பாலியல் தொழிலைச் சட்டரீதியான தொழிலாக அங்கீகரிக்க இலங்கையின் தெற்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அஜித் பிரசன்ன கோரிக்கை விடுத்திருக்கிறார். உல்லாசப் பயணைத் துறையை ஊக்கப்படுத்துவதற்காக பாலியல் தொழிலைச் சட்டரீதியானதாக மாற்றுமாறு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இலங்கையின் பிரதான வருமானம் உல்லாசப் பயணத்துறையாக மாற்றுவதே தமது நோக்கம் என மகிந்த ராஜபக்ச கூறியது குறிப்பிடத்தக்கது. பிரித்தானியாவில் உள்ள ஈழத் தமிழ் ரியல் எஸ்டேட் வியாபரிகளான ரில்கோ யாழ்ப்பாணத்தில் பெருத்த செலவில் நட்சத்திர விடுதியும் உல்லச பூங்கவும் உருவாக்கி வருவதும், 400 ஏக்கர் நிலத்தில் மலேசிய ஈழத் தமிழ் வியாபாரி நட்சத்திர விடுதியை ஹப்புத்தல என்ற இடத்தில் உருவாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதே வேளை கொழும்பில் புலிகளின் முதலீடான உல்லசப் பயண விடுதியை புலம் பெயர் ‘தேசிய வாதிகள்’ கோதாபயவுடன் இணக்கத்திற்கு வந்து சுவீகரித்துக்கொண்டதும் நினைவு கூரத்தக்கது.
இதற்கு அப்பால் 2010 ஆண்டின் உலகின் முதலாவது உல்லாசப் பயண நாடாக நியோர்க் டைம்ஸ் கண்டுகொண்டதும் கோர்வையாகப் பார்க்கப்பட வேண்டியுள்ளது.
ஆசிய நாட்டவர்களுக்கான பிரதான சுற்றுலா மையமாக இலங்கையை மாற்றுவதற்கான பல்தேசிய நிறுவனங்களின் சதி ஆரம்பமாகிவிட்டது எனலாம். இந்த வேளையில் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் பாலியல் தொழிலை திட்டமிட்டு திணிப்பதையும் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளது.
பாலியல் தொழிலை நான் பிரசாரம் செய்யவில்லை: சர்மிளா விளக்கம்
பாலியல் தொழில் அங்கீகரிப்பட்ட வேண்டும் என்று நான் பிரசாரம் செய்யவில்லை என சமூக ஆய்வாளரும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியுமான சர்மிளா செய்யத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது தொடர்பாக பிபிசி தமிழ் செய்தி சேவைக்கு என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்து குறித்து முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் தொடர்பில் எனது கவலையினை தெரிவித்து கொள்கின்றேன். விபசாரம் இஸ்லாத்தில் வன்மையாக எச்சரிக்கப்பட்டதும் ஹராமாக்கப்பட்டதும் என்பது மறுக்க முடியாத உண்மை. இது தொடர்பில் இஸ்லாமிய பெண் என்ற வகையில் எந்தவித மாற்றுக் கருத்தும் எனக்கில்லை. சமகால நடைமுறை தொடர்பான எனது கருத்தையே நான் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்திருந்தேனே தவிர சட்டமாக்க வேண்டும் என குறிப்பிட்டவில்லை. நான் இஸ்லாமிய சமூகப் பெண்ணாக இருக்கின்ற காரணத்திற்காக சமூக உண்மையை மறைக்க முடியாது. பாலியல் தொழில் இலங்கையில் நடைபெறுகின்றது. அது சட்டபூர்வமாக்கப்படும் போது அத்தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் பெறவும் பாதுகாப்பு பெறவும் வழியை ஏற்படுத்தும் என்பதே எனது கருத்து. ஒரு பெண்ணாக பாலியல் தொழிலில் ஈடுபடுவதையும் பெண்கள் போகப்பொருளாக பார்க்கப்படுவதையும் வன்மையாககக் கண்டிப்பதாக குறிப்பிட்டிருந்தேன். எனது கருத்து முஸ்லிம் சகோதரர்களின் உணர்வுகளை நோகடிப்பதாக அல்லது பிழையான முறையில் விளங்கிக் கொள்ளத் தக்கதாக இருந்தால் அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுகின்றேன்” என்றார்.
