புதிய திசைகள் அமைப்பு தொடர்ச்சியாக ஏற்பாடுசெய்துவரும் கூட்டத் தொடர்களின் எதிர்வரும் நிகழ்வாக வரும் ஞாயிறு 10.04.2011 அன்று மாலை 4:30 மணிக்கு மேற்கு லண்டனின் “கருத்தும் விவாதமும்” இடம் பெறுகிறது.
புலம்பெயர் அமைப்புகளின் அரசியல் பங்களிப்பும் விமர்சனமும் என்ற தலைப்பில் இடம் பெறும் இந்த உரையாடல் நிகழ்வு சிறீ ஐயப்பன் கோவில் மண்டபத்தில் இடம் பெறும். நிகழ்வின் முகவரி:
36 Masons Avenue,
Harrow,
Middlesex,
HA3 5AR
பிரித்தானியாவில் ஈழப் பிரச்சனை சார்ந்து செயற்படும் சில அமைப்ப்புக்கள் தமது வேலைத்திட்டமும் எதிர்காலமும் குறித்து கருத்துத் தெரிவிக்கின்றன.
நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி : 07960484545
தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்காலம் குறித்துப் பற்றுக்கொண்ட அனைவரும் நட்புடன் அழைக்கப்படுவதாக புதிய திசைகள் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
உரை நிகழ்த்துவோர்:
உலகத் தமிழ்ப் பேரவையின் அரசியல் வேலைத்திட்டம் குறித்த விமர்சனம்:
இதயச்சந்திரன்
நாடுகடந்த தமிழீழத்தின் அரசியல் வேலைத் திட்டம் குறித்து:
தயாபரன் ( வெளிநாட்டு அமைச்சர் – நாடுகடந்த தமிழீழம்)
பிரித்தானிய தமிழர் பேரவையின் அரசியல் வேலைத்திட்டம் குறித்து:
ஸ்கந்ததேவா (பிரித்தானிய தமிழர் பேரவை)
சிங்கள பௌத்த மேலாதிக்கமும் தேசிய அரசியலும்:
சபா நாவலன் (புதிய திசைகள்)
சமகால தேசிய அரசியலில் பரிமாணங்கள்:
மாசில் பாலன் (புதிய திசைகள்)
நிகழ்ச்சியின் இறுதியில் உரையாடலும் விவாதமும் இடம் பெறும்.
உரைகளை எழுத்து வடிவில் இனியொரு வெளியிடும் என நம்பிக்கை கொண்டிருக்கிறோம். விஜய்
யதார்த்தமான உடனடி, குறுகிய மற்றும் நீண்ட கால அரசியல் இலக்கு என்ன ? அக புறத் தடைகள் , ஆதரவு சக்திகள் எவை ? இவற்றை எவ்வாறு கையாள்வது,முகம் கொடுப்பது, எதற்கு முன்னுரிமை கொடுப்பது பற்றித் தெளிவாக விளக்குவார்கள் என்று நம்புவோமாக.
எம் குறைகளை மூடி மறைக்க மட்டும் அக புறத் தடைகளை குறை குற்றம் கூறாமல் மாறாக அந்த தடைகளை வெல்வதற்குரிய ஆக்கபூர்வமான யதார்த்தமான உடனடி, குறுகிய மற்றும் நீண்ட கால அரசியல் வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டால் யாவரும் அந்த வேலைத்திட்டத்தில் இணைய வாய்ப்புகள் நிறையவே உண்டு.
இந்தக் கூட்டத்திலாயினும் சில வேலைத்திட்டங்களை உருவாக்குவார்கள் என நம்புவோம். சும்மா பேசிக் கொண்டு இருக்காமல்..
1. இனப் படுகொலை பற்றிய ஆவணம் தயாரித்தல்
2. மக்களின் அவலத்திற்கு மறுமொழி ஏற்படுத்தல்.
3. பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இணைதல் போன்ற பல விசயங்களைப் பேசலாம்.
கடந்தகால நிகழ்வுக்கு பொறுப்புச் சொல்லாத, அவைகளை சரியென்று கருதுகின்ற இந்த கூட்டத்தால் என்றும் மக்களுக்கு விடிவும் வராது. இதுதான் இதன் பின்னுள்ள உண்மை.
நாடுகடந்த தமிழீழ அரசு மக்களினனால் ஜனநாயக முறையில் உருவாக்கப்பட்ட
ஒரு அரசு என்பதை மற்றைய அமைப்புகள் மதிக்க வேண்டும்.
