தாம் எந்தவிதமான நிதி மோசடியிலும் ஈடுபடவில்லை என அமெரிக்கத் தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் அந்நாட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
கெலொன் ஹெட்ஜ் நிறுவனத்தின் ஸ்தாபகரான ராஜ் ராஜட்னம் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜரட்னத்திற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக அவர் நீதிமன்றில் ஆஜராகினார்.’நான் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை’ என்ற ஒரே வசனத்தை மட்டுமே அவர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க வராலாற்றில் பங்கு பரிவர்த்னையில் இடம்பெற்ற மிகப் பெரிய மோசடி நடவடிக்கை இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.பி.எம்., இன்டல், மெகன்ஸீ போன்ற முக்கிய நிறுவனங்களின் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கையின் ஊடாக மோசடியான முறையில் ராஜ் ராஜரட்னம் உள்ளிட்ட சிலர் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை லாபமாக ஈட்டியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
100 மில்லியன் ரூபா பிணைத் தொகை வழங்கினால் மட்டுமே விடுதலை செய்ய முடியும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள அதேவேளை, பிணைத் தொகையை குறைக்குமாறு ராஜ் ராஜரட்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.