02.11.20008.
தனக்கு எதிராகப் பிழையான கருத்தைத் தெரிவித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஆசாத் மௌலானாவுக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என கருணா கொழும்பு ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.
இராணுவப் பிரிவின் தலைவராகவே நான் நியமிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இராணுவப் பிரிவு இல்லை. அவ்வாறான கருத்தை வெளியிட்டமை தொடர்பாக மௌலானா மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தவுள்ளோம்” என கருணா அந்த ஊடகத்திடம் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினை கட்சியையும், தமிழ் மக்களையும் பாதிக்கும் என்பதால் சுமுகமாகத் தீர்க்கப்பட்டிருப்பதாக ஆசாத் மௌலான அந்த ஊடகத்திடம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரம் தேவையில்லையென்ற கருத்துத் தொடர்பாக கருணா அம்மானிடம் விளக்கம் கோரப்பட்டிருந்தபோதும் அவரிடமிருந்து எந்தவிதமான விளக்கமும் இதுவரை வழங்கப்படவில்லையென மௌலானா கூறினார்.
கட்சிக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டன. கட்சிக்குள் பிரச்சினையைத் தோற்றுவிக்கச் சிலர் முயற்சிக்கின்றனர்;” என கருணா தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரம் தேவையில்லையெனத் தான் கூறிய கருத்துத் தொடர்பாகவே கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றியதாக கருணா கூறினார்.