ஒரு காலத்தில் உத்தரபிரதேச மாநிலம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. உத்தரபிரதேச மாநில தொகுதிகள்தான் நேரு குடும்பத்தினரின் கோட்டையாகவும் இருந்து வந்தது.
ஆனால், இன்று நிலமை அப்படி இல்லை.எதிர்க்கட்சியாகக் கூட காங்கிரஸ் இல்லை. இந்தி பேசும் இந்து தேசியவாத எண்ணம் கொண்ட உத்தரபிரதேசம் இந்துத்துவத்தின் கோட்டையாக மாறி உள்ளது. அகிலேஷ் யாத்வ், மாயாவதி போன்ற மாநில தலைவர்களை எல்லாம் ஓரம் கட்டி விட்டு பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. அதிக வன்முறை, மதக் கொலைகள், சாதீயக் கொலைகள் நடக்கும் மாநிலமும் இதுதான்.கல்வியறிவு இன்மை, ஏழ்மையும் இங்குதான் அதிகம். நிலம் சிலரிடம் குவிந்து கிடக்கும் பெரும்பான்மையோரிடம் நிலம் இருக்காது. இதுதான் உத்தரபிரதேசத்தின் நிலை.
நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் உத்தரபிரதேச மாநிலத்தில் வென்றாக வேண்டிய தேவை காங்கிரஸ் கட்சிக்கு எழுந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பின்னர் அம்மாநிலத்தின் தலைவராக ப்ரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் உத்தரபிரதேச மாநிலத்திலேயே தங்கியிருந்து கட்சிப்பணி செய்து வருகிறார்.
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ப்ரியங்கா காந்தி உத்தரபிரதேசம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இன்று நடந்த பெண்கள் மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் 40% தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்க இருக்கிறோம்”. என்றார். இந்த அறிவிப்பு பரவலாக கவனம் ஈர்த்தாலும்.
பின் தங்கிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் இது எடுபடுமா என்ற கேள்வியும் எழுகிறது. அயோத்திக்கோவில், பாகிஸ்தான், பயங்கரவாதம் என இது உணர்ச்சியை ஊட்டி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக. 400 தொகுதிகளிலும் ஒவ்வொரு வார்டுகளிலும் இது தொடர்பான வதந்திகளை பரப்ப இப்போதே குழுக்களை துவங்கி விட்டது பாஜக.
ஒவ்வொரு வார்டிலும் உள்ள இந்து வாக்காளர்களை எப்படிக் கவர வேண்டுமோ அப்படிக் கவர வேண்டும் என களமிரங்கியிருக்கும் பாஜகவையும், இன்னொரு பக்கம் அகிலேஷ் யாதவ், மாயாவதியையும் சமாளித்து தனித்து நின்று காங்கிரஸ் வெல்லுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், ஒரு ப்ரியங்காகாந்தியின் அஸ்திரம் எடுபட்டால் சந்தேகமில்லை அவர்தான் அடுத்த பிரதமர்.