புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியிலிருந்து பிளவுண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய கேந்திரம் (Ceylon Communist Unity Centre (CCUC)) என்ற கட்சியை ஆரம்பித்துள்ள தோழர் தம்பையா தனது கருத்துக்களை முன்வைக்கிறார். புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், தேசிய மற்றும் சர்வதேசிய அமைப்பாளருமான தோழர் தம்பையா வெகுஜனப் போராட்டங்கள் சுயநிர்ணய உரிமை போன்ற பல விடயங்கள் குறித்து உரையாடுகின்றார். இரண்டு பகுதிகளாகப் பதியப்படும் தோழர் தம்பையாவின் உரையாடலின் முதலாவது பகுதி கீழே:
கேள்வி: புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர், சர்வதேச அமைப்பாளர் போன்ற பிரதான பதவிகளை வகித்த நீங்கள் அக்கட்சியில் இருந்து விலகியமைக்கான அடிப்படைக்காரணங்கள் என்ன?
பதில்: இந்த கேள்விக்கான பதிலின் ஒரு பகுதி எனது சுய விமர்சனமாகவும் இருக்கலாம். புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனினிஸ கட்சியில் நான் முப்பத்து நான்கு(34)_வருடங்கள் இருந்துள்ளேன். எங்கோ ஒரு மூலையில் இல்லை முன்னணியில் இருந்தேன். ஏற்கனவே அக்கட்சியிலிருந்து பல பேர் நிசப்தமாகி கள்ளத்தனமாக, உள்நோக்கங்களுக்காக, முதலாளித்துவ, திரிப்புவாத நோக்கங்களுக்காக சீரழிந்து விலகியுள்ளனர். அவர்கள் அக்கட்சிக்கு பாதிப்புகளை திட்டமிட்டு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
எனது விலகல் அப்படியானதொன்றல்ல. நான் உட்கட்சி போராட்டங்களை நீண்ட காலங்களாக நடத்திவிட்டு இனியும் இருக்க முடியாது என்ற நிலையில் பகிரங்க காரணங்களை முன்வைத்துவிட்டே வெளியேறியுள்ளேன்.
எனது விலகளுக்கான காரணம் பெரும்பாலும் ஸ்தாபன கோட்பாடு, நடைமுறை தொடர்பானவை. அக்கட்சி புரட்சிகர எழுத்துக்களை கொண்டிருந்த போதும் புரட்சிகர கட்சியாக இல்லை.
அதன் நடவடிக்கை இன்னொரு ஜனரஞ்சக செயற்பாடுகளை மட்டுமே முன்னுக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது. அதை என்னால் தனியே மாற்ற முடியவில்லை. ஒரு அசைவையும் ஏற்படுத்தாத அர்ப்பணிப்புக்கள், உழைப்பு, எளிமையான வாழ்க்கை, தியாகங்கள் போன்ற வெறும் சொல்லாடல்களில் எனக்கு உடன்பாடில்லை.
அவற்றை உச்சரித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் முதுகு சொரிந்து கொண்டிருப்பதால் புரட்சிகர கட்சியை கட்ட முடியாது. மாக்ஸியம் என்பது ஒரு முன்னேறிய வாழ்க்கை முறை. அதில் ‘தியாகம்’ செய்வதாக கூறுவதற்கு எதுவுமில்லை. முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வாழ்க்கையை கைவிடுவதே மாக்ஸிய வாழ்க்கை முறை. அப்படி கைவிடுவது, கையுதிர்ப்பது தியாகமல்ல. முதலாளித்துவ வாழ்க்கை முறைக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியடையும் நிலையே அதுவாகும்.
சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, அசைவுகளை ஏற்படுத்தக்கூடிய புரட்சிகர தலைமை புரட்சிகர கட்சிக்கு அவசியமாகும். அதற்கு தொழிலாளர் வர்க்க குணாம்ச ரீதியான சிந்தனையும், விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையும் தேவை. நாளாந்த வீதிப்போராட்டங்கள் போன்றவற்றுடன் போலி புரட்சிகர கம்பீரம் அடங்கிப்போகும். புரட்சியை நோக்கி முன்னேறும் விதத்திலேயே வெகுஜனப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். தலைமை முதல் அடிமட்டம் வரை கட்சித்தோழர்களிடம் வர்க்கப்பண்பாடு கட்டி வளர்க்கப்பட வேண்டும். குறிப்பாக தனிச்சொத்து மீதான நாட்டம் முறியடிக்கப்பட வேண்டும்.
சிறு சிறு தவறுகள் பாரில் பண்புரீதியாக முரண்பாடுகளாக வளர்வதுண்டு. அதனை நான் பு.ஜ.மா.லெ கட்சியினுள் கண்டுள்ளேன்.
தலைமையிடம் கோட்பாட்டு மத்தியத்துவம் ஏற்படுத்தப்பட்டு கூட்டுத்தலைமை கட்டப்பட வேண்டும். கூட்டுத் தலைமையும், கூட்டுப்பொறுப்பும், ஜனநாயக மத்தியத்துவமும் ஒரு புரட்சிகர கட்சியின் ஜீவன்கள்.
தனிநபர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் கூட்டுத்தலைமையின் லட்சணமன்றி சுயநலமும், நிலப்பிரபுத்துவ லட்சணமுமாகும். சுருக்கமாக சொன்னால் புரட்சிகர தத்துவம், கொள்கை, கோட்பாடு என்பது ஒரு கட்சியின் வெறும் அரசியல் நிகழ்ச்சி நிரலும் கொள்கைகளுமாகா. மாறாக கட்சியின் மத்திய தலைமை வளர்க்கப்பட்டு கூட்டிணைக்கப்படுகின்ற விஞ்ஞானம் உட்பட வாழ்க்கையின் பல அம்சங்களையும் பற்றிய அறிவின் பல கூறுகளினதும் புரிதலையும், பட்டறிவையும் கட்சியின் மத்திய தலைமையால் இயங்கியல் ரீதியாக கூட்டிணைக்கப்படுகின்ற அறிவின் தோற்றம், அதன் பரப்பெல்லை பற்றிய ஆய்வின் அடிப்படையிலான வகைசார் ஆய்வாகும்.
அதே போன்று புரட்சிகர கட்சி என்பது முதலாளித்துவ, சிறுமுதலாளித்துவ கட்சிகளில் போன்று வெறும் தனிநபர்களின் ஒன்று கூடல் அல்ல. லெனின் கம்யூனிஸ்ட் கட்சியை உயிர் வாழும் அவயமொன்றுடன் ஒப்பிட்டார். கம்யூனிஸ்ட் கட்சி என்பது முழுமையான யந்திரமல்ல, ஆனால் அது மனித உடல் போன்ற ஒரு உறுப்பு. நரம்பு மண்டலத்தின் மையம் அல்லது மூளை போன்ற ஒற்றையான ஏக உறுப்பு.
இந்த இரண்டு அம்சங்சளை நோக்கி பு.ஜ.மா.லெ கடந்த 35 வருடங்களாக நகர முடியவில்லை. முன்னேறிய வர்க்கமான புரட்சிக்கு அடிப்படையான தொழிலாளர்களை அணிதிரட்ட முடியவில்லை. விவசாயிகளையோ, அடக்கப்பட்ட தேசிய இனங்களையோ, மக்களையோ அணிதிரட்ட முடியவில்லை. தமிழ் பேசுபவர்களுக்கு வெளியே சிங்களம் பேசுபவர்களை அணிதிரட்ட முடியவில்லை.
தொழிலாளர் வர்க்க கட்சி என்பது முன்னேறிய பொறிமுறை கொண்ட படை. அது வளமற்றதாக இருக்க முடியாது. இதை தவிர ‘இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் எதற்கு? ‘ ‘இலங்கையில் புரட்சி’ ஆகிய சுருக்கமான எமது அடிப்படை அறிக்கைகளை பார்ப்பதன் மூலம் எனது விலகளுக்கான அடிப்படைக் காரணங்களை விளங்கிக் கொள்ளலாம்.
கேள்வி: உங்கள் கட்சி பு.ஜ.மா.லெ கட்சியுடன் நட்பு அடிப்படையில் செயற்படுமா? ஏற்கனவே உடன்பாட்டை எட்டி இருக்கிறீர்களா?
பதில்: இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் மாக்ஸிஸ லெனினிச அடிப்படையில் மனிதகுல விடுதலைக்காக செயற்படும் கட்சிகள், குழுக்கள், தனிநபர்களின் கூட்டிணைப்பாகும். நீண்ட காலத்தில் இலங்கையில் ஒரேயொரு தொழிலாளர் வர்க்க புரட்சிகர கட்சியை கட்டும் பணியின் தொடக்கமாகும். வித்தியாசங்களுடன் கூட்டிணைந்து செயற்பட்டு ஜனநாயக மத்தியத்துவத்துடன் செயற்பட்டு விஞ்ஞானபூர்வமாக வித்தியாசங்களை களைந்து, கொள்கை ரீதியான, செயற்பாட்டு ரீதியான மத்தியத்துவத்தை அடைவதற்கான போராட்டமாகும்.
