11.12.2008.
விலைவாசி உயர்வின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் ஏழை மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவுக்கழகம் எச்சரித்துள்ளது. போதிய உணவு இல்லாத மக்களின் எண்ணிக்கை 96 கோடியை எட்டிப்பிடித்துள்ளது என்று கூறும் கழகத்தின் புள்ளி விபரம், 2008ல் மட்டும் 4 கோடிப்பேர் புதிதாக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர் என்று தெரிவிக்கிறது. அமெரிக்காவில் துவங்கிய முதலாளித்துவ நெருக்கடி கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் குரல்வளைகளையும் நெரித்து வருகிறது.
இந்த நெருக்கடியின் விளைவாக உணவுப்பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, ஏழை நாடுகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. புதிதாக நான்கு கோடிப்பேர் பட்டினிப்பட்டியலில் இடம் பெற்றிருப்பதற்கு இது பிரதான காரணமாகும். ஏராளமானவர்கள் வீடின்றி தெருக்களில் படுத்துறங்கும் அவலமும், பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் அமெரிக்காவிலேயே ஏற்பட்டுள்ளது. நெருக்கடியைத் தீர்க்க சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நிலைமை கடுமையானதாக மாறிவிடும் என்று ஐ.நா.உணவுக்கழகம் எச்சரிக்கிறது.
வளரும் மற்றும் வளர்ச்சி குன்றிய நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான ஏழைகளுக்கு ஒவ்வொரு நாளும் குறைந்தபட்ச தேவையான உணவுப்பொருட்களைப் பெறுவதென்பது கனவாகவே இருந்து வருகிறது என்கிறார் ஐ.நா.உணவு மற்றும் விவசாயக்கழகத்தின் துணை இயக்குநர் ஹபேஸ் கனெம். இதற்கு வெறும் விலைவாசி உயர்வை மட்டும் அவர் குற்றம் சாட்டவில்லை. விலைவாசி உயர்வோடு, நிலம், கடன் மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார். 2008 ஆம் ஆண்டில் உலகில் நிலவிய உணவுப்பாதுகாப்பு நிலைமை குறித்து ஐ.நா.உணவு மற்றும் விவசாயக் கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.
நிலம் வைத்திருக்கும் விவசாயிகளும் இடுபொருட்களின் விலைகள் உயர்ந்திருப்பதால் பிரச்சனையில் சிக்கியுள்ளனர். 2006 ஆம் ஆண்டில் இருந்த விதைகள், உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களின் விலை, தற்போது இரு மடங்காக ஆகியுள்ளது. அவர்களுக்கு தேவையான கடன்களைத் தரும் ஏற்பாடுகளும் குலைந்து போய்க்கிடக்கின்றன. பொருளாதார வளர்ச்சி என்று கூறப்பட்டபோதும், விவசாயிகளுக்கு எதிர்மறைவிளைவுகளே இருந்தன. பிற வேலைவாய்ப்புகளும் ஏமாற்றம் தரும் நிலையில்தான் உள்ளன. பட்டினியால் வாடும் 96 கோடிப்பேரில் 90 கோடிப்பேர், வளரும் மற்றும் வளர்ச்சி குன்றிய நாடுகளில்தான் வசிக்கின்றனர். மூன்றில் இரு பங்கினர் ஆசியக்கண்டத்தில் உள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் மூன்றில் ஒருவர் கடுமையான பட்டினியால் வாடுகிறார் என்று ஐ.நா.உணவு மற்றும் விவசாயக்கழகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தங்கள் பயிருக்கு போதிய விலை கிடைக்காததாலும், கடன் உதவிகள் வராத நிலையிலும் விவசாயம் செய்வதை விவசாயிகள் குறைத்துவிட்டால் அடுத்த ஆண்டில் கடுமையான விளைவுகளை உலகம் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறது ஐ.நா. அமைப்பு. அரசுகள் தலையீட்டின் மூலமே பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று உலகம் முழுவதும் குரல்கள் எழுந்து வருகின்றன.