மீண்டும் ஏகபிரதிநிதித்துவமா?
மக்களினனால் வாக்கெடுப்பு நடத்தி ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்ட அரசு
மக்களினால்? யார் அந்த மக்கள்? தமாஷ் பண்ண வேண்டாம்! அதில் புலி வால்களைத்தவிர வேறு ஒர் ஆளைக் காட்ட முடியுமா? இப்போது அது பல கும்பல்களாகப் பிரிந்து சொத்துக்கு சணடை போடுகிறது.
லண்டனில் உள்ள தமிழ் அமைப்புக்களில் புலிகளின் பின்ணணியைக் கொண்ட
அமைப்புக்கள் என்றும் ஆபத்தானவை. இலங்கையில் புலிகளின் அழிவிற்கும்
ஈழ்த்தமிழரின் இன்றைய நிலைமைக்கும் இவர்களே காரணம். புலிகளை
வளர்த்து சுய நலமடைந்தவ்ர்கள் மக்கள் முன் மனிதராக வாழ்வதற்கு
எடுக்கும்
முயற்சிகளே இத்தகைய கூத்துக்க்கள். இவர்களின் பின்ணணியில் யார் உள்ளார்களோ யாருமறியார். -துரை
Building a house on top of the mud with out thinking what will happen next? Putting your life in danger,without looking the safer end of it.
என்ன செய்யப் போகிறோம் எனப் புலம்பிக் கொண்டிருந்தால் ஒண்டும் செய்ய முடியாது தெருவிலதான் நிற்கோணூம்.அமைச்சர் யாரோ பேசுவதாக போடப்பட்டிருக்கிறது அவர் எந்த நாட்டுக்கு அய்யா அமைச்ச்ர்? மூஞ்சூறூ தான் போக வழியைக் காணோம் விளக்குமாற காவிச்சாம் கதையாக பிரதமரும், அமைச்சர்களூம் இன்னும் அம்புலிமாமாக் கதையிலேயே நின்றூ கொண்டிருக்கிறோம்.இனியாவது மாத்தி யோசிக்க வேண்டாமா?இளப்பாறீய அதிபரும், படித்த பள்ளீக்கூட பழைய வாத்தியாரையும் வைத்துக் கொண்டு பழைய கணக்குகள் வேண்டுமானால் செய்து பார்க்கலாம் ஆனால் புதுக்கணக்கு போட முடியாது.தமிழ்மாறன்.-
லண்டனில் உள்ள ஒரு சில அமைப்புக்கள் ஆபத்தானவை ஈழத்தமிழரின் இன்றைய நிலைமைக்கும் இவர்களே காரணம். புலிகளின் பெயரை பாவித்து சுய நலமடைந்தவர்கள்இவர்களை மக்கள் முன்நிறுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
லண்டனில் தமிழர் அமைப்புக்கள் மட்டுமா ஆபத்தானவை? தமிழரில் சிலரும்தான் ஆபத்தானவர்கள்.தமிழனைத் தமிழனே அழிப்பது என்றால் கோட்டுப் படியெல்ல்லாம் ஏற்க்கூடத் தயங்காதவர்கள்.எங்கட பிரச்சனை என்னவென்றால் குனியிறது,நெளீயிறது எண்ட குரங்கு குணத்தை விட்டு சிங்கம் போல இயல்பாய் இருக்க தவறூவதுதான்.போலியாய நடிப்பதுதான் நமது பிரச்சனை.
ஈழத்தமிழ் மக்கள் பிரச்சனை மட்டும் தான் பேசப்பேகிறார்களா அல்லது மலேசிய இந்திய மொரீஸியஸ் தமழர் பிரிச்சனையையையும் பேசப்போகிறீரகளா? ஏன் என்றால் அவர்களிற்கும் பல பிரச்சனைகள் உள்ளது.
நீங்கள் அனைவரும் வாயை பொத்திகடகொண்டிருந்தாலே பல பிரச்சனைகள் தீரந்து விடும்! உங்களிற்கு வேலையில்லாவிட்டால் லண்டனில் ஓலிம்பிக் விலேஜ் புடுங்கு பாடு சம்பந்தமாக கூட்டம் வைத்தல் ஓரளவு பிரயோசனமாக இருக்கும். அலிபாபாவும் நாற்பது திருடர்கள் இப்பிடி கூடுவது நல்லததல்ல!
