‘ஊற்றுக்களும் ஓட்டங்களும்: மீனாட்சியம்மாள் முதல் மார்க்ஸிம் கார்க்கி வரை ஆசிரியர்: லெனின் மதிவானம்
பதிப்பகம்: பாக்கியா பதிப்பகம்
இந்த நூலின் வழியாக பல்வேறு விடயங்கள் பற்றியதான ஆய்வறிவியற் கட்டுரைகளை தேர்ந்தெடுத்து இலக்கிய வாசகர்களுக்காகத் தொகுத்துத் தருகின்றார் லெனின் மதிவானம்;. எல்லா கட்டுரைகளிலும் உண்மையைத் தேடும் முயற்சியும்; அறிவியல் அணுகுமுறையும் இணைந்து செயற்படுகின்ற விதம் வியப்பை தருகின்றது.
இலக்கியத் திறனாய்வு இலக்கியத்தின் சமூகவியல் வாழ்க்கை மற்றும் சமூக வரலாறு நாட்டாரியல் Nபுhன்ற இன்னோரன்ன கட்டுரைகள் இந்த நூலின் முக்கியத்துவத்துக்குத் துணையாக நின்கின்றன.
இந்நூல் இருபது கட்டுரைகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.
• நூல்களைப் பற்றிய திறனாய்வு
• படைப்பாளிகள் பற்றிய நினைவுக் குறிப்புகள்
• ஒரு குறிப்பிட்ட படைப்பினூடாக, அந்த படைப்பாளி பற்றிய தேடலும், ஆய்வும், அறிமுகமும்,
• தேடப்படாத ஆளுமைகள் பற்றிய தேடல்களும் அவர்களின் பங்களிப்புப் பண்பாட்டுப் கூறுகளின் வெளிக்கொணர்வும்.
• தன்நோக்குக் கட்டுரைகள்
• பேராசிரியர் அமரர் கைலாசபதியின் கருத்தியல் முக்கியத்துவங்கள் பற்றிய எடுத்துக்கூறல்கள்
• மலையக நாட்டார் இலக்கிய மரபு பற்றிய ஆய்வு
என நாம் இருபது கட்டுரைகளையும் வகைப்படுத்திக் கொள்ளலாம். வகைப்படுத்திக் கொள்ளல் என்பது கூட ஒரு வசதி கருதிதான். முதல் கட்டுரை ‘மலையக நாட்டார் இலக்கயம்- மரபும் மாற்றமும் என்பது. இந்தத் தலைப்பு எனக்கு பழைய ஒரு நினைவைத் தந்தது. சில காலங்களின் முன் பதுளை மாவட்டத்தில் உள்ள நியூபர்க் தமிழ் வித்தியாலயத்தில்; ஒரு ஆய்வரங்கம் நடத்தப்பட்டது. என்னையும் அழைத்திருந்தார்கள். விழா அழைப்பிதலில் ஆய்வரங்கப் பிரிவில் முதல் அரங்கு மலையக நாட்டாரில் ஆய்வு. ஆய்வாளர்ளூ லெனின் மதிவாணம். தலைப்பு மலையக நாட்டாரிலக்கியம் – மரபும் மாற்றமும். லெனின் மதிவாணம் அவர்கள் எந்தத ஒரு நிகழ்விலாவது உரையாற்ற ஒப்புக்கொண்டால் தனது உரைக்கான விஷயம் பற்றியதொரு தெளிவான தேடலுடன், ஆய்வறிவு பூர்வமான உரைக்கான தயாரிப்புக்களுடன், குறிப்புக்களுடன் தான் சபை முன் நிற்பதுண்டு. அந்தச் சபை என்பது ஒரு சாதாரணக் கலந்துரையாடலாக இருக்கலாம்.