பு.ஜ.மா.லெ கட்சியில் தொழிலாளர் வர்க்கம் குணாம்சரீதியான மாற்றமடையலாம் என்ற நம்பிக்கையில் சிறிது காலம் ஒதுங்கி இருக்கவே எண்ணினேன். ஆனால் பு.ஜ.மா.லெ கட்சிக்கு வெளியில் இருக்கும் தோழர்கள் எல்லா மாக்ஸிஸ லெனினிஸ்ட்டுகளையும் அமைப்புக்களையும் ஐக்கியப்படுத்தி இயங்குவதற்கான செயற்பாட்டுத்தளம், ஸ்தாபனம் பற்றி கவனம் செலுத்த வேண்டியவை பற்றி கலந்துரையாடினர். அதன் விளைவே இ.க.ஐ கேந்திரமும் அது முன்வைத்திருக்கும் கலந்துரையாடலுக்கான சுருக்கமான அடிப்படை அறிக்கையுமாகும். அந்த அறிக்கை மாக்ஸிஸ லெனினிஸத்தையும் மாக்ஸ், ஏங்கல்ஸ, லெனின், ஸ்டாலின், மாவோ மற்றும் அதே கோட்பாட்டு ரீதியாக தலைவர்களை ஏற்றுக்கொள்கின்ற தனிநபர்கள், குழுக்கள், கட்சிகளுக்கு அனுப்பப்பட்டன. புதிய ஜ.மா.லெ.கட்சிக்கும் அனுப்பப்பட்டது. எங்களது அறிக்கை கிடைத்ததாகவும் வெகு விரைவில் கலந்துரையாடலாம் என்றும் பு.ஜ.மா.லெ கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் வெ.மகேந்திரன் என்னிடம் சொன்னார்.
அத்துடன் அக்கட்சியின் தோழர்களில் பலரும் தெரிவித்தனர். ஆனால் அக்கட்சி இதுவரை கலந்துரையாடலுக்கான எந்தவொரு ஏற்பாட்டையும் செய்யவில்லை.
அக்கட்சியின் அங்கத்தவரல்லாத ஆனால் அக்கட்சியுடன் தொடர்புடைய மெத்த படித்தவர் ஒருவர் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று என்னுடைய காரியாலயத்துக்கு வந்து எனது பெயரில் வெளி வந்த ‘புதிய பூமி’, “New – Democracy” ஆகிய பிரசுரங்களின் பிரசுர உரிமையை பு.ஜ.மா.லெ கட்சிக்கு கொடுத்து விடும்படி கேட்டு வழமையான அவர் எழுதியும், பேசியும் வரும்; அநாகரீகமான அடைமொழிகளை பிரயோகித்து எனக்கு வெறுப்பூட்டினார்.
அவரின் சந்திப்பு அக்கட்சியின் பொதுச்செயலாளர்; சி.கா.செந்தில்வேலுக்கு தெரியாமல் இருக்க முடியாது. அந்த படித்தவர் அவருக்கு சம்பந்தமில்லாத விடயங்கள் பற்றி கதைக்க வந்ததையோ, என்னிடம் கதைத்ததையோ அக்கட்சியின் தோழர்கள் நான் சொல்லும் வரை அறிந்திருக்கவில்லை. இம்மாதிரியான அணுகுமுறைகள் நட்புரீதியானவை அல்ல.
அது மட்டுமல்ல அந்த மெத்த படித்தவரும், கட்சியின் உறுப்பினரல்லாத இன்னொரு இளம் படித்தவரும் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட (கட்சி மத்திய குழுவிற்கு தெரியாத பயணமது) ஐரோப்பிய பயணமொன்றின் போது என் நிலைப்பாட்டிற்கு எதிராக தெரிவித்துள்ள கருத்துக்களும், நட்புக்கான ஆரோக்கியமான கருத்துக்களல்ல.
எனது விலகல் பு.ஜ.மா.லெ கட்சியின் உடைவல்ல என்பதையும், எனது தற்போதைய அரசியல் இயக்கமும் செயற்பாடும் பு.ஜ.மா.லெ கட்சியினர் உட்பட இலங்கையின் மாக்ஸிஸ்ட்டு லெனினிஸ்ட்டுக்களை ஐக்கியப்படுத்துவதற்கான சினேகபூர்வமான ஐக்கியமும், போராட்டமுமாகும்.
இதனை பு.ஜ.மா.லெ கட்சித் தோழர்கள் புரிந்து கொள்வார்கள்.எனது செயற்பாட்டை ‘துரோகத்தனம்’ என்று பிரச்சாரம் செய்பவர்கள் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சன்) உடைவுகளின் காரணகர்த்தாக்களும், தங்களை தாங்களே மாக்ஸிஸ லெனினிஸத்தின் ஏகத்தலைவர்கள் என்று நம்புபவர்களும் இலங்கையில் தொழிலாளர் வர்க்க புரட்சிகர கட்சியினை கட்டுவதற்கு எதிரானவர்களும், குறுங்குழுவாதிகளுமாவர்.
எனவே மாக்ஸிஸ லெனினிஸவாதிகளுடன் நட்பாக செயற்படவே நாம் விரும்புகிறோம். தங்களை தாங்களே மாக்ஸிஸ்ட்டு லெனினிஸ்ட்டு மாவோ சிந்தனைப்படி நடப்பதாக கூறிக்கொண்டு; தமிழ் தேசியவாத அடிப்படைவாதிகளுடன் பிக்கட் லயினில் ஒன்றாக நிற்க முடியுமெனின், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஆனால் இடதுசாரிகள் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்பவர்களுடன் கட்சி உறவை பேண முடியுமெனின் ,.க.ஐ கேந்திரத்துடன் கலந்துரையாடுவது ‘தீண்டத்தகாததல்ல’.
தற்போது எம்முடன்; மாவோ சேதுங் சிந்தனைவரை ஏற்றுக்கொள்பவர்களும், மாவோயிசத்தை ஏற்றுக்கொள்ளுபவர்களும் இணைந்துள்ளனர். ஆனால் பரந்தளவில் மாக்ஸிஸ்ட்டுகள் லெனினிஸ்ட்டுகளை இணைப்பதற்காக எமது கலந்துரையாடலுக்கான அறிக்கையில் மாசேதுங் சிந்தனை, மாவோயிசம் போன்றவற்றை ஏற்பவர்களாக இருக்க வேண்டும் என்பதை முன் நிபந்தனையாக முன்வைக்கவில்லை மாக்ஸிஸ லெனினிஸம், மாக்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ உட்பட ஏனைய மாக்ஸிய மூலவர்களை ஏற்றுக்கொள்பவர்களின் கூட்டணியாக (ரொஸ்கியவாதிகள் இல்லை) இ.க.ஐ கேந்திரம் இருக்கும் என குறிப்பிட்டுள்ளோம்.
எனவே, இ.க.ஐ கேந்திரம் பு.ஜ.மா.லெ கட்சியுடன் நட்புக்கான அவாவுடனே செயற்படுகிறது. அது பு.ஜ.மா.லெ கட்சியே தீர்மானிக்க வேண்டும்.
கேள்வி: இடதுசாரிகள் மீது தொடர்ச்சியாக அவதூறுகளை மேற்கொண்டு வரும் றயாகரன் குழுவினருக்கும் பு.ஜ.மா.லெ கட்சிக்கும் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறதே, இந்த உடன்பாடு பற்றி அக்கட்சியினருடன் பேசியுள்ளீர்களா?
பதில்: எந்தக் கட்சி யாருடன் உறவு வைக்க வேண்டும் என்பதற்கு எனது அனுமதி தேவையில்லை. ஆனால் பு.ஜ.மா.லெ கட்சியின் மீதும், அதன் ஆதரவாளர்கள் மீதும் றயாகரன் மேற்கொண்டு வந்த அவதூறுகளை அவ்வளவு இலகுவாக மறக்க இயலாது. அவர் அவரது மாக்ஸியம் பற்றி பேசவும், எழுதவும், புரட்சிகர கட்சிகளை மிகவும் மட்டகரமாக வசைபாடுவதிலும் ஏகபோக உரிமை கொண்டிருந்தார். அவர் அவரைப்பற்றி சுய விமர்சனம் செய்து கொள்ளாமல் அவர் மீது விமர்சனம் செய்யாமலும் அவருக்கும் பு.ஜ.மா.லெ கட்சிக்கும் உடன்பாடு ஏற்பட்டால் அது சந்தர்ப்பவாத உடன்பாடாகவன்றி வேறேதாகவும் இருக்க முடியாது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் லண்டனில் நடைபெற்ற காணாமல் போனோரின் சர்வதேச குழுவின் மாநாட்டில் நான் கலந்து கொண்டது பற்றி மிகவும் அநாகரீகமாக றயாகரகரனுடன் தொடர்புடைய சீலன் என்பவர் அவரது இணையத்தளத்தில் எழுதி இருந்தார்.
நான் பணம் பண்ணுவதற்கோ, உல்லாசம் புரியவோ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவில்லை. அந்தப் பயணத்தால் இலங்கையில் காணாமல் போனோர் பற்றிய பல உண்மைகள் வெளிக்கொணரப்பட்டன.