புலிகளின் பாரிய அரசியல், இராணுவ தவறுகளுக்கு பின்புலத்தில் அவர்களைக் கண்மூடித்தனமாக ஆதரித்து எவ்வித பொறுப்புக்களும் அற்று வேடிக்கை பார்த்தும், விளம்பரம் செய்தும், பத்திரிகை நடத்தியும், பணம் பண்ணியும், ஊர்வலம் நடத்தியும், புலிகளை எவ்வித விமர்சனமுமின்றி ஆதரித்த புலிகளின் புலம் பெயர் செயல்பாட்டாளர்களும், தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் வரலாற்றின் கேள்விகளுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
புலிகள் தொடங்கிய இடத்திலோ, விட்ட இடத்திலோ தமிழ் மக்களின் அரசியல் இனித் தொடங்காது. இனி புதிய தொடக்கமே.
அந்த ஞாயிற்றின் பின், இவர்கள் என்ன சொன்னார்கள் என்பதின் சாராம்சத்தை, இனியொருவில் வெளியிடுதல் நன்றாகவிருக்கும்
siva
///லண்டனில் உள்ள ஒரு சில அமைப்புக்கள் ஆபத்தானவை ஈழத்தமிழரின் இன்றைய நிலைமைக்கும் இவர்களே காரணம்/// thurai //////அமைப்புக்கள் என்றும் ஆபத்தானவை //// தமிழ்மாறன்///புதுக்கணக்கு போட முடியாது ////// முன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்க்காக ஏதுமே முயற்சிக்க கூடாது என்று இருப்பதும் நல்லதல்ல
என்ன செய்யப்போகிறோம்
எம் குறைகளை மூடி மறைக்க மட்டும் அகத் தடைகளை குறை குற்றம் கூறாமல் மாறாக அந்த தடைகளை ஆதரவு சக்திகளை வெல்வதற்குரிய ஆக்கபூர்வமான யதார்த்தமான உடனடி, குறுகிய மற்றும் நீண்ட கால அரசியல் வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டால் யாவரும் அந்த வேலைத்திட்டத்தில் இணைய வாய்ப்புகள் நிறையவே உண்டு.
siva thurai தமிழ்மாறன்: அகத்
தடைகளை, ஆதரவு சக்திகளை வெல்வதற்குரிய ஆக்கபூர்வமான யதார்த்தமான உங்களது வேலைத் திட்டங்களை தயவு செய்து முன் வையுங்கள்
ஒரேசிந்தனை கெண்டவரகள் ஒன்றிணைவது ஆக்கபூர்வமான திட்டங்கனை முன்னிநிறுத்தி
ஒருத்தருமே எம் இனத்தை முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் விட்டே ஆவன் என்று பந்தயம் கட்டியவர்கள் அல்ல.அவரவர் அறிவுக்கு எட்ட , சிலர் முன் கூட்டியே எச்சரித்தும் கூட நடந்து முடிந்த தவிர்த்து இருக்க கூடிய பேரவலம்.
இதில் புலி ஆதரவலர்கட்கு உரிய அதே அளவு பங்கு எதிர்ப்பாலர்கட்கும் உண்டு.
நீங்கள் எல்லாம் கூட்டம் போட்டுப் பேர் வாங்கும் புலவர்கள். மீனவர் பிரச்சனையிலும் எழுத்தாளர் மாநாட்டிலும் புலிப்பினாமிகளின் நிலைப்பாட்டை முன் தள்ளியவர்கள்.
