கடந்த மே 9 ஆம் தேதி சென்னையில் இருந்து கப்பல் மூலம் கனடாவிருக்கு அனுப்பப் பட்ட என்னசெய்யலாம் இதற்காக? எனும் ஈழ இனப்படுகொலைப் புகைப்பட ஆவணத்தின் 1000 பிரதிகளை இலங்கை அரசு கொழும்பு துறைமுகத்தில் சட்ட விரோதமாக பறிமுதல் செய்துள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட இந்தியாவிலும் சரி, இறக்குமதியாகவிருந்த கனடாவிலும் சரி இந்த ஆவணம் தடை செய்யப்பட்ட ஆவணம் அல்ல.
மேலும் இவ்விரு நாடுகளிலும் இந்நூலுக்கான வெளியீட்டு நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. கடந்த சனவரி 9 அன்று இந்தியாவில் சென்னையிலும், கடந்த மார்ச் 13 அன்று கனடாவில் டொரோண்டோ நகரிலும், 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இந்நிகழ்வுகள் நடைபெற்றன.இவ்விரு நாடுகளில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இந்நூல் சென்றடைந்துள்ளது. பிரான்சு தலைநகர் பாரீசில் பெப்.4 ஆம் தேதியில் இந்நூல் ஆர்வலர்களால் நூல் அறிமுக நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஐ. நா. நிபுணர் குழு, டப்ளின் தீர்ப்பாயக்க்குழு உறுப்பினர்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள், பல நாடுகளின் நாடாளுமன்ற பிரதி நிதிகள் அனைவருக்கும் இந்நூல் உலகம் முழுவதும் உள்ள மனித நேய ஆர்வலர்களால் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.60 ஆண்டு கால ஈழ இனப்படுகொலைப் புகைப்படங்களை, 350 க்கும் மேல் உள்ளடக்கியுள்ள இந்த ஆவணம், பார்ப்பவர்களின் மனதில் மனித நேயத்தைதூண்டும் மனித நேய நூலாக இருப்பதால் உலகில் எந்த ஒரு நாட்டிலும் இந்நூல் தடுக்கப்படவில்லை.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இந்நூல் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தினமணி, ஜூனியர் விகடன், ஆனந்த விகடன், குமுதம், இந்தியா டுடே , சண்டே இந்தியன், உயிர்மை, புதிய பார்வை உள்ளிட்ட தமிழகத்தின் 30 க்கும் மேற்பட்ட இதழ்கள் நூலை வரவேற்று தமது கருத்தை பதிவு செய்துள்ளன.தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சியினர், தமிழ்த் திரைத் துறையினர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், காந்தியவாதிகள், அனைத்து மத குருமார்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்நூலை பெரிதும் வரவேற்றுள்ளனர்.
எனவே இந்தியாவிலும் கனடாவிலும் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் வரவேற்பு பெற்றுள்ள இந்நூலை இந்திய சுங்கத்துறை அனுமதியுடன் கனடாவிற்கு செல்லும் வழியில் பறிமுதல் செய்ய இலங்கை சுங்கத் துறையினருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இது இந்திய, கனடா மக்களின் கருத்து சுதந்திர உரிமையை இலங்கை அரசு பறிக்கும் செயலாகும் என தெரிவித்து இலங்கை மீது வழக்கு தொடர வேண்டும் என சட்ட நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, அனைத்து இந்திய ஊடகங்களும், தமிழகத்தின் அனைத்து அரசியல் அமைப்புகளும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இலங்கை அரசின் இச்செயலை கண்டிப்பதோடு, சட்ட விரோதமாக பறிமுதல் செய்த நூலை இலங்கை அரசு விடுவிக்க அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள முன்வர வேண்டும்.
ஜெ.பிரபாகரன்,
நூலாசிரியர்,
என்ன செய்யலாம் இதற்காக?
அ.சரவணகுமார்,
பென்னி குயிக் பதிப்பகம்.
மதுரை.
20 .05 .11
மதுரை.
.
இலங்கை அரசா? அதுதான் தன் இதயத்தை இழந்து இரண்டு வருடங்களாகி விட்டதே? தன் முகத்தை அடையாளப்படுத்தும் எதையும் அது நிராகரிக்கவே செய்யும், அதன் தல்மைப் பொறூப்பில் உள்ள மகிந்தவுக்கும், கோத்தாவுக்கும் பேய் பிடித்து நாளாயிற்றூ இப்போது அதனோடு கூட இருப்போருக்கும் பேய் பீடித்திருப்ப்து தெரிய் வருகிறது.