இதனால் எனக்கு பல அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன. அப்பயண முடிவில் லண்டன் ஹூத்துறு விமான நிலையத்தில் தண்ணீர் வாங்கி குடிக்கக்கூட பணமில்லாமல் தாகத்துடன் 7 மணித்தியாலங்கள் இலங்கை திரும்பும் விமானத்தில் ஏறும் வரை இருந்துள்ளேன் என்பது தெரிய வேண்டும். அப்படி எனது வெளிநாட்டுப் பயணத்தை விமர்சித்தவர்கள் பு.ஜ.மா.லெ கட்சியுடன் நெருக்கமான கட்சி உறுப்பினரல்லாத ‘இரண்டு படித்தவர்களை’ ஐரோப்பாவுக்கு அழைத்துள்ளனர். அவர்களுக்கான பயண செலவுகளையும் கொடுத்துள்ளனர். இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டதோ தெரியவில்லை.
அவர்கள் பு.ஜ.மா.லெ கட்சிக்கு அழைப்பை விடுத்துள்ளனர். அக்கட்சி தலைமையிலிருந்து எவரையும் அனுப்பாது கட்சி சார்பில் ‘அந்த படித்தவர்கள்’ (மேற் குறித்த மெத்தப் படித்தவரும,; இன்னுமொரு இளம் படித்தவரும்) அனுப்பப்பட்டுள்ளனர்.
இப்பயணம் கட்சியின் தலைமைத் தோழர்களுக்கும் தெரியாது. அவ்விடயம் வெளியானதும் றயாகரன் கட்சியின் ஆதரவாளர்களை அனுப்பும்படி கேட்டதாகவும், அதன்படியே அந்தப் படித்தவர்கள் அனுப்பப்பட்டதாகவும் பதிலிறுக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்கப்படவேண்டிய விடயங்கள் இருக்கின்றன. பு.ஜ.மா.லெ கட்சியினர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களை கொச்சைப்படுத்திய றயாகரன் குழுவினர் எவ்வாறு பு.ஜ.மா.லெ கட்சிக்கு அழைப்பை விடுத்தனர், பயணச் செலவுகளை செய்ய முன்வந்தனர்? அவ்வாறான அழைப்பை கட்சியின் தலைமைத் தோழர்களுக்கன்றி ஆதரவாளர்களுக்கு விடுத்ததன் நோக்கம் என்ன?
அவ்வாறான ஆதரவாளர்களின் – இரண்டு படித்தவர்களின் பயணத்திற்;கான முடிவு கட்சியின் தலைமைத் தோழர்களுடன் கலந்துரையாடாமல் எடுத்தது சரியா? அந்த இருவரும் பயணம் செய்த நாடுகளில் பு.ஜ.மா.லெ கட்சியின் பிரதிநிதி;களாகவே பேசியுள்ளனர். அதனால் கட்சியின் வெளிவிவகாரம் கட்சியல்லாதவர்களிடம் கட்சி தலைமைத் தோழர்களுக்கும் தெரியாமல் கட்சி ஒழுங்கு விதிகளுக்கு மாறாக ஒப்படைக்கப்பட்டு விட்டதா? போன்றன சிலவாகும்.
பொதுவாக ‘புரட்சிகர கட்சியொன்றுக்கு’ கிடைக்கும் ஆதரவுகள், உதவிகள் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை. அவ்வாறெனின் பு.ஜ.மா.லெ கட்சிக்கு பெரும் நிதியுதவிகளை கொடுத்து வருவதாக றயாகரன் குழுவினர் பகிரங்கமாக கூறி வருவதன் மர்மம் என்ன.
நான் கட்சியில் இருக்கும் வரை றயாகரன் குழுவினருடனான உடன்பாடு பு.ஜ.மா.லெ கட்சியின் மத்திய குழுவினது அல்லது அரசியல் குழுவின் முடிவு உத்தியோகபூர்வமாக எடுக்கப்பட்டிருக்கவில்லை. நான் விலகிய பிறகும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. எனது ஐந்தாம் படை எந்தவொரு கட்சியின் மத்திய குழுவில் இல்லாவிட்டாலும், நான் மெத்தப் படித்தவனாக இல்லாவிட்டாலும் கடந்த 35 வருடங்களாக புரட்சிகர அரசியலில் இருந்துவருபவன்; என்ற ரீதியில் சிறியளவாவது அரசியல் அறிவு இருக்கத்தானே செய்யும்.
அத்துடன் றயாகரனும் பு.ஜ.மா.லெ கட்சியும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை என்ற கோட்பாட்டை கைவிட்டுவிடவில்லை என்று நம்புகிறேன். அவ்வாறெனின் அக்கோட்பாட்டை ஏற்காத ஒரு சராசரி கட்சியான முன்னிலை சோஷலிஸ கட்சிக்கும் பு.ஜ.மா.லெ கட்சிக்கும் உடன்பாட்டை ஏற்படுத்த றயாகரன் இடைத்தரகராக இருப்பதும் பல கேள்விகளை எழுப்புகின்றது.
கேள்வி: முன்னிலை சோஷலிஸ கட்சி இன ஒடுக்கு முறைக்கு எதிரான தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான போராட்டங்களை நிராகரிக்கும் அதேவேளை இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்று கூறுகிறதே, அக்கட்சியுடன் இணைந்த அரசியல் செயற்பாடுகள் குறித்து உங்கள் கட்சி சிந்திக்கவில்லையா?
பதில்: முன்னிலை சோஷலிஸ கட்சிக்கும், எமது இ.க.ஐ கேந்திரத்துக்குமிடையில் இதுவரை எவ்விதமான கலந்துரையாடலும் நடைபெறவில்லை. ஆனால் அவர்களின் கட்சி ஆவணங்களின் மூலம் அவர்களது நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடியும். அக்கட்சி பாட்டாளி வர்க்க புரட்சிகர கட்சியல்ல. ஏனெனில் அக்கட்சியிடம் இலங்கையின் புரட்சியின் மார்க்கம் பற்றி தெளிவில்லை. அக்கட்சி வீதிப்போராட்டங்கள் (வெகுஜனப்போராட்டமல்ல), பொப்பியூலிசம், பாராளுமன்ற தேர்தல்கள் மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணம் கொண்டது.
பாட்டாளி வர்க்க புரட்சி சாத்தியமில்லை என்கிறது. அதற்கு ஆதாரமாக நேபாள மாவோஸ்ட்டுக்களும் தோல்வியடைந்துவிட்டனர் என்கிறது. தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை நிராகரிக்கின்றது. மாக்ஸ் முதல் மாவோ உட்பட பல மாக்ஸிய மூலவர்களின் பங்களிப்பு பற்றி வெளிப்படையான தன்மை இல்லை. இவை போன்ற அடிப்படையான விடயங்கள் இல்லாததால் அது இலங்கையின் சமூக மாற்றத்திற்கான புரட்சிகர கட்சியில்லை. அதனால் அதனுடன் ஐக்கியப்பட்ட புரட்சிகர முன்னணி என்பது சாத்தியமில்லை.
ஆனால் அக்கட்சி இன்னும் ஒரு சராசரி இடதுசாரி கட்சியாக இல்லாமல் முற்போக்கானதாக இருக்க வேண்டுமானால் பாசிசத்துக்கு, ஏகாதிபத்தியத்துக்கு, இனவாதத்திற்கு எதிராக போராடியே ஆக வேண்டும். தன்னுடைய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க ஏனைய இடதுசாரி, புரட்சிகர தனிநபர்களையும் கட்சிகளையும் ‘பாவிக்கும்’ தந்திரோபாயத்தை உள்நோக்கத்துடன் முன்னெடுக்காமல், மிகவும் வெளிப்படையாக ஜனநாயக, இடதுசாரி வேலைத்திட்டத்தை முன்வைத்து இலங்கையின் பாசிச அரசுக்கும், ஏகாதிபத்தியத்துக்கும், இனவாதத்திற்கு எதிராக போராட பரந்துபட்ட ஐக்கிய முன்னணி வேலைத்திட்டத்துடன் ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படும் சூழ்நிலையில், அந்த மட்டத்தில் ஜனநாயக, இடதுசாரி (புரட்சிகரமல்ல) வேலைத்திட்டத்துடன் உடன்பட்டு வேலை செய்ய இடமில்லாது போகாது. (அதில் முதலாளித்துவ லிபரல்வாதிகளும், மனிதாபிமானிகளும் கூட ஏற்றுக்கொள்ளும் தேசிய இனங்களுக்கான அதிகாரப்பங்கீட்டைக் கூட நிராகரித்து சமத்துவ உரிமை என்ற பழைய ஜே.வி.பி யின் நிலைப்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் ஆரோக்கியமாக இராது)
கேள்வி: தேசிய விடுதலை இயக்கங்கள் அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் பயங்கரவாத இயக்கங்ககளாக முத்திரை குத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன. சில தேசிய விடுதலைப் போராட்டங்களை ஏகாதிபத்தியமே வழி நடத்துகிறது. இவ்வாறான சழ்நிலையில் தேசிய இனங்களின் விடுதலைக்கான சாத்தியப்பாட்டினை கண்டடைவது எப்படி?
பதில்: தேசிய விடுதலை இயக்கங்களை மட்டுமன்றி வர்க்கப் போராட்ட இயக்கங்களையும், ஜனநாயகத்திற்காக போராடும் அமைப்புகளையும்; கூட ஏகாதிபத்தியம் அடிப்படையில் பயங்கரவாத அமைப்புக்களாகவே பிரகடனம் செய்கிறது.
