சமீப நாட்களாக அநாமதேய மின்னஞ்சல்களும் அநாமதேய இணையத்தளங்களும் என்னையும் ஏனைய சமூக உணர்வுள்ளவர்களையும் நோக்கிய சேறடிப்புக்களில் இறங்கியுள்ளன. நான் எழுதியதாக இவர்களால் ‘புனையப்பட்ட’ பின்னூட்டங்கள் மின்னஞ்சல் மூலம் பல முகவரிகளுக்கு அனுப்பப்படுவதுடன் , தங்களின் அநாமதேய இணையத்தளத்தில் என் பெயரில் இவ் மின்னூட்டங்கள் பதிவு செய்யப்படுகின்றன. நான் அ. மாக்ஸ்சுக்கு தீரா நதியில் எழுதிய ‘திறந்த கடிதத்திற்குப் பிற்பாடு இவ்வாறான செயல்கள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன . இவற்றிற்கு பின்னால் சோபாசக்தியும், லண்டன் ராகவனும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருகிறார்கள். அவர்களோடு கீரனும் அடக்கம்.
இவர்களால் புனையப்பட்டு, என் பெயரில் விடப்படும் மின்னஞ்சல்கள் பதிவுகள் மிக மோசமான வார்த்தைகளையும் பாலியல் வக்கிரகங்களையும் கொண்டனவாக இருக்கின்றன. இவற்றை எனக்கு மட்டும் அனுப்புவதோடு இல்லாமல் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் திட்டமிட்டு அனுப்பப்படுகின்றன. இவர்களின் வக்கிரமான எழுத்துக்களால் நானும் குடும்ப உறுப்பினர்களும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகின்றோம். இவ்வாறான செயல்பாடுகள் தாக்குதல்கள் புகலிடத்தில் எனக்கு புதியவை அல்ல. 2002ம் ஆண்டில் இவ்வாறு என் மீது மிக மோசமான மனோவிகார சேறடிப்புக்களை ‘பாலியல் மனோவிகார கிரிமினல்’ சோபாசக்தி நிகழ்த்தி இருந்தார்.
அன்று மொட்டைக் கடதாசி என்றும் மின்னஞ்சல் என்றும் இதே பாணியை கைக்கொண்டார். கலைச்செல்வன், லக்சுமி என இவரின் வதந்திகளும் காழ்ப்புணர்ச்சிகளும் புகலிடத்தில் தொடர்ந்தன. (இரயாகரனுக்கு உயிரோடு கல்வெட்டு எழுதிய குரூர மனம் கொண்டவர் அல்லவா இவர் ) புகலிடம் அவற்றை இன்னும் மறக்கவில்லை.
மீண்டும் இப்போது ராகவன் என்ற நபரின் துணையோடு மீண்டும் தன் கிரிமினல் தனத்தை தொடங்கிவிட்டார். இவர்கள் இருவரிடமும் தேங்கியிருக்கும் இந்த கிரிமினல் வகைப்பட்ட செயல்பாடுகள் புலிகளிடமிருந்து இவர்கள் கற்றுத் தேர்ந்த அரசியலில் இருந்து உருவாகியதாகும்.
இலங்கையில் தங்கள் அரசியலுக்கு முரண்பாடான அனைவரையும் துரோகிகள் ஆக்கி அவர்கள் மீது வதந்திகளையும் சேறடிப்புக்களையும் கதை கட்டல்களையும் பரப்பி கொலைகளைப் புரிந்த – புரிந்துகொண்டிருக்கின்ற புலிகளின் வரலாற்று பாரம்பரியத்தை ராகவனும் சோபாசக்தியும் புகலிடத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இவர்கள் செய்யும் சேறடிப்புக்களும் பாலியல் மனோவிகார குரூர எழுத்துக்களும் ஒரு மனிதனை உளவியல் ரீதியில் கொலை செய்வதற்கு ஒப்பானதாகும். இது பாசிசத்தின் ஒரு வெளிப்பாடாகும் புலியின் பாசறையில் இருந்து வெளிவந்த இந்த பாசிஸ்ட்டுக்கள், தங்கள் குரூர மனோ விகாரங்களை மிக நுட்பமாக இன்றைய மின் இணைய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அரங்கேற்றுகின்றனர்.