தன் இனத்தைச் சார்ந்தவன் விடுதலைப்புலிகளைப் பற்றியோ ஈழ அவலத்தைப்பற்றியோ எழுதினால் வெள்ளைவான் அனுப்பி துப்பாக்கிக் குண்டு பரிசளிக்கும் இனவெறி கொலைவெறியர் இந் வெளியீடுகளை கண்டால் விட்டு விடுவார்களா? தமது பெளத்த முக மூடி கிழிந்து விடும் என்ற பயம்
இந்த நூலை ஐரோப்பாவில் வாங்க முடியுமா?
1..நான் இலங்கை அரசு ஆதரவாளனாக அல்லது அரச அதிகாரியாக இருந்தால் நானும் இதைத்தான் செய்திருப்பேன். 2..நீங்கள் புலிகள் செய்த தவறுகளையும் உள்ளடக்கியிருந்தால் (எனக்கு தெரியாது புத்தகத்தின் உள்ளடக்கம் ) உங்கள் புத்தகத்தினை வரவேற்ற அங்கீகரித்த அனைத்தூ அரசீயல் கட்சீயீனர், தமீழ்த்தீரைத்தூறையீனர், மனீத உரீமைச் செயற்பாட்டாளர்கள், எழூத்தாளர்கள், காந்தீயவாதீகள், அனைத்தூ மதகூரூமார்கள் ஆகியோரின் மனீத நேய உண்மைத்தன்மை உண்மை ஆக இருந்தால் அவர்கள் சென்னையில், டொரொன்டோ நகரீலூம் போராட்டம் நடாத்தட்டும் உண்மையான மனிதநேய மக்கள் ஆதரவுடன் . இல்லையேல் உங்கள் புத்தகம் வெளிவர தகுதி அற்றது, மக்கள் சார்பற்றது (புலி சார்பானது மட்டுமே ) என்பதை மனவருத்தத்துடன் தெரிவிக்கிறேன்
main point: If you are fighting for human rights fight against any human rights violations. namely in this case SRI LANKA. otherwise you are not a human rights activist.
. don’t cry here. go and get your money from another HR violator: in this case:your boss : pro LTTE orgs in TORONTO..
prove me wrong by organising a protest in Madras and TRONTO with the support of HR activists.
We have seen so many of you mate.
.முதலில் புத்தகங்கள், இந்தியாவில் இருந்து இலங்கை சென்று அங்கிருந்து கனடா செல்லும் ஒரு கப்பலில் ஏன் அனுப்பப்படவேண்டும் என்ற கேள்விகள் எழுகின்றன. இப் பாதையில் செல்லும் கப்பல் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது ?
ஏப்பிரல் 18ம் திகதியே தாம் புத்தங்களை அக்கினி சுப்பிரமணியம் அவர்களுக்கு தான் கொடுத்துவிட்டதாக எழுத்தாளர் திரு.பிரபாகரன் தெரிவிக்கிறார். மே 18ம் திகதிக்கு அப்புத்தகங்கள் கனடாவை சென்றடையவேண்டும் என்பதே தனது நோக்கமாக இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். ஆனால் மே 17ம் தேதி அப்புத்தகங்களை இலங்கை அரசு கைப்பற்றிவிட்டதாக சொல்லப்படுகிறது என்றால் ஏப்பிரல் 18 முதல் அப்புத்தங்கள் எங்கெ தரித்து நின்றிருக்கிறது என்ற கேள்விகள் எழுகின்றது. மே 17 கொழும்பில் அப் புத்தகங்கள் இருக்குமாயில், அது எவ்வாறு மறு நாள் கனடாவுக்குச் செல்லும்? கனடா செல்ல குறைந்தது 3 வாரங்களாவது பிடிக்கும்மே அதுமட்டும் அல்லாது, குறித்த கப்பலில் பல கண்டேனர்கள் இருந்தபோதும், ஒரு குறிப்பிட்ட கொள்கலனில் தான் இப் புத்தங்கள் இருப்பது இலங்கை அரசுக்கு எவ்வாறு தெரியும் என்ற கேள்விகளும் எழுகின்றது. அதாவது அக் கப்பல் இந்தியாவில் இருந்து இலங்கை சென்றது கப்பல். இலங்கையில் பொருட்கள் ஏற்றப்பட்டால் அதனை சோதனையிடும் வழக்கம் இலங்கை அரசுக்கு உண்டு, ஆனால் வந்த கப்பலில் ஏறி சோதனை நடத்தவேண்டிய காரணம் என்ன ? அப்படியாயின் இலங்கை அரசுக்கு தகவல் கொடுத்தது யார் ? இது புத்தகத்தை அனுப்பியவர்ருக்கே வெளிச்சம். இதற்கு நிச்சயம் அக்கினி சுப்பிரமணியம் பதில் கூறியே ஆகவேண்டும் என்கிறார் எழுத்தாளர் பிரபாகரன் அவர்கள். பதில் சொல்லுவாரா அக்கினி ………some comments .from another web