இன்றைய உலக ஒழுங்கில் அடக்குமுறை அரசுகள் ஏகாதிபத்தியத்தை பாவித்து விடுதலை இயக்கங்களை அழிப்பதை அவதானிக்க முடியும். உண்மையான தேசிய விடுதலைப் போராட்டங்கள் ஏகாதிபத்தியத்தை அடக்குமுறை அரசுக்கு எதிராக பாவித்து வென்றதில்லை, வெல்லுவது சாத்தியமுமில்லை. அடக்குமுறை அரசுக்கும் ஏகாதிபத்தியத்திற்குமிடையிலான முரண்பாடுகளை சரியாக கையாண்டு விடுதலைப் போராட்டங்களை முன்னகர்த்துவதற்கும், ஏகாதிபத்தியத்தை பயன்படுத்தி அடக்குமுறை அரசுக்கு எதிராக போராடி விடுதலை அடைவது என்ற நம்பிக்கைக்குமிடையில் அடிப்படையில் பாரிய வேறுபாடுண்டு. அடக்கு முறையின் சுரண்டலின் உயர்ந்த வடிவமான ஏகாதிபத்திய அடக்குமுறையிலிருந்து உண்மையான விடுதலையை அடைய, அதன் ஒழுங்கின் கீழ் இயங்கும் அடக்குமுறை அரசுக்கு எதிராக போராடுவது அவசியம்; விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இரட்டை வேஷத்தை இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்ட மையில் இருந்து ஏகாதிபத்தியம் இரட்டைவேஷத்தை கூட கற்றுக்கொள்ள முடியும்.
சுய நிர்ணய உரிமைப் போராட்டங்களையும், ஜனநாயகத்துக்கான போராட்டங்களையும் ஏகாதிபத்தியம் பாவித்து அதன் ஏகாதிகத்திய நிகழ்ச்சி நிரலை நாடுகள் மீதும், உலக மக்கள் மீதும் திணித்து வலுப்படுத்திவருகிறது. அதனால் எல்லா சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களும் ஜனநாயகத்துக்கான போராட்டங்களும் பிற்போக்கானவையோ. ஏகாதிபத்திய நலன் சார்ந்தவையோ, நிராகரிக்கப்பட வேண்டியவையோ அல்ல.
ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உயர்ந்த வடிவமென்பதால் அது அடக்கு முறையின் உயர்ந்த வடிவமுமாகும். அதன் உலக ஒழுங்கின் வாடிக்கையாளர்களாகவே தேசிய அடக்குமுறை அரசுகள் இயங்குகின்றன. ஆகவே, தேசிய அடக்குமுறை அரசுக்கு எதிரான போராட்டங்கள் நிச்சயமாக ஏகாதிபத்திய நலன் சார்ந்ததாக இருக்க முடியாது. அடிப்படையில் அப் போராட்டங்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவையே. அதேபோன்று ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்கள் தேசிய அடக்குமுறை அரசுகளின் நலன் சார்ந்தவையல்ல. உதாரணமாக இலங்கையின் அடக்கப்படும் தேசிய இனங்களின் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்கள் ஏகாதிபத்திய நலன்களை பாதுகாப்பதாக இருக்க முடியாது. அதேபோன்று ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இலங்கை மக்களின் போராட்டங்கள் இலங்கை அடக்குமுறை அரசை பாதுபாப்பதற்கானவையல்ல என்பதில் தெளிவு வேண்டும். இது காலனித்துவத்திற்கு எதிரான போராட்டச் சூழ்நிலையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட நவகாலனித்துவ காலகட்டமாகும். நவகாலனித்துவ – பூகோளமயமாதல் – ஏகாதிபத்தியத்துடன் முட்டி மோதாமல் விடுதலை இயக்கங்கள் முன்னேற முடியாது. இன்றைய ஏகாதிhத்திய உலக ஒழுங்கு விடுதலை இயக்கங்களின் பாதையை மேலும் கரடுமுரடாக்கியுள்ளது, சாத்தியமற்றதாக்கிவிடவில்லை. புதிய தந்திரோபாயங்கள், நெளிவு சுளிவுகள் பற்றி அக்கறை கொள்ள வேண்டியுள்ளது.
நாட்டிற்குள்ளும் வெளியிலும் போராட்ட இயக்கங்களின் ஐக்கிய முன்னணி, ஒத்துழைப்பு இயக்கங்களின் நடவடிக்கைகளினதும் போராட்ட நடவடிக்கைகளினதும் நாடளாவிய ஒருங்கிணைப்பும், சர்வதேச ஒருங்கிணைப்பும் அவசியமாகிறது.
இன்னும்வரும்…
காலம் கடந்த ஞானோதயம் தம்பையா!!
I agree with you Mr. Jeyam.
மிகவும் முக்கியமான ஒரு பதிவு பல கேள்விகளுக்கு இதில் பதில் கிடைக்கிறது. “சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, அசைவுகளை ஏற்படுத்தக்கூடிய புரட்சிகர தலைமை புரட்சிகர கட்சிக்கு அவசியமாகும். அதற்கு தொழிலாளர் வர்க்க குணாம்ச ரீதியான சிந்தனையும், விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையும் தேவை. நாளாந்த வீதிப்போராட்டங்கள் போன்றவற்றுடன் போலி புரட்சிகர கம்பீரம் அடங்கிப்போகும். புரட்சியை நோக்கி முன்னேறும் விதத்திலேயே வெகுஜனப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். தலைமை முதல் அடிமட்டம் வரை கட்சித்தோழர்களிடம் வர்க்கப்பண்பாடு கட்டி வளர்க்கப்பட வேண்டும். குறிப்பாக தனிச்சொத்து மீதான நாட்டம் முறியடிக்கப்பட வேண்டும்.” கொழும்பில் இருந்து கொண்டு கொமுனிசம் பேசும் போலிப் புரட்சியாளர்கள் பற்றிய புரிதல் அவசியமே தேர்தல் காலத்தில் மட்டும் வடக்குக்கு சுற்றுலா போகும் இவர்களால் மக்களிடையே மாற்றத்தை எப்படிக் கொண்டுவர முடியும் மார்க்சியம் பற்றிய புரிதல் இல்லாத எதிர் கால சமூகத்தை உருவாக்கிய பெருமை பு.ஜ.மா.லெ.கட்சியுடையது.
That is something new indeed Mr. Perampalam. Please do no forget the East too. Both are 4,00 square miles.
‘மெத்தப்படித்தவர் தான் குழப்பங்களுக்குக் காரணம் கலைத்துவிட்டு கட்சியை வழர்த்திருக்கலாம்’
” வித்தியாசங்களுடன் கூட்டிணைந்து செயற்பட்டு ஜனநாயக மத்தியத்துவத்துடன் செயற்பட்டு விஞ்ஞானபூர்வமாக வித்தியாசங்களை களைந்துஇ கொள்கை ரீதியான செயற்பாட்டு ரீதியான மத்தியத்துவத்தை அடைவதற்கான போராட்டமாகும்.”
தோழரின் வித்தியாசமான கலவை கொண்டவைகளை பொறுத்திருந்து பார்ப்போம்!
“”””கொழும்பில் இருந்து கொண்டு கொமுனிசம் பேசும் போலிப் புரட்சியாளர்கள் பற்றிய புரிதல் அவசியமே தேர்தல் காலத்தில் மட்டும் வடக்குக்கு சுற்றுலா போகும் இவர்களால் மக்களிடையே மாற்றத்தை எப்படிக் கொண்டுவர முடியும் மார்க்சியம் பற்றிய புரிதல் இல்லாத எதிர் கால சமூகத்தை உருவாக்கிய பெருமை பு.ஜ.மா.லெ.கட்சியுடையது””””
.தலைவர் தம்பையாவும் கொழும்பில் இருந்துதான் சகலதையும் செய்யப்போகின்றார். நிச்சாமத்திற்கோ>நிக்கரவெட்டியாவிற்கோ போகமாட்டார்!
தமிழரது சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தைத் திரிபு படுத்தியும் கொச்சைப்படுத்தியும் வந்த, மகிந்தவுக்கெதிராகப் புல்லைக்கூடப் புடுங்கத் திராணியற்றிருந்த ஒரு கட்சியிலிருந்து தம்பையா வெளியே வந்திருக்கிறார்.
அடடா தம்பையாவுக்கு ஞானோதயம் ஏற்பட்டுவிட்டதோ என்று மகிழ்ந்து பேட்டியைப்படித்தால், கட்சியிலிருந்து வெளியில் வந்தும் கட்சியின் தமிழர் விரோதப் போக்கினை தம்பையா கண்டித்ததாகத் தெரியவில்லை.
மொத்தத்தில் தம்பையா கட்சிக்கு வெளியில் இருந்து கட்சி செய்த அதே துரோகத்தைத்தான் செய்யப்போகிறார் என்பது தெளிவு.
தமிழர் மீதான இனப்படுகொலைக்கு எதிராக ஒரு வார்த்தையும் உதிர்க்காமல் நிபந்தனையற்று ஐநாவில் பாசிச மகிந்த அரசினை நியாயப்படுத்தியும் ஆதரித்தும் வரும் கியூபாவை, இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த அந்தக்காலப்பகுதியிலேயே போற்றிப் புகழ்ந்தும் நியாயப்படுத்தியும் வந்தது அந்தக்கட்சி. கியூபாவை நியாயப்படுத்துவதில் முன்னின்றவர்தான் இந்தத் தம்பையா.