கூட்டமாக இருக்கலாம் ஆய்வரங்கமாக இருக்கலாம், அல்லது ஒரு மாபெரும் விழாவாகக்கூட இருக்கலாம். ஆனாலும் நண்பர் மதிவானம் அந்தத் தயார் நிலையிலேயே வந்திருப்பார். வெகு சிலரிடமே காணப்படும் இந்தப் பொறுப்பு நிறைந்த சிறப்பு நிலை லெனினிடம் மிகைப்பட்ட எனக்கு அவர் மேல் ஒரு மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதில் அதிசயம் என்னவென்றால் நியூபர்க் தமிழ் வித்தியாலய விழாவுக்கு ஒரு சில அவசர அசௌகரியங்களால் பங்கு கொள்ள முடியாமைக்கான வருத்தத்துடன் தொலைபேசிச் செய்தி விழாக்குழுவினருக்கு வந்து சேர்ந்தது. அவருக்கு வரமுடியாமற் போய்விட்டாலும் அந்த ஆய்வரங்கிற்கான உரைக்காக அவர் எத்தனை அர்ப்பணிப்புடன் செயலாற்றியுள்ளார் தன்னை தயார் படுத்திக் கொண்டுள்ளார் என்பதை இந்த முதற்கட்டுரை உணர்த்துகிறது.
இந்தத் தேடல் முயல்வும், அர்ப்பணிப்பும், தமிழின் பல்வேறு துறைகள் சார்ந்த பயில்வும் இவரை ஈழத்து இலக்கி உலகின் ஒரு முக்கியமான விமர்சகராக அடையாளப் படுத்தியிருக்கின்றன.
இந்த நூலின் முதற் கட்டுரையே மிகவும் முக்கியமானது. மலையக நாட்டார் இலக்கியம் பற்றியது. இருபதாம் நூற்றாண்டின் பிற்கூற்றை நாட்டாரியல் பற்றிய ஆய்வு யுகம் என ஆய்வறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இன்று நாட்டுப்புற இயல் பல்கலைக்கழகங்களில் தனித்துறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. முதுகலையில் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. நாட்டாரியல் துறையில் இருபதுக்குமேற்பட்டவர்கள் டாக்டர் பட்டம் பெற்றுள்ளர். (பேராசிரியர் லூர்து நாட்டார் வழக்காறுகள்) 1950 – 60 களில் தான் ‘வெறுப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளான ஒரு துறையான நாட்டார் இலக்கியத்துறை பற்றிய கரிசனையும் அக்கரையும் தமிழ் இலக்கிய உலகில் மேலெழுந்தது என்கையில் மலையக நாட்டாரிலக்கியம் பற்றிப் பேசவே தேவையில்லை.
லெனின் மதிவாணம் அவர்களே ஒரு இடத்தில் குறிப்பிடுவதைப்போல் ‘மலையக மக்களின் கல்வித் தகுதியில் எழுத்தறிவு மட்டம் மிகவும் தாழ்ந்த நிலையிலேயே காணப்படுகின்றது. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முந்திய மலையக மக்களின் நாட்டார் பாடல்களை சேகரித்து வைத்திருக்கக்கூடிய வசதியோ வாய்ப்போ கிடைத்திக்காது. மலையக நாட்டார் பாடல்களை ஏட்டிற்கு கொண்டு வருகின்ற முயற்சிகள் மிகவும் அரிதாகவே உள்ளன. சி.வி.வேலுப்பிள்ளை மலையக மக்களிடையே வாய்மொழியாகக் காணப்பட்ட நாட்டார் பாடல்கள் சிலவற்றினைத் தொகுத்து வெளியிடப்பட்டமை ஒரு முக்கியமான சாதனையாக அமைந்துள்ளது.
சி.வி அவர்களின் இந்த சாதனை மிக முக்கியமானது. ஒரு கனத்துடனும், கவனத்துடனும் பதியப்பட வேண்டிய ஒன்றாகும். அதை இந்த நூல் செய்துள்ளது. சி.வி.க்கு நாட்டாரிலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. இந்த நாட்டாரிலக்கிய ஈடுபாடும், ஒரு கவிஞனின் மனநிலையுமே அவருடைய உரைநடை வெற்றிக்கான காரணங்கள். இகழ்வுக்குள்ளாக்கப்பட்டுக் கிடந்த இந்த மலைகளிடையே மலையக மக்களிடையே, இப்படியும் ஒரு புதையல் ஆழத்தில் புதைந்து கிடக்கிறது என்பதை அடி எடுத்துக்காட்டிய முதல்வர் என்ற பெருமையும் இவரையே சேர்கின்றது.
