தமிழ் மக்களின் முப்பது வருட போராட்ட வரலாற்றில் சாதாரண மக்கள் முன் வைக்கப்படாத விடயங்கள் பல உண்டு. இன்று எம்மை பல நாடுகள் சேர்ந்து அடித்து விட்டன காட்டிக் கொடுத்து விட்டார்கள் அதனால் தோற்றுப் போனோம் என வழமை போல் தமது வங்குரோத்துத் தனத்தை மற்றவர்களின் குற்றமாக பழி போட்டுக் கொண்டு புலிப் பாசிசத்திற்கு கொடி பிடித்துக் கொண்டிருந்தவர்கள் தமது மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண மக்கள் இலங்கை இனவாத அரசின் அதிகாரத்தின் கீழ் தம்மீதான அநியாயங்கள் அதிகரிக்க அதிகரிக்க போராடுவதாக சொல்லிக் கொண்டவர்களுக்கு தமது ஆதரவை வழங்க வேண்டியவர்களானார்கள்.
போராட்டத்தை தம் கையில் முழுமையாக எடுத்ததுக் கொண்ட புலிகளோ இந்தப் போராட்டம் யாருக்கு? இதன் பலாபலன்கள் யாரை அடைய வேண்டும் என்பது பற்றியெல்லாம் கருத்திற் கொண்டவர்களல்லர். சமூகத்தின் கடைநிலையில் உள்ளவனின் வாழ்வு குறித்த இலடசியங்கள் எதுவுமற்று பணபலத்திலும் ஆயுத பலத்திலும் பிரச்சார பலத்திலும் வரைமுறையற்ற அதிகாரத்தை தமது பக்கம் எடுத்துக் கொண்டதன் மூலமும் மக்களை மந்தைகளாக்கி இன்று முள்ளி வாய்க்காலினுள் இலட்சக்கணக்கானவர்களை அழித்து முடித்துள்ளதோடு எஞ்சியவர்களை நடைப் பிணங்களாக உலாவ விட்டுள்ளனர்.
இந்த நிலை ஏற்படப் போகின்றது என முன் கூட்டியே சொன்னவர்களை சரியான வழிமுறையில் போராட்டம் செல்ல வேண்டும் என இயங்கியவர்களை திட்மிட்டவர்களை அதற்கான கருத்து சுதந்திரம் வேண்டும் ;என போராடியவர்களை சுட்டுக் கொன்றார்கள். காணாமல் போகச் செய்தார்கள். சொந்த நாட்டை விட்டு வெளியேற செய்தார்கள். சிறை செய்து சித்திரவதைக் கூடங்களில் அடைத்து வைத்தார்கள். மக்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் இத்தகைய செயல்கள் நிறைவேறிக் கொண்டு இருந்த வேளைகளில் இன்றைக்கு தம்மை ஊடகர்கள் என சொல்லிக் கொள்ளுகின்ற உள்ளுரிலும் வெளிநாட்டிலும் உள்ளவர்கள் தமது எழுத்துக்களில் நிகழ்ச்சிகளில் அவை குறித்து ஒரு வார்த்தையும் பேசுவதில்லை. மாறாக கூழுக்கும் பொற்காசுகளுக்கும் பொய்க் கவி பாடும் அந்நாள் கவிஞர்களைப் போல் எல்லா அநியாயங்களையும் நியாயப்படுத்தினார்கள். கொலைகளையும் அச்சுறுத்தல்களையும் ஊக்கப்படுத்தனார்கள்.
தனது கருத்தை வெளிப்படுத்தியதற்காய் செல்வி காணாமல் போனார்.
வரலாற்றை எழுத முயற்சித்ததற்காய் சபாலிங்கம் பிரான்சில் படுகொலையானார். சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்கள், விமர்சகர்கள், எழுத்தாளர்கள், கலைத் துறையினர் என அனைத்துத் தரப்பினர் மீதும்ளூ தம்மோடு ஒத்து வராதவர்கள், எதிர்த்து நின்றவர்கள் மீதும் கொடுமைகள் நிகழ்ந்த போதெல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாயிருந்த எந்த ஊடகமும் எதிர்க் குரல் எழுப்பியதில்லை.
துணிந்து எழுதிய விரல் விட்டு எண்ணக் கூடிய ஊடகங்கள் தாக்குதலுக்குள்ளான போது சக ஊடகம் என்ற அளவில் கூட கருத்தெதுவும் தெரிவிப்பதில்லை. அதன் உச்ச நிலையாக பண பலமும் ஆள்பலமும் சமூகச் செல்வாக்கும் அற்ற சாமான்ய மக்கள் மேல் விடுதலை என்ற பெயரில் தூக்கப்பட்ட துப்பாக்கிகள் பாய்ந்தன. யுhழ்ப்பாணத்தில் சில ஆண்டுகள் முன் லீலாவதி என்ற ஏழைத் தாய் கசிப்பு காய்ச்சினார் விபச்சாரம் செய்தார் என சுட்டுக் கொல்லப்பட்டார்.
