உத்தரபிரதேச தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஓவைசி என அனைவருமே தனித்துப் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலின் பின்னர் யார் பலம் பெற்றவர்கள் எனப்து தெரிந்து விடும், காங்கிரஸ் கட்சி தன் கையை விட்டுப் போன உத்தரபிரதேசத்தை எப்படியாவது கைப்பற்ற நினைக்கிறது. அகிலேஷ் யாதவ் ஆட்சியைக் கைப்பற்றவும், பாஜக ஆட்சியை தக்க வைக்கவும் போரடுகிறார்கள். இந்நிலையில் பரந்து பட்ட அளவில் காங்கிரஸ் தலித் மக்களின் கட்சி என்பதை நிரூபிக்க ஏராளமான தலித் வேட்பாளர்களை களமிரக்குகிறது.
உபி மாநிலத்தில் உன்னவ் என்ற இடத்தில் 17 வயது சிறுமியை பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். குல்தீப் செங்கார் என்ற பாஜக எம்.எல்.ஏவின் இந்த செயல் நாடு முழுக்க கடும் சர்ச்சைகளை உருவாக்கியது. 17 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்தனர். துவக்கம் முதலே இந்த விவகாரத்தை கையில் எடுத்து காங்கிரஸ் போராடி வந்தது.
இந்த நிலையில் கொடூரமாக கொல்லப்பட்ட 17 வயது சிறுமியின் தாய் ஆஷா சிங்கிற்கு காங்கிரஸ் சார்பில் உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் போட்டியிட பிரியங்கா காந்தி வாய்ப்பளித்துள்ளார்.
உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட பிரியங்கா காந்தி கூறுகையில் உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் உன்னவ் மற்றம் ஹாத்ராஸ் கூட்டு பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த வேட்பாளர் பட்டியல் மூலம் நாம் சொல்ல வருவது என்னவென்றால் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் துணையாகவே இருக்கும் என பிரியங்கா காந்தி பேசினார். ஹாத்ராஸில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட தலித் சமூக பெண்ணின் குடும்பத்தினரும் தேர்தலில் போட்டியிடும் வகையில் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தயாரித்து வருகிறது.