவெல மேதானந்த தேரர் பாராளுமன்ற வரவு – செலவுத் திட்ட விவாதத்தின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்பு வாழ்ந்த தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறுவதை எவரும் கேள்விக்குட்படுத்த முடியாது” என பாராளுமன்ற வரவு – செலவுத் திட்ட விவாதத்தின் போது தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே ஜே.வி.பி. யின் தலைவர் நாங்கள் தழிழ், முஸ்லிம், சிங்கள பிரிவாதத்தினை எதிர்க்கிறோம் எனக்கூறியருந்தமை நினைவுக்கு வரலாம்.
தங்கள் இனவாதத்தினை மூடி மறைக்க சிங்கள பிரிவினை வாதம் என்ற இல்லாத ஒன்றை அவர்கள் உருவாக்கியிருந்தார்கள். அதே போலத்தான் எல்லாவெல மேதானந்த தேரரும் தனது சிங்கள பேரினவாத்தினை மறைக்க இப்படிப் பொய்யுரைத்திருக்கிறார்.
அவர் கூறுவது யாதெனில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்பு வாழ்ந்த தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேறுவதை எவரும் கேள்விக்குட்படுத்த முடியாது என்பதாகும். எவ்வளவு அபத்தமான வார்த்தைகள் !
ஒன்று பேரினவாதிகள் கூறினாலும் கூறாவிட்டாலும், யுத்தம் நடந்தாலும் நடக்காவிட்டாலும், சமாதானம் வந்தாலும் வராவிட்டாலும் வடக்கு – கிழக்கு மக்கள் அங்குதான் வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள். அங்குதான் வாழவேண்டும்.
இரண்டு வடக்கு – கிழக்கில் முன்பு தமிழர்கள் வாழ்ந்த பல இடங்களில் யுத்தம் முடிந்து விட்ட நிலையில் தமிழர்கள் குடியேற முடியாது தடுக்கப்பட்டுள்ளார்கள். முதூர், தருமலை, வன்னி, யாழ்ப்பாணம் என வௌ;வேறு காரணங்களினால் இவ்வாறு நடந்துள்ளது. தமிழ் மக்கள் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் தான் இவ்வாறான பேரினவாத அநீதிகள் தமக்கு இழைக்கப்படுவதாக நம்புகிறார்கள்