மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது முதலே எதிர்க்கட்சிகள் பெகாசஸ் உளவு தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து அவையை முடக்கி வருகிறார்கள். இத்தனைக்கு மத்தியிலும் பெரும்பான்மை இருப்பதால் பாஜக பல மசோதாக்களை கேள்விக்கிடமின்றி விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. திங்கள் கிழமை இன்சூரன்ஸ் துறையை தனியார் மயமாக்கும் மசோதாவையும் தாக்கல் செய்ய இருக்கிறது.
இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் விவசாயிகளை சந்தித்து ஆதரவு வழங்கினர்.
அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயிகளை காப்பாற்று, இந்தியாவை காப்பாற்று என்று வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஏந்தியபடி கோஷங்களையும் எழுப்பினர்.