‘வீரம்’ செறிந்த போராட்டம் நடந்து கொண்டிருந்த ஒரு சமூகத்திலே லீலாவதிக்கு ஏன் இந்த நிலமை என பலம் வாய்ந்த எந்த ஊடகவியலாளனும் ஆய்வு செய்து எழுதவில்லை. வீட்டு வேலைக்கு அமர்த்ப்பட்ட மலையகத்தைச் சேர்ந்த யோகேஸ்வரிக்கு நடந்த கொடுமையை செய்தியாக கொண்டு வருவதற்கு கூட பின்னடித்தார்கள். லீலாவதியால் உயிர் தப்பி வாழ முடியவில்லை. கணேசலிங்கன் இன்றும் யாம்ப்பாணத்தில் பெரிய மனிதனாக வாழ முடிகிறது.
இந்த முரண்பாட்டை எந்த ஊடகவியலாளனும் ஆய்வு செய்து பதிவுகளாகவோ வெளிச்சமாகவோ கொண்டு வர நினைக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தை சேர்ந்த லீலாவதிக்கும் யோகேஸ்வரிக்கும் நீதியைக் காட்ட முடியாத ஊடகங்கள் அதே ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து என்னவோ செய்யப் போவதாக புலம் பெயர் தேசங்களில் முழங்கத் தொடங்கியுள்ளன.
மிகப் போலியானதும் மோசடியானதுமான மக்களின் சிந்தனை திறனை மழுங்கடிக்கும் கருத்துக்களை பரப்பியபடி மக்களின் போராட்டத்தை அழித்தொழிக்கும் வேலையைத்தான் இந்த ஊடகங்கள் செய்து முடித்தன. இன்னும் செய்து வருகின்றன. அடிப்படை மனித நேயமற்றவர்களும், ஏமாற்று பேர்வழிகளும், சந்தர்ப்பவாதிகளும், வியாபாரிகளும், கூலிக்கு மாரடிப்பவர்களும் ஊடகத் துறையில் கைகோர்த்துக் கொண்டுள்ளனர்.
வெளிச்சம் உட்பட எந்தவொரு அரசியல்சார் நிகழ்சியும் தமிழ் மக்களுக்கு உருப்படியான கருத்தை வழங்கியதில்லை. மக்கள் இந்த போராட்டத்திற்கு வழங்கும் ஆதரவின் பெயரால் எப்படியாவது உச்சபட்ச அதிகாரத்தை அடைந்து விட வேண்டும் என்பதற்காக நாடு கடந்த அரசாங்கம், பிரித்தானிய தமிழர் பேரவை ,உலகத் தமிழர் அமைப்பு, ஒபாமாவிற்கான (?!) தமிழர் அமைப்பு என ஏகப்பட்ட தாபனங்களை அமைத்து அலைந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் இருப்பிற்கு சிறு ஆபத்து நேருவதைக் கண்டாலே எந்த எல்லைக்கும் சென்று செயற்படக் கூடிய இவர்களுக்கு தினேஸ் போன்றவர்களை தள்ளிவிடுவது சிரமமான விடயமல்ல. இதே நிலை இவர்களின் பிடியில் உள்ள ஊடகத்தினர் எவருக்கும் நடக்கக் கூடியது. இந்தக் கும்பல்களின் பிடியில் உள்ள ஊடகவியலாளர் தினேசிற்கு நடந்திருப்பதை இட்டு மூச்சுக் கூட விடமாட்டார்கள்.
ஆயிரமாயிரம் போராளிகள் தமது இன்னுயிர்களை கொடுத்தும் எண்ணற்ற ஆயுதங்கள் பாவனையில் இருந்தும் அளவிடற்கரிய சொத்துக்களை இழந்தும் அகதியாக உலகமெல்லாம் அலைந்தும் விபரிக்க முடியாத துயரங்களை அனுபவித்தும் வெல்ல முடியாமல் முள்ளிவாய்காலில் தமக்கான விடுதலைப் போராட்டம் சாம்பலாகிப் போனதை தமிழ் மக்கள் தமது கண்களில் தரிசித்துள்ள நிலையில்ளூ பலமாய் பிரச்சாரப்படுத்தப்பட்ட சூரிய தேவன் மண்கவ்வி விட்ட பின் நாடுகடந்த அரசாங்கத்தினர் மக்கள் சரியான அரசியல் கருத்து நோக்கி சிந்திக்கத் தலைப்படுவதை தடுக்கும் உபாயமாக பிரார்தனைக் கூட்டஙகள் நடத்துவதை வேலைத்திட்டமாக அறிவிக்கிறார்கள்.