புதிய திசைகளின் ஆரம்பத்திலேயே அவர்களை எதிர்மறையாகப் பார்ப்பது நல்லதல்ல. எவர் எதனைச் செய்தாலும் அதில் பிழைகண்டுபிடிப்பதே எமக்குத் தொழிலாய் விட்டிது. ஒருவன் மீது எவருமே குற்றம் சொல்லவில்லை என்றால் அவன் எதுவுமே செய்யவில்லை என அர்த்தம். அஹிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடித் தோத்துவிட்டோம். புதிய வழிகள் ஏதாவது இருக்கின்றதா எனப்பலரும் பார்க்கின்றனர். முயற்சி செய்யவிடாமல் முளையிலேயே கிள்ளிவிடலாமா? நல்லவழியாய் இருந்தால் நாமும் உதவி செய்வோம். நாம் நினைப்பது சரியாக இருக்கலாம் அதற்காக மற்றவன் நினைப்பது பிழையென்று அர்த்தமல்லவே
சத்யன் சரியாகச் சொன்னீர்கள். ராஜப்கசவைக் கூண்டில் நிறுத்துவதற்காக இவர்கள் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறன். தமிழ் மக்களைப் பற்றியோ இலங்கையைப் பற்றியோ இவர்களுக்கு கவலைகிடையாது தங்கட புலமையைக் காட்ட புலம்பிக் கொண்டிருப்பார்கள். முன்னே பாடி முள்ளிவாய்க்காலுக்குள் தள்ளியவர்கள்> இன்னும் பாடி எங்கே தள்ளப் போகிறார்களோ? கனவான்களின் அரசியல் எங்களைக் கழுத்தறுக்காமல் விட்டால் சரி.
இலங்கைத் தமிழர் பிரச்சனை அன்னிய ஆயுத வியாபாரிகளுக்கு கிடைத்த இலவச முதலீடு. அதனூடாக லாபம் அடையத் துடிக்கும் தமிழ் தேசத் துரோகிகள். இந்தியாவைப் பகைக்காமல் “சட்டபூர்வமாக” இலங்கை மண்ணில் காலடி பதிக்க எடுக்கும் அமெரிக்க பிரிட்டிஷ் முயற்சிகள். இவர்களுக்குத் துணை போகும் கத்தோலிக்க பாதிரிகள். இது தமிழ் மக்களின் பிரச்சனை அல்ல. தமிழ் மக்களுக்கு அம்ரிக்கப் பணத்தில் விடுதலை எடுக்கப் புறப்பட்டு அது தோற்றுப் போயுள்ளது. அமெரிக்காவும் கூட்டாளிகளும் இப்பொளுது ராஜபக்சவை “நசிக்க ” பகிரங்கமாக முயற்சிக்கிறார்கள். புலிகள் போன்ற கேடு கெட்ட பயங்கரவாதிகளைக் கொன்றது மனித உரிமை மீறலாம். சாத்தான் வேதம் ஓதுகிறது. அமெரிக்காவின் இந்த “அதீத” அக்கறை புலிகளை இயக்கியவர்கள் அமெரிக்கர்கள் என்பதையே புலப்படுத்தி நிற்கிறது.
#நீங்கள் எல்லாம் கூட்டம் போட்டுப் பேர் வாங்கும் புலவர்கள். மீனவர் பிரச்சனையிலும் எழுத்தாளர் மாநாட்டிலும் புலிப்பினாமிகளின் நிலைப்பாட்டை முன் தள்ளியவர்கள்.#
மிகவும் சரியாக சொல்லப்பட்டிருக்கின்றது.
SATHYIAN:குற்றம் கண்டுபிடித்து பரிசு வாங்கும் புலவர்கலாயில்லாமல், உங்கள் செயல் திட்டங்களை முன் வைத்து வழி நடத்துங்கள்.
உங்களை போன்றோரின் அறிவுரை மிக உதவியாக இருக்கும்
என்ன செய்யப்போகிறோம்
என்ன செய்யலாம், எப்படி செய்யலாம். சொல்லுங்கோ ,காலை பிடித்து இழுக்கதையுங்கோ
தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் தலைமைக்கான வெற்றிடம் உள்ளது. இன்றைக்கு உள்ள நிலையில் புதிய திசைகள் இனியொரு ஆகியன ஆற்றும் பணியை வேறு யாருமே செய்வதாக தெரியவில்லை. இதற்கு ஒவ்வொருவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். புதிய வழி முறைகள் எமக்குத் தேவை.
இதில் வந்த பின்னூட்டங்களில் இருந்து ஓன்று மட்டும் காணக்கூடியாயதகயிருக்கிறது நாம் எல்லாரும் ஒரு பொது வேலைத்திட்டத்தில் இணைய எதிர்ராக இருப்பது நாம் மட்டுமே
எப்படி எம்மை நாமே வெல்வது,நாமே எம்மிடம் இருந்து விடுதலை பெற்று எம் இனத்தை பற்றி எப்போ சிந்திக்கப் போறம்?.
இதுவே முதாலவது வேலைத்திட்டம் .EGO is the big issue.
