கூடங்குளத்தில் ஜெயலலிதா படை மக்களைச் சூறையாடி வருகிறது.சுனாமி காலனியை சேர்ந்த ஞானப்பிரகாசம் (35) என்பவரது வீட்டில் புகுந்து டியூப்லைட்கள், டி.வி., மற்றும் பல்வேறு பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதே போல லீலா என்பவரது வீட்டில் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன. அவரது வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் 5 பவுன் நகையை காணவில்லை என்று கூறப்படுகிறது. ஜெயலலிதா அரச படைகளே இவ்வாறு மக்களைச் சூறையாடியுள்ளன.இதற்கிடையே கடலுக்குள் சென்ற உதயகுமார் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. படகில் கடலிலேயே அவர் தங்க வைக்கப்பட்டுள்ளாரா? அல்லது ஏதாவது மீனவ கிராமத்துக்குள் சென்று விட்டாரா? என்பது மர்மமாக உள்ளது. உதயகுமாரை படகில் அழைத்து சென்றுள்ளதால் கூடங்குளம் பகுதியில் உலவும் படகுகளின் நடவடிக்கைகளை கடலோர காவல்படையினரின் நவீன கருவிகள் உதவியுடன் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மக்கள் தலைமைதாங்கும் மக்கள் போராட்டமிது, இங்கே தலைவர்கள் தேவையில்லை.
Nedunthuyilon it is good to see who is instigating the people.