எகிப்தின் அமரிக்க சார்பு இஸ்லாம் அடிப்படைவாத ஜனாதிபதியான மோர்சிக்கு எதிரான ஆர்பாட்டங்கள் எகிப்தை நிலைகுலையச் செய்தன. எகிப்திய ஜனாதிபதி அறிவித்துள்ள சர்வஜன வாக்கெடுப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடைபெற்றன. ஐ.எம்.எப் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைக்கு இணங்க எகிப்தின் கடன் தொகையை 8.5 வீதத்தால் குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மோர்சியின் பிரதான முடிவுகளில் ஒன்று.
இதற்காக ஐ.எம்.எப் இணக்கத்தின் அடிப்படையில் மக்களின் நாளந்த பாவனைப் பொருட்களின் விலையை அதிகரிப்பதும் அதற்கான வரி வீததை அதிகரிப்பதும் மோர்சி அரசு தொடர்ந்து நிலைகொள்வதற்கான தேவையாக அமைந்தது. உலகின் எண்ணை வளம் கொண்ட செல்வந்த நாட்டை சுரண்டிய அமரிக்காவும் அதன் உள்ளூர் முகவர்களும் இன்று மக்களின் அடிப்படைத் தேவைகளையும் அழிக்க முற்படுகின்றனர். இந்த நிலையில் மோர்சியின் புதிய அரசியல் அமைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறார். இந்த அரசியல் அமைப்புத் திட்டத்தை ஐ.எம்.எப் ஆதரிக்கிறது. ராஜபக்சவைப் போன்று சர்வாதிகாரத்தையும் அனைத்து அதிகாரத்தையும் நிறுவுவதற்கான இந்த அரசியல் அமைப்பை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்துகின்ரனர்.
There is a Egyptian identity. There is an Arab identity. There is a Sunni Muslim identity. Then we lump the rest in the Fourth column. So, they need a Quartet like the one that Tony lair is heading for Palestine.