கியுபா நாட்டின் அரசியலை ஏற்றுக்கொள்ளாத நூற்றுக்கணக்கானவர்களை 2011 ஆம் ஆண்டு ஸ்பானியஅரசு வரவேற்றது. கத்தோலிக்க திருச்சபை, கியுபா அரசு மற்றும் ஸ்பானிய அரசுகளிடையேயான உடன்பாட்டின் அடிப்ப
டையில் இவர்கள் ஸ்பானியாவிற்கு அழைத்துவரப்பட்டார்கள். அவர்களுக்கு ஸ்பானிய அரசு வேலையற்றோருக்கான உதவித்தொகையையும் வழங்குவதாக உறுதியளித்தது. பல ஆயிரக்கணக்கில் கியூபாவிலிருந்து வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் சில நூற்றுக்கணக்கானவர்களே வெளியேறினர். இந்த வெளியேற்றம் கியூபாவிற்கு எதிரான பிரச்சாரமாக பல்தேசிய வியாபார ஊடகங்களில் வெளியாகியது. இவ்வாறு வெளியேறி ஸ்பா
னியாவில் குடியேறிய குடும்பங்களில் ஒன்று கில்பேர்டோ மார்டினேஸ் எனபவரது குடும்பமும் ஒன்றாகும். ஐரோப்பியப் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்ட இவர்களது குடும்பம், வாழ்வதற்கு வழியின்றி, வேலையற்று செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புக்களின் உதவியுடன் வாழ்ந்து வந்தது.
கியுபாவையும் அதன் அரசியல் பொருளாதாரத்தையும் ஏற்றுக்கொள்ளாத மார்டினேஸ் குடும்பம் வாழ்ந்து வந்த வீட்டை நோக்கி மே மாதம் 7ம் திகதி ஸ்பானியப் பொலிஸ்படை சென்றது. அவர்கள் வீட்டின் உரிமையாளருக்கு வாடகை வழங்காத குற்றத்திற்காக அவர்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு நடுத்தெருவில் தள்ளப்பட்டார்கள். பணம்படைத்த வீட்டின் உரிமையாளருக்காக கனவுகளோடு ஸ்பெயினிற்கு வந்த கியூபக் குடும்பம் தெருவில் தள்ளப்பட்டது.
நகரங்களில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் ஆயிரக்கணக்கானவர்களைக் காண்பது ஸ்பானியாவில் வழமையாகிவிட்டது.
இப்போது கியுப அரசியலையும் ஜனநாயகத்தையும் புரிந்து கொள்வதாக கில்பேர்டோ மார்டினேஸ் கூறுகிறார். இதுதான் ஸ்பானியா என கியூபாவிலிருக்கும் போது தெரிந்திருந்தால் தான் அங்கிருந்து வெளியேறியிருக்க மாட்டேன் என்கிறார். ‘இப்போது நான் கேட்பதெல்லாம் எமது குடும்பத்தை மீண்டும் கியூபாவிற்கு அனுப்பிவையுங்கள் என்பதே’ என மார்டினேஸ் உருக்கமாகக் கூறுகிறார்.
கியூபாவில் உலகின் மிகச்சிறந்த மருத்துவ வசதி, கல்வி வசதி உட்பட மற்றும் அ
னைத்து அடிப்படை வசதிகளும் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
நி.நே