ஒவ்வொரு ஜனவரி முதல் திகதியும் கியூப ஆராதனைப் பெருவிழாவை இவர்தான் முன்னின்று எடுப்பவர்.
இது தவிர “ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமை” என்கிற கட்சியின் கொள்கையை தீவிரமாகப் பரப்புரை செய்து வந்தவரும் இதே தம்பையா தான்.
இந்த “ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணயம்” என்கிற மடக்கோட்பாட்டை தம்பையா விட்டுவிட்டாரா இல்லையா என்று ஒரு கேள்வியைஒ அடுத்த பகுதியில் தானும் எதிர்பார்க்கிறேன்.
இந்தக்கேள்வியை கேட்காவிட்டால் அது இனியொருவின் சந்தர்ப்பவாத நேர்மையீனம் என்றே என்னால் கருதமுடியும்.
புலிகளும் அதன் மெத்த படித்த ஆலோசகரும் ‘உள்ளக சுயநிர்ணயம்’ பற்றி பேசிய போது எங்கே புடுங்கி கொண்டு இருந்தீர். மாக்சிய லெனினியர்கள் புடுங்கியது இருக்கட்டும். நீங்கள் தேசிய வாதிகளுடனோ தமிழ் தேசிய இயக்கங்களுடனோ சேர்ந்து இங்கேயே இருந்து புடுங்கியிருக்கலாமே? இப்போதும் ஒன்றும் குறையவில்லை. முடிந்தால் மகிந்தவுக்கு எதிராக வந்து புடுங்க வேண்டியது தானே? தொடை நடுங்கி….
communistugal engu irukkirargal enbathu mukkiyamalla…..enna seigirargal enbathu thaan mukkiyam……October puratchikku mun; com.Lenin nattukku veliye irruntha kaalame athigam. Nitchamaththukkum Nickawaretiyavukkum pogamalum puratchi nadakkalam…..communistugal makkalidam povathu enbathu makkaludaiya karuththukkalai awargal arivathum…..puratchigara karruththukkal awargalai sendradaiwathum aagum. engu irrunthalum varka chinthanaiyudan seyartpaduwathe mukkiyam, therthalai mattum ketpawargalaiyum……puiratchivathigalaiyum samappaduththa veandaam. sariyana karuththukkale illatha neraththil, sariyana karuththukkal munvaikkappaduwathu awasiyam. com.thambiahvin karuththukkal kawanaththil edukkappada wediyawai thaan. Awarathu nadaimurayai parppom…awar mattumalla awarathu karuththukkalai eatporin nadaimuraiyum awasiyam.karuththai munvaiththavar mattum katti aluwathu marxism illai.
கம்முனிஷ்டுகள் எங்கு இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல …..
என்ன செய்கிறார்கள் என்பது தான் முக்கியம் ……அக்டோபர் புரட்சிக்கு முன் ; கொம் .லெனின் நாட்டுக்கு வெளியே இருந்த காலமே அதிகம் . நிட்சமத்துக்கும் நிக்கவறேடியவுக்கும் போகாமலும் புரட்சி நடக்கலாம் …..கம்முனிஷ்டுகள் மக்களிடம் போவது என்பது மக்களுடைய கருத்துக்களை அவர்கள் அறிவதும் …..புரட்சிகர கருத்துக்கள் அவர்களை சென்றடைவதும் ஆகும் . எங்கு இர்ருந்தலும் வர்க்க சிந்தனையுடன் செயற்படுவதே முக்கியம் , தேர்தலை மட்டும் கேட்பவர்களையும் ……புரட்சிவாதிகளையும் சமப்படுத்த வேண்டாம். சரியான கருத்துக்களே இல்லாத நேரத்தில் , சரியான கருத்துக்கள் முன்வைக்கப்படுவது அவசியம் . கொம் .தம்பையாவின் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை தான் . அவரது நடைமுறையை பார்ப்போம் …அவர் மட்டுமல்ல அவரது கருத்துக்களை ஏற்போரின் நடைமுறையும் அவசியம். கருத்தை முன்வைத்தவரை மட்டும் கட்டி அழுவது மர்சிசம் இல்லை.
ரதன், வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தினால் உங்கட கருத்தை தமிழ் வரிகளாக மாற்றியுள்ளேன் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். – பேரம்பலம்
புரட்சி வாழ்த்துக்கள் தேழரே
ரதன், பேரம்பலம்,
மக்கள் சார்ந்தவர்களாக தனிமனிதர்களோ கட்சியோ அமைய வேண்டுமானால். அதற்கான பொறிமுறை அவசியமானது. தனிமனித தூய்மைவாதம் என்பது நிலப்பிரபுத்துவத்தின் பிற்போக்கான சொத்து. அதனை முதலாளித்துவம் உள்வாங்கிக்கொண்டது. மன்னர்கள் தூய்மையாக இருந்தால் மக்கள் உருப்படுவார்கள் என்பதிலிருந்து நிலப்பிரபுத்துவ வாதம் சிந்தனை எமக்கு மத்தியில் கோலோச்சுகிறது.
இதனாலேயே மக்களைப் பற்றிப் பேசுபவர்கள் கூட தமது பெருமைகளைப் பற்றிப் பேசுவதிலிருந்தே ஆரம்பிக்கிறார்கள். தமது தியாகம், திறமை என்பவற்றை மிகைப்படுத்திப் பிரச்சாரம் செய்து இறுதியில் நிலப்பிரபுத்துவ மன்னர்கள் போலாகிவிடுகிறார்கள். இதன் பின்னர் தனி மனிதர்களிடையேயான தாக்குதல் மட்டுமே மேலோங்குகிறது.
நாம் அனைவரும் ஆயிரம் வருட அழுக்குகளைச் சுமந்துக்கொண்டு தான் இன்னும் வாழ்கிறோம். இவர்களுள் ஒரு சிலரே மக்கள் குறித்துப் பேச முன்வருகிறார்கள். அவர்கள் தம்மையும் தமது கட்சியையும் பெரும்பான்மை மக்களின் கண்காணிப்பிற்கு உட்படுத்தும் போதே அவர்கள் தவறிழைப்பதற்கான சாத்தியங்கள் குறையும். இப்போது அரசபடைகளதும் சட்டங்களதும் கண்காணிப்பில் நாங்கள் வாழ்கிறோம். மக்களின் கண்கணிப்பிற்கு எப்படி சமூகத்தை உட்படுத்துவது என்பதே கம்யூனிசத்தின் அடிப்படை அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்தினார்கள் என்பவதற்குப் பல உதாரணங்கள் உண்டு.
சோவியத் ரஷ்யாவிலும் சீனாவிலும் மக்களின் கண்காணிப்பு அழிக்கப்பட்டு அரச படைகளின் கண்காணிப்பிற்கு சமூகம் உட்படுத்தப்பட்ட போது சோசலிசம் அழிந்து சர்வாதிகாரம் தோன்றுகிறது.
நாவலன்….;இந்த வகையில் புதிய ஜனநாயகக் கட்சியையும்>தம்பையாவையும் எவ்வாறு மதிப்பிடுகின்றீர்கள்?
இதைவிட கட்சியையும் தனிமனிதர்களையும் மக்கள் திரள்களின் கண்காணிப்பிற்கு உட்படுத்துவதற்கான பொறிமுறை என்ன என்று கேட்டிருக்கலாம். மீண்டும் தனிமனிதர்களை மதிப்பிடுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறோம். தம்பையாவின் விலகல் நியாயமானதாகத் தோன்றுகிறது. அவரது வேலைத்திட்டம் என்ன என்பதிலிருந்தே மிகுதியைப் பார்க்க முடியும். சமூகத்தின் மேல்கட்டுமானம் குறித்த வேலைத்திட்டங்களையே இதுவரை அனைவரும் பேசியிருக்கிறார்கள். இனிமேல் அதன் அதன் அடிக்கோப்பு குறித்தான வேலைத்திட்டங்கள் தொடர்பாகப் பேசுவார்கள் என நம்புகிறேன்.
புதிய ஜனநாயகக் கட்சியை நான் >ஓர் மிதவாதக்கட்சியாகவே பார்க்கின்றேன். ஆனால் தம்பையா சொலவதுபோல்..”முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வாழ்க்கையை கைவிடுவதே மாக்ஸிய வாழ்க்கை முறை. அப்படி கைவிடுவத கையுதிர்ப்பது தியாகமல்ல. முதலாளித்துவ வாழ்க்கை முறைக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியடையும் நிலையே அதுவாகும்.””முதலில் அவரும்>அவரின் அமைப்பும் இதை நோக்கி நகருமா? நகராவிட்டால் இதுவும் பத்தோடு பதினொன்றுதான்.
Yeah. What is the relevance all these to the current situation in the North and East of post war Sri Lanka = Shri Lanka.