இதே நூலின் பிரிதோர் கட்டுரையிலும் (சி.வியின் எழுத்துப் பணிகள் பற்றியது) ‘சமூக உணர்வுடனும் நாட்டார் பாடல்கள் குறித்த சரியான பார்வையுடனும் சி.வி இம்முயற்சியினை மேற்கொண்டுள்ளார்…. இத்தொகு;பில் அடங்கிய பாடல்கள் அனைத்தும் அவருக்கு மனப்பாடம்’ என்று மிகவும் சரியாகவே குறிக்கின்றார் நூலாசிரியர் லெனின் மதிவானம். சி.வியுடன் மிக நெருக்கமாகப் பழகிய ஒரு சில நண்பர்கள் அவருக்கு குஷி வந்துவிட்டால் அமைதியாகப் பாட்டுப்பாடியபடி இடுப்பை நெளித்து நெளித்து ஆடுவார். ஆட்டத்துக்காக அவர் பாடிக்கொள்ளும் பாட்டு ஒரு மலையக நாட்டார் பாடலாகவே பெரும்பாலும் இருக்கும்’ என்று என்னிடம் கூறியது என் நினைவில் எழுகிறது.
அந்த ஐம்பது அறுபதுகளில் மலையகத்தில் மட்டுமின்றி இலங்கையின் தமிழ் கூறும் மற்றைய பகுதிகளிலும் கூட நாட்டாரிலக்கியம், நாட்டார் பாடல்கள் பற்றிய தேடுதலோ அக்கறையோ இல்லாதிந்த அந்த நாட்களில் வட்டுக்கோட்டை மு.இராமலிங்கம் என்பவர் ஏடுகள், சஞ்சிகைகள் என்று சகல அச்சு ஊடகங்களிலும் நாட்டார் இலக்கியம், நாட்டார் பாடல்கள் பற்றியே எழுதியும், பாடல்கள் சிலவற்றை தொகுத்தும் தந்து கொண்டிருந்ததை நினைவு கூர்தல் அவசியமாகிறது.
சி.வியைப் போலவே ஆங்கில மொழிக்;; கல்வியும் தமிழ் ஆங்கில மொழிப் புலமையும் மிக்கவரான மு.இராமலிங்கம் அவர்களின் நாட்டார் வழக்காற்றியல் பற்றிய ஆக்கங்களை தமிழகப் பத்திரிகைகளும் கொடுத்துப் பிரசுரித்துள்ளன. உள் நாட்டு இறைவரித்திணைக்களத்தில் ஒரு வருமான வரி உயர் அதிகாரியாகப் பணியாற்றிய திரு.மு.இராமலிங்கம் வெள்ளவத்தையில் வசித்தவர். ஆரம்பத்தில் வெள்ளவத்தை மு.இராமலிங்கம் என்றே எழுதியவர் ஓய்வு பெற்று யாழ்ப்பாணம் சென்றபின் வட்டுக்கோட்டை மு.இராமலிங்கம் என்று எழுதி வந்தார்.
மக்கள் கவிமணி என்ற அடைமொழியுடனேயே மு.இராமலிங்கம் அழைக்கப்பட்டார்.1882 சி.வி அவர்களுக்கும் மக்கள் கவிமணி என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டு விழா நடத்திக் கௌரவித்தது அந்தனி ஜீவாவின் மலையகக் கலை இலக்கியப் பேரவை இந்த விழாவில் சி.வி பற்றிய சிறப்புரையை ஆற்றியவர் பேராசிரியர் கைலாசபதி அவர்கள். 1972 ல் இலங்கைக் கலாசாரப் பேரவை யாழ்ப்பாணத்தில் நடாத்திய தமிழ் இலக்கிய விழாவிலும் சி.வி. உட்பட எழுவர் கௌரவிக்கப்பட்டனர். கௌரவம் பெறுவோர் பற்றிய உரையையும் எழுவர் நிகழ்த்தினர். சி.வி பற்றிய உரையை நிகழ்த்தியவர் பேராசிரியர் கைலாசபதி அவர்களே என்பது குறிப்பிடக்கூடியது.
வட்டுக்கோட்டை மு.இராமலிங்கம் பற்றி பேராசிரியர் கைலாசபதி குறிப்பிடும்போது ‘பொதுவாகவே ஈழத்தில் நாட்டுப் பாடல்களைச் சேகரிப்போரும் தொகுத்து வெளியிவோரும் அருந்தலாகவே உள்ளனர். விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே இத்துறையில் இடைவிடாது உழைத்து வருகின்றனர். இச்சிறு குழுவினருக்குள் மக்கள் கவிமணி மு.இராமலிங்கம் வாந்து குறிப்பிடத்தக்கவர்’ என்று எழுதுகின்றார். இந்த இரண்டு மக்கள் கவிமணிகளையும் அவர்களது மக்கள் இலக்கிய செயற்பாடுகள் அடையாளம் கண்டு அட்டையில் படம் பிரசுரித்துக் கனம் பண்ணியுள்ளார் ‘மல்லிகை’ ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள்.
