வவுனியாவிலிருந்து வெளிவரும் தினப்புயல் என்ற பத்திரிகையின் ஊடகவியலாளர் நுவரெலியா மாவட்டத்திலுள்ள அக்கரைப்பத்தனை என்ற இடத்தில் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இரண்டுமணி நேர விசாரணையின் பின்னர் விடுதலைசெய்யப்பட்டர். வேலு ஜீவராஜா என்ற ஊடகவியாளர் இன்று காலையில் விசாரணை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னர் மீண்டும் சிவில் உடையில் வந்த உளவு பிரிவினரால் மீண்டும் விசாரணை செய்யப்பட்டார். இவரிடமிருந்த பத்திரிகைப் பிரதிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. உலகில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் குறித்தவர்களின் படங்கள் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தன. அவற்றுள் பிரபாகரனின் படமும் காணப்பட்டதால் அப் பத்திரிகை புலிகள் சார்பானது என்றும் இனிமேல் அதனை வினியோகிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டார். ஏனைய பல ஊடகங்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனது கைது தொடர்பாகத் தெரிவித்திருப்பதாக இனியொருவிற்குத் தெரிவித்தர். ஆர்.ராதாகிருஷ்ணன், யோகராசா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தனது கைது குறித்து அறிவித்திருப்பதாகக் கூறினார். அவர்கள் பொலிஸ் உயர் அதிகாரியுடன் தொடர்புகொண்டு தினப்புயல் புலிகளின் பத்திரிகை அல்ல என்று தெரிவித்த பின்னரும் உளவுத்துறையினர் மீண்டும் கைது செய்து விசாரணை செய்தனர் என்றார்.
வீரகேசரி மற்றும் தினக்குரல் ஆகிய நாழிதழ்களின் பிரதம ஆசிரியராகவிருந்த ஜீவகுமார், இடதுசாரி இயக்கங்களின் செயற்பாட்டாளருமாவார்.