23.09.2008.
ஜெனீவா:
உலகில் பிரசவத்தின் போது ஆண்டுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வர்கள் மரணமடைவதாக ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) தெவித்துள்ளது. ரத்தப் போக்குதான் இதற்கு முக்கியக் காரணமாகும் என்றும் கூறியுள்ளது. சரியான பாதுகாப்பு கிடைக்காததாலும் உரிய மருத்துவ நிபுணர்கள் இல்லாததாலும்தான் இந்நிலை ஏற்படுகிறது. யுனி செப் தகவல்படி 2005ல் ஏற்பட்ட 5,36,000 மரணங்களில் 99 சதவீதமும் வள ரும் நாடுகளில் நிகழ்ந்தவையாகும். இதில் பாதி அளவுக்கு ஆப்பிரிக்காவில் பாலைவனப் பகுதிகளில் நிகழ்ந்துள்ளது என்றும் யுனிசெப் கூறுகிறது