ஈழத்தமிழர் பிரச்சனை, கூடங்குளம் அணு உலைஎதிப்பு, முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்த கட்டுரைகள் வெளியிடுவதாலும் விவாதங்களில் ஈடுபடுவதாலும் கீற்று இணையத்தளத்தின் ஆசிரியர் ரமேஸை தமிழக க்யூ பிராஞ் விசாரணைக்கு அழைத்துச் சென்றது. இரண்டு மணி நேர விசாரணையின் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். ராஜபக்ச பாணியிலான ஊடக அடக்கு முறை தமிழ் நாட்டிலும் ஆரம்பித்துள்ளமைக்கான குறியீடாக இது கருதப்பட வேண்டும்.
பொய்யுரைகளைப் பரப்பவே பெரும்பான்மை ஊடகங்கள் உள்ளன.அவற்றோடு கூட்டணி கொள்ளாமல்.தன் பாதை தனி பாதை எனச் செயல்படும் கீற்றைக் கூறு போடாமல் விட்டு வைத்ததே மாபெரும் வெற்றி.அதாவது உண்மையைச் சொன்னால் உள்ளே தள்ளுவோம். அல்லதெனில் உண்மையைச் சொல்லும் இணையதளமானாலும் அதன் தொடர்புடையவர்கள் ஏதாவது உள்ளே தர வேண்டும்; இந்நிலையில் செயல் பட்டால் இன்றைய நிலையில் உண்மையை வெளியிடலாம் என்பதே உண்மை. கீற்று வாழ்க! அதன் செம்மையான பணி தொடர இரமேசு போன்றவர்கள் தொடர்ந்து போராடுக! வாழ்த்துகள் இரமேசு.