மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய உருத்திரகுமார் அவர்களே!
நாடு கடந்த தமிழீழம் என்பதன் உள்ளார்ந்த அர்த்தம் என்பதே என்னால் புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எதாவது செய்கிறார்கள் என்று புலிகள் இயக்கத்திற்கு மாதச் சம்பளத்தையே வாரிவழங்கிய வள்ளல்களில் நானும் ஒருவன். இப்போது பணம் எதற்காக வாங்கினார்கள் எங்கே போனது என்பதெல்லாம் எனக்குப் மட்டுமல்ல அனைவரினதும் மூளையில் குந்தியிருந்து குடையும் நாளாந்தக் கேள்வியாகிவிட்டது.
புலிப்படம் போட்ட கொடியோடு தெருத்தெருவாக ஆயிரக்கணக்கில் தமிழர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறோம். எல்லாம் எதற்காக? யாரும் எங்களைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லையே! போர் நடந்துகொண்டிருக்கும் போது யாருமற்ற அனாதைகளாக எமது மக்கள் கொல்லப்பட்டுகொண்டே இருந்தார்கள். அதுவும் கத்தை கத்தையாக. கொசுக்கள் போல! புலிகள் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறந்த போது புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் அனைவரும் ஒரே கொடியில் தான் அணிதிரண்டிருந்தார்கள்.
தமிழின ஒற்றுமையின் பொற்காலமது… புலம் பெயர் மக்கள் நான்காவது ஈழப் போருக்கு தாமகவே முன்வந்து, பணம் பொருள் தங்களின் உணர்வு என்ற அனைத்தையுமே அர்ப்பணித்திருந்தார்கள். அன்றிருந்த ஒற்றுமை ஒரு கனவு போல. புலிகளுக்கு எதிராகப் பேசியவர்கள் எங்கேனும் ஒரு மூலையில் சத்தம் சந்தடியில்லாமல் பத்துப் பதினைந்து தமிழர்களை வைத்துக் கூட்டம் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். எல்லாமே புலிகளின் காலடியில் தான் இருந்தது. மக்கள் அனைவரும் புலிகளின் குடைக்குள் ஒற்றுமைபட்டிருந்தனர்.
இந்த ஒற்றுமையெல்லாம் இலட்சக் கணக்காக மக்கள் கொல்லப்படும் போது எந்தப் பாதுகாப்பையும் தந்துவிடவில்லை. எமது மக்கள் சாகடிக்கப்பட்டுவிட்டார்கள். மறுபடி நீங்கள் ஒற்றுமையைக் கோருகிறீர்கள். எதை நோக்கிய ஒற்றுமை? புலிகளின் அதே தோற்றுப்போன ஒற்றுமையைத் தானா நீங்களும் புலிப்படம் பொறித்த கொடியோடு கோருகிறீர்கள்?
-இது எனது முதல் கேள்வி.
புலிகளின் தோல்விக்குக் காரணம் அவர்களின் அரசியல் வழிமுறையில் எங்கோ தவறு நடந்திருக்கிறது. அதை மீளாய்விற்கு உட்படுத்தி விமர்சனம் செய்து கொண்டீர்களா? அப்படியானால் என்ன தவறு நடந்திருக்கிறது? தவிறுகளிலிருந்த படிப்பினையூடாக நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன? உங்களது புதிய திட்டம் என்ன?
-இவை எனது மேலதிக வினாக்கள்..
புலிகளின் கொள்கைத் தவறு என்பதில் இன்னுமொரு விடயத்தையும் எனது மூளையின் முன் நரம்பில் ஒவ்வொரு இரத்த அணுக்கள் சந்திக்கும் போதும் பேசிக்கொள்கின்றன. நம்பக் கூடாதவர்களோடு, மாபியாக்களோடு, கொலைகார அரசுகளோடு, சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளோடு அவர்கள் கூட்டுவைத்துக் கொண்டது தான் என்று குழந்தைகுக் கூட தெரிவதாக அது அமைகிறது. அப்படியானல் அது போகட்டும். இப்போது உங்களோடு இணைந்து கொண்டவர்கள யார்? யார் யாரோடெல்லாம் கூட்டுவைத்திருக்கிறீர்கள்? எந்த அரசுகள் உங்களது நண்பர்கள்? எந்தெந்த அரசியல் வாதிகள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்?