சிவா, எது அழிவு எது ஆக்கபூர்வம் என்று எப்படி நீங்கள் வரையறுக்குறீர்கள்? ஒன்றை நினைவில் வையுங்கள் – மக்கள் இப்போது முன்னைப்போல் இல்லை.
வாசி. மக்கள் இப்போது மெளனமாக இருப்பதற்கு புலத்திலிருக்கும் அமைப்புக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் புலிகளை
வளர்த்து சுய நலமடைந்தவர்கள் தான் காரணம்
இன்றைக்கு உள்ள நிலையில் தமிழருக்காக அரசியல் பலம் தேவை என்பதை யாரும் மறுக்கமுடியாது. அதற்கு நாங்கள் நாடுகடந்த தமிழீழ அரசை பலப்படுத்த வேண்டும் இதைவிட வேறு எநதத்தேர்வும் இல்லை.
தமிழருக்கு ஏன் அரசியல் பலம் தேவை. தமிழர்கள் தேசிய இனஒடுக்குமுறையை எதிர்கொள்வதற்காகவா? அன்றேல் ஆண்டபரம்பரை என்பதற்காகவா? உங்களைப்போன்ற ஆண்டைகளின் அதிகாரவெறிக்காக சாமானியனை புதைகுழிக்குள் அனுப்புவதில் என்ன நியாயம். அரசியல்பலம், இராணுவசமநிலை எல்லாம் புளித்துப்போன வார்த்தைகள். நா.த.அரசு புலிகளின் தொடர்ச்சிதானே. இன்னொரு வார்த்தையில் சொன்னால் தலைவர் கொண்டுவந்துவிட்டிருக்கின்ற சிறந்தபுள்ளியிலிருந்து முன்னேறிச்செல்லுதல்…….
தமிழருக்கு அரசியல் பலம் தேவை என்பவர்கள் எதற்காக என்று சொல்லக் காணோம். தமிழரின் முதுகில் சவாரி விடவும் வெள்ளை எசமானர்களுக்கு பல “தாரை வார்ப்புக்கள்” செய்யவும் அலைகிறார்கள். இலங்கையிலும் சம்பந்தன் கும்பல் அதனையே செய்கிறது. தமிழருக்கு “சனி” பார்வை நிரந்தரமாக உள்ளதாகவே படுகிறது!
தமிழராகிய நமக்குள்ளே நாம் யார் எனும் அடையாளம் முதலில் நிறூவப்பட வேண்டும்.நம் மரபுகளீல் யாரும் குறூக்கிடாது இருக்க வேண்டும்.கடலில் கட்டிய மணல் வீடு பொன்றூ இல்லாது கொங்றீட் பாலம் எழுப்பப்பட வேண்டும்.என்ன நடந்தாலும் தமிழராக இணந்து இருக்க வேண்டும்.
த.மா ! ” நம் மரபுகளில் யாரும் குறுக்கிடாது இருக்கவேண்டும்” இந்த பொன்மொழியின் அர்த்தம் என்ன? அவரவருக்கு விதிக்கப்பட்ட ஒழுங்குமுறைக்குள் வாழநிர்ப்பந்திக்கின்ற இந்துமரபையா குறிப்பிடுகின்றீர்கள். அப்படியில்லையென்றால் நீங்கள் குறிப்பிடுகின்ற மரபு எது. முடியல…..(தாங்க)….
சைவநெறீ ந்ம் வாழ்க்கை நெறீ எனும் சைவ்ம் நம்து அடையாளம்.நான் இங் கு மரபு எனக் குறீப்பிடுவது காலங்காலமாய் இருக்கும் நம் வாழ்வியல்.புலிகள் காலத்தில் பல் தலையீடுகள் நம் மரபை நோக்கி இருந்தன இனியும் அவை தொடரக் கூடாது.நாம் தமிழராய் இருப்போம் தமிழ் வழி நடப்போம்.நம் உரிமைக்கு குரல் கொடுப்போம்.
முதலில் மனிதராக உணர்வோம். என்று சொல்லப்படுவதை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் த.மா.
மனிதராக உணர்வோம் மகத்துவமான சிந்தனை.நமக்குள் இந்த சிந்தனையை விதைப்போம்.வாழ்க மானுடம் வெலக் பூமி.
தமிழனுக்கான தீர்வை விட தமக்கான அங்கீகாரமே தமிழனுக்கு முதல் தேவை.அதற்காக எந்தப்படியிலும் தமிழன் ஏறத்தயார்.