மகிந்த ராஜபக்ச, கோத்தபாய உட்பட்ட பேரினவாதிகளை மக்கள் புரிந்து கொண்டு வெறுப்பில் உள்ளனரோ அதேயளவு உள்ளிருந்து எம்மைக் கருவறுக்கும் இந்த ஊடகங்கள் குறித்தும் ஊடகவியலாளர் குறித்தும் அவர்கள் எமக்கு என்ன சொல்கிறார்கள் என்பது குறித்தும் தேடித் தேடி அறிந்து புரிந்து கொள்ளாதவரை ‘ வடம் பிடித்து கரம் கொடுத்து கலைப் (?) பயணம் நடத்திடுவோம்’ என ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்.
கடும் நஞ்சுகொண்ட பாம்பு விரலில் கடித்துவிட்டால் விரலை துண்டித்து உயிரைக் காப்பாற்றிக்கொள்வது போன்றதுதான் தமிழீழப் போராட்டம். நஞ்சுப்பாம்பை விடவும் மோசமான சிங்கள அரசியல்வாதிகளும் அவர்கள் இராணுவமும் தமிழினத்தைத் தீண்டிவரும்போது சொந்த அங்கங்களை இழந்து பாதுகாப்பை தேடிக்கொள்வது முதன்மையாகிறது. இத்தகய வழிமுறைகளைக் கொண்டு அமைந்ததாக பிரபாகரன் செயற்பாடுகளைக் கொள்ளலாம்.
நச்சுப் பாம்புகள் நுளைந்துவிடாது வாழ்விடங்களை அமைத்துக்கொண்ட பின்பு அங்கு குடியிருக்கப்போகும் மக்களுக்கு ஏற்படும் அநீதிகளை வெளிக்கொணர்ந்து மக்களுடன் சேர்ந்து போராடாது விடும் ஊடகங்களை சாடுவதில் நியாயமுண்டு. போராட்ட நேரங்களில் தரமான ஊடகங்களும் மெளனமாக இருந்தது ஏன் என்ற கேள்விக்கு இன்று நடப்பவை பதில்தருகிறது. வீடு கட்டிக்கொடுப்பவன் அந்த வீட்டை சொந்தம் கொண்டாடி குடியிருப்பதில்லை. அதுபோலவே உரிமைக்கு போராடியவன் அதன் பலன்களை முழுமையாக அனுபவிப்பதில்லை அவனுக்கு பின் வருபவர்களே முழுப் பலன்களையும் அனுபவிக்கிறார்கள். இது உலகவரலாறு. இந்திய விடுதலைக்காகப் போராடிய சுதந்திர வீரர்கள் பஞ்சத்தில் வாடி உயிர்துறந்ததையும், துறப்பதையும நிதர்சனமாகக் காண்கின்றோம்,
பாதுகாப்பை தேடிக்கொண்டபின்பு பிரபாகரன் படையும் தன் விருப்பப்படி நாட்டை ஆண்டிருக்க முடியாது. உலகத்தோடு ஒன்றி வாழ்வதை அவர்களால் மீறி ஆட்சியை தொடரமுடியாது. 1948ம் ஆண்டே தமிழினத்தை சிங்கள இனம் ஆட்சி அதிகாரத்தோடு அழிக்கத்தொடங்கியது 80துகளில்தான் பிரபாகரன் செயல்படத் தொடங்கினான். 30ஆண்டுகள் அழிவைத் தொடரமுடியாது சிங்களத்தைத் தவிக்கவைத்தான். நாங்கள் அவனை அழித்துவிட்டு நீரோமன்னன் பிடில்வாசிப்பதுபோல் வாசிக்கிறோம்.
.
I think that the President will complete his second term. He used his brother Gothapaya and then promoting his son Namal. Economic realities should to start to take priority over the three year celebration of war victory. . As Ameer Ali of Oddamavadi said that the executive presidency is not only good but essential for the North and East.
வடக்கு, கிழக்கிற்கு, தெற்கு, மேற்கு உட்பட்ட இலங்கைக்கு தேவைப்படுவது மனித நேயம் நிறைந்த அரசியல்வாதிகளுடைய ஆட்சியே. இலங்கையிலுள்ள சகல இன மக்களும் ஒரு குடும்பம் போல ஒன்றுகூடி வாழ்ந்த காலச்சுவடுகள் இன்னும் அழியவில்லை.
