உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அந்த மாநில முதல் அமைச்சராக பதவியேற்கிறார் முலாயம் சிங் யாதவ்.
உத்தரபிரதேச சட்ட மன்றதேர்தலில் சமாஜ்வாடி கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. உத்தரபிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. இதில் சமாஜ்வாடி கட்சி 224 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
உத்திரபிரதேசத்தில் ஆட்சி செய்து வந்த பகுஜன் சமாஜ் கட்சி வெறும் 80 இடங்களை மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. மற்றும் பா.ஜ. 44 , காங்கிரஸ் 36 , மற்றும் சுயேட்சைகள் 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி வெல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பல தொகுதிகளையும் அந்தக் கட்சி நழுவ விட்டுள்ளது.