1969 ஆகஸ்ட் மல்லிகை மக்கள் கவிமணி மு.இராமலிங்கம்
1979 மே. மல்லிகை மக்கள் கவிமணி சி.வி வேலுப்பிள்ளை
இந்த ஆய்வுக் கட்டுரைகளடங்கிய நூலில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா பற்றதொரு நினைவுக் குறிப்பு இருக்கிறது. ‘இங்கிவரை யான் பெறவே என்ன தவம் செய்தேனோ! என்னும் தலைப்புடன். கைலாசபதி போன்று வளரக்கூடிய ஆய்வாளனொருவனே இன்று மலையகம் பெற்றிருக்கிறது’ என்னும் லெனின் மதிவாணம் பற்றிய ஜீவாவின் கூற்றுக்கான சிலரின் எதிர்வினைகள் தனக்கு வேதனை தந்ததாக லெனின் ஓரிடத்தில் குறிக்கின்றார்.
இது வேதனையை விடவும் எனக்கு சுகம் தரும் விடயமாகவே தெரிகின்றது. ஆய்வறிவுடைமைக்குச் சான்று கருத்தொற்றுமை அல்லவே.’சுந்தரம் பிள்ளையிலிருந்து வரதராசனார் ஊடாக வரும் புகழ்பெற்ற தமிழறிஞர்கள் தமிழாய்விலும் பார்க்க தமிழபிமானத்தையே ஏற்புடைமைக்கு அளவு கோலாகக் கொண்டியங்கினர். மாறுபட்ட கருத்துடையோரை மாற்றார் என்றும் திறனாய்வுப் போக்குடையோரை துரோகிகள் என்றும்ளூ பகுத்தாயும் பண்புடையோருக்குப் பலவாறான பட்டங்கள் சூட்டுவதும் இவர்களது பழக்கம்’ (கோ.கேசவனின் ‘மண்ணும் மனித உறவுகளும்’ நூல் முன்னுரை)
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தந்த நந்தினி சேவியர் போன்றவர்கள் பற்றிய நூலாசிரியரின் நினைவுகள் மொழியியல், மானிடவியல், மக்கட்பண்பாட்டியல் போன்ற ஆய்வு துறை சார்ந்த வெளிகள் என்றெழுதி வைக்கின்றார் பேராசிரியர் கைலாசபதி. உழைப்பும், அர்ப்பணிப்பும், தேடலும் வாசிப்பும் இல்லாமலே உயர்வு பெற விரும்பும் எவரையுமே இலக்கிய உலகம் புறக்கணித்தே வந்துள்ளது என்பது தான் வரலாறு. நீங்கள் ஒவ்வொருநாளும் எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும்’ என்றார் லெனின்.
நமது லெனின் மதிவானம் அவர்களும் வாசிப்பிலும், தேடுதலிலும், அறிந்து கொள்வதிலும் அறிந்து கொண்டதை பகிர்ந்து கொள்வதிலும் அதையே செய்துக் கொண்டிருக்கின்றார் என்பது இந்த நூலின் வழியாகவும் ஊர்ஜிதம் பெறுகின்றது. தமிழியல் ஆராய்வும் உண்மையைத் தேடுகின்ற முயல்வும் இந்நூலின் ஆக்கங்களுக்குள் இணைந்து செயற்படுகின்றன. என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன். உண்மையைத் தேடுதல் என்பது திறனாய்வுச் செயற்பாட்டின் இன்னொரு முக்கிய பரிமாணம்.