அதல பாதாளத்தில் விழுந்துள்ள பெரும் நிறுவனங்களைத் தூக்கி விடுவதில் கவனம் செலுத்தும் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் அரசுகள் சாதாரண மக்களின் பக்கம் இன்னும் தனது பார்வையைத் திருப்பவில்லை.
அடிப்படைக்கட்டமைப்பிலேயே
குறைபாடு உள்ளது என்கிறது ஐ.நா. உணவு மற்றும் விவசாயக் கழகம். தொழில் நிறுவனங்களின் தேவை என்கிறபோது கடன், சலுகைகள் போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்கும் அரசு விவசாயத்தைப் பொறுத்தவரை அத்தகைய நிலையை எடுப்பதில்லை. விவசாயிக்கு நிலம், அதில் பயிரிடுவதற்கு தேவையான இடுபொருட்கள், அதை வாங்குவதற்கு தேவையான கடன், விளைச்சலை போதிய விலைக்கு விற்பது போன்ற அம்சங்கள் விவசாயத்துறையில் முன்னுரிமை பெற வேண்டும்.
உலகின் உணவுப்பாதுகாப்புக்கு இது
பெரிய அளவில் தேவைப்படுகிறது என்று ஐ.நா.அமைப்பின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
வளர்ச்சி என்று கூறப்பட்டு வந்தவை
வெறும் போலி முழக்கங்கள்தான் என்பது அம்பலமாகியுள்ளது. புள்ளிவிபரங்களை தாங்களாகவே உருவாக்கி வளர்ச்சியைப் பெருக்கிக் கொண்டதால் வந்த விளைவுதான் இது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதையொல்லாம் அறுபத்திமூன்று ஆண்டுகாலமாக எதிர்பார்த்திருந்தோம்.
முடிவும் வந்தாச்சு.இனியொரு புதியஒழுங்குமுறை தேவை. மாற்றம் தேவை. புரட்சி தேவை.
உழைப்புக்கு புதிய அர்த்தம் இனித்தான் விலைகோரப்படப் போகிறது.உலகமக்களின் நலனுக்காக..
உலகமக்களுக்கான உற்பத்தியை முதலாளிஅல்லது மூலதனம் செய்யப் போகிறதா? அதை மக்கள்
பொறுப்பெடுக்கப்போகிறார்களா? இங்கு சின்னத்தனமான மதம் இனம் என்ற வரையரையில்
போராட்டம் நடத்துவார்களா? அல்லது எல்லையே இல்லாத தொழிலாளவர்கம் நாம்என உலகரீதியாக
ஒன்றினைந்து பொதுயுடமை அமைப்பாகமாறி பஞ்சம் பசி பட்டினி இனவேறுபாடு மதவேறுபாடு
சாதிக்கொடுமைகளுக்கு காரணமாக இருக்கிற முதலாளித்துவ அமைப்பை தூக்கியெறிந்து மானிடர்
வாழ்வதற்கான மனிதநேயஅமைப்பை இந்த பூமியில் ஏற்படுத்துவார்களா?
என்னால்சொல்லக்கூடியது இதுஒன்றுதான் சமூகத்தில் வலுகூடியதும் மாற்றத்தை புரட்சியை
ஏற்படுத்தக்கூடியதும் தொழிலாளரும் தொழிலாளர்அமைப்பும் தொழிலாளவர்கம்மும் தான்
கடந்தகால கசப்பான அனுபவங்கள் இருந்தும். இதுயொன்றோ பெறுமதியானவை.
உலகத்தொழிலாளரே ஒன்றினையுங்கள். தாமதப்படுத்தாதீர்கள். தாமதிக்கும் ஒவ்வொரு கணங்களும்
நிலைமைகள் வேறுவிதமாக உருவெடுக்கும்.
எமது வெறும் கைகளை இறுகப்பற்றுவோம். அதன் பலன் மகத்தானது.