இவ்வாறான கேவலம் மிக்க ராகவன், சோபாசக்தியின் நடவடிக்கைக்கான பின்னணியை ஆராய்வோம்.
லண்டனிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ( TBC ) என்னும் ஒலிபரப்பு நிலையம் சில வருடங்களுக்கு முன் இரண்டு தடவைகள் கொள்ளை அடிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது. இவ் வானொலி தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் அரசியலை வன்முறை சார்ந்த செயல்பாடுகளை கடும் கேள்விக் உள்ளாக்கி விமர்சனம் செய்துவந்ததால் இக் கொள்ளைகள் விடுதலைப் புலிகளால் செய்யப்பட்டதாகவே நம்பப்பட்டது.
இதில் சம்பந்தப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் அடையாளம் காணப்பட்டு வழக்கு தாக்குதல் செய்யப்பட்டது. சில காலங்களில் பின் இக் கொள்ளைகள் தொடர்பாக மேலதிக தகவல்கள் கசியத் தொடங்கின. இக் கொள்ளைகள் விடுதலைப் புலிகள் செய்யவில்லை என்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களோடு வேறு சில நபர்களும் சேர்ந்தே இக் கொள்ளையை செய்தார்கள் என்பதும் வெளிவந்தது. (முழுமையான விபரங்கள் அறிய தேசம் நெற் இணையத்தை அழுத்தவும்) இந்த நபர்கள் யார் யார் என அறிய வந்தபோது நாங்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம். காரணம் அதில் சம்பந்தப்பட்டிருந்த ஒருவர் எங்களது நண்பராக இருந்தார்.
அவர் கீரனாகும், இன்னொருவர் எங்களுக்கு தெரிந்தவாராக இருந்தார். அவர் லணடன் ராகவன் ஆகும், அத்தோடு இவ்விருவரும் லண்டனில் இயங்கும் இலங்கை ஐனநாயக ஒன்றியத்தின் (SLDF)முக்கிய உறுப்பினர்களாகவும் இருந்தார்கள்.
எனவே இதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக எங்களுக்குள் பல வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. சம்பந்தப்பட்டவர்கள் பெயர்கள் வெளிவரும் போது விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்தியது பொய்யாகிவிடும் என்பதும் அவை புலிகளுக்கு சாதகமாகிப்போய்விடும் என்ற அபிப்பிராயங்களும் தெரிவிக்கப்பட்டன. இதனால் தெரிந்த எங்களால் இவை மூடிமறைக்கப்பட்டன. ஆனால் இது எப்படியோ ஆங்கில இணைய தளம் ஒன்றின் ஊடாக வெளிவந்துவிட்டது.
இந்த ஆங்கில அறிக்கை உண்மையானதாயின் ராகவன், கீரன் குழுவிடமிருந்து நியாயத்தையும், பொய்யானதாயின் மறுப்பையுமே நாம் எதிர்பார்த்தோம். இதில் எந்த வித அநீதியும் அயோக்கியத்தனமும் இருப்பதாக நான் கருதவில்லை. கேள்வி கேட்டால் துரோகிகள் என்ற புலிகளின் வன்முறைச் சாக்கடைக்குள் ஜனநாயக முத்தெடுக்க முனைபவர்களுக்கு வேண்டுமானால் இது அயோக்கியத்தனமாகத் தெரியலாம்.
இதன் காரணமாக அந்த ஆங்கிலச் செய்தியை தமிழில் மொழியாக்கம் செய்து இனியொருவில் வெளியிட்டோம். இதுவே ராகவன் என் மீது காழ்ப்புணாச்சி கொள்வதற்கு காரணமாயிற்று.
இவ்விடத்தில் இன்னுமொரு சம்பவத்தை கூறவிரும்புகின்றேன். 14.06.2002ல் பரிசில் லாசப்பல் என்னும் இடத்தில் வைத்து நான்கு இளைஞர்களால் நான் தாக்கப்பட்டேன். அதில் ஒரு இளைஞர் புலிகளின் தீவிர ஆதரவாளர் என்பதால் இத்தாக்குதலை தமிழ் ஈழ விடுதலைப் புலிகளே செய்ததாக நாம் நினைத்தோம். எங்களது கண்டனங்களும் விமர்சனங்களும் புலிகளை நோக்கியே வைக்கப்பட்டன. 23.06;.2002ல் அன்று ‘அடிப்படை மனித உரிமைகள் மீறலுக்கு எதிரான அமைப்பு’பின் பெயரில் ஒரு கண்டன கூட்டத்தை நடாத்தினோம். புலிகளின் பக்கத்தில் இருந்து பலத்த எதிர்ப்பையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டோம். இது நடந்து சில வாரங்களின் பின் சில உண்மைகள் வெளிவந்தன. இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒரு இளைஞரே முன் வந்து இத் தகவலை எங்களுக்கு தந்தார். இந்த இளைஞருக்கு இத்தாக்குதலின் பின்னேதான் என்னைப்பற்றிய முழுவிபரமும் தெரிந்தது.
