இந்தியாவிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் தமிழீழ பல விடுதலைப் புலிகளுக்கு எதிராக ராஜீவ் கொலை உட்பட விமர்சனங்களை முன்வைத்தன. இவை அனைத்தும் ஐ.நா வில் இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கின்றன. மனித உரிமை கண்காணிப்பகம் புலிகளின் மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்தியிருந்தது, ஜேனிவா தீர்மானத்தை முன்மொழியும் அமரிக்கா புலிகளை நிராகரித்திருக்கிறது. இந்த நிலையில் ராஜபக்ச அரசாங்கம் தமக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்பவர்களை புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள் என விமர்சிபது எவ்வாறு நியாயமானதாகும்.
போரின் இறுதி நேரத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மட்டுமே அமரிக்க ஆதரவு தீர்மானம் இலங்கை அரசைக் கோருகிறது. நிலைமை இவ்வாறிருக்க போர்க்குற்றங்கள் குறித்துப் பொறுப்புக் கேட்கும் எவரையும் புலிகளோடு இலங்கை அரசு தொடர்புபடுத்துவது எவ்வாறு நியாயமானதாகும் என மனித உரிமைகள் கண்காணிபகம் குறிப்பிடுள்ளது.