உலகமயம் தனியார் மயம் நுகர்வு கலாசாரம் ஆகிய நச்சுகளால் சூழப்பட்டு தனித்தனி தீவுகளாக வாழும் கற்றவர்கள் உதிரி பாட்டாளிகளாகிவிட்ட தொழிலாளர் மத்தியில் மாக்சிய அடிப்படையைக் கொண்ட கட்சியை வளர்த்தெடுப்பது இலகுவானதல்ல இன்றைய நிலையில் மேறபடி கொள்கையை ஏற்றுக்கொண்ட அனைவரும் நடைமுறையில் வேலை செயவதன் மூலம் மக்களுக்கு நமபிக்கையைக் கட்டி வளர்க்க வேண்டும்
அவ்வாறு செயறபடும் கட்சி ஒன்றிலிருந்து விலகியுள்ள தம்பையா பலமான அமைப்பொன்றைக் கட்டியெழுப்பினால் அது மக்களுக்கு சாரபாகும் இல்லையெனின் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும்
மெத்த படித்தவர்,இன்னொரு இளம் படித்தவர் எனக் காரணப்பெயர்களை வைத்துச் சொல்கிற விமர்சனம்,மாபெரும் அவலம்.
கலாநிதி கொல்வின் ஆர்.டி .சில்வா,Cambridge பீட்டர் கெனமன் வழியே சோசலிசம் பேசிய “கலாநிதி” பாலசிங்கம் வரை,பிரிட்டிஸ் ஆளுமை என்பது,பேதங்கள் தாண்டி,தமிழர் ஆன்மாவில் அகலாதிருக்கிறது.
“..லண்டன் ஹூத்துறு விமான நிலையத்தில் தண்ணீர் வாங்கி குடிக்கக்கூட பணமில்லாமல் தாகத்துடன் 7 மணித்தியாலங்கள்………”
தண்ணிருக்கு வழி செய்யாத பிரித்தானியத் தமிழர்,யூனியன் ஜாக் கொடியுடன், இலங்கையில் இனியொரு கபளீகரம் செய்யட்டும்.
தம்பையா அவர்கள் கட்சியிலிருந்து விலகுவது குறித்து வெளிப்படையாகப் பேச முற்பட்டபோது,பிரான்சில் வாழும் இரயாகரன்,அவரது தரகு வேலையென சுட்டலாகப் பெயர் குறித்துரைக்கும் தருணத்துள்”மெத்தப்படித்தவர்” படித்த வாலிபர் என்று ,ஏன் மொட்டையாகப் பேசவேண்டும்?
மக்களுக்கு உண்மையான அரசியல் தலைமை அவசியமாகவிருக்கிறது.
மக்கள்சார் அரசியலை முன்னெடுப்பதாகவிருந்தால் அந்த”மெத்தப்படித்தவர்” சி.சிவசேகரம்,படித்த வாலிபர் மு.மயூரன் என நேரடியாக விமர்சிக்க முடியாதிருப்பதேன்?
மீள மீள மொட்டாக்கு அரசியல் பேசிச் செயலாற்ற விரும்பியதாற்றாம் எங்கிருக்கும் இராஜகரன்கூட இலங்கையின் கட்சி-புரட்சிகரச் சக்திகள் மத்தியில்”தரகு”வேலை செய்ய முடிகிறது!
தம்பையா அவர்களது விலகல்,விமர்சனத்தின் மீது எதிர்வினையாற்ற முடியாதிருக்கிறது.வெளிப்படையான அரசியலை அவர் பேசவேண்டும்.அதன் பின்பு நாம் வினையாற்றலாம்.
மொட்டாக்குப் போட்டு”ஊக”அரசியலாகவொரு பக்கத்தைக் காண்பிக்கும்போது இரஜாகரன் போன்றவர்கள் புரட்சிகரக் கட்சியின் பிளவுக்கும்,தகர்வுக்கும் காரணமாகிப் போகின்றார்கள்.இதிலிருந்து உங்கள் முட்டாள்த் தனத்தைத்தாம் நாம் கற்க முடிகிறது.
பாவம் சிறிரங்கன் அவர் எப்பவும் இப்படித்தான்…வஞ்சகமில்லாமல் நெல்லென்று நினைத்து வெறும் உமியைக் குத்துறது. தம்பையாவும்>நாவலனும் கஸ்டப்பட்டு ஓரு பேட்டியையே பதிவுசெய்ய யானை பார்ககாத>சீ>பார்த்த குருடர்போல் என்னமோ என்னவெல்லாம் சொல்லுறார்.
உரையாடல் எனக்கும் தம்பையாவிற்கும் இடையேயானது என நீங்கள் அனுமானிப்பது தவறானது. எனது பங்களிப்பும் உள்ளது என்பது உண்மை.
vthissan,பெர்னௌலி பரவல் [Binomialverteilung ] மூலமாகத்தாம் இன்றைய புலம்பெயர் “இடதுசாரிகளை”கணக்கிட வேண்டியுள்ளது.இதுள் எத்தனை சதி,எத்தனை மக்களோடென ஈருறுப்பு பரவல் [Definition der Binomialverteilung ]கொண்டு விளக்க முடியும் .இடதுசாரிகளென்றும்,புரட்சிகரக் கட்சியின் பிளவுகளென்றும்,அதன்”நிகழ்தகவு நிறைச் சார்பு”[Definition der Binomialverteilung ] என்றுமில்லாதவாறு மயக்கமுறுகிறது.பிரான்சிலிருந்துபடி இரயாகரனால் இலங்கையில்”புரட்சிகரக் கட்சியை” பிளவுப்படுத்து முடிந்திப்பதால் [1-B(0|1/365;1xy ]=[…] இத்தகைய கணித[Beziehung zur Hypergeometrischen Verteilung] முறையால் இதை விளங்க முற்படுகிறேன்.மேற்கூறிய கருத்தானது இதன் புள்ளி கொண்டு புரிய முற்படுதலாக எடுக்கப் கடமைப்பட்டுள்ளீர்.
இராயகரன் கட்சியைப் பிளவு படுதினார் என்று சொல்வது தம்பையாவின் கோட்பாட்டுத் தளத்தைப் புரிந்து கொள்ளாத நிலையாகும் பயனின்றி சேர்ந்து இருப்பதை விடவும் பிரிந்து புதிய வழியில் போராட்டத்தை முன்னெடுப்பதே அவசியமானதாகும் பு.ஜ.மா. லெ கட்சி தொடர்பான தம்பையாவின் நிலைப்பாடு அவருடைய தனிப்பட்ட விமர்சனம் அல்ல மக்கள் புரட்சி மீது நம்பிக்கை உள்ள அனைவரினதும் எண்ணமும அதுவே. புலிகள் இருந்த காலத்தில் கொழும்பில் இருந்து அறிக்கை அரசியல் செய்தவர்கள், புலிகளின் மூக்கைக் கடித்தோம், சிங்கத்தின் வாலைப் பிடித்தோம் என வீர வசனம் பேசியவர்கள் இன்று பாராளுமன்ற பாதையையே நம்பிக் கொண்டு காலம் கடத்துகின்றனர். உண்மையைச் சொன்னால் இலங்கை அரசிடம் இருந்து இவர்களுக்கு எந்த அச்சுறுத்தலோ அழுத்தமோ கிடையாது ஏனெனில் இவர்களால் எதுவும் ஆகப்போவதில்லை என்று அரசாங்கத்துக்கு தெளிவாகத் தெரியும் மத்திய தர வர்க்கத்தினருக்கு இருக்கக் கூடிய தன்னல வாழ்க்கை முறைமைக்குள் இருந்து இவர்களால் வெளிவர முடியாது. கம்யூனிசத்தை பலவீனப் படுத்துவது “புரட்சிகரக் கட்சி” என அழைத்துக் கொள்ளும் போலிப் பூசாரிகளே.
சிறிரங்கன்…அண்மைக்காலமாக உங்களில் பலர் ரயாகரனையும்>அவர் கட்சியையும் அம்பலப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு> அவர்களுக்கு பெரும் விளம்பரம் எசய்கின்றீர்கள் என்ற உண்மையை உணர்வீர்களா? இது “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம்” எனும் நிலைதான். இதற்கு தம்பையாவின் தளம் தாராளமாக பயன்படுகிறது.
ரயாகரனிடம் கை நீட்டி காசு வாங்கும் போதும், அவர் பு.ஜ.ம.லெ கட்சிக்கு ரயாகரன் குழுவினர் பெருந்தொகை நிதியை வழங்கியதாக பிரசாரம் செய்வதிலும் கிடைக்காத விளம்பரமா ரயாகரனுக்கு தோழர் தம்பையாவின் பேட்டியில் கிடைத்துள்ளது.
அவரது பேட்டி சமகாலத்தில் புரட்சிகர கட்சியொன்றை கட்டுவது தொடர்பாக பல விடயங்களை சம்பாஷனைக்கு உட்படுத்தியுள்ளது. அதை கவனத்தில் எடுப்பதற்கு பதிலாக ஏன் சிண்டு முடி சண்டைகள்? தனிப்பட்ட தாக்குதல்கள்?
பேட்டிகளிலும் கருத்து முன் வைப்புகளிலும் சம்பவங்கள், பெயர்கள், இடங்கள் தொடர்பாக வெளிப்படை தன்மை வேண்டும் என்று வற்புறுத்துவது எந்தளவு சரியானது?
சொல்லப்பட்ட விடயங்களை கவனியுங்கள் அவை பாலியல் கிசு கிசுக்கள் அல்லவே. சம்பந்தப்பட்ட நபர்களின் முக இலட்சணங்களை தேடித் திரிவதற்கு.
