தமிழக வரலாற்றில் சென்னை அவ்வப்போது வெள்ளச் சேதத்தை சந்தித்தே வந்திருக்கிறது. ஆனால், 2015 வெள்ளம் என்பது பல ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை எதிர்கொண்ட ஒன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மீது செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டது தொடர்பாக பல விமர்சனங்கள் அப்போது வைக்கப்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் நிலையில் தமிழ்நாடு அரசுக் கட்டமைப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் அதன் பின்னர் இரண்டாவது முறையும் அதிமுகவே ஆட்சிக்கு வந்தது. மொத்தம் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக 2015- வெள்ளச் சேதத்தில் இருந்து எந்த பாடங்களையும் கற்றுக் கொள்ளவில்லை.
அதன் விளைவுதான் இப்போதைய வெள்ளம் 2015 போன்று வெள்ளம் இப்போது இல்லை என்றாலும் ஆங்காங்கே தாழ்வான் பகுதிகளில் வெள்ளம் வடியாமல் நின்று வர இரண்டு காரணங்கள் ஒன்று ஆங்காங்கே கட்டபப்ட்ட மேம்பாலங்கள், மெட்ரோ சுரங்கப்பாதைகள், ஸ்மாட் சிட்டி என்ற பெயரில் அழகாக்கப்பட்ட தெருக்கள். இவை அனைத்தும் மழை நீர் வடிகாலை மனதில் கொள்ளாமல் கட்டப்பட்டவை இதுதான் இப்போதைய மழை வெள்ளத்திற்குக் காரணம்.
சென்னையில் மணலி, திரு.வி.க.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.கொரட்டூர், கொளத்தூர் ஜி.கே.எம். காலனி, பூம்புகார் நகர், பெரவலூர், புளியந்தோப்பு, மேற்கு மாம்பலம் ஆகிய முக்கிய பகுதிகளில் தேங்கிய மழைநீரை இன்னும் வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3வது நாளாக தனது ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார். அதன்படி சென்னை கொளத்தூர் தொகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரடியாக சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதோடு மட்டுமின்றி அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவ முகாமையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்.
சென்னை நகரத்தைப் பொறுத்தவரை பல நூறு கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக செலவிடப்பட்டது பாண்டி பஜார், போக் சாலை போன்ற பகுதிகள் ஸ்மாட் சிட்டி போன்று அழகாக்கக்கப்பட்டது ஆனால் அங்குதான் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.
நகர் பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரை 730 மீட்டர், தணிகாசலம் சாலை முதல் போக் சாலை வரை 380 மீட்டர், போக் சாலை முதல் அண்ணா சாலை வரை 564 மீட்டர் என மூன்று கட்டங்களாக நடைபெற்று வந்த திறன்மிகு நடைபாதை வளாகம் அமைக்கும் பணிகளில் பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரையும், தணிகாசலம் சாலை முதல் போக் சாலை வரை பெருஞ்செலவில் பணிகள் முடிக்கப்பட்டு துவங்கப்பட்டன. ஆனால் மழை நீர் வடியாமல் இந்த பகுதிகளில்தான் அதிக தண்ணீர் நிற்கிறது.