மார்க்சியம் சோசலிசம் கம்யூனிசம் போன்றவற்றிற்கு எதிரான போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக அமரிக்க அரசும், பிரித்தானிய அரசும் அவற்றின் தலைமையிலான மேற்கு ஏகபோக அரசுகளும் பில்லியன் கணக்கில் பணம் செலவிட்டுள்ளன. உண்மையைத் தலைகீழாகப் புரட்டி பெரும்பான்மை மக்களின் ஜனநாயகத்தை வெற்றுச் சர்வாதிகாரம் என பிரச்சாரம் செய்தன.
பின்நவீனத்துவம், பின் அமைப்பியல், சார்பியல் போன்ற திரிபுபடுத்தப்பட்ட தத்துவங்களை மக்கள் மத்தியில் விதைத்தன. சி.ஐ.ஏ, எம்.ஐ 5 போன்ற பலம் பொருந்திய உளவு நிறுவனங்கள் தனி நபர்களை விலைக்கு வாங்கிக்கொண்டு உண்மைகளை மறைத்து மக்கள் மத்தியில் கம்யூனிசம் என்பது வெறுக்கத்தக்க இராணுவ சர்வாதிகாரம் என்று பொதுப்புத்தியை உருவாக்கின. விலங்குப் பண்ணை போன்ற கம்யூனிச எதிர்ப்புப் புனைவுகள் மேற்கு நாடுகளில் பாடப்புத்தகங்களில் புகுத்தப்பட்டன.
வின்ஸ்டன் சேர்ச்சில் காலத்தில் கம்யூனிச நாடுகள் மீது அழிவு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. வியட்னாம் போன்ற நாடுகளில் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.
தகவல் தொழில் நுட்பம் வழங்கிய வாய்ப்புக்களால், ஜூலியன் அசாஞ்ஜ், எட்வார்ட் ஸ்னோடென் போன்றோர் வெளிப்படுத்திய தகவல்கள் இந்த நாடுகள் எவ்வளவு கீழ்த்தரமான பொய்களை மக்களைத் திசைதிருப்பும் வகையில் கட்டவிழ்த்துவிட்டன என்பது உணரவைத்தன.
இன்று முதலாளித்துவம் சந்தித்துள்ள தவிர்க்க முடியாத நெருக்கடியை அமைப்பியல் நெருக்கடி என்கிறார்கள். ஒரு பக்கத்தில் பல்தேசியப் பெரு நிறுவனங்கள் தமது இலாபத்தை நாளாந்தம் அதிகரிக்க வேண்டிய தேவையிலுள்ளன, மறுபுறத்தில் மக்களிடமிருந்து உழைப்பையும் வளங்களையும் தட்டிப் பறித்துக்கொள்வதனூடாகவே இது சாத்தியமாகின்றது. மக்கள் நாளந்த வாழ்க்கையையே நகர்த்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இவை அனைத்தையும் அடையாளம் கண்டுகொள்ள ஆரம்பித்திருக்கும் ஐரோப்பிய அமரிக்க உழைக்கும் வர்க்கம் கம்யூனிசத்திற்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களையும் கண்டுகொள்ள ஆரம்பித்திருக்கின்றது. மத்தியதரவர்க்கம், தொழிலாளர்கள், அரச சேவையாளர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், விசாயிகள் என்ற பெரும்பான்மை மக்கள் கூட்டம் இன்று முதலாளித்துவ உற்பத்தி முறை தமது சந்ததியை அழித்துவிடும் என்று அச்சம் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இந்த விழிப்புணர்வின் ஒரு பகுதியாக கம்யூனிசம் குறித்த நூற்றாண்டுகால பிரச்சாரத்தை அப்பட்டமான பொய் என மக்கள் உணர்ந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.
காலாவதியாகிப் போன மதங்களும் அவை இன்னும் ஏற்படுத்தியிருக்கும் மாயைகளும் சரிந்துவிழ ஆரம்பித்திருக்கின்றன.
இவ்வாறு சரிந்து விழும் மதங்களைத் தூக்கி நிறுத்துவதற்குக்கூட மார்கிசியம் என்ற தூணைப் துணைக்கிழுப்பது தவிர்க்கமுடியாததாகிவிட்டது. ஏனென்றால் மக்கள் மார்க்சியத்தை தமது விடிவிற்கான தத்துவமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். மார்க்சியத்தை நிராகரித்து மக்கள் சுவாசிக்கக்கூட முடியாது என்ற நிலை உருவாகிவருகிறது.
– 2008 ஆம் ஆண்டில் ஜேர்மனியில் துறைசார் கல்வி நூல்களின் வெளியீட்டாளர்களுக்கு அதிகமாக விற்பனையான நூல் கால்மார்க்சின் மூலதனம்.
– 43 வீதமான கிழக்கு ஜேர்மனியர்கள் முதலாளித்துவத்தை வெறுக்கிறார்கள், மீண்டும் சோசலிசம் வேண்டும் என்கிறார்கள்.
– 52 வீதமான கிழக்கு ஜேர்மனியர்கள் முதலாளித்துவத்தின் சுதந்திர சந்தைமுறை பொருத்தமற்றது என்கிறார்கள்.
– முன்னைநாள் பிரஞ்சுப் ஜனாதிபதியின் மனைவி விரும்பிப் படிக்கும் நூல் மூலதனம் என்று பிரஞ்சுப் ஜனாதிபதி கூறினார்.
– துறைசார் கல்வி தயார்செய்த பொருளியலாளர்கள் கார்ல்மார்க்ஸ் சொன்னது சரி என்கிறார்கள்.
இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தது போன்று பாப்பரசர் பிரான்சிஸ் தனது முதலாவது எழுத்துருவான அறிக்கையில் முதலாளித்துவம் மக்களுக்கானதல்ல என்று கூறியது உலகம் முழுவதும் ‘சர்ச்சையைக்’ கிளப்பிவிட்டது.
