எகிப்தில் நடந்ததைப் போன்று இலங்கையிலும் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றால் எனது கைத்துப்பாக்கிக்கு பதில் சோல்ல வேண்டி வரும் என அமைச்சர் மேர்வின் டி சில்வா எச்சரித்துள்ளார். இலங்கையில் தேவைக்கும் அதிகமாக ஜனநாயகம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், பேரணிகள் நடாத்த, அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்க, வேலை நிறுத்தங்களில் ஈடுபட, அரசாங்கத்தை விமர்சிக்க என அனைத்து வகையான சுதந்திரமும் இருப்பதாக வலியுறுத்தியுள்ளார்.
அப்படியான சூழ்நிலையில் அதற்கு மேலதிகமாக வேறு என்னதான் தேவை என்று கேள்வியெழுப்பிய அவர், அரசாங்கத்துக்கு
எதிராக சதிசெய்ய முயன்றால் முதலாவது குண்டு தனது கைத்துப்பாக்கியிலிருந்தே தீர்க்கப்படும் என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
எத்தனை பேரைத்தான் துப்பாக்கிகள் சுடும்? ஆனால் இலங்கையில் புரட்சிக்கு சாத்தியமில்லை ஏனெனில் இலங்கையர் வெள்ளயின் சூ துடைத மனோபாவத்தில் இருந்து இன்னும் விடுபடவே இல்லை.வெள்ளக் காக்கா மல்லாக்கு பறக்கும் எனில் சிவப்பு யானை பல்லாக்கு தூக்கும் எனில் புரட்சி இலங்கையில் சாத்தியம்.