‘எம்முன்னால் தரப்பட்டு இருக்கின்ற ஒன்றை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அது எப்படி என்று நமது மூளை கேள்வி எழுப்பும்போது மறுக்கத் தொடங்கும்போது மெய்யியல் திறனாய்வு தொடங்கி விடுகின்றது என்கின்றார் திறனாய்வு மெய்யியலாளரான ஜிஜெக் (ளுயடஎழத ணுணைநம) ஜிஜெக் அவர்களின் எழுத்துக்கள் என்பதுகளை அடுத்தகாலப்பகுதிகளில் சோர்ந்திருந்த மார்க்சியர்களையும், இளம் இடது சாரி அறிவு வட்டத்தினரையும் புத்தூக்கம் கொள்ளச் செய்தது. உளப்பகுப்பாவையும் மாக்சீயத்தையும் சேர்த்து அவர் பயன்படுத்தியமையும் மனது மெய்யியல் கருத்துக்களை விவரிக்க பொதுப்பண்பாட்டிலிருந்து அவர் உதாரணங்கள் எடுத்துக்காட்டியதும் பலருக்கும் ஈர்ப்புடையதாய் இருந்தது. என்கின்றனர் பிரித்தானிய திறானாய்வாளர்கள். (ரஃபேல் கனடாவின் காலம் இதழ் 39 – ஜிஜெக் பற்றிய கட்டுரை).இதை அப்படியே லெனின் மதிவானம் அவர்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்.
இலக்கிய வரலாறும்ளூ இலக்கிய ஆளுமைகள் பற்றிய ஆய்வுகளும், நவீன இலக்கியங்கள் பற்றிய சமூகவியில் இலக்கியங்கள் பற்றிய சமூகவியல் அடிப்படையிலான திறனாய்வுகளும்ளூ அறிமுகமும் என விரிவடையும் இவரது ஆக்கங்கள், எழுத்துக்கள், உரைகள் என்பதை மேலும் பல இளம் திறனாய்வாளர்களை உற்சாகத்துடன் உருவாக்கும் ஆதர்சமாகத் திகழும்.
நான் எழுத ஆரம்பித்த அறுபதுகளைத் தொடர்ந்த காலங்களில் எனக்கு ஒரு கனவு இருந்தது. ஈழத்து நவீனத் தமிழ் இலக்கியத்தின் ஒரு சிறப்புமிக்க காலம் அது. இந்தச் சிறப்புக்கான காரணிகள் பலவாறாக இருந்தாலும் முக்கியமான காரணியாகத் திகழ்ந்ததும் அடையாளப்படுத்தப்பட்டதும் பல்கலைக்கழகத் திறனாய்வுப் பயிற்சிகளும் செல்நெறிகளுமாகும். தமிழ் இலக்கியத் திறனாய்வுத்துறைக்கும் ஆய்வறிவுத் துறைக்கும் ஒரு புதிய ஒளியையும் புதிய செல்நெறியையும் புகுத்திய பேராசிரியர் கைலாசபதியின் சுவடுகள் பல்கலைக்கழகத்தில் பதியத்தொடங்கிய காலம் அது. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் தனித்துவச் சிறப்புகளை தமிழ் இலக்கிய உலகுக்குக் கொண்டு சென்ற முன்னிறுத்திய பெருமையும் அவருக்குரியது. பல்கலைக்கழகங்களுக்கும் சமூகங்களுக்குமிடையிலான ஒரு உறவுப் பாலமாகவும் திகழ்ந்த பேராசிரியரின் பலவீனமாகத்திகழ்ந்தது அவருடைய குழுமனப்பாண்மை. தன்னனி சாராத மற்றையேரை அவர் மிக மூர்க்கமாக மறுதலித்தார். ‘மெய்யியல் ஆய்வு பூர்வமானதும், விஞ்ஞான ரீதியிலானதுமான இலக்கியத்திறனாய்வினை நாங்கள் கற்றுக் கொண்டதே பேராசிரியர் கைலாசபதியவர்களிடம் தான் என்று விதந்து கூறும் தமிழகத் திறனாய்வாளர் தமிழவன் கூட ‘அவர் சுட்டிக் காட்டும் சில படைப்பாளர்களும் அவர்தம் படைப்புகளும் எனக்குப்; பொறுத்தமாகப்படாதது மட்டுமல்லாமல் ஏமாற்றத்தையும் தந்தது என்கின்றார்.