இவரின் அண்ணன் இந்தியாவில் என் நண்பனாக இருந்தவர். நான் தாக்கப்பட்ட செய்தி இந்தியாவிலிருந்த என் நண்பனுக்கு தெரிந்தபோது அதில் தன் தம்பியும் சம்பந்தப்பட்டிருப்பதாக அறிந்தபோது அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் அவர் தன் தம்பியோடு தொடர்பு கொண்டு விசாரித்தபோது உண்மைகள் வெளிவந்தன. இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டு அந்த நான்கு இளைஞர்களையும் பயன்படுத்தியது சோபாசக்தியும் இன்று பிள்ளையானின் ஆலோசகராக இருக்கும் எம். ஆர் ஸ்ராலின் என்ற ஞானமும் என்பதாகும். இவர்களுக்கு துணையாக சுகனும் தேவதாசும் இருந்துள்ளனர். நான் தாக்கப்பட்டு சில நாட்களின் பின் மீண்டும் என்னையும் நண்பன் கலைச்செல்வனையும் தாக்கும்படி இந்த நால்வரும் அந்த இளைஞர்களை அனுகியுள்ளனர். ஆனால் அவர்கள் மறுத்துவிட்ட விடயமும் அந்த இளைஞர் மூலம் வெளிவந்தது. எனவே இவ்வாறான வன்முறை சார்ந்த செயற்பாடுகள் சோபாசக்தி ராகவன் போன்றோருக்கு புதியவை அல்ல.
சோபாசக்தி, ராகவன் ஆகியோரின் புகலிட வருகைக்கு பின்பே இங்கு மாற்றுத்தளத்தில் இயங்கிக் கொண்டிருந்த புகலிட இலக்கிய அரசியலாளர்களிடம் முரண்பாடுகளும் குழுவாதங்களும் உருவாகத் தொடங்கின. மற்றவர்களின் தனிமனித பலவீனங்களை கண்டறிந்து அதற்கேற்றவாறு ‘தீனிபோடும்’ சோபாசக்தி புலிகளின் பாசறையில் கற்றுத் தேர்ந்த அந்தக்’கலையை’ மிகவும் கட்சிதமாக இங்கும் தமிழ் நாட்டிலும் நடைமுறைப்படுத்துகின்றார்.
தனிநபர் தாக்குதல்கள் எமது நோக்கமல்ல ஆனால் தனிநபர்கள் வன்முறை அரசியலை பிரதிநிதிதுவப் படுத்தி மிரட்டும் போது அவர்களை அம்பலப்படுத்துவது ஜனநாயகத்தில் விருப்புள்ள ஒவ்வொரு மனிதனதும் சமூகக் கடமையாகும்.
புலிகள் வன்முறைத் தர்பார் நடாத்திக்கொண்டிருந்த 80 களில் சிறிலங்கா அரசைக் காரணம் காட்டியே மௌனிகளாக்கப்பட்டோம். மீண்டும் ஜனநாயகத்தின் பேரால் அதே வன்முறை தலைவிரித்தாடும் போது புலிகளைக் காரணம்காட்டி புத்தர்களாக தியானிக்கக் கோருவது நியாயமற்றது.
குறிப்பு: தீராநதியில் வெளிவந்த என்னால் எழுதப்பட்ட ‘அ.மார்க்ஸக்கு திறந்த கடிதத்திற்கு’ திருவாளர் சோபாசக்தி அவர்கள் தன்னுடைய வழமையான பாணியில் எழுதிய புனைவுகளுக்கு என் எதிர்வினை விரைவில் வெளிவர இருக்கிறது. அதில் புகலிட இலக்கிய அரசியல் முரண்பாடுகள் சோபாசக்தியின் வன்முறை நடவடிக்கைகள் பற்றி எழுத இருப்பதால் அவற்றை இங்கு விபரிப்பதை தவிர்த்துள்ளேன்.