-இவையெல்லாம் எனது வினாக்கள் மட்டுமல்ல இதுவரைக்கும் போராட்டம் வெற்றிகொள்ளப்பட வேண்டுமென்று கனவு கண்ட, பங்களித்த ஆயிரமாயிரம் தமிழர்களின் கேள்விகள்.
காஷ்மீரிலும், நாகாலாந்திலும், நேபாளத்திலும், லத்தின் அமரிக்காவிலும் ஏன் ஐரோப்பாவிலும் அமரிக்காவிலும் கூட மக்கள் எங்களைப் போல ஒடுக்கப்படுகிறார்களாமே; அவர்களும் எங்களைப் போலப் போராடுகிறார்களாமே! இவர்களோடெல்லாம் நீங்கள் பேசிப் பார்த்திருக்கிறீர்களா? தொடர்பு கொண்டிருக்கிறீர்களா? அவர்கள் எம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? சந்தர்ப்பவாதிகளால் ஏமாற்றப்பட்ட எமக்கு அவர்கள் உறு துணையாக வருவார்களா?
-இவைகள் எதிர்காலம் குறித்த எனது கேள்விகள்.
காசாவில் இஸ்ரேலிய அரசு குண்டுபோட்டு மக்களைக் கொலைசெய்யப்படும் போதெல்லாம் ஐரோப்பாவில் மனிதாபிமானிகளும், ஜனநாயக விரும்பிகளும், இடதுசாரிகளும் போராட்டம் நடத்துகிறார்களே, இலங்கையில் ஒரு குக்கிராமத்தில் ஐம்பதாயிரம் மனிதர்கள் சதைகளும் எலும்புகளுமாக சிதைக்கப்பட்ட போது இவர்கள் ஐரோப்பிய அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கவில்லையே ஏன்?
பிரித்தானியாவில் ரொனி பிளேரும் அமரிக்காவில் ஜோர்ஜ் புஷ் உம் மக்களால் நிராகரிக்கப் பட்டமைக்கு இவர்கள் நடத்திய போராட்டங்களே காரணம் என்கிறார்கள். இந்தப் பிரிவினருடன் நீங்களும் தொடர்புகளை ஏற்படுத்தி வேலை செய்கிறீர்களா? அவர்களை எங்கள் போராட்டங்களுடன் இணைத்துக் கொள்ள என்ன செய்தீர்கள்? உங்கள் திட்டம் என்ன?
-நேரமிருக்கும் போது இவை பற்றியும் சிந்தித்துப் பதில் தருவீர்கள் என நம்பிக்கையோடு காத்திருப்பேன்.
இறுதியாக புலிகள் பில்லியன் கணக்கில் சொத்துக்களும் பணமும் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறதே அவையெல்லாம் எங்கே? நீங்கள் விசாரித்துப் பார்த்தீர்களா? யார்யார் பணம் வைத்திருக்கிறார்கள், சூறையாடினார்கள் என்பதை எல்லாம் மக்கள் மத்தியில் எப்போது அம்பலப்படுத்தப் போகிறீர்கள்?
உங்களிடமும் மக்களின் பணம் உள்ளதா? அப்படியானால் அதன் மதிப்பு என்ன? பணம் இருந்தால் இலங்கை அரசின் இனப்படுகொலையையும் போர்க்குற்றத்தையும் அம்பலப்படுத்த அதனைச் செலவிட முடியாதா? ஐக்கிய நாடுகளும், மன்னிப்புச் சபையும் தான் எம்மைக் கைவிட்டுவிட்டதே, முறையான ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஐரோப்பிய அமரிக்க மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி ஐ.நாவிற்கு ஏன் அழுத்தத்தை நீங்கள் வழங்கக் கூடாது?
பிற்குறிப்பாக, கே.பி ஆரம்பித்துவைத்து தான் நாடுகடந்த தமிழ் ஈழம். இப்போது கே.பி இலங்கை அரசின் கையாள் என்று கூறப்படுகிறதே. இது குறித்து மக்களுக்கு ஏன் நீங்கள் தெளிவுபடுத்தவில்லை? ஒரு குட்டி அறிக்கைகூட வெளியிடவில்லை? உங்களுக்கும் இலங்கை அரசிற்கும் ஏதாவது………..? நான் இதுவரை 7500 யூரோக்களைப் பணமாக புலிகளின் போராட்டத்திற்கு வழங்கியுள்ளேன். எனது பணத்தைப் பெற்றுக்கொள்ள உங்களிடம் நான் முறையிடலாமா?
