கிழக்கு மாகாணத் தேர்தல் பிரச்சாரங்களில் பிள்ளையானின் பிரதேச வெறி அதி உச்சத்தை அடைந்துள்ளது. பிரதேச வெறியை மட்டுமே தனது தேர்தல் வியாபார ஆயுதமாகப் பயன்படுத்தும் பிள்ளையான், வடக்கில் மட்டுமே பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள், வடக்கில் மட்டும் தான் நில ஆக்கிரமிப்பு நடைபெறுகிறது என்றும் கிழக்கில் அந்த அளவிற்கு ஏதுவும் நடைபெறவில்லை என்றும் பிள்ளையான் கும்பல் தேர்தல் பிரச்சாரத்தில் திரும்பத் திரும்பக் கூறிவருகிறது. பேரினவாதத்தின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கும் தமிழ்ப் பேசும் மக்களைப் பிரதேசரீதியாகப் பிளவுபடுத்த முயலும் கருணா பிள்ளையான் போன்ற அரசின் அடிவருடிகள் தமது சுய இலாபத்திற்காக முழு சமூகத்தையும் இருளின் விழிம்பிற்குள் இழுத்துச் செல்ல முயற்சிக்கின்றனர். இதற்கு எதிரான காத்திரமான அரசியல் இலங்கையில் எந்தத் தரப்பிடமும் இருக்கவில்லை என்பது வட-கிழக்கு தமிழ் தேசிய இனத்தின் சாபக்கேடு.
பிரபாகரனும் யாழ்பாணிதானே அப்போ பிள்ளையானுக்கு தெரிந்திருக்கவில்லையா? இவர் நகரபிதாவல்ல ஒரு நரகன்
கருணா பிள்ளையான் போன்ற அரசின் அடிவருடிகள்//// இவர்கள் இருவரும் விடுதலை புலிகலே, தேசிய தலைவரால் பயிற்றுவிக்க பட்டவர்கள் அவரை போலவே இருப்பர்/// கிழக்கிலங்கை யாழ்ப்பாணிகளின் மானம் காக்கும் கோவனம் அல்ல
யாழ்பாணி எண்டு சொல்லிக்கொண்டு மட்டக்களப்பான்ட காணிகளையும் பொண்டுகளையும் யார் மட்டக்களப்பாங்களுக்கும்நல்லா தெரியும்
We are in tune with the world. Police powers for Pillayan.