அனைவருக்கும் வணக்கம்
வந்தனம்.
இங்கு அசோக் என்கின்ற யோகன் கண்முத்து அவர்களால் முவைக்கப்பட்டவற்றிற்கு சோபா சக்தி. சுகன். தேவதாஸ் (ராகவன். அ.மார்க்சு ஆகியோர் பற்றி எனக்கு கவலை இல்லை) ஆகியோர் பதில்களைத் தருவதற்குக் கடப்பாடுடையவர்கள்.
ரபெல் (எ) வின்சென்ற்
அவர்கள் அரசியல் பலமின்மையால் இயலாவாளிகளாய் இந்த பாவங்களை செய்கிறார்கள்.அவர்களை மன்னித்து அருளுங்கள்.
இதைப்பற்றி என்ன சொல்ல இருக்கிறது. உங்களுக்கு இது புதிதாக இருக்கலாம்.எங்களுக்கு இதெல்லாம் பழசு. அன்ரனிதாசனோடு (சோபாசக்தி) பழகிய எங்களுக்கெல்லோ விளங்கும் இவரைப்பற்றி. நீங்கள் எழுதியுள்ளது நுhற்றுக்கு நுhறு உண்மை. கூட இருந்து குழிபறித்தவர்கள்.இவர்களால்தானே பரிசில் எல்லாம் நாசமாகிப்போனது. இனி கதைத்து என்ன பிரயோசனம். ஆனால் நீங்கள் சொல்வதுபோல் மற்றவர்களுடைய பழவீனத்தை சடார் என தெரிஞ்சு கொண்டு அவர்களை மடக்கி பிடிப்பதற்கு நீங்கள் எல்லாம் அன்ரணிதாசனிடம் பிச்சை வாங்கவேண்டும். பாருங்கோ இது அன்ரணிதாசனை சோபாசக்தியாக்கி ஏதோ பெரிய இலக்கியவாதியாக பில்டப் பண்ண உதவிற்றுதானே. நீங்களம் தமிழக மாச்சைப்போல் யாரையாவது பிடிக்கப்பாருங்கோ.
அசோக் இது வீண்வேலை. சோ+ராகவன் கும்பல் திருந்தப்போவதில்லை. வீணாக காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கவேண்டாம் பிரான்சில் எழுத்தாளர் கலாமோகனை சோ எப்படி வஞ்சம் தீர்த்தார் என்பது தெரியும்தானே.
அசோக்! உங்கள் கருத்தால் அடிக்கும் கட்டுரைக்கு பாராட்டுக்கள்.
சத்தியக்கடதாசி என்றாலே மஞ்சள் பத்திரிகை தான்.தங்கள் தங்கள் தராதரங்களை தங்கள் இணைய தளங்களின் மூலமும் அதற்கேற்றவாறான கட்டுரைகளின் மூலமும் வெளிக்காட்டிவருகின்றனர்.எனவே அசோக் உங்களைப் போன்றோர் இந்த கள்ளர் கூட்டத்திற்கு> இவர்களின் தவறுகளை தொpந்து கொண்டும் சில தேவைகளுக்காக சோபா-ராகவன் கீரன் போன்றோருக்கு ஒத்து ஊதுபவர்களுக்கும் பாடம் புகட்டித்தான் ஆக வேண்டும்.ஏனெனில் இருபக்க தளங்களையும் சீர் தூக்கிப் பார்க்கும் யாருமே உண்மைகளைப் புரிந்து கொள்வார்கள்.சோபா சுகன் போன்றோரின் வக்கிரப்புத்திகளும் காழ்ப்புணர்ச்சிகளும் விரசங்கள் செறிந்த குப்பைத்தனமான எழுத்துக்களும் தான் அவர்கள் தங்களுக்கு தாங்களே வைத்திருக்கும் அளவுகோல் .அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.