இவை எல்லாமே எனக்கும் என்போன்ற விடுதலை உணர்வுள்ள ஆயிரக்கணக்கனோருக்கும் முன்னால் உள்ள கேள்வி. உங்களுக்கு வசதியான தளத்தில் உங்கள் பதிலை எதிர்பார்க்கும்..
(விடுதலை உணர்வோடு..)
N.சத்தியன்
It’s a question, worth of a million dollar. Please, try to organize, something like an association, that can be a mediation between the Tamils who want to have their money back and the representatives of the LTTE who collected the money for the last two final wars but that collection did not used to do the said purposes.
I’d like to meet the Tamil people who want to have their money back, (as promised by the faux collectors of LTTE) to be with us for the rest of the actions that we’re going to organize with the law enforcement. Our movement have the advocates
for this actual purpose and their services should be paid but not that amount that you’ve paid for nothing. Believe us and mail us to discus your case individually.
Sir,
Please give your address to send our reclemations.
Thank you.
raj
To have a lobby like an organization for Tamils, which can be a defender of your rights, Please contact this mail & we’ll let you the next action to have your money back.
Contact:: sankiliyan@hotmail.fr
வாங்கையா என்ன நாடுகடந்த தமிழீழ அரசைப்பற்றி ஒன்றுமே இனியொரு…..(சதிசெய்வோம்) இல் காணேல்லையே எண்டு நினைச்சேன் அதையும் இதோ…திரு.சத்தியன் இதுக்கு முதல்ல 7500 ஊரோக்களை கொடுத்தீர்களாமே கேள்வி அப்ப கேக்க நினைக்கேல்லையா? அப்ப மூளைய குளிர்சாதனப்பெட்டிக்குள்ள வச்சிருந்தீங்களாக்கும்??? எல்லாத்துக்கும் விசாரண செய்ய முதல்ல நாடுகடந்த அரச நிறுவுவோம்,பிறகு பணம் எங்க எப்படி போச்சு எண்டு விசாரிப்பம்!!!, அதையும் நடக்க விடமாட்டிங்க போல இருக்கு, புலிகள் உறுமேக்க,பூனைக்குட்டி போர்ர சத்தம் மாதிரி சொல்லாம,கொஞ்சம் பிலத்தா சொல்லிராதிங்க ஆராவது வாயிலே குத்திடப்போகினம்….கவனம்….ராஜேஸ்.
புலியென்னும் வர்த்தக் அமைப்பைக்காக்கவே ஈழ்த்தமிழர்களின் பணமும்
உயிர்கழும் விரயமாகின.
தமிழரின் விடுதலையின் முதற்படியில் கூட கால் வைக்காமல் விடுதலைப் போராட்டம்நடத்தியவர்கள் தான் புலிகள். இனிநாடுகடந்த அரசும் இவர்களின் சொத்துக்களையும்
பாதுகாத்து, சட்டத்திலிருந்து தப்பிக்க்கவேயாகும். தமிழர்களிற்காவல்ல. துரை
என்னையா வர்த்தக அமைப்பென்று சிறுமைப்படுத்த எப்படி உங்களால முடியுதோ? எதிரிகூட இப்படி சொல்லான். போராளிகளின் தியாகத்தை இப்படி சிறுமைப்படுத்த உங்களுக்கே கேவலாமாய் இலையா?.நீங்க சொல்லுறதப்பாத்தா,சிங்களவனோட சேர்ந்தே இருக்கலாம் எண்டு சொல்லுவிங்க போல இருக்கு.என்ன செய்வோம் உங்கள் பிழைப்பையும் நினச்சா பாவமாதான் இருக்கு(நல்லாத் தருகினம் போல,???)
நான் முன்பே சொல்லியிருக்கின்றேன் உயிரைக் கொடுத்த போராளிகள் மதிக்கப்பட வேண்டியவ்ர்கள்..அதனால் பணத்தைப் பதுக்கிய புலிகழையும் மதிக்க வேண்டுமா?