34 வருட கட்சி வாழ்க்கையிலிருந்து தம்பையா விவாகரத்து பெற்றிருந்தாலும், நாகரீகமாக பல விடயங்களை சொல்லியிருக்கிறார் என்று ஏன் எண்ணத் தோன்றவில்லை? அதனால் சம்பந்தப்பட்ட கட்சி அல்லாதவர்களின் பெயர்களை சொல்லாமல் விட்டது அவரது பழைய கட்சிக்கும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் வெளிச்சம்.
தோழர் தம்பையாவின் பேட்டி பல்வேறு பிரச்சனைகளை முன்வைக்கின்றது.அதில் முதன்மையானது கட்சியினது இயங்கு நிலையற்ற வெறும் போலித்தனம். தங்களுடைய இருப்பையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்ள எந்த சமரசத்தையும் எந்த தவறான வழியையும் நாடிச் செல்லும் செந்தில்வேல் குழுவினரின் இந்தப்போக்கு இவர்களின் மேல் நம்பிக்கை வைத்திருந்த பலரையும் ஏமாற்றத்திற்கு உட்படுத்தியுள்ளது. மக்களின் பலத்தில் நம்பியிருக்கவேண்டிய கட்சி பிழையான வழிகளில் பெறப்படும் பணத்தில் நம்பியிருப்பது இன்றைய சாபக்கேடு என்றே சொல்லவேண்டும். கடந்தகாலங்களில் சில விடுதலை அமைப்புக்கள் பிழையான வழிகளில் பணம் பெற்று தங்களை வளர்த்துக்கொண்டதுபோல் இவர்களும் தொடங்கிவிட்டார்கள்போலும். ஒரு நபரிடமிருந்து பெருந்தொகையான பணத்தைப் எந்த அடிப்படையில் பெறுகிறார்கள் என்பதை செந்திவேல் குழுவினர் தெ ரிவிப்பார்களா? வேந்தன்
>>இராமலிங்கம்:பேட்டிகளிலும் கருத்து முன் வைப்புகளிலும் சம்பவங்கள், பெயர்கள், இடங்கள் தொடர்பாக வெளிப்படை தன்மை வேண்டும் என்று வற்புறுத்துவது எந்தளவு சரியானது?<<
"புரட்சிகரக்கட்சி" என்றவொரு லேபிள் எப்பவும் போலவே வெளிப்படையான அரசியலைப் பெருந்தொகை மக்களது வெளியில் வைத்து அரசிலைச் செய்தென்பது அந்த மக்களது நலனோடு அவர்களால் கட்டி வளர்க்கப்படும் அரசியலது நகர்வுகளைக் குதறியவெந்தவொரு குழுவுக்கும் முடிவதில்லை!"புரட்சி"என்றும்"தோழர்" என்றுஞ் சுத்திக்கொண்டு பிழைப்புவாதிகளாகவலையும் தமிழ்த் தரித்திரங்கள் தம்மால் முடிந்த-விடிந்த இதுவரையான அனைத்து முட்டாள்த்தனத்தையும் மற்றவர்களது தலையில் பொறித்துவிட்டுத் தம்மால் கொள்ளையிடப்பட்ட மக்கள் பணத்தை வைத்துக் கட்சி-இருப்பு அரசியலைச் செய்வதற்கு ஒரு பெயர்"புரட்சிகரக்கட்சி"!இப்படிப் பாத்திகட்டிக்கொண்டு புலிகளுக்குமுன் மௌனித்தவர்களெல்லோரும் அந்தப் பாசிசச் சேட்டையை அங்கீகரத்துதத் தமிழ்பேசும் மக்களைக் கருவறுத்துவிட்டும்,புலிகளுக்காக எதிர்க் கருத்தாளர்களை[… to work upon this question by rethinking the concept of the working class which they refuse to see as a homogeneous group. They formulate the need for a political party that will have a form of a horizontal network structure without a centralized point of decision or leadership. ] வேவு பார்த்த துப்புக்கெட்டவொரு"இடதுசாரி"முகாமானது தனக்குள் வெளிப்படையானவொரு அசியலைச் செய்வதற்கு முதலில் இன்றைய சூழலில் உலக மக்களது தேவைகள்,உரிமைகள் குறித்து நிறையக் கற்றுக்கொண்டாகவேண்டும்.
மும்மூட்டு வினையாகத் தொடரும் சமூகவியக்கத்துள்
1: பொருள்வாழ்வு,
2:ஆன்மீக வாழ்வு,
3: சட்டத்துக்குட்பட்ட வாழ்வு
என்பதே தொடர்ந்து உணரப்படும் நிலையுள் இன்றைக்கான உலகமயப் படுத்தப்பட்ட பெருந்திரள் மக்களது நிறையற்ற வாழ்வுக்கான மாற்றீடாக இதே அமைப்பாண்மைக்குள் பேசப்படும் அனைத்தும் ஏதொவொரு எல்லைக்குள்-ஏதொவொரு மக்கட்கூட்டம் செய்யும்"விடுதலைப் போரில்"எந்தகைய விளைவை அந்தவெல்லைக்குட்பட்ட அரசுள் அதன் உலக வலைப்பின்னலில் மாற்றத்தையேற்படுத்துகிறது?இலங்கை அரசானது இன்று திடமாகவும்,பெருந்திரளுக்குள் தனது ஆதிக்கத்தை[ "The power of resistance is much stronger than what we might think and if held the right way, any tool can become one's weapon of revolution. Instead of trying to answer the question of what is to be done, they propose answering the question of what are people already doing, as a way to create a particular catalog of ideas for revolutionary practices. According to them, the main question about what democracy is today and what it could be in a global world will remain unanswered and in the realm of fantasy unless there is a subject that can fill it. Therefore, the new subject of democracy is exactly this entity they named 'multitude', and the democracy of the future can be saved only if there is a freedom to determine what are we to become".-by Negri A.-Commonwealth] அதிகாரத்தின் வழி நம்ப வைக்கப்பட்ட சூழலில்"புரட்சிகர"கட்சியின் உரையாடல் நாலு பேர் சேர்ந்து தலைமறைத்துப் புரட்சித் தீ மூட்டி வைப்பரென நம்பும் ஒரு வாழ்வு இனியும் அவசியமென்றால் அதுதாம் புரட்சியென்பதன் புறநிலை நிலவரத்துள் மக்களைக் கொல்லும் சூத்திரத்தைப் புதைத்து வைத்திருக்கிறது.
விலகலுக்கான காரணங்கள் //// குழு வாதம் .
இதுவே இன்றைய எமது சமூக அமைப்பு (அரை காலனிய ,அரை நிலப்பிரபுத்துவ ) உருவாக்கக்கூடிய அதியுச்ச முற்போக்கு போராட்ட அமைப்பு,வடிவமாகும். ///சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, அசைவுகளை ஏற்படுத்தக்கூடிய புரட்சிகர தலைமை புரட்சிகர கட்சிக்கு அவசியமாகும். அதற்கு தொழிலாளர் வர்க்க குணாம்ச ரீதியான சிந்தனையும், விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையும் தேவை////
இனியாவது கொள்கை கோட்பாட்டளவில் மட்டுமின்றி, நடைமுறையிலும் விஞ்ஞானபூர்வமான அணுகுமுறை வர வாழ்த்துக்கள்.இன்னும் முப்பத்து நான்கு வருடங்கள் தேவையில்லை என நம்புவோம். நாம் நம் சமூக அமைப்பை புரிந்து, சமூக அமைப்பை முன்னோக்கி நகர்த்துவதற்கான,விஞ்ஞானபூர்வமான நகர்வுகளை மேற்க்கொள்ளாதவரை, இனியும் தம்பையாவிட்கு நடந்தவையே தொடரும்.இன்னும் முப்பத்து நான்கு வருடங்களிற்கு மேலும் தொடரும். விஞ்ஞானபூர்வமான அணுகுமுறை , நடை முறை வேலைத்திட்டங்கள் அற்ற, இறுதி இலக்கிற்கான கொள்கை கோட்பாடு தலைமை போன்றவற்றில் தெளிவு மட்டும் சமுகத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான முன்நிபந்தனை ஆக முடியாது.
இந்த இணையத்தளங்கள் நாசமானவை என்பது மேலும் மேலும் நிரூபிக்கப்படுகிறது. விவாதிக்கப்படும் விடயப்பொருள் என்னவென்று தெரியாதவர்கள் எல்லாம் பெரிய வித்துவான்களாக மாறி விடுகிறார்கள்.
சிறி ரங்கன், சுப்பு என்ற பெயர்களுக்குள் மறைந்திருக்கும் பொதுப் புத்தி மட்டத்துக்கு கீழான கருத்துக்களை கொண்டுள்ளவர்களை எப்போதும் வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டைப் பாக்கு என்று சொல்லுவினம்.
இவர்களின் கருத்தை பெரிதாக பிரசுரித்து பிரதான விடயங்களை விட்டு வேலிச்சண்டையில் எல்லோரையும் பங்கெடுக்கச் செய்யும் பாரம்பரியத்தை இனியொருவாவது விட்டுவிடுமா?
ஒன்றுமே சுப்பு ஏன் கட்டுச் சோறு கட்டிக்கொண்டு கடும் பயணம் போனார்? சந்திரபாபுவும் குறைத்து மதிப்படப்படுகிறார்.
