20.10.2008.
தற்போது உலகளவில் நிலவி வரும் நிதி நெருக்கடிகளின் காரணமாக மேலும் இரண்டு கோடி பேருக்கு வேலையில்லாத நிலை ஏற்பட வழிவகுக்கக்கூடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.
அடுத்த ஆண்டின் இறுதி வாக்கில் உலகளவில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை மொத்தமாக இருபத்தியோரு கோடியை எட்டக் கூடும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இது மட்டுமல்லாமல் கூடுதலாக நான்கு கோடி மக்கள் வறுமையை எதிர்கொள்கிறார்கள் என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு கணித்துள்ளது. அதன்படி அவர்கள் நாளொன்றுக்கு ஒரு டாலருக்கும் குறைவான பணத்திலேயே வாழ வேண்டிய நிலை ஏற்படும்.
வங்கிகளுக்கு உதவிபுரிந்த பிறகு, தற்போது பொருளாதார மீட்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கி ஒரு சமூக நெருக்கடியை தவிர்க்க உலகம் முன்வரவேண்டும் எனவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறியுள்ளது.
BBC.
மிகநன்ரு