போராடிய மரணித்தவ்ர்களிற்கும் போரை நடதியவர்களிற்கும் எதுவித
சம்பந்தமுமில்லை. துரை
துரை ,அடுத்து உருப்படியா தமிழ்மக்களுக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி ஒரு ஈடுபாடோ, விளக்கமோ, செயல்பாடுகளோ இல்லாம இப்பிடி அலட்டுவதை தவிர்க்கவும்!!!
ஈழ்த்தமிழரின் பெயரால் பிழைப்பு ந்டத்துவோரை
நிறுத்தினாலேயே போதும். ஈழ்த்தில்
புதிய
தலைமை உருவாகும். உலகமும் அவ்ர்களை
மதிக்கும். ஈழப்போர் இப்போ காஸ்ரோ,நெடியவன் போராக மாறி,நடந்த விடுதலைப்போரின் சுய ரூபத்தை காட்டுகின்றதே. துரை
ண்ணா.. ராசேஸ் ண்ணா, ருத்திரகுமாரனை நோக்கி எத்தினை கேள்வி கேட்ருகு ணா, இதில ஒரு கேள்விக்காவது பதில் சொல்லாம சும்மா எகிர்றிங்கள் ணா, இப்டியே போனா நந்திக் கடல்ல குதிச்ருவீங்கள் ணா. முதல்ல ஒரு கேள்விக்காத்ல் பதில் சொல்லப் பழகுங்கோண்ணா.
என்ன தம்பி, கேள்வி உருத்திரகுமாருக்கா? எனக்கா? நான் நந்திக்கலட்டல்ல குதிக்கிறது இருக்கட்டும், நீர் முதல்ல வெயில் மழையில போகாம இரும். உமக்கு மேல் வீடு பழுதாகிக்கொண்டே போகுது.
இது என்ன கொடுமை!! நீங்கள் எல்லாம் மக்களுக்கும், தமிழருக்கும், தமிழ் ஈழத்துக்கும் உதவிசெய்தனாங்கள் எண்டு பீலவிட்டு திரிஞ்சுபோட்டு, இப்ப பாங்கில போட்ட பணம்மாதிரி திருப்பி கேட்டா??? கொடுக்கும் போது அப்பணம் யார்மூலமாக, யாருக்கு, எவ்வழியில், எதற்காக, எவ்வாறு , எவளவுகாலத்தில் போய்சேரும்? அதன் பயன் என்ன? பின்னர் அப்பணம் மீழ கிடைக்குமா? அவ்வறாயின் யார்மூலம் என இவளவுகேள்விகளில் ஒன்றையாவது பணம் தரும்போது கேட்டிருக்கலாமே?? குழத்தில போட்டுட்டு ஆத்தில தேடினா எப்புடி கிடைக்கும்???
“அடுத்து உருப்படியா தமிழ் மக்களுக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி ஒரு ஈடுபாடோ, விளக்கமோ, செயல்பாடுகளோ இல்லாம இப்பிடி அலட்டுவதை தவிர்க்கவும்!!!” என்று துரைக்கு ஆலோசனை சொல்லுகிற றூட்டோ, நீக்கள் ஏன் ஒரு களவாணிக் கும்பலை காப்பாற்றத் தவியாகத் தவிக்கிறீர்கள்?
குளத்திலை போட்டதும் ஆத்திலை போட்டதும் குவிஞ்சிருக்கிற இடத்திலை கேக்கலாம்.
சில குளங்கள் போட்ட இடத்திலை தான் கிடக்குது.
” தட்டுங்கள் திறக்கப்படும் … தேடுங்கள் புலப்படும் … கேளுங்கள் கிடைக்கும்” என்றார் யேசு.
அது தான் கொஞ்சம் (அ)தட்டிக் கேட்கிறோம்.
dear all,
one thing i want to know from our people.what are all the question asked above is very good but without any logical thinking.(if u educated squezze ur brain once).our people only doest have cooperation and support.see around the hold all the people are standing under one roof for care of there own community.except us.
i really shame for this.please dont drag others
O Logical Master!
Be kind on this illogical one and kindly reveal how all these miserable illogical souls ended up asking “very good’ questions?