தயவு செய்து சோபாவின் “அன்ரனி”என்ற சொந்த முகத்தை அம்பலப்படுத்துங்கள்.ராகவன்-நிர்மலா-அன்ரனி என்ற சோபா ஆகியோர் தாங்கள் இருந்த இடத்தின் குணாம்சங்களிலிருந்து இம்மியளவும் மாறவில்லை.மாறவும்மாட்டார்கள்.புலியின் அத்தனை முகங்களையும் ஒட்டுமொத்தமாக குத்தகையெடுத்து புலியெதிர்ப்பு முகமூடிகளுடன் புலிக்காகவே புலனாய்வு வேலைசெய்கின்றார்களோ என எனக்கு நீண்ட நாட்களாக சந்தேகம்.ஏனெனில் எப்படி எமது ஜனநாயக சக்திகளின் கணக்கை கூட்டி கழித்து பார்த்தாலும் அத்தனை வடிவங்களுக்கும் சீரழிவாய் -மூடுவிழாவாய் -சாவுமணி அடிப்பதாய்-உயிருடன் கல்வெட்டு அடிப்பதிலிருந்து அனோமதேய அஞ்சல்கள் வரை அழுக்கிற்கே அடையாளம் இவர்கள் தானோ?
திருந்தவே மாட்டார்களா?
//எழுத்துக்கும், சொல்லுக்கும், செயலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை பல இலக்கியவாதிகள் ஏற்கனவே நிரூபித்து விட்டார்கள். சிலர் இப்போது நிரூபித்தும் வருகிறார்கள். அதில் சோபா சக்தியும் ஒருவர்.
சோபா சக்தி அவர்களுக்கு,
எல்லா பெண்களையும் செக்ஸ் மேட்டரில் கவுத்து விடலாம் என்று நினைக்காதீர்கள். உங்களுக்கு எல்.டி.டி.ஈ.யை விமர்சிக்கும் யோக்கியதை இல்லை! அரசியல் பேசும் யோக்கியதை இல்லை! பெரியாரியம் பேசும் யோக்கியதை இல்லை! யோக்கியம் இல்லாத தகுதிகளை வைத்துக் கொண்டு யோக்கியவான் போல் இனி பேசுவதை நிறுத்தி விட்டு காமலீலைகளில் ஈடுபட்டு சிறுநாவல்களையும், பெருநாவல்களையும் எழுதித் தள்ளுங்கள்.
வேண்டாம் உங்களுக்குள் இருக்கும் கள்ளத்தனம். “அதிகாரத்தை நோக்கி உண்மைகளை பேசுவோம்” என்று எழுதி மட்டும் வைத்துக் கொள்ளக் கூடாது. அதேபோல் இருக்க முயற்சி செய்யுங்கள். வேறு வழி இல்லை. அசிங்கங்கள் அம்பலத்துக்கு வரவேண்டும். போலி இலக்கியவாதிகளையும், ஈழபிரச்சனைகளை அரசியலாக்கி ஆதாயம் தேடுபவர்களையும், அதை வைத்து பிழப்பு நடத்துபவர்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும்.
தமிழச்சி//
http://tamizachi.com/
//கூட்டுக்கலவிக்காவே அலையும் போது, ஒரு பெண்ணுடன் பலர் படுத்து புரள்வதும், கூட்டாகவே ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவதும் வாழ்வான பின், சக்தி எப்படித் தான் இருக்கும். இப்படி மக்களின் வாழ்வு வேறு, உங்கள் வாழ்வோ வேறு. இலங்கை அரச எடுபிடிகள் எல்லாம் ஒன்றாக கூடினால், ‘கோஷம் போட எங்களுக்குச் சக்தியில்லை.” என்றுதான் கூறமுடியும். ‘பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்” அல்ல, அங்கும் கூட்டுக்கலவியை நடத்த அழைக்கின்றனர்.
