தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகள் ‘தமிழ் உணர்வாளர்கள்’ என்ற தலையங்கத்தில் நடத்தும் களியாட்டங்களுக்கு ‘தேசியத்தின்’ பேரால் களம் அமைத்துக்கொடுப்பது புலம்பெயர் பிழைப்புவாதிகளின் செயற்பாடுகளில் பிரதானமானது. பாரதிராஜா என்ற தென்னிந்தியத் திரைப்ப்பட இயக்க்குனர் கடந்த வருடம் மார்ச் மாதம் பிரித்தானியாவிற்குச் சென்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் பிரதான அதிதியாகக் கலந்துகொண்டார். அதே வேளை சர்வதேசத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்ற அமைப்பு பாரதிராஜாவை அழைத்து மதிப்பளித்தது.
அதே பாரதிராஜா, இலங்கை பேரினவாத அரசின் துணைக்குழுவின் பிரதானியான ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துப் பேச்சுவர்தை நடத்தியுள்ளார். யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் டல்க்ளஸ் தேவானந்தா இயக்குனர் பாரதிராஜாவை நட்பின் நிமித்தமாக சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அதன் போது கருத்துவெளியிட்ட பாரதிராஜா வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பக மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் அபிவிருத்தி என்ற பெயரில் நடத்தப்படும் திட்டமிட்ட அழிவு நடவடிக்கைகள் ஊடாக குடாநாட்டை வரண்ட, வளமற்ற நிலமாக மாற்றும் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சுன்னாகம் அனல் மின்னிலையத்திலிருந்து பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சியைச் சார்ந்த நிர்ஜ் தேவா என்பவர் இணைந்து நடத்தும் அழிப்பு நடவடிக்கைக்கு எதிராக பறை-வோய்ஸ் ஒப் பிரீடம் என்ற அமைப்பு நாளை திங்கள் 3 மணிக்குப் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரித்தானியக் கிளையின் முன்னால் நீதி கோரும் போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. ஐந்தாம் படைகள் போன்று செயற்படும் புலம்பெயர் ஊடகங்களும், அமைப்புக்களும் இது தொடர்பாக கருத்துக்களை வெளியிட மறுத்து வருகின்றனர். பாரதிராஜா போன்ற உணர்ச்சி வியாபாரிகளை அழைத்துப் பிழைப்பு நடத்தும் இவர்கள் மக்களும், வளங்களும் அழிக்கப்படும் போது மூச்சுக்கூட விடுவதில்லை.
மேலதிக வாசிப்பிற்கு:
நமது மண்ணையும் மக்களையும் அழிவிலிருந்து பாதுக்காக உதவுவோம்: ஆர்பாட்டத்திற்கு அழைப்பு
தண்ணீர் கேட்டவர்கள் பயங்கரவாதிகளாக்கப்பட்டனர் : புலம்பெயர் தமிழர்களுக்குச் சவால்
யாழ்ப்பாணத்தை நஞ்ச்சாக்கும் நிறுவனத்தின் இயக்குனர் பிரித்தானியாவில்:புலம்பெயர் அமைப்புக்கள் எங்கே?
அவர் டக்லஸ்சுடன் மட்டுமல்ல கூட்டமைப்பு சிறீதரன் மாவை சேனாதிராஜா என பல பிழைப்புவாதிகளுடன் ஏதோ பிழைப்பு நடத்த வந்திருக்கிறார்…
http://www.newstamilwin.com/show-RUmszCRVKakx0.html
May be for election deal maker…
அவர்கள் தங்களது சினிமா பிழைப்பிற்காக புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றுவதற்காகவும் பல ஜேப்படி வித்தைகளைச் செய்வார்கள். இதை நம்புகிறவன் தமிழன் இல்லை
பாரதிராஜா தனது இலங்கை விஜயம் குறித்து தெளிவாக அறிக்கை விட்ட பின்னும் புலி சார் ஊடகங்களும், புலி எதிர்ப்பு ஊடகங்களும் பாரதி ராஜாவை தங்களுக்கு ஏற்ற வகையில் தாக்குகின்றன.
பாரதிராஜா தன்னை ஒரு மாவோ வாகவோ, நேதாயியாகவோ, லெனினாகவோ ஒரு போதும் உருவக படுத்திக்கொள்ளவில்லை. அவர் தமிழ் உணர்வால் உந்தப்பட்டு தமிழினப் படுகொலை நிகழ்ந்த போது கொதித்து மனம் நொந்து தனது உணர்வலைகளை வெளிப்படுத்தினார், வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த மனிதர் இலங்கையில் சாதாரண சமுக கலை நிகழ்வுகளில் கலந்து கொள்ளவே சென்றுள்ளார்.
அரசியல் வாதிகள் அவர் அவர் தேவைக்கு சந்தித்ததை நாகரீகம் கருதி ஏற்றுக்கொண்டான் தமிழ் நாட்டின் கிராமத்து மண்வாசனையில் பிறந்தவனும் வளர்ந்தவனும் வாழ்ந்தவனுமான பாரதிராஜா.
ஈழத்தில் அறிவியல் ச(ம)ந்தம் தம்மை விட யாருக்கும் இல்லை எனக் கூறும் அறிவீலிகளை அறிவாளிகாளாக காண்பிக்கும் மந்தைக் கூட்டங்களான ஈழத் தமிழர்களுக்கு, பாரதிராஜா ஈழம் வந்தது தானா முக்கிய பேசு பொருள்?. அன்றி அதை பற்றி யேமிக முக்கியமாக பேசுகின்ற காலத்தில் தானா நாம் வாழ்கிறோம்?
பாரதிராஜாவை சந்திக்கு இழுத்து அவரின் கோவணத்தை அவிழ்த்து பார்க்கும் (மேல்) “மட்ட” அரசியல் தான் இன்றைய காலத்தின் தேவையாக படுகிறதா? அல்லது அது தான் இவர்களின் மேல்மட்ட அரசியல் செயல் பாடாக இவர்களுக்கு தென்படுகிறதா? இதுதான் இவர்களின் முக்கியமும், முற்போக்குமா?…… ஆகா என்ன அறிவியல்? ஈழத் தமிழா! உனக்கு!! ……
உலகில் யூதனின் அறிவை ஒத்த அறிவுள்ளவன் தமிழன் (அதிலும் யாழ்ப்பாணத்தான் ) என்பதை யாழ்ப்பாணத்தில் எனது காது குளிர பலதடவை பல யாழ்ப்பாணத்து அறிஜர்கள்??? சொன்னதை கேட்டுளேன்.
ஆகா யூதனின் வழி (தவறி) வந்த வாரிசுகளே! புலி எதிர்ப் பாளர்களே! புலி ஆதரவாளர்களே! தாக்குங்கள் பாரதி ராஜாவை அவன் கோவணம் கிளியுமட்டும். (அதனை விட்டு உங்களுக்கு வேறு என்ன தான் அரசியல்….)
http://www.battinews.com/2014/12/blog-post_923.html
Traditional Minister have to answer for this…
http://www.tharavu.com/2014/12/blog-post_23.html
சற்று இதையும் வாசிக்கவும்.சும்மா பம்மாத்து பதிவெல்லாம் வேண்டாமே.