மட்டக்களப்பு உன்னிச்சையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உன்னிச்சை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி எஸ்.ரட்ணமலல ‘ நான் பௌத்தனாக இருந்து பௌத்த விகாரைகளுக்குச் சென்று தானம் செய்வதை விட, யுத்த அனர்த்தங்களால் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் உன்னிச்சைப் பகுதி மக்களுடன் வாழ்வதற்கே விரும்புகிறேன், இம் மக்களின் மேம்பாட்டிற்கும், துயரைத்துடைப்பதற்கும் என்னாலியன்ற சேவைகளை இதயபூர்வமாக நான் மேற்கொள்வேன்” எனப் பேசியிருக்கிறார்.
இNது வேளை நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் ஒருசில சிங்கள சகோதரர்கள் இனப்பிரச்சினைக்கான காரணம் சிங்கள அரசியல் தலைவர்களின் அரசியல் நடவடிக்கைகள் தான் எனவும், பிரச்சிகை;கான அரசியல் தீர்;வு முன்வைக்கப்பட வேண்டும் எனவும் வாக்குமூலம் அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பேச்சுபல்லக்கு தம்பி பொடிநடை என்பது போல் சிங்கள்மும் எத்தனையோ நரிவிளையாட்டு விடுவார்கள் ,
you people never satisfy any thing. soft hear is every where, how could you ….
சிங்களவர்கள் யாவரும் தப்பானவர்களில்லை. மனிதாபிமானம் உள்ளவர்கள் எத்தனையோ பேருள்ளார்கள். அதிகாரத்துக்காகவே அரசியல்வாதிகள் அவர்களைப் பழுதாக்குகின்றார்கள் அல்லது தப்பான பாதைக்கு இட்டுச் செல்கினஇறனர். என்னைப் பொறுத்த வரையில் அவ்விராணுவ அதிகாரி பாராட்டப்பட வேண்டியவரே.
நீங்கள் கூறுவது உண்மையாகவும் இருக்கலாம். அப்போ அப்பாபிள்ளை. அமிர்தலிங்கம் வீட்டில் சிற்றுண்டி அருந்தி தேனீர் குடித்துவிட்டு அவர்களை போட்டுவிட்டு( கொலை) போவது சிறந்த ராஜதந்திரமா? உண்ட வீட்டில் இரண்டகம்? (அமிர்தலிங்கம் நான் வெறுத்த மோசமான அரசியல்வாதி என்பது வேறு விடயம்)
வினோதன்
தமிழ்த் தேசியத் தலைவர்கள் எந்த வகையில் சிங்களத் தலைவர்களை விட யோக்கியமானவர்கள் என்று சொல்லுங்கள்.
இனவாதம் என்பது ஒரு தரப்பின் நோய் மட்டுமல்ல.
முஸ்லிம்களுக்கு தமிழ் இயக்கங்கள் செய்த கொடுமைகட்கு விளக்கம் கூறி விட்டுப் பிறர் மீது குற்றம் சுமத்துங்கள்.