ஜெயலலிதா உயிரோடு இருந்த போதும் சரி எடப்பாடி பழனிசாமி பதவியில் இருந்த போதும் சரி செல்வத்தோடும் செல்வாக்கோடும் இருந்தவர் இந்த இளங்கோவன், அமைச்சராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ இல்லாமல் கூட்டுறவு சங்க மாநில தலைவராக இருப்பவர்தான் இந்த சேலம் ஆர். இளங்கோவன்.
அதிமுகவில் ஜெயலலிதா பேரவை செயலாளராக இருக்கும் இவர் கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள். ஒப்பந்ததாரர்களிடம் இருந்து வசூலித்து சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்த இளங்கோவன் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துக் கொடுத்துள்ளதோடு செல்வாக்கோடும் இருந்தார்.
தமிழ்நாடு முழுக்க பண்ணை வீடுகள், பிரமாண்ட நவீன சொகுசுப்பள்ளிகள், ஆடம்பர வீடுகள் என கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இளங்கோவனின் சொத்துக்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.
எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான இவர் 3 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களைச் சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதனையொட்டி அவருக்குச் சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.