ஆஸ்ட்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய ‘செய்தியலைகள்’ நிகழ்ச்சிக்கு செ.பத்மநாதன் வழங்கிய நேர்காணலின் விபரத்தை புதினம் இணையதளம் வெளியிட்டுள்ளது
ஐக்கிய நாடுகள் சபையுடனும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடனும் நாங்கள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம். எமது மக்களுக்குரிய உணவும் மருந்துப் பொருட்களும் சென்றடைய வேண்டும். இந்திய அரசாங்கத்துடனும் இது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறோம்.என்று குறிப்பிட்ட செ.பத்மநாதன் இலங்கை அரசை ஆதரிக்கும் நாடுகள் பற்றிக்குறிப்பிடும் போது,
“அனைத்துலக நாடுகள் சிறிலங்கா அரசுக்கு ஓரளவுக்கு அழுத்தமும் கொடுத்திருக்கின்றன. எனினும் சீனா, ரஸ்யா, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆசியுடன் இந்த நாடகத்தை சிறிலங்கா அரசாங்கம் ஆடி முடித்திருக்கிறது.”
எனத் தெரிவித்த அவர், தன்னை இந்திய அரச சார்பானவர் எனக் குறிப்பிடுவது துரோகம் எனறார்.
“உங்களைப் பற்றிய வதந்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்தியாவின ‘றோ’ உங்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கான உங்களது பதில் என்ன? ”
“எமது தேசியத் தலைவருடன் நான் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, அவருடன் ஆத்ம ரீதியாக கலந்துகொண்டவன்.
இதனை எமது போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் அறிந்துகொள்வர்.
எமக்கு இடையில் எந்தவித அப்பழுக்கற்ற நட்பை பேணிக்கொண்டோம்.
இது சாதாரண குடும்ப – மனித – வாழ்க்கைக்கு சற்று மேலான உறவு.
அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக என்னை நியமித்த அந்த தலைவருக்கு செய்யப்படும் துரோகமாகத்தான் நான் இதனை எண்ணுகின்றேன். “
எல்லாம் முடிந்துவிட்டது:
இனிமேல் என்ன?
யார்,யாரை நம்புவது?
தமிழ் இனம் இனிமேல் அடிமை வர்க்கம்!
வஞ்சகத்தால் வீழ்த்த்ப்பட்ட உரிமைப் போரின் பின்னர், இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுவது இயல்பானதே. குழப்பம் தீரச் சிலகாலம் பிடிக்கும். அதற்கிடையில் ஈழத்தில் சிறுபான்மை என்றொரு இனம் இருக்காது. ( உபயம்- ராஜபக்ஷே)
i feel it