அடுத்தகட்டம் இலங்கை அரசுடனா? அல்லது இந்திய அரசுடனா?
ஏதோ நாலு பேர் பிழைத்துபோகட்டும் அதற்கு ஏன் குறுக்காக நிற்பான்.
அதெல்லாம் சரி. இந்த ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி உண்டா?
அய்யனுக்கும் அப்பனுக்கும பிறந்த பிள்ளையின் கோவிலுக்கு,பெண்களுக்கும் அனுமதியுண்டு.பிழைப்பை கெடுக்கிற கேள்விகள் கேட்கக் கூடாது.நம்ம காசில கட்டின கல்லுக்கு,எங்கட எல்லாற்ர அபிஷேகமும் வேணும்.
நல்லது.இதே குரலை அய்யர் சாதி மட்டும்தான் சுவாமிக்கு பூஜை செய்ய வேண்டுமா என்பதிலும் நாம் எழுப்ப வேண்டும்.
தமிழ் மக்கள் படும் அவஸ்தைக்கு காரணம் என்ன ? இந்தியாவை நம்பி கழுத்தருக்கப்பட்டதே ! இபோதும் இந்தியாவை நம்பும் பேர்வழிகள் முன்னைநாள் இந்திய அடி வருடி இயக்கங்களிலிருந்து ,பின் இன்றுவரை சுய விமர்சனம் செய்யாத பகட்டுரைஆசிரியர்கள் தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றும் அபாயம் நேர்ந்துள்ளது.நேற்று வரை ” தலைவன் இருக்கிறான் ! ” என்று புலிக்கு வாழ் பிடித்தவர்கள் இன்று புலிகளை எதிர்ப்பதாக கூறி மாற்று திசை பற்றி ஆராயப் போகிரரர்கலாம்.
எங்கு போகுமோ இந்த நாடகம்.
எல்லா எற்பாடுகளூம் முடிந்து ஜெமினியின் காரில் மன்னனோடு நான் ஏறீய கார் நோர்த் கரோ தூரம் என்றூ அல்பேர்ட்டனில் கானா கபேயில் நிற்கிறது.தமிழனது உரிமையைக் கேட் கப் போய் ஆமிக்காரன் பட்ம் எடுத்தால் ஊருக்கு போகேலாது மச்சி என ஜெமினி சொல்ல அதை மன்னன் ஆமோதிக்க இடியப்பம் சொதி சம்பல் உருளக்கிழங்கு குழம்பு வருகிறது.இதுதான் நமது பிரச்சனை.நம் பிரச்சனைகளூக்கு நாம் தரும் முக்கியத்துவத்தை நம் இனத்துக்காக தருவதில்லை, நமக்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்தால் மட்டுமே ஊரை அழைத்து நம் பெயரைக் காட்டுவோம்.நமக்கு இந்தியா எதிரி கிடையாது நாம் அவர்கள எதிரியாக்கிக் கொண்டோம்.நாமே நமக்கு எதிரி.
இந்தியாவைநம்பி என்ன மோசம் போச்சுது. ? இந்தியாவை நம்பாதபடியால்த்தான் எல்லாமே போய் விட்டது என்பது புரியவில்லையா?
இலங்கையில் தமிழ் இனத்தின் பொது எதிரிகள் யார் யார்?இந்தியாவோ, இலங்கையோ, மேற்குலகோ தமிழ் இனத்திற்கோ ஏன் சிங்கள இன மக்களிற்கோ ஆதரவானவர்கள் அல்ல.
எம்மிடம் இருந்து உருவான , எம்மால் உருவாக்கப்பட,
தமிழ் அரசியல், ஆயுத போராட்டத் தலைமைகள் விட்ட தவறிட்காக எம் பொது எதிரிகளை நியாயப் படுத்துவது ஆரோக்கியமான வாதம் அல்ல எம் தவறுகளை திருத்த மறுப்பதும், தவறுகளை மூடி மறைக்க புலிகள் மீதோ, எம் எதிரி மீதோ மட்டும் பழி போடுவதோ அன்றி புலிக்கு எதிரான எமது எதிரிகளை ஆதரிப்பதோ அல்லது புலி போன திசையில் தான் போவோம் என்பதோ எந்த விதத்திலும் தமிழ் இனத்திற்கு விடிவை தராது
அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும். இங்கே புலம்பும் தமிழர்கள் புலம்பினாலும் ஒரு இணக்கப்பாட்டை அவர்களே பெற்றாகவேண்டும், ஒதுங்கிவிட முடியாது. நிச்சயம் தமிழர் தங்களைத் தாங்களே ஆட்சிபுரியும் காலம் மறுபடி வந்தே தீரும். இயற்கையானது இருளையும் ஒளியையும் சுழற்சியாகவே கொண்டுள்ளது.