மக்களின் தேவைகளை தான் வாழும் சமூகக்கட்டமைப்பு பூர்த்திசெய்யவில்லை என்று ஒப்புக்கொள்வதே தனது மதத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அவருக்கு ஒரெ வழிமுறையாகத் தெரிந்திருந்தது.
வெறித்தனமான நுகர்வு மனோநிலை, முதலாளித்துவத்தின் கொடிய சுரண்டல், சமத்துவமின்மை போன்றவற்றைக் குறிப்பிடும் பாப்பரசர், மத்தத் தலைவர் ஒருவர் இதுவரை வெளியிடாத சக்திவாய்ந்த வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தியுள்ளார்.
பாப்பரசரின் அறிக்கையிலிருந்து சில பகுதிகள்:
“எமது காலத்தின் பெரும்பான்மையானவர்கள் கொடிய விளைவுக்ளை எதிர்நோக்கியவாறே ஏதோ வாழ்கிறோம் என்று அன்றைய நாளுக்காக மட்டுமே வாழ்கின்றனர்”
“சம்த்துவமின்மையையும் சமூகத்திலிருந்து அன்னியமானவர்களையும் உருவாக்கும் இந்தப் பொருளாதாரத்தைத் தூக்கியெறியவேண்டும். அவ்வாறான பொருளாதாரம் கொலைசெய்கிறது”
“சுந்திர முதலாளித்துவ சந்தை பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி நீதியையும் சமத்துவத்தையும் ஏற்படுத்தும் என்று உருகி வழிந்துகொண்டிருக்கும் தத்துவங்களை இன்னும் பாதுக்காக்கும் சிலரும் எம்மத்தியில் உள்ளனர். இதுவரை அனுபவரீதியாக இதுவரை உறுதிப்படுத்தப்படாத இக்கருத்து, பொருளாதார வலிமை படைத்தவர்கள் மீதும், நடைமுறையிலுள்ள அச்சம் தரும் பொருளாதார அமைப்பின் மீது அப்பாவித் தனமாகவும் தாந்தோன்றித் தனமாகவும் நம்பிக்கை வைக்கச் சொல்கிறது.”
“சிறுபான்மையனவர்களின் வருவாய் அதிகரித்துச் செல்ல, செழிப்பையும் செல்வத்தையும் அனுபவிக்க முடியாத பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மையினருக்குமான இடைவெளி அதிகரித்துச் செல்கிறது.”
இதுபோன்று பல கருத்துக்களைக்கொண்ட பாப்பரசரின் முதலாவது குறிக்கத்தக்க அறிக்கை பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. குறிப்பாக அமரிக்க மேடுக்குடிப் ஊடகவியலாளர்கள், பொருளியலாளர்கள் போன்றோர் பாப்பரசர் மார்க்சிஸ்ட் என்றும் கம்யூனிஸ்ட் என்றும் ‘குற்றம் சுமத்த ஆரம்பித்தனர்.
“பாப்பரசரின் வாயிலிருந்து வெளிவந்தது தூய மார்க்சியம்” என்று அமரிக்காவின் ‘புகழ்பெற்ற’ அரசியல் ஆய்வாளர் கிலென் லீ பேக் கிளர்ந்தெழுந்தார்.
இதற்கு இத்தாலிய நாழிதழான ‘லா சம்பாவில்’ பதிலளித்த பாப்பரசர், ‘நான் மார்க்சிஸ்ட் அல்ல ஆனால் எனது வாழ்நாளில் பல மார்க்சிஸ்டுக்களைச் சந்தித்துள்ளேன், அவர்கள் நல்ல மனிதர்கள், அதனால் எனக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு நான் வருத்தப்ப்படப் போவதில்லை’ எனப் பதிலளித்தார்.
பாப்பரசரின் நோக்கம் எது என்பதற்கு அப்பால் இன்று உலகம் முழுவதுமுள்ள மக்களின் மனோ நிலையயே அவர் பிரதிபலித்துள்ளார். குறிப்பாக ஐரோப்பாவில் வாழும் முன்னேறிய அனுபவமுள்ள உழைக்கும் மக்களிலிருந்து அவர் அன்னியமாக விரும்பவில்லை எனத் தெரிகிறது.
மனிதநேயமும், மக்கள் பற்றும், ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வும் கொண்ட மக்கள் கூட்டம் நாளாந்தம் அதிகரித்திக்கொண்டிருக்க ஒடுக்குபவர்களை நம்பக்கோரும் அரசியல் தலைமை மட்டுமே தமிழ்ப்பேசும் மக்களை இன்னும் அழித்துக்கொண்டிருக்கிறது.
பாப்பரசரின் அறிக்கையின் முழுவடிவம்:
http://www.vatican.va/holy_father/francesco/apost_exhortations/documents/papa-francesco_esortazione-ap_20131124_evangelii-gaudium_en.html#No_to_an_economy_of_exclusion
ஒரு பாப்பாண்டவா் கம்யுனிஸத்தை பூமியிலிருந்து துடைத்தெறிய அன்றய அமெரிக்க யனாதிபதியான றீகனுடன் இணைந்து செயல்பட்டார் இப்போதுள்ளவா் கம்யூனிஸம் பேசுகிறார் என்ன விந்தையடா இந்த உலகம்.
கம்யூனிஸத்திற்கு எதிராக தமிழர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் டேவிட் நி ராஜ் போன்ற பிர்ப்போக்கு புலி வெங்காய ஆய்வாளர்கள் குருவானவர்களுக்கு எதிராக அறிக்கை விட்டாலும் ஆச்சரிய படுவார்க்
தர்க்கில்லை.