குப்ஸ்!ஆப்பிடீன்னா,தமிழ்ல குப்பையா?சத்தியன்,அப்பிடீங்கிறவரு “அப்பிடீன்னா”இன்னான்னு கேக்கிறாரு!சாள்சு 7500 குடுத்திருக்கேன்,திருப்பி வாங்கணுமாம்!குப்ஸுங்கிற குப்ப பதிலு சொல்லாம எகிறுறாங்களாம்!நந்திக் கடல்ல குதிக்க வேண்டி வரும்கிறாரு!சோத்தத் தான திங்கிறீங்க?அது சரி, க(கொ)லைஞரு சொன்னாப்பில சோத்தால அடிச்ச பிண்டங்க தானே?நீங்க குடுத்த தகிரியத்தால தாய்யா இந்த மாதிரி ஆச்சு!இன்னும் இன்னா கேக்கறீங்க?இப்புடியே இன்னும் எத்தின காலத்துக்கு ஜால்ரா போட்டுகிட்டே பொழக்கப் போறீங்க?கொஞ்சம்,கொஞ்சமா நெலத்த முழுங்கி கிட்டெ வரான்: அத மொதல்ல நிறுத்தணும்.ஒண்ணா வாங்கன்னா,இன்னும் பழங்கதயே பேசிட்டு!ஒதவ வேணாம்,ஒபத்திரவமாவது(,இந்த மாதிரி புப்பிளிக்கு கேள்வி கேட்டுகிட்டு)பண்ணாம இரிந்தீங்கன்னா அதுவே கோடி புண்ணியம்!!!!!!
dear all,
one thing i want to know from our people.what are all the question asked above is very good but without any logical thinking.(if u educated squezze ur brain once).our people only doest have cooperation and support.see around the hold all the people are standing under one roof for care of there own community.except us.
i really shame for this.please dont drag others
Sathayan,
very important question. Thamil diaspora should raise questions like this before support to any organization/ideas. That was the mistake we made in past. We never questioned the politicians or so called leaders. We just go behind them.
TGTE is generally good concept. I thing it should exclude LTTE and its banner. It should be under banner of Thamils.
Nada Manivannan
Dear NM
the whole idea of TGTE is to give shelter to those who made a living by being spokespersons for the LTTE’s cause. They drop the LTTE insignia, the Tamil diaspora will dump them.
Tell me if 0.01% of the Tamil diaspora truly understands what TGTE is or what purpose it claims to serve.
What is worse than the LTTE logo is the mafia that is in control.
ணா ராசேஸ், ருத்திரகுமார் கோட்டுச்சூட்டு ரையோடு முழுக்கை சடையுமெல்லே போட்ட மெத்தப் படிச்ச பெரிய மனுசன். அவரைக் கேள்வி கேட்டா உங்களுக்கு சதி செய்யீன எண்டு மூக்குகு மேல கோவமெல்லே வருகூது. அவர் எப்பிடு புளக்குவில பதில் சொல்லுவேர்? அப்ப நீங்கள் அவற்ற ஆதரவு தானே? உந்தக் கேள்விக்கெல்லம் நீங்கள் ரெலிபோனுக்குள்ளால கேள்வியளை கேட்டு பதிலைச் சொன்னா சிவனே எண்டு ஆறுதலா இருக்குமெல்லே?
பிரிட்டிஷ் இளவரசர் பேரில்(charles, Posted on 05/31/2010 at 10:43 pm ) பிரான்சிலிருந்து ஆங்கிலத்தில் புதுக்கருத்து எ
ழுத,
அடுத்த 3 நிமிடத்தில்
இராஜா(raj) என்றபடி,
சேர் (sir) போட்டு, திருட்டு(thiru,Posted on 05/31/2010 at 10:46 pm ) வழி காட்ட,
அடுத்த 9 நிமிடத்தில் சரித்திரம் கடந்த
அரசன்(Contact:: sankiliyan@hotmail.fr ,Posted on 05/31/2010 at 10:55 pm ) பேரில் ஈமெயில் தர:
சத்தியன்,இனியொரு கூட்டில் நடக்கும் விளையாட்டில் நடைமுறை விதிகளை விளக்குங்கள்.
ஊங்களுக்கு இணையத்தளங்களில் தகவல் பரிமாறப்படும் வேகம் பற்றித் தெரியாதா?
அல்லது பாசாங்கு செய்கிறீர்களா?