‘கைலாசபதியின் உரைநடை விதந்து குறிப்பிடத்தக்கது. அவரது ஆற்றலையும் ஆளுமையையும் புலப்படுத்தத்தக்க வகையில் தனித்துவம் வாய்ந்ததாக அது உள்ளது.பேராசிரியர் கைலாசபதியிடம் காணத்தக்க பிறிதொரு சிறப்பம்சம், எழுத்தாளரை, இளம் ஆய்வாளரை திறனாய்வாளரை ஊக்கமூட்டி உழகை;கச் செய்யும் பண்பாகும். இத்தனை சிறப்பும் ஆற்றலும் மிக்க திறனாய்வாளர் கைலாசபதியிடம் குறைபாடுகளும் இல்லாமலில்லை. அவரை ஓரளவுக்குக் குழுமனப்பான்மை பாதித்திருந்தது’ (கலாநிதி துரை மனோகரன்- தமிழ்த்துறை பேராதனை பழ்கலைகழகம் – இளங்கதிர் 1992).
இளம் ஆய்வாளர்களை ஊக்குவித்து உழைக்கச் செய்து உற்சாகப்படுத்தும் அவருடைய பண்பும் பணிகளும் மலையகத்திலிருந்து பல்கலைக்கழகம் சென்றவர்களில் ஒரு சிலரையாவது முகிழச் செய்யாதா? ஒரு திறனாய்வாளராக மத்தியிலிருந்து ஆய்வாளர்கள், விமர்சகர்கள் தோன்ற மாட்டார்களா என்பதே எனது அந்த நாளையக் கனவு. அந்த கனவில் முகம் காட்டியவர்களில் சிலர். எம்.வாமதேவன், பி.மரியதாஸ், எல்.சந்திரகுமார், மு.நித்தியானந்தன் போன்றோர். மு.நித்தியானந்தன் நிர்பந்தம் காரணமாகப் புலம் பெயர்ந்து விட்டார். மற்றவர்கள் வௌ;வேறு துறைகளைக் கொண்டனர்.
அறுபதுகளில் அந்தக் கனவை தொண்ணூறுகளின் பின் நனவாக்கிக் கொண்டிருப்பவர் லெனின் மதிவானம் அவர்கள். ஆய்வு ரீதியான திறனாய்வியலையே தனக்கான துறையாகக் கொண்டு கற்றலும், தேடலுமாக அதன் ஆழ அகலங்களுடன் லயித்தும் உழைத்து கிடப்பவர் லெனின். ஒரு உவகையுடன் அவர் ஏற்றுக் கொண்டுள்ள இந்த திறனாய்வுத் துறையை ஒரு தமிழியல் ஆய்வாகவும் எனது சூழலுக்கும் தற்கால பண்புகளுக்கும் ஏற்ற முறையில் அணுகி ஆராயும் விதம் அவரை ஒரு வித்தியாசமான தனித்துவமான திறனாய்வாளராக இனம் காட்டுகிறது. இந்த நூலின் ஆக்கங்கள் மட்டுமின்றி அவருடைய உதிரியான கட்டுரைகளையும் இவைகளை உறுதி செய்வனவாகக் கொள்ளலாம். உதாரணத்துக்கு ஒன்று செக்கோஸ்லவாக்கியாவின் சிந்தனையாளர ஜூலியஸ் பூசிக்கின் தூக்கு மேடைக் குறிப்பு பற்றிய கட்டுரை (மல்லிகை ஆகஸ்ட் 2003)
‘சூழலின் தளம் திறனாய்வின் ஆக்கத்தோடு தொடர்பு கொண்டுள்ள நிலையில் எமது சூழலுக்குரிய திறனாய்வுக் கோட்பாடுகளின் ஆக்கம் அறிகைநிலையில் முன்னிலை கொண்டெழுகின்றது. திறனாய்வுக் கோட்பாட்டின் பலம், சமூக வாழ்வின் கூர்ந்த நுண்ணலகுகளையும் பற்றிப் பிடித்தலோடு தொடர்புடையது…’ என்கின்ற பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களுடைய கூற்று (மல்லிகை 2012 ஆண்டு மலர் கட்டுரை) இந்த நூலின் ஆக்கங்களுடன் வெகுவாகப் பொருந்தியே வருகின்றது. இடதுசாரி சிந்தனைகளும் பேராசிரியர் கைலாசபதியின் செயற்பாடுகளின் மீது பெரு மதிப்பும் நம்பிக்கையும் கொண்டவர் லெனின் என்பதை அவருடைய செயற்பாடுகளும் ஊர்ஜிக்கும்.