இநத சகோதரி என்ன சொல்கிறார்?பாலியல் தொழில் இலங்கையில் நடைபெறுகின்றது. அது சட்டபூர்வமாக்கப்படும் போது அத்தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் பெறவும் பாதுகாப்பு பெறவும் வழியை ஏற்படுத்தும் என்பதே எனது கருத்து என்றால் பாலியல் தொழிலை சட்டபூர்வமாககுவது நல்லது என்றுதானே சொல்கிறார்?
அதே இடத்தில் ஒரு பெண்ணாக பாலியல் தொழிலில் ஈடுபடுவதையும் பெண்கள் போகப்பொருளாக பார்க்கப்படுவதையும் வன்மையாககக் கண்டிப்பதாக குறிப்பிட்டிருந்தேன் என்றும் சொல்கிறார். முன்னுக்குப் பின் முரணாக பாம்புக்கு வாலாகவும் மீனுக்கு தலையாகவும் உங்களை காட்டிக் கொள்ள முயலாதீர்கள் சகோதரி. விபச்சாரத்தையே எதிர்ப்போம் என உரத்து சொல்லுங்கள்.
சர்மிளாவின் பாலர் பாடசாலைக்கு தீ வைக்க முயற்சி
இலங்கையில் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்கவேண்டும் என்கிற யோசனை தொடர்பில் தமது கருத்தை தெரிவித்த ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் சமூக ஆய்வாளர் ஷர்மிளா சயீத்தின் நிர்வாகத்திற்குரிய பகல் நேர பாலர் பராமரிப்பு நிலையத்திற்கு வியாழக்கிழமை அதிகாலை தீ வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவரது சகோதரியான சயீத் அஹமது பர்ஸானா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பாலர் பராமரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்த வேளை கதவு துவாரம் ஊடாக உள்ளே பெட்ரோல் ஊற்றப்பட்டு தீ வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறும் அவர், இரும்புக் கதவு என்பதால் தீ உள்ளே பரவவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தனக்கும் பாலர்களுக்கும் கட்டிடத்திற்கும் பாதுகாப்பு வழங்குமாறு ஏறாவூர் காவல்துறையிடம் தான் செய்த முறைப்பாட்டையடுத்து பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் பிபிசி.க்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏறாவூர் காவல்துறையினரிடம் தொடர்பு கொண்ட போது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிப்புகள் இல்லை என்றும் இதுகுறித்த மேலதிக விசாரனைகள் நடைபெற்று வருவதாகவும் பதிலளிக்கப்பட்டது.
இதற்கிடையே, புதன் கிழமை ஏறாவூர் பள்ளிவாசல்கள் சம்மேளனக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி 5 பேர் கொண்ட குழு, சமூக ஆய்வாளர் ஷர்மிளா சயீத்தின் பெற்றோரை வியாழக்கிழமை இரவு சந்தித்து ஷர்மிளா சயீத்தினால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பாக உரையாடியது.
இந்த சந்திப்பு தொடர்பாக சம்மேளனத்தைச் சேர்ந்த மௌலவி எம்.எல்அப்துல் வாஜித் சம்மேளன பிரதிநிதிகளுக்கு அவருடன் தொடர்பை ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகோள் முன் வைத்ததாக பிபிசி.க்கு தெரிவித்துள்ளார்.
தனது மகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், இஸ்லாததிற்கு எதிரானது என்று அவரது தந்தை ஏற்றுக்கொண்டதாகவும், அதற்காக தனது வருத்தத்தை தெரிவித்ததோடு தங்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும் மௌலவி ஏ.எல்.அப்துல் வாஜித் குறிப்பிட்டுள்ளார்.
தங்களால் கூட தம் மகளுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதாக அவரது தந்தை இந்த சந்திப்பில் தங்களிடம் சுட்டிக்காட்டியதாக தெரிவித்த அவர், ஒரிரு நாட்களில் தாம் கொழும்புக்கு நேரில் சென்று தமது மகளின் தொடர்பை பெற்று பள்ளிவாசல்கள் சம்மேளனததின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய மன்னிப்பு கோர வைப்பது தொடர்பான உறுதிமொழியை ஷர்மிளாவின் தந்தை தங்களுக்கு வழங்கியதாகவும் அப்துல் வாஜித் மேலும் குறிப்பிட்டுள்ளார்.