யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உதயன் நாழிதழ் அலுவலகத்தின் மீது இன்று சனி காலை தாக்குதல் நடத்தபட்டது. மூன்று பேரடங்கிய துப்பாக்கி நபர்கள் அங்கிருந்த உபகரணங்களுக்குத் தீமூட்டி எரித்துவிட்டுச் சென்றுள்ளனர்.அலுவலக வளாகத்தில் துப்பாக்கிப் பிரையோகமும் மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் ஆதரவுடன் இயங்கும் தமிழ் துணைக்குழு உறுப்பினர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். உதயன் என்ற வியாபாரப் பத்திரிகையைக் கூட இயங்கவிடாமல் வன்முறை ஊடாக அழிக்க முயலும் இலங்கை அரச பயங்கரவாதமும் பாசிசமும் தன்னை சாராத அத்தனையையும் அழித்துத் சிதைக்கின்றது. அரசு இல்லாத சிறிய கூறுகளைக்கூட இயங்கவிடாது தடுக்கும் மகிந்த அரசின் பாசிசத்தைப் பலவீனப்படுத்தும் போராட்டம் சிங்கள மக்களை இணைத்துக்கொள்வதிலிருந்தே சாத்தியமானதாகும்.