‘பேராசிரியர் கைலாபதி போல் என்றும் ‘அவருக்குப் பின்’ என்றும் பேராசிரியர் மறைந்து கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் இன்றுவரை அவருடைய ஆய்வுகளுக்கு மேலாக அவரின் பணிகளையும் ஒப்பிட்டோ மேம்பட்டோ கூறுவர் இல்லை ஒப்பியல்களுக்குமப்பால் லெனின் அவர்களது திறனாய்வுச் செயற்பாடுகள் காலத்தின் தேவைப்பாடு கருதும் வளர்ச்சி கொண்டவைகளாகவே திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. ‘மலையகம் என்ற பின்புரத்தில் கைலாசபதி’ என்றும் ‘இலங்கையில் உலக மயமாக்கல்களின் ஊடுறுவலும் தேசிய இனப்பிரச்சினையும் பற்றி கைலாசபதி’ என்றும் பேராசிரியர் பற்றிய இரண்டு ஆக்கங்களை இத்தொகுதி கொண்டுள்ளது. கைலாசபதி அவர்களின் தமிழியல் துறை சார்ந்த பங்களிப்புக்கள் வெளிக்கொணரப்பட்ட அளவுக்கு அவரது அரசியல்துறை சார்ந்த பங்களிப்புக்கள் வெளிக்கொண்டு வரப்படவில்லை என்னும் ஆதங்கத்துடன்ளூ அவருடைய சர்வதேச அரசியல் விவகாரங்கள் பற்றிய கட்டுரைகள் புதிய பூமி – தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடாக வந்திருப்பது பற்றிய குறிப்புடன் பேராசிரியரின் செம்பாதனக் கட்டுரைகளைக் கவனத்திற் கொண்டு அவைகளும், தொகுக்கப்பட்டால் அவருடைய தமிழ்த்தேசியம் பற்றிய காத்திரமான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவாவுருகின்றார்.
கைலாசபதி என்பது வெறுமனே ஒரு நாமம் மட்டுமல்ல அவர் இயங்கு சக்தி என்று கூறும் லெனின் மதிவானம் அவர்கள் தன்னுடைய இயக்கங்களுக்கும் அவரையே சக்தியாகவும் கொள்கின்றார். பாரதி போல் புதுமைப்பித்தன் போல் கைலாசபதியையும் ஒரு ஆளுமை. ஒரு யுக புருஷர். என் பதில் எனக்கும் எதுவிதமான அபிப்பிராய பேதமும் இல்லை. என்னுடைய எழுத்துக்களிலும் அதை நான் குறித்துமுள்ளேன். அதற்காக அவருடைய அதிகாரங்களை, பலவீனங்களை, குறைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளத் துணியவில்லை.
அவருடைய குறைகளையும் நியாயப்படுத்தும் ஒரு தற்காப்புக்குறையை லெனின் அவர்கள் கொண்டிருந்தது மட்டுமே இவரின் மீதான எனது குறை. மார்க்சியத்தை தற்கால சமுதாய மாறுதல்களுக்கேற்றவாறு கட்டமைத்துக் கொள்ளும் திறனாய்வு சிந்தனை வீச்சுக்கள் ஈழத் தமிழ் இலக்கிய உலகில் ஒரு புத்துயிர்ப்பே. ஓரடி வைப்பே. எழுத வருபவர்களுக்கு இலக்கியத்தின் வரலாற்றில் ஞானம் இருந்தாக வேண்டும்.’ என்கின்றார் மாக்சிம் கார்க்கி (‘நான் எவ்வாறு எழுதக் கற்றுக் கொண்டேன் – கார்க்கி – Nஊடீர்)
அந்தவகையில் ‘இளமையின் கீதம்’ நாவல் பற்றிய கட்டுரை முக்கியமானது. பெயரைப் பார்த்தவுடன் எனக்கு செ.கணேசலிங்கன் அவர்களே நினைவில் வந்தார். ஆனால் இந்த இளமையின் கீதம் அவருடைய நாவல் பற்றியதல்ல. சீனப் பழமை சமூகத்தை எதிர்த்துப் போராடிய ஒரு சீனப் பெண்ணின் கதை. மயிலை பாலு மொழி பெயர்த்துள்ள ஆசிரியர் யங்மோவின் சீன நாவல் பற்றியது. செம்மீனை முன்வைத்து தகழியின் படைப்பாளுமை பற்றிய கட்டுரையும். உலக இலக்கியத்தில் ஆழத்தையும் மதித்த மாக்ஸிம் கார்க்கி என்னும் கட்டுரையும் இலக்கிய வரலாற்றறிவுக்கான முக்கிய மீள் வாசிப்புக்கள்.