இதற்கு தலித் கோசம். அரச கைக்கூலிகளாக குலைக்கும்போது, புலிகளின் படுகொலை அரசியலை ‘அரசியல் நீ.க்கம்” செய்து அதை தலித்தாக திரித்துப் பார்க்கும் பேரினவாத தர்க்கம். புலியின் படுகொலை என்பது, ‘அரசியல் நீக்கம்” செய்யப்பட்ட வெறும் தலித்தியமல்ல. இப்படி திரிப்பதன் மூலம், அது கொண்டுள்ள வலதுசாரிய பாசிச யாழ் மேலாதிக்கத்தை மூடிமறைப்பது தான். புலியின் அரசியல் என்பது, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையுமே அது தனது எதிரியாக இனம் காண்கின்றது. அந்த வகையில் பல ஆயிரம் கொலைகளை செய்துள்ளது. இப்படி அந்த பொது அரசியல் தளத்தை ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து நின்று எதிர்க்க தயாரற்று, ‘அரசியல் நீக்கம்” செய்தபடி பேரினவாத அரசுக்காக குலைப்பதைத்தான் தலித்தியம். அதுதான் பாராளுமன்ற பன்றித்தனத்தை வழிகாட்டுகின்றது…..//
பேரினவாதத்துக்கு விளக்கு பிடிக்கும் அ.மார்க்ஸ் – ஷோபாசக்தி கும்பல்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4345:2008-11-04-12-01-35&catid=74:2008
வணக்கம் இன்றுதான் இந்த தளத்தின்
முகவரியை நண்பர் ஒருவர் கொடுத்தார்.
தரமான தளமாக இருக்குதென.
ஆனால் எனது போதாத காலம் எனது
பங்களிகள் பிரச்சனைதான் இங்கும் போகுது.
அதனால் நான் இதில் பின்னோட்டம் விட
விரும்பவில்ல. வாசிக்கிறேன். நேரம் வரும்போது
எம்தேசத்தில் இவைகளையும் எழுதுவேன்.
பல்லி..
தங்கள் கேவலங்களை வக்கிரங்களை எழுத்தில் அம்பலப்படுத்திய தமிழச்சியையோ ஜெயதேவனையோ ரயாகரனையோ கீரன் ராகவன் சோபாசக்தி ஒன்றும் கேட்கமாட்டார்கள்.ஏனென்றால் அவர்கள் மீது அவ்வளவு பயம்.குறிப்பாக ஜெயதேவன் இங்கிலீசில் எழுதிவிடுவாரே.
குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இந்தக் கும்பலின் நடவடிக்கைகள் கொண்டு வரப்போகும் இழிவுகளை நினைத்து தம்மை விமர்சிப்பவர்கள் பதில் சொல்லுங்கோ என கேட்பவர்கள் மீதுதான் தங்கள் சொறி வேலைகளை காட்டுகிறார்கள்.
அதை விட இவர்களுக்கு ஒத்துப்பாடுபவர்கள் லாபமடைவார்கள். புலிகளை ஆதரித்து எவ்வாறு ஒரு பகுதியினா முன்னிலைக்கு வந்தார்களோ அதேபோல் ராகவன் கோஸ்டியோடு உடனபடுபவர்களுக்கு விரும்பியவை நடக்கும்.
ஆதலால் இவர்களை அம்பலப்படுத்த போராடுவது என்பது கடுமையான பணிதான்.எப்படி புலிகளோடு மல்லுக்கட்ட வேண்டியிருந்ததோ அதைவிட கடுமையானது.
//சம்பந்தப்பட்டவர்கள் பெயர்கள் வெளிவரும் போது விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்தியது பொய்யாகிவிடும் என்பதும் அவை புலிகளுக்கு சாதகமாகிப்போய்விடும் என்ற அபிப்பிராயங்களும் தெரிவிக்கப்பட்டன. இதனால் தெரிந்த எங்களால் இவை மூடிமறைக்கப்பட்டன. ஆனால் இது எப்படியோ ஆங்கில இணைய தளம் ஒன்றின் ஊடாக வெளிவந்துவிட்டது.//
புலிகள் மீது தவறாக குற்றம் சுமத்தியதாக தெரிந்த பின்னரும் அதனை மறைக்க முற்பட்டது எந்த வகையில் நியாமானது?
~மிஸ்ரர் கிளீன்~ என்று தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பும் நண்பர் அசோக் இது முரண்பாடாக இல்லையா?!
