எதிர்வரும் சனிக்கிழமை ஜுன் 18ம் திகதிகொழும்பில் நடைபெறவுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட மாநாடு,மேல்மாகாணத்தில் தமது கட்சியின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகளை தீர்மானிக்கும் எனஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மனோ கணேசன்மேலும் கூறியுள்ளதாவது,
மேல்மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள்பெரும்பான்மை கட்சிகளால் வெறும் வாக்கு வங்கிகளாக பயன்படுத்தப்பட்ட காலகட்டத்திலே எமதுகட்சி மேல்மாகாண மக்கள் முன்னணியாக உருவாக்கப்பட்டது. எமது உருவாக்கத்தின் பின்னர்மேல்மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு ஒருஅரசியல் அடையாளம் ஏற்பட்டது. இந்த அரசியல் அடையாளத்தின் மூலமாகவே போர் நடைபெற்றகாலகட்டத்திலே கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிராகநிகழ்த்தப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கவும், போராடவும்,சர்வதேச கவனத்தை திருப்பியதன் மூலம் அவற்றை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரவும் எங்களால்முடிந்தது. இந்நிலையில் ஜனநாயக மக்கள் முன்னணியாக அரசியல் விரிவாக்கம் பெற்ற எமது கட்சிமலையகத்திலும், மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைபெற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் நாம் இன்று ஒரு தேசிய கட்சியாக வளர்ச்சியடைந்துள்ளோம்.
கடந்த தேர்தலின்போது ஏற்பட்ட திட்டமிடல்குளறுபடிகள் காரணமாகவும், எமது கட்சியின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றஉறுப்பினர் கட்சி நிலைப்பாடுகளுக்கு எதிராக அரசாங்கத்துடன் இணைந்துகொண்டதன்காரணமாகவும் ஏற்பட்டுள்ள நிலைமையை சீர் செய்வதற்காக தற்சமயம் கட்சி தலைவர் என்றமுறையில் கொழும்பு மாவட்ட நடவடிக்கைகளை நான் நேரடியாக எனது கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவந்துள்ளேன். எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் கொழும்பு மாவட்டத்தில் நமது கட்சிமுதன் நிலை கட்சியாக போட்டியிடும். கொழும்பை அடுத்துள்ள கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலும்நாம் அதிகூடிய கவனங்களை செலுத்த தொடங்கியுள்ளோம். இந்த பின்னணியில் எதிவரும்சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கொழும்பு மாவட்ட மாநாட்டில் வடகொழும்பு, மத்தியகொழும்பு, கொழும்பு கிழக்கு, கொழும்பு மேற்கு, பொரளை, கொலொன்னாவை,அவிசாவளை, தெகிவளை, இரத்மலானை, மொரட்டுவை ஆகிய தொகுதிகளிலிருந்து பேராளர்கள்கலந்துகொள்வார்கள். எமது கட்சியுடன் பொது உடன்பாட்டுடன் இருக்கின்ற தோழமை கட்சிதலைவர்களும் கலந்துகொள்வார்கள். இம்மாநாட்டிற்கு முழுமையான ஒத்துழைப்பை தரும்படி தலைநகரதமிழ் பேசும் மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.