உயிர்க்கொல்லி நோயான எபோலாவிற்கு எதிராகப் போராடுவதற்காக லைபேரியா மற்றும் செனகல் ஆகிய நாடுகளுக்கு மேலும் 3600 இராணுவத்தினரை அனுப்பி வைக்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஏற்கனவே 500 இராணுவத்தினர் லைபேரியாவில் நிலை கொண்டுள்ளனர். நோய் மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யும் நிலையில் இராணுவத்தை அனுப்பவது நோயைக் குணப்படுத்துவதற்காக அல்ல என்பது தெளிவானது. தெற்காசியாவில் இலங்கையை மையாமாகக் கொண்டும், ஐரோப்பாவில் உக்ரேயிமை ,மையமகக் கொண்டும், மத்திய கிழக்கை ஈராக் மற்றும் சிரியாவைக் குறிவைத்தும் உலகின் இராணுவ மயமாக்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதே வகையில் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் இராணுவ மயமாக்கால் செனகல் மற்றும் லைபீரியாவை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
லைபீரியாவை மையப்படுத்தி மேற்கு ஆபிரிக்க நாடுகளில் அமெரிக்க அரசாங்கம் உயிரியல் யுத்தம் ஒன்றை ஆரம்பித்துள்ளது என்றும் அதனூடாக உலகின் மற்றொரு பகுதி இரணுவ மயமாக்கப்படுகிறது என்றும் பல ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். 1976 ஆம் ஆண்டு அங்கோலா யுத்தத்தில் நுளைந்து கொள்ளும் நோக்குடன் ஸாயிர் நாட்டில் அமெரிக்க உளவுத் துறையான சீ.ஐ.ஏ தலையிட்டது. அவ்வேளையில் அங்கு எபோலா நோய் பரவுவதைக் காரணமாக முன்வைத்தது.
அமெரிக்க ஊடகவியலாளரான வெயின் மட்சன் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் சீ.ஐ.ஏ இன் துணையுடனேயே 1976 ஆம் ஆண்டு எபோலா பரப்பப்பட்டதாகவும் அதே வேளை1980 ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோய் ஸாயிர் அங்கோலா நாடுகளில் பரப்பப்படதாகவும் தெரிவிக்கிறர்.
லைபிரியாவின் சில பகுதிகளில் எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற பிரஞ்சு தன்னார்வ நிறுவனம் மருத்துவப் பணியாற்றுவதற்காக கிராமங்களுக்குச் சென்று வருகிறது. பேர்னாட் குஷ்னேர் என்ற இஸ்ரேலிய ஆதரவு பிரஞ்சு யுத அரசியல் வாதியால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பை மக்கள் சந்தேகமாகப் பார்ப்பதாகவும் அவர்கள் செல்லுமிடங்களுக்கு அமெரிக்க இராணுவத்துடன் செல்வதால் மக்கள் மேலும் அச்சமடைவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன..
யூகோஸ்லாவியா ஆக்கிரமிக்கப்பட்ட போது அங்கு அமெரிக்க அரசின் நியமன நிர்வாகியாகப் பணியாற்றிய பேர்னார் குஷ்னேரின் இந்த அமைப்பு இலங்கையிலும் செயற்பட்டது. அமைப்பைச் சேர்ந்த தடுப்பு மருந்து வழங்குவதற்காகக் கிராமங்களுக்குச் செல்லும் போது மக்கள் அச்சத்தால் கிராமங்களை விட்டு வெளியேறுகின்றனர். சில பகுதிகளில் எல்லைகளற்ற மருத்துவர்கள் தாக்கப்படுகின்றனர்.
இந்த அமைப்பு மக்களின் அச்சத்தால் தமது எபோலா எதிர்ப்பு நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக அறிவித்துள்ளது. தனது இணையத்தில் சீ.ஐ.ஏ இன் இராணுவத் தலையீட்டையும் இந்த அமைப்புக் கண்டித்துள்ளது.
-NN