ஆக புலிகள் செய்யாத ஒன்றை புலிகள் மீது சுமத்திவிட்டு அது தவறென்று தெரிந்தபின்னரும் அதனை மூடிமறைத்த தங்கள் ஜனநாயக மீட்பு குறித்து வெளிச்சத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றி
புலிகளின் வரலாற்று பாரம்பரியத்தை ராகவனும் சோபாசக்தியும் புகலிடத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.àààààààààààààààà யோ.கண்ணமுத்து , இது தவறான வியாக்கியானமும் கூட. அப்படியென்றால் உங்களை புளொட்டின் அல்லது பிந்திய ஈ.என்.டி.எல்.எவ்வின் வரலாற்றுப்பாரம்பரியத்துடன் ஒப்பிடலாமா? ராகவன் புலிகள் அமைப்பில் 76- 82 வரையும், பின்னர் 83 – 84 வரையுமே இருந்துள்ளார். அதற்கு பிந்திய 24 வருடங்கள் நீண்ட வரலாற்றினை கொண்டது. அவரை ஒருபோதும் இனி புலியாக கொள்ளமுடியாது. கடந்த 24வ்ருடகால சனநாயக வேடங்களை பற்றித்தான் விமர்சிக்கமுடியும். அதேபோல் சோபாசக்தியும் 84- 86க்கும் இடைப்பட்ட காலமிக குறுகிய புலி வரலாற்றைக்கொண்டவர். அவரது புலிகள் தொடர்பான எல்லாநாவல்களும் கூட 99வீதம் வாசிப்பு ரசனைக்காக எழுதப்பட்ட மிகைப்படுத்தல்கள் என்பதை இப்போதைய குணம் குறிகாட்டுதல்லவா? ஆக இவிருவரையும் புலித்தராசில் அளவிடுவதைநிறுத்தவும். இவர்களூக்கு புலிகளுக்கும் இம்மியளவும் தொடர்பில்லை. இவர்கள் புலிகளிலும் மிகமோசமான பேர்வழிகள். இவர்கள் எல்லாம் புலியில் இல்லாமல் இருப்பதே மேல். இருந்திருந்தால் நிலமையை யோசித்துபார்க்கவே பயங்கரமான கறூப்பு கொரில்லாவாக தெரிகிறது. எதுக்கெடுத்தாலும் புலியை முடிச்சுப்போடுவதைநிறுத்தவும்.
மாற்றுக் கருத்தாளாகள் / மறுத்தோடிகள் / கலகக் குரல் போன்ற முற்போக்கான அரசியல் செயல்பாடுகளை கேவலமான விடயமாக்கி இச் சொற்களுக்கான கருத்துகளை அவமானப்படுத்தி இன்று முற்போக்கு செயல்பாட்டாளர்களால் இச் சொற்களை பயன்படுத்த முடியாத அளவுக்கு இந்த சோபாசக்தி வகையறாக்கள் நாசமாக்கி உள்ளனர். இதுவும் சோபாசக்தியின் திருவிளையாடல்களில் திட்டமிட்ட சதியின் ஒன்று. இதன் மூலம் கடந்தகாலங்களில் இச் சொற்களுக்கான அர்த்தங்களோடு செயல்பட்டுக்கொண்டிருந்த சமூக அக்கறையாளர்களை கறைபடுத்த வேண்டுமென்ற சோபாசக்தியின் வழமையான பொறாமை பிடித்த கேவல அரசியலே காரணம். நீங்கள் இவர்களை எப்படி அம்பலப்படுத்தினாலும் இவரின் பின்னால் இவர் தூக்கியெறியும் எலும்புத்துண்டுகளுக்கு அழையும் கூட்டம் சென்னையிலும் பிரான்சிலும் லண்டனிலும் இருக்கும்வரை எதுகும் செய்யமுடியாது. புகலிடத்தில் ஒருவர் உயிர்வாழ்வதற்கு பொருளாதாரம் சார்ந்த உழைப்பு அவசியமாகிறது. ஆனால் எந்தவித உழைப்புமற்ற சோபாசக்தி போன்றவர்களிடம் தாரளமாக புழங்கும் பணத்திற்கான பின்னணி ………… பற்றி யாரும் இதுவரை ஆரயாமல் கேள்விகள் இன்றி இருக்கிறார்கள். இவை ஆராயப்பட்டால் சோபாசக்தியின் அடிக்கடி மலேசியா பயணம் ஏனைய பயணம் தொடர்பான ………… சந்தேகங்களுக்கான விடைகள் கிடைக்கும். முதலில் வெறும் அம்பலப்படுத்தல்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு இதை ஆராய்ந்து அம்பலப்படுத்துங்கள். இதன் பின்னால் ஒழிந்துள்ள ஆபத்துக்களை நீங்கள் இன்னும் அறியாமல் உள்ளீர்கள். விழித்துக்கொள்ளுங்கள்.