ஆயுதம் ஏந்தி போராடு ஈழம் வரும் என்றார்கள்
செய்தோம்..???
குப்பற விழுந்து கோவில் கும்பிடு ஈழம் வரும் என்கிறார்கள்
செய்வோம்…!!!
“படிச்சவங்க,பல நாட்டு தலைவர்களுடன் பழகிறவங்கள் சும்மா சொல்ல மாட்டங்க வாங்க மக்களே கோவிலுக்கு போவோம்…கும்பிட
வீடில இருக்கிறவங்க,வேலைக்கு போறவங்க எல்லாரும் ஓடிவாங்கோ…
சிங்களவங்கள் போறத்துக்கு முன்னே நாங்கள் போகவேண்டும் ஓடிவாங்கோ,ஓடிவாங்கோ…பிளீஸ்..”
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் திட்டப்பணிகளின் நிதிவள மேம்பாட்டிற்காக, முன்னெடுக்கப்பட்ட நல்வாய்ப்புச் சீட்டிழுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நா.த.அரசாங்கத்தின் நிதியமைச்சு, இது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கனடாவின் ரொறன்ரோ – பிக்கறிங் நகரசபை மண்டபத்தில், கடந்த யூன் 16ம் நாள் சனிக்கிழமை, இச்சீட்டிழுப்பின் வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சீட்டிழுப்பில் 1ம் நிலை: 07743, 2ம் நிலை 05947, 3ம் நிலை 13795, 4ம் நிலை 25063, 5ம் நிலை 25166 ஆகிய இலக்கத்துக்குரியவர்கள் பிரதான பரிசுக்குரிய வெற்றியாளர்களாக தேர்வாகியுள்ளனர்.
ஆறுதல் பரிசுக்குரியவர்களாக 00370 / 00440 / 00619 / 00670 / 00895 / 01300 / 02983 / 03066 / 03371 / 05527 / 08059 / 10315 / 11264 / 11833 / 13798 / 14933 / 14980 / 15135 / 15264 / 15421 / 15631 / 21704 / 23048 / 25113 / 25137 / 25149 / 25357 / 25744 / 25913 / 26163 / 26913 / 28211 / 28304 / 28402 / 29786 / 30019 இலக்கத்துக்கு உடையோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுபற்றிய மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள, நல்வாய்ப்புச் சீட்டு தொடர்பாளர்களிடம் பெற்றுக் கொள்ளுமாறு, நா.த.அரசாங்கத்தின் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
Mr. Mahendra the General Secretary of the United National Party Mr. Tissa Attanayake said that they will look after the daily problems and needs of the Tamil people. He raised his voice when about 40 civilians lost their lives at Vakarai in the final offensive in the East.
போரினால் இடம்பெயர்ந்த தமிழர்கள் அகதிகளாக தங்கியிருந்த பாடசாலைகளின் மீது 2006ம் ஆண்டு நவம்பர் 8ல் இலங்கை இராணுவம் நடத்திய மிகமோசமான குண்டுவீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல் நிகழ்வே வாகரை குண்டுத்தாக்குதல் ஆகும்.
வாகரை சம்பவத்தை கண்டித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைகான UNICEF தலைமை அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடாத்தினார்கள். இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடாத்திய பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மறுநாளே கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
யூ.என்.பி கட்சியிலிருந்து பிரிந்து வந்த பண்டராநாயக்க சிறிலங்கா சுதந்திரக்கட்சியை உருவாக்கியபோது புதிய கொள்கைகளுடன் உருவாக்கவில்லை. யூ.என்.பியின் இனவாத சுரண்டல் அரசியலின் வழியிலேயேதான் புதுக்கட்சியை ஆரம்பித்து அதற்கு மகுடம் சூட்டினார்.
புத்தமதம் போதிக்கும் புத்தபிக்குகளால் உலகமெங்கும் ஆன்மீகவாதிகள் உருவாகும்போது, இலங்கையில்மட்டும் ஏன் புத்தபிக்குகளால் மதவாதிகள் உருவாக்கப்படுகிறார்கள்! ஏனெனில் இலங்கையில் மட்டுமே புத்தபிக்குகள் அரசின் அனுசரனையுடன் செயல்படுவதில்லை. புத்தபிக்குகளின் மேலாண்மையிலேதான் அரசுகள் செயல்படுகின்றன.
Mr. Mahendra late Nadarajah Ravi Raj said in a meeting at Trincomalee that there is a possibility for a government for the Tamils exclusively and that nobody should destabilize the unity of Tamils. Probably they have special death squads for this type of killings. President assigned the Scotland Yard to investigate his murder. He was a State Counsel and the Attorney General wanted him to resign as he was suspected of taking bribes.