தம்பையாவின் முழு பேட்டியும் வாசிக்காமல் இந்த கொசப்பு கதைகள் கதைத்து கொண்டிருப்பதில் உங்களுக்கு என்ன பிரயோசம்? இனியொருவும் அந்த முழு பெட்டியும் போட்டிருக்கலாம் தானே? எப்போது போடுவீர்கள்? மாக்சியத்துக்கு முழுமுதல் கடவுள் என்று யாருமில்லை. இது தம்பையாவுக்கும் பொருந்தும். மாக்சியம் உயிர் வாழுகின்ற விஞ்ஞான பூர்வமாக தொடர்ந்து வாழக்கூடிய தத்துவம். அது வளர்ச்சியடையுமே தவிர தேய்வடையாது. கோளமயமாதல், NGO, POST MODERNISM உட்பட எல்லோருமே பல THEORY கொண்டு வந்தார்கள் எல்லாம் விரையம்.
அதற்கிடையில் இந்த கொம்யூனிஸ்ட் காரர்களின் குடும்மிச் சண்டையோ தாங்க முடியவில்லை.
ஏ……. கொம்யூனிஸ்டுகளே உங்களுக்குள் இருக்கும் நில பிரபுத்துவ, முதலாளித்துவ, ஏகாதிபத்திய, சாதிய, பெண்ணிய, பிரதேச மற்றும் குறுகிய பல வக்கிரகங்களை தூக்கி எறிந்துவிட்டு பரந்த மனத்துடன் செயற்பட வாருங்கள். மக்கள் பாவம்.
நானும் சீனக்கம்யூனிட்கஸ்கட்சியில் ஒருபத்து வருடகாலத்தை செலவிட்டவன் என்கிற வகையில் எனது கருத்தை இங்கு சொல்லக் கடமைப் பட்டவன். சொல்லாவிட்டால் அந்த குற்ற உணர்வு என்னை எப்பவும் துழைபோட்டு அமைதியில்லாதவன் ஆக்கிவிடும்.
இன்றும் ஒருயினத்தின் அதாவது தமிழினத்தின் ஆதர்ஸபுருஷர்கள்களாக கண்முன்னே நிற்பது மு.கார்திகேசன் வி.ஏ.கந்தசாமி யோகேந்திரன்நாதன் யக்கச்சி மணியம் ´போன்றவர்கள் தான்.(வதைமுகாமில் பதினெட்டு மாத அனுபவங்கள் தொடரை தேனீயில் எழுதிக்கொண்டிருப்பவர்)
சீனவார்த்தைகளில் சொல்வதானால் இந்த எள்ளத்தனையும் சுயநலமில்லாத மனிதர்கள் தோற்றுப் போவதற்கும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் என்ன நிர்ப்பந்தம் ஏற்பட்டது?.
இதுவே இன்றுவரை வேதனை அளித்துவரும் விஷயமாகும்.
சிலதியாகங்களும் இந்த தியாகங்கள் மூலம் தன்னை உருக்குலைத்துக் கொள்ளுவதும் ஒருபுரட்ச்சிவாதிகளுக்கு உரியதல்ல. ஒரு கட்சி
தத்துவார்தரீதியில் தன்னை நாளாட்ட நடைமுறைகளின் ஊடாக உருவாக்கி கொள்ள வேண்டும். இதுவே அவனியில் புரட்சிகர கட்சியாக உருவாக்கி கொள்வதற்கான வழிமுறை.
சீனக்கம்யூனிஸ்சியோ சண்முகதாஸனோ அவரின் தோழர்களோ யாருக்கும் துன்பத்தை கொடுத்தவர்கள் அல்ல.மாறாக மற்றவர்களின் துன்பத்தை தமது துன்பமாக தோளில் இடைவிடாது கனம்தெரியாது சுமந்து வந்தவர்கள்.
அவர்களில் அவர்கள் வாழ்ந்தகாலத்தில் ஏற்படுத்திய துன்பசம்பவங்கள் அவர்களை ஒருபோதும் குற்றவாளியாக கண்டுகொள்ளாது வரலாறு.
ஒருகட்சியில் விவாதங்கள்வருவதும் அதில்இருந்து விலகிக் போவதும் அந்தகட்சிக்கே விலத்தும் உறுப்பினருக்குகோ அவமதிப்பை சேர்த்துவிடுவதல்ல…மாறாக அதன் கட்சியின் ஜனநாயகத்தன்மையை மேலும் பறையடித்து முரசு கொட்டுவதே!.
இங்கு தோழர் தம்பையா தோற்கவும்மில்லை. கம்யூனிஸ்கட்சி தாழ்ந்துவிடவுமில்லை.
வெட்கப்படவேண்டியது ஒரு கம்யூனிஸ்தோழர் “கீத்துறே” விமானநிலையத்தில் ஏழுமணத்தியாலங்கள் தண்ணீருக்கும் வழியில்லாமல் வழியேற்றிவிட்ட தமிழ்மக்களின் சிந்தனைக்காகத்தான்.
நீர் குப்பை கொட்டாத இடமே இல்லை போலிருக்கு ?
கழுதைக்கு தெரியுமா? கற்பூரண வாசணை?? முஸ்தப்பாவுக்கு தெரியுமா? முனியப்பர் கோவில் வழிபாடு??.
இந்த இடத்திற்குள் ஏன் ஓடிவந்து விளையாடுகிறீர்? ஏதாவது
கிரனைட் இருந்தால் பக்கதில் இருப்பவனின் மண்டைக்கு தூக்கியெறிந்து அந்த துடிப்பில் மகிழ்ச்சி கொள்ளலாமே ..முஸ்? அதுவும் ஒரு சில தமிழர்களுக்கு விடுதலைப் போராட்டம் தான்.
That is a good analogy and homology Chandran.Raja.
எனக்கு உம்மோட யோக்கியதை மட்டும்நல்லாத்தெரியும், இங்க வந்து மகானாகநடித்து.நீர் தப்பமுடியாது.
Mustang, that means TRASH in Tamil. I do not know who you are? Do you know this Chandran. Raja ? I do not know him either. The thing is our Tamil boys and girls have a lot to unload from their systems. Only then they will feel good.
புதிய ஜனநாயகக் கட்சியின் யோக்கியதையை அறிந்து கொள்ளத் தம்பையாவுக்கு 34 வருடங்கள் பிடித்திருக்கிறது. சரி இப்போதாவது புரிந்து கொண்டார் என்றளவில் மகிழ்ச்சி. ஆனால் அவர் கம்யூனிசம் பற்றி வைத்திருக்கிற அபி;ப்பிராயங்கள் குறித்து சந்தேகம் எழ இடமிருக்கிறது. தம்பையாவிடம் கேள்வி கேட்பவரிடமும் அந்தத் தெளிவு இருப்பதாகத் தெரியவில்லை. உதாரணமாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய கேந்திரம் என தமிழில் அவருடைய கட்சிப் பெயர் இருக்கிறது. ஆங்கிலத்தில் Ceylon Communist Unity Centre (CCUC)) என வருகிறது.
ஐக்கிய கேந்திரம் என்பது கட்சியாக இருக்க முடியாது. அது ஒரு ஐக்கிய முன்னணி மட்டுமே. ஆனால் கேள்வி கேட்பவர் கட்சி குறித்துக் கேட்கிறார். தம்பையாவும் ஐக்கிய முன்னணி என்ற கருத்துப்படவும் சொல்கிறார். கட்சி என்றும் சொல்கிறார். கட்சிக்கும் ஐக்கியமுன்னணிக்கும் இடையேயான வேறுபாடு தொடர்பான புரிதல்களைக் காண முடியவில்லை.
தவிர இராகரனைப் பெயர் சுட்டி குறிப்பிடும் தம்பையா மெத்தப்படித்தவர். இளம்படித்தவர் எனமொட்டையாகக் குறிப்பிடுவது பொருத்தமாகப்படவில்லை. கேள்வி கேட்பவரும் அதைத் தெளிவு படுத்த விரும்பியதாகத் தெரியவில்லை.
புதிய ஜனநாயக்கட்சி 94இல் சந்திரிகாவை ஆதரித்த கட்சி. பாராளுமன்றவாதத்தில் நம்பிக்கை வைத்துள்ள கட்சி. அது புரட்சி செய்யும் என்று நம்புவது அவரவர் விசுவாசத்த்pன் பாற்பட்டது. – அறிவின்பாற்பட்டது அல்ல.
சுருக்கமாகச் சொன்னால் நடுத்தரவர்க்க இடதுசாரித்துவத்தின் நமைச்சல் தான் அது சொறிந்துவிட அது போய்விடும். ஆனால் புரட்சி வராது.
அந்த மெத்தப்படித்தவரிடம் தம்பையா கையொப்பம் இட்டுக் கொடுத்தாரா என அறியவும் ஆவல்.
விலகலுக்கான இவருடைய விளக்கமும், விமர்சனமும் விரிவாக இல்லை. பொதுவாக இருக்கிறது. எதில் பிரச்சினை என்பதை குறிப்பாக கூற வேண்டும். மக்களை அணிதிரட்ட முடியவில்லை என்பது அவர் அதிகப்பட்சமாக கூறியுள்ள அரசியல் காரணம்.