என்ன சேர, சோழ, பாண்டிய யுகம் பற்றி பேசுகிறீர்களா?
கன்றாவி பிடித்த கருத்து கந்தசாமிகளால் கதைகள் மட்டுமே அளக்க முடியும். புதிய திசைகளாயினும் சரி பழைய விசைகளாயினும் சரி ஏட்டுப்பேச்சுடனும் கூட்ட கூச்சலுடன் அவர்களின் ஆட்டம் அடங்கிப் போகும். செயல் மனிதர்கள் எல்லாம் செத்துப்போய்விடவில்லை நண்பர்களே, அவர்கள் இன்னும் செயலில் இருக்கின்றார்கள். காகங்கள் கத்தினால்தான் குயில்களின் குரலின் இனிமை என்னவென்பது தெரியும். வாழ்க காக்கைகளே கத்தித்தொலையுங்கள்.
“CIAயின் சிலந்தி வலைக்குள் நாடு கடந்த அரசு!”.
“GTF பேசிய தமிழ் தேசியம் மக்களை காட்டிக் கொடுக்கிறது!”.
“மக்களின் எதிரிகளோடு ஒரே வரிசையில் அமர்ந்திருக்கம் BTF போன்றவற்றால் மக்களிற்காக குரல் கொடுப்பவர்களை எப்படி வென்றெடுக்க முடியும்!.”
இப்ப நான் சொன்னதெல்லாம், இந்தக் கூட்டம் நடத்துகிற அமைப்பு சார்ந்த இணையத் தளத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தலைப்புக்கள். அப்படியென்றால் நீங்கள் எப்படி இந்த மக்கள் விரோத சக்திகளோடை சேர்ந்து கூட்டம் நடத்தலாம். அதிலேயும் இவங்களோடை சேர்ந்து என்ன புடுங்கப் போகிறோம் என்று, ஒரு வேலைத் திட்டம் வேறை போடப்போகிறீர்கள். இவங்களோடை எல்லாம் கூட்டுச் சேருகிற நீங்கள், இலங்கையிலே தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்தப் போகிறோம் என்ற உடனேயே, எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் “ஆடு அடிக்க முதல் புடுக்கு எனக்குத் தான்” எண்ட மாதிரி, இது அரச ஆதரவு மாநாடு எண்டு அறிக்கை விட்டீர்கள். அந்த மாநாட்டிலே இலங்கையின் கொலைகார அரசு சார்பில் எவருமே கலந்து கொள்ளவில்லை. காசு கொடுத்தவர்களின் கணக்கு வழக்குகளையும் வெளியிட்டிருக்கிறார்கள். மாநாடு முடிந்த பிறகு நீங்கள் ஏன் வாயே திறக்கவில்லை. இந்த மக்கள் விரோதிகளின் கோவணம் எவ்வளவு ஊத்தையாக இருந்தாலும் பரவாயில்லை, இவங்கள் ரொம்ப நல்லவங்கள் எண்டது தான் உங்களின் கொள்கையோ என்று அந்தப் பொடியன் கேட்டான்.
இன்னும் விடியவில்லை உங்களூக்கு இழுத்து மூடி படுத்துக் கொண்டிருங்கள்.இனிய காலையின் இழப்பு உங்களூகுத்தான் அரிச்சந்திரன்.
தமிழீழமும் 70களில் லண்டனிலிருந்துதான் யாழ்ப்பாணத்துக்கு வந்திறங்கியது. இனியும் எதனைத் தயாரித்து இலங்கைக்கு அனுப்பி அங்குள்ள தமிழர்களின் உயிர்களையும், சேர்த்து வைத்த “பொன்னையும்” வெள்ளையர்களுக்கு தானம் பண்ண திட்டம் வகுக்கிறீர்கள்?
எங்கள் உடம்பில் தமிழ் இரத்தமே ஓடுகிறது என்பதை உணரவைக்கும்படியான பதிவுகளை தரும் சிலரது எழுத்துக்கள் மனதிற்கு ஆறுதலை தருகிறது.