சம்பந்தப்பட்ட இரண்டு/மூன்று பேர் இணையத்தளத்துடன் தொடர்புடன் இருக்கையில், இணையத்தளப் பொறுப்பாளர் ஒருவரும் செயற்பட்டுக் கொண்டிருப்பது என்ன மர்மமான விடயமா?
வேறு இணையத் தளங்களிகளில் இதை விட வேகமான தகவற் பரிமாற்றத்தைக் கண்டிருக்கிறேன்.
அடுத்தடுத்துப் புலி ஆதரவுக் கருத்துக்கள் வந்தும் உள்ளன.
அது யாருடைய விளையாட்டாக இருக்கும்?
கேள்வி கேட்பவர்களை எல்லாம் துரோகிகள் என சித்தரிப்பதை முதலில் நிறுத்துங்கள்.முழுத் தமிழர்களையும் குத்தகைக்கு
எடுத்ததுபோல் செயற்பட யாருக்கும் உரிமை கிடையாது. இந்தக்கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டியது
உருத்திரகுமாரின் கடமை.
ஒரு கேள்விக்காவது பதில் சொல்லக் கூடியவர் யாரும் கோபப் பட்டால் அது நியாயமான கோபமாயிருக்கும்.
கேள்வி பாற்றியே கோபப் படுவது தங்களுக்குத் தெரியாது என்றதால் மட்டுமல்ல புதிய தலைவருக்கும் தெரியாது என்ற பயத்தலா?
அவரை யார் தலைவராக்கினார்கள்? எல்லாமே மூடுமந்திரம்.
அவர்கள் செய்வது வியாபாரம் இல்லை என்றால் துணிந்து பேசட்டுமே!
அன்பர்களே,
உண்மையில் இந்தக் கேள்விகளுக்கு உரித்திர குமார் மட்டுமல்ல இனிவரும் காலத்தில் வரும் எந்த அமைப்புகளும் பதில் சொல்லுமானால் அல்லது கேள்விகளை தங்களைத் தாங்களே கேட்பார்களானால் அதுதான் சரியான அமைப்பைக் கட்டுவதற்கான ஆரம்பப்படியக அமையும்.
வினவெழுப்பும் அறம் என்பதன் உண்மையான அர்த்தம் வெளிப்படுகிறது. உருத்திரகுமார் மெளனம் சாதிக்காமல் பதில் சொல்வார் என எத்ர்பார்கிறேன்.
Our money became BMW for ramba and other tamil actress!!!!
Hello Friends.
First of all. the comments are to be clarified before to make sure that they are the standard comments for the public.
Second matter is for this letter writer. Please. don’t you know one of the laws in public. The donations or any donations collected in the name of any policatical organization, cannot be refunded.Such things never happened in the past and will not happen in the future as well. Mr. shathiyan ! you have account for your money ,you have given. At the same time, 99%of our don’t have even account for their donation because they didn’t expect things will change in over night like this.
Being together and friends is the best way. Good luck.
Congratulations Mr Velavan!
So, the swindlers can now hide behind the law.
Was the money collected by legitimate means?
If any money was collected using any kind of threat or deception that would constitute an unlawful act.
If no explanation is given about what happened to the funds, the swindlers should be dragged to courts. If law cannot help other ways should be explored collectively.
Humiliate the cheats in public for a start. Let them not speak a word on behalf of the Tamils in public until they come clean.
You are right Mr. Grammasala! Unless they answer to every individual like Mr. Shathiyan,that they have nothing to do with all these funds, collected in the name of L.T.T.E, their new political philosophy will not work out in the public. In he meantime, I don’t much about Mr. Uruthirakuman either. Some people say that he is a lawyer and someother say that he is a businessman. Anyway , it is just the begining. Let’s wait and see.
In the meantime, I don’t know much aobut mr.Uruthirakumarn either. (correction)
Thank you, Velavan.
Rudrakumaran is the son of the former (Federal Party) mayor of Jaffna. He was not part of the struggle but of an elite group that increased its influence in the LTTE through fund raising and so-called lobbying.
It is that lot which raided hope with the LTTE in Vanni that the West will come to its rescue.
Its ways are not democratic and it do not answer questions.
Let each clear his name before he takes decisions and responsibilities in the name of the Tamils.