07.09.2008.
உலகப் பொருளாதார சீர்குலை வுக்கு வழிவகுத்த அமெரிக்காவின் முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக லத்தீன் அமெரிக்கா (தென் அமெரிக்கா) களத்தில் இறங்கியுள்ளது. வெனிசுலா, பொலிவியா, பிரேசில், ஈக்வடார் ஆகிய நாடுகளின் ஜனாதி பதிகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான நிலைபாட்டை கடுமையாக விமர் சித்தனர்.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி குறித் தும், அதன் விளைவுகள் குறித்தும் விவாதிப்பதற்காக பிரேசில் நாட்டில் மனாஸ் என்ற இடத்தில் இவர்கள் கூடினர்.
பொருளாதார சீர்குலைவுக்குத் தீர்வு காண்பதில் அமெரிக்கா பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக கூட்டம் குற்றம் சாட்டி யது. அமெரிக்காவின் பொருளாதார வல்லமை திடீரென தகர்ந்து கொண் டிருக்கிறது என்று வெனிசுலா ஜனாதி பதி ஹியூகோ சாவேஸ் கூட்டத் திற்குப் பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
“இந்த நெருக்கடிக்குப் பின் உலகம் முன்னைப் போல இருக்காது. ஒரு புதிய உலகம், ஒரு பல் துருவ உலகம் உருவாகவே செய்யும். மரண வண்டி யிலிருந்து நாம் விடுபட்டுக் கொண் டிருக்கிறோம்.
முதலாளித்துவம் மற்றும் நவீன தாராளமயத்தின் வீழ்ச்சி 1929-ஐ விட பயங்கரமாக இருக்கும். கடன் கிடைப்பது குறைந்தது மட்டுமின்றி பொருளாதார சீர்குலைவைத் தொடர்ந்து ஏற்படும் விலைவீழ்ச் சியும் நெருக்கடியை ஏற்படுத்தும். இவையெல்லாம் இருந்தாலும் கூட லத்தீன் அமெரிக்க நாடுகளின் பொரு ளாதார வளர்ச்சி இந்த ஆண்டு உலக சராசரியை விட அதிகமாகவே இருக்கும்” என்று சாவேஸ் கூறினார்.
பணக்கார நாடுகள் நெருக்கடிக் குள் வீழ்கின்ற அதே நேரத்தில் வள ரும் நாடுகள் ஸ்திரத்தன்மையை அடைந்து கொண்டிருக்கின்றன என்று பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலாடா சில்வா கூறினார். “நாங்கள் எங்களது வீட்டுப் பாடத்தை நல்லபடியாகச் செய்தோம். அவர்கள் செய்யவில்லை. உலக நிதிச் சந்தையை முக்கிய நிலைக்குக் கொண்டு வர புஷ்சின் மீட்புத் திட்டங் களால் முடியும் என்று நம்புவது தவறாகும்” என்று அவர் கூறினார்.
பெரும் செல்வந்தர்களுக்கும், ஏக போக கம்பெனிகளுக்கும் உதவும் புஷ் சின் மீட்புத் திட்டத்தை பொலிவிய ஜனாதிபதி இவோ மொரேல்ஸ் கடுமையாக விமர்சித்தார். “சாமானிய மக்களுக்கு சேவை செய்வதற்காகவே பொலிவியாவில் நாங்கள் நிறுவனங் களை தேசவுடைமையாக்கினோம். அமெரிக்கா இப்போது கடனை தேசவுடமையாக்குவது பெரும் பணக் காரர்களுக்கு உதவுவதற்காகத் தான் என்றும் மொரேல்ஸ் கூறினார். சோசலிசப் பாதையில் இயற்கை எரி வாயுத் தொழிலை தேசவுடைமை யாக்கியதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தவர் மொரேல்ஸ் என்பது குறிப் பிடத்தக்கதாகும்.
உலகில் பொருளாதார நெருக்க டிக்கு வழிவகுத்த அமெரிக்காவின் கொள்கைகளை ஈக்வடார் ஜனாதி பதி ராபேல் கொரியாவும் கடுமையாக விமர்சித்தார்.
உலகத்தொழிலாளர்களே! ஒன்று படுங்கள்!
இழப்பதற்கு உங்களிடம் ஒன்றுமில்லை வெல்வதற்கு
ஒரு புதியஉலகம் இருக்கிறது.
குழம்பிப் போறவனுக்கும் கையில் ஒன்றுமில்லாதவனுக்கும் தற்கொலை
செய்ய முயற்ச்சிப்பவனுக்கும் மேல்சொண்ன தத்துவமே மிஞ்சிப்போயிருக்கிறது
இனிவரும் இவர்களின் தொகை 50 வீதத்தையும் தாண்டும்.
போராட்டத்திற்கு புதிய பெயர் இடுங்கள்.ஆயுதம் வெடிகுண்டு மதவாதகருத்துகருத்துகளை
முற்று முழுதாக நிராகரியுங்கள் தொழிலாளர்கட்சியை ஏற்படுத்துங்கள்.சந்துபொந்து
வழியெல்லாம் தொழிலாளர்பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்துங்கள். இந்தகுழுக்கள்தான்
இப்பகுதிமக்களின் உணவிற்கும் உத்தரவாதம் செய்யவேண்டும்.
வடக்காக தெற்கா கிழக்கா மேற்கா ஐக்கியத்தை ஏற்படுத்துங்கள்.நாம் ஒரேவர்கத்தை
சேர்ந்தவர்கள் ஒரேமாற்றத்திற்காக காத்திருப்பவர்கள்.
உழைப்பவரின் ஊதியம் உழைப்பவனுக்கே உரித்தாக வேண்டும்.
அவசரப்படாமல் நிதானமாக செயல் ஆற்றவேண்டியகாலம் இனித்தான்
உங்கள் கண்முன்னே வருகிறது.