இந்தத் தொகுதியின் கணிசமான ஆக்கங்கள் நவீன இலக்கிய நூல்கள் பற்றிய திறனாய்வுகளே.
தெளிவத்தை ஜோசப் – குடை நிழல் (நாவல்)
சிவனு மனோகரன் – கோடாங்கி (சிறுகதைகள்)
ஆதவன் தீட்சன்யா – (சிறுகதைகள்)
ஆன்மாவை விலைபேசாத ஆளுமைகள் ( வடபுலத்து இடதுசாரிகள் பற்றிய ஆய்வு)
கம்யூனிஸ்ட் கார்த்திகேயன் – நகைச்சுவை ஆளுமைகள்
பேராசிரியர் சி.மௌனகுரு – மட்டகளப்பு மரபு வழி நாடகங்கள் (அரங்கியல்)
கலாநிதி ந.இரவீந்திரன் – திருக்குறளின் கல்விச் சிந்தனைகள் (ஆய்வு)
திறனாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ள இந்நூல்கள் கூட நடுநிலைச் சிந்தனைக்கான சான்றாகவே அமைகின்றது. ‘விமர்சன மூர்க்கத்தனத்தையும் வக்கிரத்தையும் அவரிடம் என்னால் காணமுடியவில்லை என்னும் நந்தினி சேவியர் அவர்களின் கூற்று நினைவில் எழுந்து நிற்கின்றது.
திமிர்கின்ற முரட்டுக் காளைகளையும் சின்னதான ஒரு மூக்கணாங்கயிற்றால் அடக்கி வைத்துக் கொள்கின்ற ஆளுமை- அரசியல் உட்பட்ட நிறைய பக்கப் பலங்களுடன் அந்த ஆளுமைகள் இல்லாத காரணங்களினால் தான் விமர்சனத்துறை, திறனாய்வுத் துறை இல்லாமல் போய்விட்டது எ;னனுமட் குரல்கள் பலத்து ஒலிக்கின்றன. இன்றைய நவீன இலக்கிய திறனாய்வுத் துறைக்குள் பல புதியவர்கள் தங்களை இனங் காட்டி வருகின்றனர் என்றாலும் சகல பலவீனங்களையும் மீறி மேவிக் கொண்டு மேலெழுந்து வருகின்றவராக மலையகத்தைப் பிறப்பிடமாக கொண்ட லெனின் மதிவானம் அவர்களைக் காண்கின்றேன். திறனாய்வுத் துறையை மட்டுமே தனக்கான துறையாக தெரிவு செய்து கொண்டு அதன் உள்வெளிகள் ஆழ அகலங்களை நுணுகி நுணுகி உள்வாங்கிக் கொண்டு பணியாற்றி வரும் லெனின் மதிவானத்துக்கு எதிர் காலத்தில் ஒரு சிறப்பான இடம் இருக்கின்றது என்று எண்ணுகின்றேன்.
திறனாய்வியலில் ஒரு அடையாள ஆளுமைக்கான சாட்சி இந்த நூல். வாழ்த்துக்கள்.
இந்த நூலை வெளியிட முன்வந்த பாக்கியா பதிப்பகத்றிகும் அதன் அதிபர் மல்லியப்பு சந்தி திலகருக்கும் எனது பாராட்டுக்கள்.
இனியொருவின் நம்பிக்கை தரு எழுத்தாளானாயிருக்கும் லெனின் மதிவானம் அவர்களே !! தங்களுக்கு என்வாழ்த்துக்கள். “அறியாது கொலையுண்ட அனைவரும் மீண்டும் உண்மை நெறியெனும் பலத்தாலே உயிர் பெற்று நிற்பார் “என்று மக்சிம் கார்க்கி அவர்கள் நான் பெரிதும் நேசிக்கிற தாய் நாவலில் குறிப்பிடுவார். அவர் கனவு பொய்த்துப் போய்விடவில்லை என்பதற்குச் சாட்சியாய் அலைக்கழிக்கப்பட்ட மலையகமக்களின் போர்க்குரலாய் நம்பிக்கையோடு எழுகிறது தங்களின் பேனா.தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி
Mr. Sithivinayagam, Thank you for the information about Inioru.Com. Dr. Satchi Srikantha writes for Saagaram.com