‘உலகில் ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா’ என உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
ஏழைகள் குறித்த உலக வங்கியின் அளவீடு விவாதத்திற்கு உரியது என்பதற்கு அப்பால் வறுமையின் குறியீடு என வர்ணிக்கப்படும் ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் போதுகூட இந்தியாவே உலகில் வறிய நாடு.
1.2 பில்லியன் ஏழைகள் உலகில் வாழ்வதாகவும் இத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி ‘வல்லரசு’ இந்தியாவில் வாழ்வதாகவும் உலக சாதனைத் தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது உலகம் முழுவதும் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒருவர் இந்தியாவில் வாழ்கிறார் என்பதே அத் தகவல். அதுவும் நாளொன்றுக்கு 65 இந்திய ரூபாய்கும் குறைவாவ வருமானத்தைக் கொண்டவர்களே எழைகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முன்னேற்றமடைந்து அன்னிய முதலீடுகளாலும் பல்தேசிய மூலதனத்தாலும் ‘பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளது’ என கூறிவருகின்றவர்களுக்கு மற்றொரு தகவல் காத்திருக்கிறது. 1981 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ஏழைகள் எனக் கணிக்கப்பட்டவர்களின் தொகை 11 வீதத்தால் இந்தியாவில் அதிகரித்துள்ளது. மறுபக்கத்தில் 1981 ஆம் ஆண்டில் ஏழைகளின் எண்ணிக்கை 43 வீதமாகவிருந்த சினாவில் இப்போது 13 வீதமாகக் குறைந்துள்ளது.
லத்தீன் அமரிக்க நாடுகளில் அதீத வறுமைத் தொகை 12 வீதத்திலிருந்து 6 வீதமாக 1991 ஆம் ஆண்டிலிருந்து குறைவடந்துள்ளது.